அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 17 செப்டம்பர், 2012

பொது விநியோக திட்ட கருத்தரங்கு

பொது விநியோக திட்ட கருத்தரங்கு




ஊட்டி,:  கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள்  மையம்  சார்பில் கோத்தகிரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொது விநியோக திட்ட மக்கள் சேவைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. 
 விரிவுரையாளர் ஜோசுவா மனோகர்ராஜ் வரவேற்றார்.
கருத்தரங்கிற்கு பயிற்சி நிறுவன முதல்வர் நாராயணன் தலைமை வகித்தார்.
  
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். 

கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது, 

தமிழகத்தில் 1968ம் ஆண்டு முதல் பொது விநியோக திட்டம் அமுல்படுத்தப்பட்டு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ரேசன் விநியோகத்திற்காக அரசு 49,000 கோடி ஆண்டுக்கு செலவிட்டுவருகின்றது. மொத்தமாக கொள்முதல்செய்து மணியத்தின விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது கொடுத்தல் செலவுகளுக்கு அரசு மானியம் முலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகின்றது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வயதிற்குட்பட்டவர்கள் சிறியவர்கள் என்ற அடிப்படையில் அரை யூனிட்டாகவும், 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரியவர்கள் என்ற அடிப்படையில் 1 யூனிட்டாகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. 

1 யூனிட்டிற்கு 12 கிலோ அரிசியும், அதற்கு மேல் அதிகபட்சமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட குடும்ப அட்டைக்கு 4 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. இதே போன்ற மற்ற பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை ஆகியவை 100 சதவீதம் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுக்கிறது. மற்ற பொருட்கள் அரசு ஒதுக்கீடு பொறுத்து வழங்கப்படுகின்றன. நீலகிரியில் 96 சதவீதம் வரை அரிசி மக்கள் வாங்கி பயனடைகின்றனர். 














விரைவில் தமிழக அரசு பயோ மெட்ரிக் ரெஷன் கார்டுகள் வழங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம், கண் கருவிழி, கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டு அதன் தகவல்கள் அடங்கிய அட்டை வழங்கப்பட உள்ளது. நியாயவிலை கடைகளில் அதற்காக வழங்கப்படும் இயந்திரம் மூலம் குடும்ப உறுப்பினர் ஒருவர் பொருட் களை பெற முடியும். இந்த நவீன முறை காரணமாக போலி கார்டுகள் ஒழிக்கப்படும். இதற்கான தகவல்கள் விரைவில் வீடுகளில் சேகரிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அத்தகவல்களை பிழையின்றி உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றார். 

இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன், ஆசிரியர் பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் வசந்தமணி, கற்பகம், பயிற்சி நிலைய மாணவ, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக