2016 ஜன.,12:
பந்தலூா் அருகே உப்பட்டியில் தேசிய இளையோர் தினம் மற்றும் இரத்தகொடையாளா்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கூடலூா் நுகா்வோர் மனித வள சுற்றுச்சூழல்பாதுகாப்பு மையம், சாலோம் தையல் பயிற்சி மையம், எஸ்.ஒய்.எஸ் அமைப்பு உப்பட்டி கிளைஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு உப்பட்டி எஸ்ஒய்எஸ் அமைப்பு தலைவா் ஐமுட்டிதலைமை தாங்கினார். நுகா்வோர் பாதுகாப்பு மைய தலைவா் சிவசுப்பிரமணியம் வரவேற்றார். கூடலூா்நுகா்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய ஆலோசகா் காளிமுத்து, உப்பட்டி வியாபாரிகள் சங்கதலைவா் பாலகிருஸ்ணன், சாலோம் மைய இயக்குனா் விஜயன் சாமுவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனா். தேவாலா பழங்குடியினா் பள்ளி தலைமை ஆசிரியா் சமுத்திரபாண்டியன், தேவாலா கிராமநிர்வாக அலுவலா் ராஜ்கமல் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக உப்பட்டியில் நடைப்பெற்ற இரத்த தானமுகாமில் இரத்த கொடை தந்த தன்னார்வலா்களுக்கு தமிழக அரசின் பாராட்டு சான்றுகள் வழங்கிகவுரவிக்கப் பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள் தியாகராஜா, எஸ்ஒய்எஸ் நிர்வாகிகள் ஷெபிர்,உனேஷ், நேரு இளையோர் மன்ற நிர்வாகிகள் இசாக், ஷாஜகான், உப்பட்டி தையல் பயிற்சி மையமாணவிகள், இரத்த கொடையாளா்கள் பலா் கலந்துகொண்டனா். உப்பட்டி தையல் பயிற்சி மையஆசிரியை சுலோச்சனா நன்றி கூறினார்.
புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக