அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 7 ஏப்ரல், 2011

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - பகுதி 1 Consumer Protection Act 1986

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - பகுதி 1

Consumer Protection Act 1986

இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 

                1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி - மாவட்ட அளவில் " மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்", மாநில அளவில் "மாநில ஆணையம்", தேசிய அளவில் " தேசிய ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.

1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-

1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-

5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-

10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.

2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.

3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்
.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்




வழக்கு போடலாம் !


சென்னை சென்டிரலில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தினந்தோறும் இரவு 10.30 மணிக்கு புறப்படும், நேற்று இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் மாலையில் இருந்தே காத்திருந்தனர். ரெயில்வே தகவல் பலகையில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் எப்போது எந்த பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்ற விபரம் தெரிவிக்க படவில்லை. ஒலிபெருக்கியிலும் ரெயில் வந்து விட்டதாகவோ, எந்த நேரத்தில் புறப்படும் என்பன போன்ற எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் வழக்கமாக ரெயில் புறப்படும் நேரமான 10.30ஐ கடந்தும் இலவு காத்த கிளியாக பயணிகள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
இரவு 11 மணி அளவில் காத்திருந்து பொறுமை இழந்த பயணிகள் ரெயில்வே விசாரணை மையத்திற்கு சென்று ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் எப்போது வரும் என கேட்டனர். அதற்கு ரெயில்வே ஊழியரோ ரெயில் சரியான நேரத்திற்கு 6-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டது என்று பதில் அளித்தனர்.
இதனால் அதிர்ந்து போன பயணிகள் ரெயில்வே விசாரணை மையத்தை முற்றுகையிட்டனர். பயணிகளுக்கு ரெயில் எந்த பிளாட்பாரத்தில் நிற்கிறது, எப்போது புறப்படும் என்பன போன்ற தகவல்களை அறிவிக்காததை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 150க்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை தவற விட்டனர்.
பயணிகளின் போராட்டத்தினால் சென்ட்டிரல் ரெயில் நிலையமே அல்லோல கல்லோலப்பட்டது. ரெயில்வே ஊழியர்களின் கவன குறைவால் பெண்கள், குழந்தைகளோடு, ஊருக்கு செல்ல வந்த குடும்பத்தினர் பெரும் அவதிக்குள்ளாயினர். இவ்வளவு களேபரம் நடந்தும் சென்டிரலில் உள்ள ரெயில்வே போலீசாருக்கோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ எந்த தகவலும் தெரியவில்லை. அவர்கள் வழக்கம் போல இரவு பணியில் மூழ்கியிருந்தனர். எதையும் கண்டு கொள்ளவில்லை.
பயணிகளின் போராட்டம் உச்சகட்டம் அடைந்ததை தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெயிலை தவறவிட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தார். ஈரோடு, வழியாக கோவை செல்லும் ரெயிலில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். சுமார் 3 மணி நேர தவிப்புக்கு பின்னர் ஒரு வழியாக சமாதானம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணி பரமசிவம் கூறும்போது:-
ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கிற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. மாலை 6.30 மணியில் இருந்து காத்திருக்கிறோம். தகவல் பலகையிலும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் பற்றிய விவரம் இல்லை. ஒலி பெருக்கி அறிவிப்பிலும் தெரிவிக்கவில்லை. 32 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து புறப்பட்டு வந்தேன். ரெயில்வேயின் கவன குறைவால் ரெயிலை தவறவிட்டு மனைவி குழந்தைகளோடு தவித்துக்கொண்ருக்கிறேன். எங்களது மன உளைச்சலுக்கு ரெயில்வே நிர்வாகம் விலை கொடுக்க முடியமா? சம்பந்தப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அவரை போலவே ஏராளமான பயணிகள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். இதே போல எழும்பூரிலும் அடிக்கடி பிளாட்பாரங்களை மாற்றி மாற்றி ரெயில்கள் நிறுத்தப்படுவதால் படிப்பறிவில்லாத பயணிகள் ரெயிலை தவற விட்டு தவிக்கின்றனர்.


இது போன்ற நிலையில் நுகர்வோர்கள் செய்ய வேண்டியது என்ன? 

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான், பயணிகள் ரயில் செல்ல முன்பதிவு செய்வார்கள். முன்பதிவு செய்யாதவர் களும், ரயில் அட்டவணைப்படி புறப்படும் என்ற நம்பிக்கையில், பயணதிட்டத்தை வகுத்திருப்பார்கள். இச்சம்பவத்தால் பலர் பல கஷ்டங்களுக்கு ஆளாகியிருப் பார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கால விரயம், மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு இவற்றை ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு நுகர்வோர் பாதுகாப்பு சட்டப் படி ரயில்வே துறையை சார்ந்ததாகும். இது குறை பாடான சேவை என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். அதற்கான நிவாரணம் கிடைக்கும். இவ்வழக்கை தனித்தனி யாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ, அல்லது அரசிடம் பதிவு செய் துள்ள நுகர்வோர் நல அமைப்போ வழக்கு தொடரலாம்.


உச்ச நீதி மன்ற நீதிபதி தொடர்பான தீர்ப்பு




உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவரே!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் , 77 வயதான் டால்மியா என்பவர் உச்ச நீதிமன்றத்தின் பொது தகவல் அதிகாரிக்கு தகவல் கேட்டு விண்ணப் பித்தார். அதாவது, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதான தனது புகாரின் மீது, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி எடுத்த நடவடிக்கை என்ன என்பது தான் அவரால் கேட்க்கப்பட்ட விபரம்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இச்சட்டத்தின் கீழ் வருபவர் இல்லை. எனவே தகவல் தர இயலாது என பொது தகவல் அதிகாரி மறுத்து விட்டார். எனவே டால்மியா, உச்ச நீதிமன்ற அப்பீலேட் அத்தாரிட்டிக்கு மேல் முறையீடு செய்தார்.
மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே டால்மியா மத்திய தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் மேல் முறையீடு ஏற்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதியும் இச்சட்டத்தின் கீழ் வருவதால், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சம்பந்தமாக டால்மியா அனுப்பிய புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை மனு தாரருக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற பொதுதகவல் அதிகாரி அப்பீல் செய்தார். அதை விசாரணை செய்த உயர் நீதி மன்றம் " உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியும் இச்சட்டத்திற்கு உட்பட்டவர் தான். எனவே டால்மியா கேட்டிருக்கும் தகவல்களை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஜனநாயக உண்மையை வலியுறுத்தியுள்ளது.

ஜன நாயக அரசு ஊழலற்று செயல் பட வெளிப்படையான செயல்பாடு வேண்டும். அத்துடன் என்ன நடக்கிறது என்பது பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக பல நிர்பந்தங்களின் காரணமாக " தகவல் அறியும் உரிமை சட்டம் " நம் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கமான, பல ஓட்டைகளுடன் அதாவது பதவியில் இருப்பவர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் தப்பித்து க்கொள்ள வசதியாக சில பிரிவுகளை உளடக்கியிருக்கிறது. இருப்பினும் சட்ட வாசகங்களின் அர்த்தம் என்பது , "வாதம் மற்றும் வழக்கின் சாராம்சம் இவற்றின் அடிப்படையில் புதிய விளக்கங்கள் பெறும்" என்பதற்கு இவ்வழக்கு ஒரு உதாரணம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக