ஊட்டி: கூடலூர்
நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையத்தின்
மாவட்ட குழு ஆலோசனை கூட்டம் ஊட்டியிலுள்ள வட்டார அலுவலகத்தில் நடந்தது.
செயலாளர் கணேசன் வரவேற்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர்
சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின்
கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு, பாண்டிசேரி நுகர்வோர்
குழுக்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஆகியோர்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண் டனர்.
கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பு
செயல்பாடுகள், அமைப்பு வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் குறித்து
விவாதிக்கப்பட்டது.
அமைப்பு நிர்வாக குழு தொடர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர்
மன்றத்தில் தலைவர் பதவி காலியாக உள்ளது. இக்காலி பணியிடங்களை நிரப்பிட
வேண்டும்.
நுகர்வோர் நலன் கருதி உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு தர நிர்ணய
சட்டம் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பல ஆய்வுகளை
மேற்கொண்டு தரமற்ற, கலப்பட உணவுகளை தடுக்க வேண்டும்.
அரசுத்துறைகளில் பல
பணியிடங்கள் காலியாக உள்ளதால் பல்வேறு அரசு பணிகள், மக்கள் நலப்பணிகள்
பாதிக்கப்படுகிறது. அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிட வேண்டும்.
கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள், கூடுதல் கல்வி கட்டணம்
வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனை அரசு சரி செய்ய வேண்டும்.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் நிலைபாடுகள் மோசமாக உள்ளது. 11 தகவல் ஆணைய
பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிறைவு செய்து தகவல் உரிமை சட்டம்
சிறப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நுகர்வோர் கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
கூட்டத்தில்
இணை செயலாளர் ஜெயச்சந்திரன், இந்திராணி, பொருளாளர் கனகலிங்கம், வட்டார
பொறுப்பாளர்கள் மாரிமுத்து, முருகன், பசுபதி, பாண்டியன், நிர்வாக குழுவினர்
வேலு, தங்கராஜா, செல்வராஜ், ராஜசேகர், தேவதாஸ், ஜெயபிரகாஷ், மஞ்சுளா,
ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி வட்டார பொறுப்பாளர் ராஜராஜன்
நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக