சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி
ஊட்டி, பிப். 4 உலக நகைச்சுவை தினத்தை முன்னிட்டு ஊட்டி நகர விழிப்புணர்வு சங்கம் சார்பில் எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஹரி தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் லாட் வரவேற்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நகைச்சுவையும், குறும்பும் அதிகமாக இருக்கும். ஆனால் மாறி வரும் கால சூழலில் பொருளாதார தேடலில் மனிதன் இயந்திரம் போல சுற்றி திரிவதால் நகைச்சுவையை மறந்து விட்டான். எனவே மனசுமைகள் நீங்கி அமைதி பெற சிரிக்க மனிதன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றார்.
ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தனன் பேசுகையில், கவலை உடலையும், மனதையும் கொல்லும், மனதில் அமைதி ஏற்பட நகைச்சுவையில் ஈடுபாடு காட்டுதல் வேண்டும். மகிழ்ச்சி ஆயுளை வளர்க்கும் மருந்து. மனிதனின் இன்றியமையாத சொத்து நகைச்சுவை என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் நகைச்சுவையான நாடக, நடனங்கள் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தனர்.
நகைச்சுவைக்காகவே வாழ்ந்த சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி, சந்திரபாபு, என்.எஸ் கிருஷ்ணன் நாகேஷ் ஆகியோர் நினைவு கூறப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட 50 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி நிர்வாகி அனிதா ஹரி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக