ரத்தம், கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
பந்தலூர், ஜூன் 24:
கூடலூர்
நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், பள்ளி
குடி மக்கள் நுகர்வோர் மன்றம், சாலோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து பந்தலூர்
அரசு மேல்நிலை பள்ளியில் ரத்த தானம், கண் தானம் குறித்த விழிப்புணர்வு
கருத்தரங்கு பிரசாரம் நடந்தது.
பள்ளி தலைமை
ஆசிரியர் சித்தானந்த் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார
மருத்துவ அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு பேசியதாவது: ரத்த தானம் குறித்து
மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ரத்தம் தேவைப்படும் போது மட்டும்
அதன் அவசியத்தை உணரும் நாம் எப்போதும் ரத்த தானத்தின் அவசியத்தை உணர
வேண்டும் என்றார்.
18 வயதுக்கும்
மேற்பட்டோர் ரத்த தானம் செய்யலாம். 45 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் ரத்த
தானம் செய்யலாம். உடலில் 350 மில்லி ரத்தம் மட்டுமே தானமாக எடுக்கப்படும்.
ரத்தத்தில் பரவும் நோய் இருப்பவர்கள், மது போதை வஸ்துகள் பயன்படுத்துவோர்
ரத்த தானம் செய்வதற்கு தகுதியற்றவர்கள். மாணவர்கள் தங்களை தயார் படுத்தி
கொள்ளவேண்டும். நல்ல பழக்கங்களுடன் மாணவர்கள் இருக்க வேண்டும். தங்களை ரத்த
தானம் செய்ய தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
சுகாதார
ஆய்வாளர் கனயேந்திரன், நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவ
சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நுகர்வோர் மைய
நிர்வாகிகள் தணீஸ்லாஸ்,பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். நூற்றுக்கும்
மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரியர் தண்டபாணி வரவேற்றார். மாணவி முத்துமாரி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக