கூடலூர் : "மின்சாரத்தை அடிப்படை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம்
சேமிக்க முடியும்,' என கூடலூரில் நடந்த மின் சக்தி சேமிப்பு தின விழாவில்
வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
நீலகிரி மின் பகிர்மான வட்டம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம் சார்பில், மின் சக்தி சேமிப்பு நாள் விழா
கூடலூர் ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. செயற்பொறியாளர் ஆல்துரை
வரவேற்றார். விழாவுக்கு மேற்பார்வை பொறியாளர் நிர்மலா ஞானபுஸ்பம் தலைமை
வகித்து பேசினார். கூடலூர் பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரி
விரிவுrai யாளர் பிரகாஷ் பேசுகையில்,"" மின்சாரத்தை அடிப்படை தேவைக்கு
மட்டும் பயன்படுத்துவதன் மூலம் சேமிக்க இயலும்; இதன் மூலம் பெரும் பயன்
ஏற்படும்,'' என்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்
சிவசுப்ரமணியம் , மின் சேமிப்பில் நுகர்வோரில் பங்கு பற்றி பேசினார். விழாவில்,
குன்னூர் செயற்பொறியாளர் நடராஜன், உதவி செயற் பொறியாளர்கள் சிவகுமார்,
பிரேம்குமார், உதவி பொறியாளர்கள் பாலாஜி, பாலகணேசன் உட்பட பலர்
பங்கேற்றனர். ஊட்டி செயற் பொறியாளர் சிவராஜ் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக