அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 25 ஜூன், 2012

மக்கள் மையங்கள் அமைக்க, விண்ணப்பங்கள்

ஊட்டி:மக்கள் மையங்கள் அமைக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், உந்துனர் அறக்கட்டளை சார்பில் 400க்கும் மேற்பட்ட மக்கள் மையங்கள் செயல்படுகின்றன. மக்களாட்சியில் மக்களை மையப்படுத்தவும், குடிமக்கள் அறிவும், துணிவும், பரிவும் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் செயல்படுகிறது.
மையங்கள், பல அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய செயல்படுத்தப்படுகிறது. மக்கள் நலனுக்கு இயற்றப்படும் பல சட்டங்களும், திட்டங்களும் கடைசி தர மக்களுக்கு சென்றடைவது இல்லை.

அரசின் திட்டங்களை அணுகி பெறவும், சட்டங்களை அறிந்துக் கொள்ளவும், விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் பாதிக்கப்படும்போது நிவாரணம் பெறும் நடைமுறைகளையும், சுய முன்னேற்றத்துக்கு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது. அரசு திட்டங்கள், பாதிப்புக்கு நிவாரணம் பெறும் வழிமுறைகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற உதவும் வழிகாட்டும் மையமாக உள்ளது. மக்கள் மையங்கள், அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இணைந்து செயல்பட வழி வகுக்கிறது.

நடப்பாண்டு, கல்வி உரிமை சட்டம், நீர் வளம், மின் சிக்கனம், பொது விநியோகம், உள்ளாட்சி உட்பட வகைகளில் கவனம் செலுத்தி, முக்கியத்துவம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று செயல்பட விரும்பும் தன்னார்வ அமைப்புகள், மக்கள் மையம் அமைக்க, "மக்கள் மையம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், வணிக வளாகம், பந்தலூர் அல்லது மக்கள் மையம், வசம்பள்ளம், ஓட்டுப்பட்டறை, குன்னூர்' அல்லது, மக்கள் மையம், ஜெயா காம்ளக்ஸ், நொண்டி மேடு, ஊட்டி' முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போர், தங்களது அமைப்பின் பெயர், முகவரி, செயல்பாடுகள் குறித்த விபரங்களோடு, வரும் 30ம் தேதிக்குள் (நாளை) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், மக்கள் மையங்களின் மக்கள் மைய திட்ட அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட குழு நேரடி ஆய்வுக்கு பின், மக்கள் மையம் அமைக்க பரிந்துரைக்கப்படும். விபரங்களுக்கு, 94898-60250, 94429-74075 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக