அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 30 மார்ச், 2012

உலக நுகர்வோர் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு

உலக நுகர்வோர் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு

கருத்துகள்

பந்தலூர்: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள்  மையம் ஆகியன இணைந்து உலகநுகர்வோர் விழிப்புணர்வு தினத்தையொட்டி சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. 
   நெல்லியாளம் நகராட்சி கணினி பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு மைய தலைவர்  சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:  

வியாழன், 22 மார்ச், 2012





   இயற்கை வளங்களை அழித்ததால் அனைத்தையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவு காரணமாக மாற்று வழிக்கு உற்பத்திக்கு முயலும் போது தரமற்ற பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துக்களை உட்கொள்ள கூடாது என்றார்.
தொடர்ந்து 
அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் காதர், 
பந்தலூர் நுகர் வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் விஜயசிங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நிர்வாகிகள் முருகன், இந்திராணி ஆகியோர் நுகர்வோர் உரிமைகள் குறித்து விளக்கி கூறினர். முன்னதாக கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி  தனிஷ்லாஸ் வரவேற்றார். முடிவில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய  நிர்வாகி  சிவக்குமார் நன்றி கூறினார்.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

செவ்வாய், 27 மார்ச், 2012




பந்தலூர் :  பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தமிழ்நாடு அறக்கட்டளை ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், உப்பட்டி பள்ளி வாசல் கமிட்டி ஆகியன , சார்பில், உப்பட்டி எம் எம் எஸ் மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது.
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
பள்ளி முதல்வர் கவிதா, நெல்லி யாளம்   நகர மன்ற உறுப்பினர் கள் மூர்த்தி, விஜயன், பள்ளி வாசல் கமிட்டி பொருளாளர் ஐமுட்டி, HADP பழனிசாமி  ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான  அமராவதி ராஜன் பேசும் போது ஏழை மக்கள் பயன் பெரும் விதமாக இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றது நாற்பது வயதிர்ற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக பாதிக்கும் கண் புரை நோய்க்கு கண் புரை அறுவை சிகிச்சை  மட்டுமே தீர்வாகும் எனவே இது போன்ற முகாம்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என்றார்

பின்னர் மருத்துவர் அமராவதி ராஜன்   தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர்

முகாமில் உப்பட்டி அத்திகுன்னா நெல்லி யாளம்   பொன்னானி பெருங்கரை சேலக்குன்ன உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த  120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  நிகழ்ச்சியில் , மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை களபணியளர்கள் முத்துராஜ் ஸ்ரீதர்   மாணவர்கள்  உட்பட பலர் பங்கேற்றனர்
கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் வரவேற்றார் முடிவில் மைய நிர்வாகி முருகன் நன்றி கூறினார்













கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 22 மார்ச், 2012



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

pandalur eye camp





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 18 மார்ச், 2012

குழந்தைகள் பிச்சையெடுப்பதை தடுக்க

பந்தலூர் :குழந்தைகள் பிச்சையெடுப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்ரமணியம், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

குழந்தை தொழிலாளர்கள் இருக்கக் கூடாது எனும் நோக்கில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், குழந்தைகள் கட்டாய கல்வி சட்டம் இயற்றப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர், பந்தலூர் உட்பட பகுதிகளில் பஸ் ஸ்டாண்ட்கள், மார்க்கெட், கோவில் வளாகங்களில் 6 -14 வயது வரையிலான குழந்தைகள் பிச்சையெடுத்து வருகின்றனர்.
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், இச்செயல் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத் தன்மைக்கும் காரணமாக உள்ளது.
எனவே, கல்வி பயிலும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர், சிறுமியரை மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து, அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 17 மார்ச், 2012

உலக நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரமணா பயிற்சி மையத்தில் நடந்தது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
உலக நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரமணா பயிற்சி மையத்தில் நடந்தது.