முதியோர் உதவி தொகை பெற சிறப்பு முகாம்
முதியோர் உதவி தொகை பெற சிறப்பு முகாம்
பந்தலூர், செப்.6:
உப்பட்டி பகுதியை சேர்ந்த முதியோர்கள், அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை பெற குந்தலாடி, பந்தலூர் போன்ற பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது.
முன்னாள் தலைமை ஆசிரியர் மத்தாயி உதவியுடன் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி சிவ சுப்பிரமணியம் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியால் உப்பட்டியில் முதியோர் உதவி தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் மாதம் ஒரு முறை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிதர்காடு பாரத ஸ்டேட் வங்கி பிரதிநிதி மூலம் சிறப்பு முகாம் நடைபெறும்.
இதன் மூலம் உப்பட்டி, அத்திகுன்னா, சேலக்குன்னா, புஞ்சவயல், நெல்லியாளம் பகுதியை சேர்ந்த முதியோர் பயன் பெறலாம்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக