பந்தலூர் 2016 ஜன 29
நாட்டு நலப்பணி திட்ட முகாமில் நுகர்வோர் விழீப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைப்பெற்று வருகின்றது.
இந்த முகாமில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்து, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியினை துவக்கி வைத்த பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் தண்டபாணி பேசும்போது நுகர்வோர் நலன்கருதி பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை நுகர்வோர்கள் அறிந்து கொள்ளவில்லை. சட்டங்களை படித்து தெரிந்து கொள்வது ஒவ்வொருவருடைய கடமையாகும். நுகர்வோர் விழிப்புணர்வு இன்மையாலும், நுகர்வோர் குறைகளை சுட்டி காட்ட தயங்குவதாலும் நுகர்வோர்கள் அதிகபடியாக ஏமாற்றப்படுகின்றனர் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
தேவையை மீறி அதிக அளவு பொருட்களை நாம் பயன்படுத்த தூண்டப்பட்டுள்ளோம். பாரம்பரியமாக பயன்படுத்திய பொருட்களினால் உடல் நலம் காக்கப்பட்டது. தற்போது உடல் நலன் காப்பதாக விளம்பரப்படுத்தப்படும் பொருட்களால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றது.
இதனால் அடிக்கடி மருத்துவமனைகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆடம்பர தேவைக்கு செலவிடுவதால் சேமிப்பும் குறைந்து கடனில் வாழும் நிலை உள்ளது. தரமான பொருட்களை தேவையை உணர்ந்து பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக