கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
இண்டியன் பீனல் கோடும்,
நுகர்வோர் பாதுகாப்பும்
ஐஞஊ பிரிவு 41-ன் go இண்டியன் பீனல் கோடு வேறு சில தனி சட்டங்களையும், தனி பகுதி களையும் தன்னுடன் கூடவே ஒரு பகுதியாக இணைத்து கொள்ள முடியும் உதாரணத்திற்கு குறிப்பிட வேண்டுமானால், எடையளவு கட்டுப்பாட்டிற்கென்று தனிச்சட்டம் 2 வருடத்தில் இயற்றப்பட்ட போதும் இந்தியன் பீனல்கோடு செக்\ன் 264 முதல் 267 எடையளவு மோசடிக்கு தண்டனை கொடுக்கிறது. இந்த பிரிவின்படி ஒரு ஆண்டு வரை சிறையோ, அபராமோ அல்லது இரண்டுமோ எடையளவு மோசடி குற்றம் செய்பவருக்கு விதிக்கலாம்.
01. பிரிவு 264 : எந்த ஒரு நபரும் தெரிந்தே மோசடி செய்யும் நோக்கத்தில் எடை போடுவதற்கு ஒரு கருவியைப் பயன்படுத்துவது.
02. பிரிவு 265 : ஒரு குறிப்பிட்ட எடையையோ, அளவையோ, நீளத்தையோ கொண்ட கருவியை மோசடி செய்யும் நோக்கத்தோடு வேறு ஒரு எடையையோ, அளவையோ, நீளத்தையோ கொடுக்கக் கூடியதாக (உண்மை நிலைக்குப் புறம்பாக) பயன்படுத்துவது.
03. பிரிவு 266 : தெரிந்தே எந்த ஒரு நபர் தன்வசம் மோசடியான நோக்கத்தோடு பயன்படுத்தக் கூடிய ஒரு எடை அளவு, கொள்ளளவு, நீட்டலளவு கருவியை வைத்து இருப்பது.
04. பிரிவு 267 : இந்த பிரிவின் go எந்த ஒரு நபர் தெரிந்தே தவறான எடையளவு, கொள்ள ளவு, நீட்டளவு இவைகளுக்கான கருவிகளை தயார் செய்வதோ, விற்பனை செய்வதோ.
உணவு, பானங்கள் - கலப்படம் இ.பி.கோ. பிரிவு 272, 273 :
இந்தியன் பீனல் கோடு பிரிவு 272, 273-களில் உணவு மற்றும் பானங்கள் கலப்படம் செய்பவர்களுக்கு தண்டனையாக 6 மாத சிறை தண்டனையோ, 1000 ௫ூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்க வழி வகுக்கிறது.
01. பிரிவு 272 : விற்பனைக்குரிய உணவு பொருட்களிலோ பானங்களிலோ கெடுதலை விளைவிக்கக் கூடிய பொருட்களைத் தெரிந்தே கலப்படம் செய்பவர் தண்டனைக்கு உரியவராகிறார்.
02. பிரிவு 273 : கலப்படம் செய்யப்பட்ட அல்லது உண்ணத் தகுதியில்லாத உணவுப் பொருள் களையோ, பானங்களையோ விற்பனை செய்பவர் தண்டனைக்கு உரியவராகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக