ஊட்டி : "காஸ் சிலிண்டர் வினியோகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்
நுகர்வோர் பாதுகாப்பு மையத்துக்கு புகார் அளிக்கலாம்,' என
அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வளசுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காஸ் இணைப்பு பயன்படுத்துவோர் அதிகரித்துள்ள நிலையில், வீடு, வர்த்தக பயன்பாடுகளுக்கு தனித்தனி சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறது. சிலிண்டர்களை முகவர்கள் மூலம் வினியோகிக்கப்படும் போது, எண்ணெய் மற்றும் காஸ் நிறுவனங்கள் உரிய கமிஷன் தொகையை வழங்குகிறது.

நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில்,போக்குவரத்து கட்டணத்தை முகவர்களுக்கு
எண்ணெய் நிறுவனங்களே வழங்குகிறது. தற்போது சிலிண்டர் ஒன்றை நுகர்வோருக்கு
வினியோகிக்க 26 ரூபாய் முகவர்களுக்கு இந்நிறுவனங்கள் வழங்குகிறது. இதனால்
முதல் 5 கி.மீ., தூரத்திற்கு முகவர்கள் சிலிண்டர்கள் விநியோகிக்க கூடுதலாக
எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது. ஆனால், பல காஸ் சிலிண்டர் வினியோக
முகவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 20 முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக
வசூலிக்கின்றனர்.
இதுபோன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க,
பொதுமக்கள் தங்களது புகார்களை நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு
அலுவலகத்தில் (0423-2441216) பதிவு செய்யலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம்
கூறியுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக