ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் ஊட்டியில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆம்புரோஸ் பேசுகையில்,
""நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க செல்வதில்லை. 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் 2 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை. இதன் காரணமாகவே ஓட்டுகள் கள்ள ஓட்டாக மாற்றி பயன்படுத்தும் நிலை உருவாகிறது. "நன்னடத்தை மற்றும் நாட்டுப்பணியில் அக்கறை உள்ளவரை தேர்வு செய்ய வேண்டும்,' என காந்தி குறிப்பிட்டுள்ளார். அதுபோல ஓட்டு கோருபவர் நம்பக்கூடிய நல்லொழுக்கம் பொருந்தியவராக இருத்தல் வேண்டும். மக்களில் ஓட்டளிப்பவர்கள் பலர் கட்சியை சேர்ந்த தொண்டர்களாக தான் உள்ளனர். நடுநிலையாளர்கள் ஓட்டளித்தால் மக்களாட்சி சிறப்பாக செயல்படும். எனவே, அனைவரும் ஓட்டு அளிக்க முன்வர வேண்டும்,'' என்றார்.
மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம்,
மாவட்ட கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். மன்றத்தினர்,
மக்கள் மைய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக