ஊட்டி: ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணி மிகவும் மோசமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் மீண்டும் சேதமடையும்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்
மாநிலத்தின்
பல பகுதிகளில் இருந்து வரும் பயணிகளும், கர்நாடகா, கேரளா போன்ற
மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் வந்திறங்கும் ஊட்டி மத்திய
பஸ் நிலையம் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பாரமரிப்பும் இன்றி மிக மோசமான
நிலையில் இருந்தது. பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகள் பல முறை வலியுறுத்திய
பின் கடந்த மாதங்களில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக நிதி
வழங்கி சேதமடைந்திருந்த பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் மலர் கண்காட்சி துவங்கிய காலத்தில்
துவக்கப்பட்டது. தற்போது பஸ் நிலையத்தின் பாதி அளவிற்கு மட்டுமே தார்
போடப்பட்டுள்ளது. தார் போடப்பட்ட பகுதிகளில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பஸ்கள் சக்கரங்கள் திரும்பும் இடங்களில் தார் உதிர்ந்து பெயர்ந்து
வருகிறது. மிக மோசமான முறையில் தார் போடப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.
மேலும்
தண்ணீர் செல்ல எந்தவித நடவடிக்கையும்இன்றி மேடு பள்ளமாக தார் பரப்பப்பட்டு
உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மழை காலத்தில் மீண்டும் குண்டும் குழியும் ஏற்படும் அபயாம் உள்ளது.
மக்களின் வரிப்பணம் முறையாக செலவு செய்யப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆய்வுகள் மேற்கொண்டு முறையாக தரமான முறையில் பஸ் நிலைய பராமரிப்பு
பணியை மேற்கொள்ள வேண்டும்.
இப்படிக்கு
சிவசுப்பிரமணியம்
தலைவர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு
மையம் மக்கள் மையம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக