நுகர்வோர்
- முகப்பு
- நுகர்வோர் சட்டம்
- environment
- awarness programme photos
- NEWS
- மக்கள் ஆலோசனை மையம்
- கண் தானம்
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- consumer links
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
- cchep nilgiris
- NEAC
- ► 2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
- ▼ 2011 (184) ▼ January ► December
அன்புடன் வரவேற்கின்றோம்
you are welcome to our web page
எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்
Please give your GOOD IDEAS FOR DEVELOPING THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPSகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
புதன், 16 பிப்ரவரி, 2011
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
ருத்திராட்சம்
இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில், ருத்திராட்சம் என்பது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட ருத்திராட்ச காய்களை அணிவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை கிடைப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகிறது. முனிவர்களும், ரிஷிகளும், பண்டிதர்களும் ருத்திராட்சம் அணிந்து, இறைவனை நோக்கி தவம் செய்தனர். ஒரு முகம், ஐந்து முகம் என பல வடிவங்களில் ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன. ருத்திராட்ச காய்கள், ருத்திராட்ச மரங்களில் விளையும் பழங்களில் இருந்து பெறப்படுகின்றன.
பொதுவாக, மலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் வளரும். தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின், பல பகுதிகளில் ருத் திராட்ச மரங்கள் காணப்படுகின்றன. ருத்திராட்ச பழங்களை காய வைக்கின்றனர்.
அதில் இருந்து ருத்திராட்ச காய்களை பிரித்தெடுக்கின்றனர். வனப்பகுதிகளில் மரக் குச்சிகளை பொறுக்குவதற்காக ஆதிவாசி இன மக்களுக்கு அனுமதி தரப்படுகிறது. அவர்கள், ருத்திராட்ச பழங்களை பொறுக்கி வந்து, மாலைகளாக தயார் செய்து விற்கின்றனர். ஆண்டு முழுவதும் ருத்திராட்ச மரத்தில் காய்கள் காய்க்கும் என்பது தான் தனிச்சிறப்பு.இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில், ருத்திராட்சம் என்பது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட ருத்திராட்ச காய்களை அணிவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை கிடைப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகிறது. முனிவர்களும், ரிஷிகளும், பண்டிதர்களும் ருத்திராட்சம் அணிந்து, இறைவனை நோக்கி தவம் செய்தனர். ஒரு முகம், ஐந்து முகம் என பல வடிவங்களில் ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன. ருத்திராட்ச காய்கள், ருத்திராட்ச மரங்களில் விளையும் பழங்களில் இருந்து பெறப்படுகின்றன.
பொதுவாக, மலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் வளரும். தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின், பல பகுதிகளில் ருத் திராட்ச மரங்கள் காணப்படுகின்றன. ருத்திராட்ச பழங்களை காய வைக்கின்றனர்.
அதில் இருந்து ருத்திராட்ச காய்களை பிரித்தெடுக்கின்றனர். வனப்பகுதிகளில் மரக் குச்சிகளை பொறுக்குவதற்காக ஆதிவாசி இன மக்களுக்கு அனுமதி தரப்படுகிறது. அவர்கள், ருத்திராட்ச பழங்களை பொறுக்கி வந்து, மாலைகளாக தயார் செய்து விற்கின்றனர். ஆண்டு முழுவதும் ருத்திராட்ச மரத்தில் காய்கள் காய்க்கும் என்பது தான் தனிச்சிறப்பு.
இயற்கை துப்புரவாளர்களுக்கு இனி பற்றாக்குறை: அழிவின் விளிம்பில் பிணந்தின்னிக் கழுகுகள்
"தடை செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் உபயோகத்தில் இருப்பதால், பிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்தியாவில் நான்கு வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன; கழுகு, பிணந்தின்னிக்கழுகு, செந்தலைக்கழுகு, கோடாங்கிக்கழுகு. இறந்த விலங்குகளின் இறைச்சியை மட்டுமே புசிக்கும் இவை, சிறந்த இயற்கைத் துப்புரவாளர்கள். வீசியெறியப்படும் கால்நடை இறைச்சிகளை, கூட்டம் கூட்டமாகச் சென்றும் உண்ணும் இவை, இறைச்சி அழுகி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அழிந்து வரும் பிணந்தின்னிக்கழுகுகளை பாதுகாக்க, இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம், மகாத்மா காந்தி பல்கலைப் பேராசிரியர் கிறிஸ்டோபர், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: பிணந்தின்னிக்கழுகுகள் குறித்து ஆராய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பறவை ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, "பம்பாய் இயற்கை வரலாற்று மையம்' பல்வேறு பகுதிகளிலும் ஆய்வில் ஈடுபட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் "அருளகம்' அமைப்பு இணைந்து செயல்படுகிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம் பகுதிகளிலும், கேரளாவில் ஆறு இடங்களிலும், பிணந்தின்னிக்கழுகுகள் இருப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினோம். அக்., - நவ., மாதங்களில் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போதுதான் கூடுகளில் இருக்கும். 45 நாட்கள் வரை அடை காக்கும். எனவே, மார்ச் வரை, கூடுகளில் எளிதாக பார்க்க முடியும். கழுகுகள் வேறு; பருந்துகள் வேறு. கழுகுகளுக்கு கழுத்தில் முடி இருக்காது.
கடந்த 1993ல் கால்நடைகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்து, "டைக்குளாபினாக்' இந்தியாவில் அறிமுகமானது. அந்த மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகள், இறந்த பின் தூக்கி எறியப்பட்டால் அவற்றை உண்ணும் கழுகுகள், சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி ஒரே நாளில் இறந்து விடும். இக்காரணத்தைக் கண்டறியும் முன், 99.9 சதவீத கழுகுகள் இறந்து விட்டன. நாங்கள் நடத்திய ஆய்வில், கேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது; ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது. நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது. நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. தற்போதும், "டைக்குளோபினாக்' வலிநிவாரணி கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்தை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு, கிறிஸ்டோபர் தெரிவித்தார். "தடை செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் உபயோகத்தில் இருப்பதால், பிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

கடந்த 1993ல் கால்நடைகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்து, "டைக்குளாபினாக்' இந்தியாவில் அறிமுகமானது. அந்த மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகள், இறந்த பின் தூக்கி எறியப்பட்டால் அவற்றை உண்ணும் கழுகுகள், சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி ஒரே நாளில் இறந்து விடும். இக்காரணத்தைக் கண்டறியும் முன், 99.9 சதவீத கழுகுகள் இறந்து விட்டன. நாங்கள் நடத்திய ஆய்வில், கேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது; ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது. நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது. நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. தற்போதும், "டைக்குளோபினாக்' வலிநிவாரணி கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்தை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு, கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
"இந்த ஊழல் போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா
"ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப் பெரியது எதுவும் இல்லை; எனவே, இது தொடர்பான விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து, நம்மூர் அரசியல்வாதிகளை நீதிபதிகள் குறைவாக மதிப்பிட்டிருப்பது தெளிவாகிறது. அவர்களின் ஊழலுக்கு எந்த ஒரு எல்லையோ, வரையறையோ கிடையாது என்பது, பாவம், நீதிபதிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சுடுகாட்டுக் கூரையில் இருந்து, ஸ்பெக்ட்ரம் வரை அவர்கள் கை வைக்காத துறையே கிடையாது.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி தான் ஊழலின் உச்சகட்டம் என உலகமே நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அதையும் தாண்டிய அசகாய சாதனையாக, இரண்டு லட்சம் கோடி ரூபாய், "இஸ்ரோ' ஊழல் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதோடு முடிந்தது என, யாரும் இறுமாந்து இருந்திட வேண்டாம். இதையும் பின்தள்ளி புதிய ஊழல் சரித்திரம் படைக்கும் தி, நம் தலைகளுக்கு இருக்கிறது.
"இஸ்ரோ'வின் எஸ் பாண்டு அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலின் மூலம், மத்திய அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்களே இன்னும் விண்ணில் ஏவப்படவில்லை. அதற்குள், அதில் உள்குத்து வேலைகள் எல்லாம் செய்து, ஒப்பந்தம் எல்லாம் போட்டு, முன்பணம் வரை வாங்கிவிட்டார்கள்.
இத்தனைக்கும் காரணமாகவும், பின்னணியிலும் இருப்பது, ஏதோ ஒன்றையணா அமைச்சர் இல்லை. திருவாளர் பரிசுத்தம் எனப் பெயர் வாங்கியுள்ள சாட்சாத் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் இருக்கும் துறை தான், "இஸ்ரோ.' இந்த, "எஸ் பாண்ட்' ஒப்பந்தம் பற்றி, "இஸ்ரோ' முடிவெடுத்து, பிரதமருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, அத்தனையும் கனகச்சிதமாக முடிந்திருக்கிறது.
இருந்தாலும், எனக்கு எதுவுமே தெரியாது என சத்தியம் செய்கிறார் பிரதமர். "செயற்கைக்கோள் இன்னும் ஏவப்படாததால், இதில் ஊழல் எதுவும் இல்லை' என பிரதமர் அலுவலகமும் மறுத்திருக்கிறது. பணம் கைமாறும் முன்னமே கண்டுபிடித்துவிட்டதில் அவர்களுக்கு ஏக கடுப்பு போலும்.
சர்ச்சையில் சிக்கிய தேவாஸ் நிறுவனத்தின் பெரும்பாலான நிர்வாகிகள், "இஸ்ரோ'வில் ஏற்கனவே வேலை பார்த்தவர்கள். உலக நாடுகள் எல்லாம் விஞ்ஞானிகளுக்கு டாலர்களை அள்ளிக் கொடுக்கும்போது, நம் நாடு மட்டும் ரூபாய் நோட்டைக் கூட கிள்ளித் தான் கொடுக்கிறது. அந்த வகையில், "இஸ்ரோ'வில் பணிபுரியும் / பணிபுரிந்த விஞ்ஞானிகள் அனைவரும் பாதம் தொட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்களே.
ஆனால், அவர்களிலேயே ஒரு சிலர், அரசு பணத்தை கமுக்கமாக அமுக்க முயன்றது கவலையளிக்கிறது. முன்னாள் விஞ்ஞானிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில், தேவாஸ் நிறுவனத்துக்கே அலைவரிசை ஒதுக்கியதில் தப்பேதும் இல்லை. ஆனால், சந்தை மதிப்பை சட்டை செய்யாமல், பல லட்சம் கோடிகளைப் பதுக்கியதில் தான் நியாயம் இல்லை.
அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதவர்கள் போல நாடகமாடுகிறார்களே நம்முடைய ஓட்டு சுரண்டிகள்; அவர்களைச் சொல்ல வேண்டும். "பானைக்குள் கை விட்டவன் பதம் பார்க்காமல் இருக்க மாட்டான்' என்ற பக்குவம் பெற்றுவிட்டனர் பொதுமக்கள். ஆனால் இவர்கள், பானையையே அபேஸ் செய்ய முயல்வது தான் பயம் தருகிறது.
குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆதர்ஷ் குடியிருப்பு; காமன்வெல்த்; ஸ்விஸ் வங்கி; ஸ்பெக்ட்ரம்; இஸ்ரோ என, அடுத்தடுத்து கேள்விப்படும் ஊழல்களின் எண்ணிக்கை, ஏதோ மெகா சீரியல் போல நீண்டுகொண்டே செல்கிறது.
அதிலும், இந்த வெளிநாட்டில் கறுப்புப் பண விவகாரம் எவ்வளவு பெரியது என யூகிக்க கூட முடியவில்லை. சையத் முகமத் ஹசன் அலி கான் (56) என்ற, புனேவைச் சேர்ந்த ஒரே ஒரு தொழிலதிபர் மட்டும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்துக்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரியே 50 ஆயிரம் கோடி என்றால், பதுக்கல் எவ்வளவு என சிந்தித்தாலே தலை சுற்றுகிறது.
வரி மட்டும் கேட்கும் அரசு, "அசல் எப்படி வந்தது' என அவரிடம் கேட்காதது ஏன்? அதை பறிமுதல் செய்ய முயற்சிக்காதது ஏன் என்பதும் மில்லியன் டாலர் கேள்விகள். சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி போட்டாலும், கூச்சமே படாமல் மென்று முழுங்குகிறது மத்திய அரசு. "அவரை வெளிநாட்டுக்கு தப்பிக்க விட்டுவிடாதே' என எச்சரிக்கின்றனர் நீதிபதிகள். குவாட்ரோச்சி வழக்கின் அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது.
அப்படி காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும் என மொத்த அரசு இயந்திரமும் கருதும் நபர், ஆளுங்கட்சி மே(லி)டத்துக்கு வேண்டப்பட்டவராகத் தான் இருப்பார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எங்கு சுத்தியும், கடைசியில் அவர்களிடம் தான் வந்து முடிகிறது விவகாரம்.
"இந்த ஊழல் போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா' என்று, தேர்தல் அறிக்கையில் அவர்கள் கேட்காதது தான் பாக்கி. யார் கண்டது...? நமக்குத் தெரியாமல் இவர்கள் இந்நேரம், இந்தியாவையே விற்றிருந்தாலும் வியப்பதற்கில்லை!
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் ஊட்டியில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆம்புரோஸ் பேசுகையில்,
""நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க செல்வதில்லை. 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் 2 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை. இதன் காரணமாகவே ஓட்டுகள் கள்ள ஓட்டாக மாற்றி பயன்படுத்தும் நிலை உருவாகிறது. "நன்னடத்தை மற்றும் நாட்டுப்பணியில் அக்கறை உள்ளவரை தேர்வு செய்ய வேண்டும்,' என காந்தி குறிப்பிட்டுள்ளார். அதுபோல ஓட்டு கோருபவர் நம்பக்கூடிய நல்லொழுக்கம் பொருந்தியவராக இருத்தல் வேண்டும். மக்களில் ஓட்டளிப்பவர்கள் பலர் கட்சியை சேர்ந்த தொண்டர்களாக தான் உள்ளனர். நடுநிலையாளர்கள் ஓட்டளித்தால் மக்களாட்சி சிறப்பாக செயல்படும். எனவே, அனைவரும் ஓட்டு அளிக்க முன்வர வேண்டும்,'' என்றார்.
மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம்,
மாவட்ட கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். மன்றத்தினர்,
மக்கள் மைய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திங்கள், 14 பிப்ரவரி, 2011
தன் பிரச்னைக்கு தனியாரை காவு வாங்கும் தமிழக அரசு
அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்த பால், அனாவசியப் பொருட்களின் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. ஆவின் நிறுவனத்துக்கு பால் வினியோகிக்கும் விவசாயிகளின் போராட்டம், நேற்று எட்டாவது நாளை எட்டிவிட்டது. ஆனாலும், தமிழக அரசு, அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம்; விலை உயர்த்திக் கொடுப்பது பற்றி தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கலாம். அவ்வளவு ஏன், "நீங்கள் செய்வது நியாயமா?' என கேள்வி கூட கேட்கலாம். அதைவிடுத்து, தன் பசிக்கு அடுத்தவன் வீட்டுப் பானையை உருட்டுவது போல, ஆவின் பால் வினியோக பாதிப்பைத் தடுக்க, தனியாரின் வயிற்றில் அடிக்கிறது தமிழக அரசு.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தனியார் பால் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:என் பெயரை ஏன் வெளியிட விரும்பவில்லை என்பதை முதலில் கூறிவிடுகிறேன். ஆவின் பால் வினியோகம் குறைவுபடாமல் நடப்பதற்காக, தனியார் நிறுவனங்களுக்குச் செல்லும் பாலை தடுத்து நிறுத்தி வருகிறது அரசு. இன்னார், இனியார் என்ற பாகுபாடு இல்லாமல், எங்கு பால் தென்படுகிறதோ அங்கு பறிமுதல் செய்து விடுகிறது.இவ்வாறு பேட்டியோ, அறிக்கையோ கொடுப்பவர்கள் அல்லது சங்கப் பணிகளில் தீவிரமாக இருப்பவர்கள், முதல் குறியாக பலியாக்கப்படுகின்றனர். அதனால் தான், பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்."ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என்பது விவசாயிகள் கோரிக்கை. இதை நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வந்த விவசாயிகள், "ஸ்டிரைக்' செய்யப் போவதாக முன்கூட்டியே எச்சரித்தனர். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத அரசு, 7ம் தேதி முதல் அவர்கள் உண்மையிலேயே பாலை நிறுத்தியதும், அடாவடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பால் உற்பத்தியாளர்களைக் குறிவைத்து, அவர்களுக்குச் செல்லும் பாலை பறிமுதல் செய்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது, நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டருக்கும் குறைவான பால் உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள். நேரடியாக அவர்களது குளிரூட்டும் நிலையங்களுக்குச் செல்லும் அதிகாரிகள், அங்குள்ள பாலை அப்படியே, "அபேஸ்' செய்து, ஆவின் நிலையங்களுக்கு அள்ளிச் செல்கின்றனர்.
அதற்கு, சில இடங்களில் அவர்கள் சொல்லும் காரணம், "எம்.எம்.பி.ஓ., பதிவு இல்லை' என்பது. எம்.எம்.பி.ஓ., என்பது, பால் உற்பத்தியாளர்களின் கையாளும் திறனைப் பொறுத்து, பால் மற்றும் பால் பொருட்கள் ஆணையகத்தில் பதிவு செய்து பெறப்படும் சான்றிதழ். நாளொன்றுக்கு பத்தாயிரம் லிட்டருக்கு மேல் கையாளும் பால் உற்பத்தியாளர்கள், சென்னையில் உள்ள இந்த ஆணையரகத்தில் பதிவு செய்ய வேண்டும். 2 லட்சம் லிட்டருக்கு மேல் என்றால், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், 40வது நாளில் தான் அவர்கள் ஏதேனும் குறை கண்டுபிடித்து, விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்புவர். உடனடியாக அந்தத் தவறைத் திருத்தி மறுவிண்ணப்பம் செய்தால், மேலும் 30, 40 நாட்கள் தாமதித்து, புதிய குற்றம் கண்டுபிடிப்பர். தவறுகள் இருப்பது உண்மையெனில், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக சுட்டிக் காட்ட வேண்டியது தானே.
ஆனால், அவர்களது நோக்கம் குற்றம் காண்பதல்ல; வருவாய் ஈட்டுவது. இப்படியே இழுத்தடித்து, ஆண்டுக்கணக்கில் அனுமதியே தராமல் நிறைய தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு, உற்பத்தியைத் துவக்காமல் இருக்க முடியாதில்லையா? அதனால், விண்ணப்பம் வரும் வரை வழி மேல் விழி வைத்து காத்திருந்து, மறுபக்கம் உற்பத்திப் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். ஈரோட்டில் நேற்று இரவு மூடப்பட்ட ஒரு நிறுவனம், நாலரை ஆண்டுகளாக அனுமதிக்காக காத்திருக்கிறது.இதுநாள் வரை அதை கண்டுகொள்ளாமல் இருந்த அரசு, விவசாயிகளின் வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்களில் கண்ணில் விரல் விட்டு ஆட்டுகிறது. தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட தனியார் பால் குளிரூட்டும் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில், நேற்று வரை 60க்கும் மேற்பட்ட நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. பெரும்பாலானவை அரசு அதிகாரிகளால் மூடப்பட்டவை. மற்றவை, அவர்களின் நெருக்கடி தாங்காமல் தாங்களாகவே மூடப்பட்டவை.
மற்றொரு நிறுவனத்தின் அதிபர் வெளியூர் சென்றிருந்தார். நேற்று இரவோடு இரவாக அவரது மனைவியை தட்டி எழுப்பிய அதிகாரிகள், அவர்களது நிறுவனத்தில் சோதனை என்ற பெயரில் புகுந்து, அங்கு வந்த பாலை பறிமுதல் செய்து, நோட்டீஸ் கொடுத்துச் சென்றுவிட்டனர்.இப்படி, தனியார் நிறுவனங்களுக்கு நெருக்கடி தர அரசு சொல்லும் மற்றொரு காரணம், அங்கு கையாளப்படும் பாலில், நிர்ணயிக்கப்பட்ட தரமில்லை என்பது. ஆனால், அந்தப் பாலைத் தான் அப்படியே எடுத்து, ஆவின் மூலம் வினியோகிக்கிறது அரசு. நாங்கள் வினியோகித்தால் தரம் குறைந்தது; ஆவின் வினியோகித்தால் தரம் நிறைந்ததா?இவ்வாறு அந்த உற்பத்தியாளர் குமுறினார்.
பாவம், அரசு எந்திரத்தின் இரும்புக் கரங்களின் முன்னால், தனியார் எந்திரங்கள் எம்மாத்திரம்!
எப்படி சமாளிக்கிறது அரசு? பால் வினியோகத்தின் மொத்த மார்க்கெட்டில், கிட்டத்தட்ட சரிபாதியை ஆவின் நிறுவனம் வைத்துள்ளது. அவர்களது சப்ளை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தனியாரிடம் பறிமுதல் செய்யும் பாலை பயன்படுத்துகிறது.சில இடங்களில், தனியார் நிறுவனங்களிடம் நேரடியாகக் கேட்டு, அவர்களுக்குப் பணம் கொடுத்து, பால் வாங்குகிறது. எந்தச் சூழ்நிலையிலும் பால் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக, இந்தப் பணியில் ஆவின் மேலாண் இயக்குனர்கள், பதிவாளர்கள், கலெக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, அதிக தரம் கொண்ட, "புல் கிரீம் பால்' (6 சதவீத கொழுப்பு) சப்ளையைக் குறைத்து, 4.5 சதவீத கொழுப்பு கொண்ட, "ஸ்டாண்டர்டைஸ்டு' பாலாகவும், 3 சதவீதம் கொழுப்பு கொண்ட, "டோண்டு' பாலாகவும் மாற்றி அனுப்புகிறது. நான்கு லிட்டர், "புல் கிரீம்' பால் தயாரிக்கும் இடத்தில், ஆறு லிட்டர், "ஸ்டாண்டர்டைஸ்டு' பால் தயாரித்து விடலாம்; ஏழு லிட்டர், "டோண்டு' பால் தயாரித்து விடலாம். அவ்வாறு மாற்றம் செய்து, தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது தமிழக அரசு.
விலை அதிகம் கேட்பது ஏன்? தமிழக அரசு சொல்வது போல, கர்நாடக மாநிலத்தைத் தவிர, பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகம் தான். அரசு தருவதை விட, லிட்டருக்கு 50 காசு அதிகமாகக் கொடுத்து தான் தனியாரும் கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால், முன்பை விட, இப்போது பால் உற்பத்திச் செலவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்குச் சென்று, ஒரு நாளைக்கு 80 ரூபாய் சம்பாதிக்க முடிந்தால், நாள் முழுக்க உழைத்து, பால் உற்பத்தியில் 50 ரூபாய் தான் சம்பாதிக்க முடியும் என்ற நிலை. பால் உற்பத்தியையே பிரதான தொழிலாகக் கொண்டவர்கள் இன்று நொடிக்கும் நிலையில் தான் இருக்கின்றனர். துணைத் தொழிலாகக் கொண்டவர்களும், மிகப் பெரிய நிறுவனங்களும் தான் ஓரளவு சமாளித்து வருகின்றன.
உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், மாட்டுத் தீவனத்துக்கு தடையற்ற ஏற்றுமதி அனுமதி இருப்பதால், இங்கு, அவற்றின் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. தவிர, மருத்துவச் செலவும், பணியாட்களுக்கான கூலியும் அதிகரித்துவிட்டது. இதை அரசு புரிந்துகொள்ள மறுக்கிறது.தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுப்பது மட்டுமின்றி, மருத்துவ உதவி, தடுப்பு மருந்துகள், கடன் வசதி, முன்பணம், நேரடி கவனம் என ஏராளமான வசதிகளை செய்து கொடுக்கின்றன. இவற்றில் சில திட்டங்கள் ஆவின் வசம் இருந்தாலும், நோய்ப்பட்ட மாடு பற்றி தகவல் தெரிவித்து, ஆவின் அதிகாரிகளும், மருத்துவர்களும் வந்து பார்ப்பதற்குள், சம்பந்தப்பட்ட மாடே செத்து போகும் நிலை தான் இருக்கிறது. அமலாக்கத்தில் ஏற்படும் குறைபாடுகளால் பாதிக்கப்படுவது, அப்பாவி விவசாயிகள் தான்.
பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின் அறியாமை
மத்திய அரசின் பல்வேறு வரிகள் மீது, கல்விக்கான, "செஸ்' கட்டணம் வசூலிக்கப்படுவதால், இந்த தலைமுறை பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி பெற, தமிழக அரசு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை என, அரசு பள்ளிகளில் படித்து வாழ்வில் சாதித்தோர் நம் நாட்டில் ஏராளம்.10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் சாதிப்போர் பட்டியலில், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இடம்பிடித்துக் கொண்டு தான் உள்ளனர். ஆனால், இன்றும் நம் சமூகத்தில், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினர் கூட தங்கள் பிள்ளைகளை, "கான்வென்ட்' பள்ளிகளில் படிக்க வைக்கத் தான் விரும்புகின்றனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் சில தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க, விண்ணப்பம் வழங்கப்படும் குறிப்பிட்ட நாளின் முதல்நாள் இரவே, அப்பள்ளிகளின் வாசலில் தவம் கிடக்கவும் பெற்றோர் தயாராக உள்ளனர்.
பார்த்ததும் கவர்ந்திழுக்கும் சூழல், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதான பங்கு வகிக்கும் ஆங்கிலத்தில் பயிற்சி போன்ற காரணங்களால், தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் முன்னுரிமை தருகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தைக் கண்டித்து, சென்னை உள்ளிட்ட இடங்களில், அவ்வப்போது பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதிலும் பலர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பள்ளி நிர்வாகத்தை பகைத்துக் கொள்ள விரும்பாமல் மவுனம் காக்கின்றனர். இப்படி, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்துகிறோம் என்ற நிகழ்கால உண்மையை பெற்றோர் உணராமல் இருப்பது, அவர்களின் அறியாமையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர்.

வருமான வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி ஆகிய மத்திய அரசின் வரி இனங்களின் மீது, 2005 - 06ம் நிதியாண்டு முதல் பள்ளிக் கல்விக்காக 2 சதவீதமும், 2008 - 09 நிதியாண்டு முதல் உயர்கல்விக்காக 1 சதவீதமும் செஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.உதாரணமாக, 23 ரூபாய் சேவை வரி விதிக்கப்படும் ஒருவரின் மொபைல் போன் பில்லுக்கு, 69 பைசா செஸ் கட்டணமாக பெறப்படுகிறது. இந்த வரி வருவாய், அனைவருக்கும் கல்வி(சர்வ சிக்ஷா அபியான்), மதிய உணவு போன்ற கல்வி திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிடுகிறது. மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பங்கு இவ்வரியின் மூலமே கிடைக்கிறது.
பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, "அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைவாக உள்ளதென்ற வாதம் தவறானது. அனைத்து பள்ளிகளிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். அரசு பள்ளிகள் குறித்த நம் சமூகத்தின் பார்வை மாற வேண்டும். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு பட்ஜெட்டில், கல்விக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரத்து 36 கோடி ரூபாயில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, "செஸ்' கட்டணம் மூலமே அரசுக்கு கிடைத்துள்ளது' என்றார்.தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு அவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால், பெற்றோருக்கு இரட்டிப்பு செலவு ஏற்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராடவும் வேண்டியுள்ளது. இதற்கு பதிலாக, பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க இந்த தலைமுறை பெற்றோர் முன்வர வேண்டும். அப்போதுதான், தங்கள் காலத்தில் கல்லூரி படிப்புக்கு செலவு செய்த பணத்தை, தங்கள் பிள்ளைகளின் பள்ளி படிப்புக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது என்ற புலம்பலில் இருந்து அவர்கள் விடுபட முடியும். அரசு பள்ளிகளின் தரமும் மேலும் உயரும்.
பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்
வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.
உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.
பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.
முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும். சீருடை தொடர்பாக சிலரிடம் பேசினோம்.
மனோத்தத்துவ நிபுணர் பொன்னி கூறியதாவது:
தற்போதைய பெரிய பிரச்னைகளில் ஒன்று குழந்தைகளின் பாதுகாப்பு. குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுதல், பாலியல் கொடுமைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீதான பெற்றோர்களின் வளர்ப்பு முறையைத்தான் குறிக்கிறது. பெற்றோர்களே மாடர்ன் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். மாடர்ன் ஆடைகளை அணிவதும், உணவு பழக்கங்களை மாற்றுவதுமாக கலாசாரம் மாறி வருகிறது. இதன் அடிப்படை எங்கே என்று தேடினால், மற்ற நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டது தான். கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருப்பினும், நமக்கு ஒத்துவராத விஷயங்களை மட்டும் காரணமே இல்லாமல் கற்றுக் கொள்கிறோம். நல்ல பழக்கங்கள் என்பது பெற்றோர்களிடம் இருந்து கற்க வேண்டியது. பெற்றோர்கள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் கற்று கொள்ளும் மற்றொரு இடம் பள்ளி. அடிப்படை கலாசாரங்களும், பண்பாடுகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் கூட ஒழுக்க விதிமுறைகள், தனிமனித பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிக் கற்று கொடுக்க நேரம் இல்லை என்பது, இன்னும் பரிதாபமான விஷயம்.குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "டிவி' மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமும், தேவை இல்லாத ஊடுருவலும் அதிகம். அவற்றில் வரும் காட்சிகளும், முரண்பாடான கருத்துகளும் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலே பதிவாகிறது. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பொன்னி கூறினார்.
சர்வஜன பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,
""இன்டர்நெட், சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், குழந்தைகளின் மீது தவறாகத் திணிக்கிறது. இன்னும் சொல்வதானால், பல பெற்றோர்கள் அத்தகைய சீருடைகளை விரும்புகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், நடத்தை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்,'' என்றார்.
அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சுகுணா கூறியதாவது:
பெற்றோர் சம்மதத்தோடு தான் சீருடைகளை குழந்தைகள் அணிகின்றனர். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமானாலும், இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தங்களது குழந்தைகள் தவறாக சித்தரிக்கப்படுவதை, கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அரசால், மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சேர்க்கின்றனர்; அது தவறான கருத்தாகும். அரசு பள்ளிகளில் மட்டும் சீருடையாக சுடிதார்கள் இருப்பதை தவிர்த்து, அனைத்து பள்ளிகளிலும் இதனை கொண்டு வர வேண்டும். "பின்னோபார்' சீருடைகளோடு மட்டும் நின்றுவிடாமல், "மினிபார்' சீருடைகளும் வந்துவிட்டன. அது இன்னுமொரு கொடுமையான விஷயம். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் பாதுகாப்பு அதிகம். அரசு பள்ளிகள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை; ஆனால் தனியார் பள்ளிகள் செய்கின்றன. இத்தனை பிரச்னைக்கும் காரணம் பள்ளி நிர்வாகிகள் மட்டும்தான் என்று குறை கூற முடியாது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரசு, இதில் கவனம் செலுத்தி சீருடைகளை மாற்றி அமைக்க முடிவெடுக்கலாம். நம்முடைய கலாசார உடைகள், சீருடைகளாக வரலாம். அனைவரும் சுடிதார் மற்றும் பல விதமான நாகரீகமான உடை அணிவதன் மூலம், பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.இவ்வாறு, சுகுணா கூறினார்.
பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி முதல்வர் க்ரிஷ் கூறுகையில், ""ஆசிரியப்பணி சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தருவதில்லை. "டிவி', இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் தாக்கத்தை, குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஆண், பெண் இருபாலினத்துக்கும், சகபாலினத்தின் மீது பரஸ்பர மரியாதை இல்லை. வெளிநாட்டு கலாச்சார மோகம், பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நல்லவை இருக்கின்றன. ஆனால், நமது சூழலுக்கு ஒத்துவராத உடை உள்ளிட்ட தேவையற்றவைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,'' என்றார்.
ஸ்டேன்ஸ் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், ""பள்ளிச் சீருடைகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அதற்கேற்ற உள்ளாடைகளை அணிய, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பர். சீருடைகள் மட்டுமே குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சொல்ல முடியாது. இருப்பினும், பள்ளிச் சீருடை முறை மாற்றுவது குறித்து, நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
ஜி.டி., பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில்,
"சீருடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத் தனமாகத்தான் இருக்கும்; அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான்,' என்றனர்.
சினிமாக்களில் சித்திரிக்கும் கெட்ட விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களின் மனப்பாங்கு; தவறாக வழிகாட்டும், "டிவி', சினிமா துறைகள் பற்றி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், குற்றம் சாட்டின. துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவனும் மொபைல்போன் வைத்திருப்பது, அந்தரங்க விஷயங்கள் இன்டர்நெட்டில் மிக எளிதாக கிடைக்கும் அவலம் போன்ற பெற்றோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். பாடப்புத்தகங்களைச் சொல்லித்தருவது மட்டுமே கடமை என்றில்லாமல், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்வதற்கும் கல்வி நிறுவனங்களே பொறுப்பு. கவனச்சிதறல் ஏற்படுத்தாத கட்டுப்பாடான உடைகள் வேண்டும் என்பதால் தான், கல்வி நிறுவனங்கள் உடை விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று; எனினும், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சீருடைகளின் அளவுகளை கல்வி நிறுவனங்கள் ஒருமுறை பரிசீலிக்கத்தான் வேண்டும்.
பெற்றோரே முன்னுதாரணம்! பேஷன் என்ற பெயரில் உடைகள் இன்று பெற்றுள்ள வடிவங்கள் பல. அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் இதில் கலாச்சாரப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். இறுக்கிப் பிடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துடனான சில மாடர்ன் உடைகள் பலரது கண்களையும் உறுத்தவே செய்கின்றன. அதுவும், நமது உணவு மற்றும் புற சூழல்களால் இன்றைய குழந்தைகள் உடலளவில் அதீத வளர்ச்சியுடன் திகழ்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடை விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும், இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளே இன்று அதிகம் உள்ள நிலையில் பள்ளிச் சீருடைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்டர்நேஷனல், சி.பி.எஸ்.சி., ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், அரசு பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகள் தவிர மற்றவற்றில் நவநாகரிமான மேற்கத்திய பாணியிலான யூனிபார்ம்கள் (குட்டி ஸ்கர்ட்டுகள், பெல்ட், டை, ஷு) போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
நாளை நம் குழந்தைகள் வெளிநாடுகளில் பணியாற்ற படிப்பை விட இவையெல்லாம் தான் தலைமைத் தகுதிகள் என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுடிதார், தாவணி போன்ற கலாசார வகையிலான யூனிபார்ம்கள் அணிவது பலருக்கும் கட்டுப்பெட்டித்தனமாகவே படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பள்ளிகளை மட்டுமே குறை கூறுவதைத் தவிர்த்து பெற்றோர்களும் சற்று விழிப்புடன் இருக்கலாம். எந்த வகையானாலும் யூனிபார்ம் தைக்கும் போதே இறுக்கிப்பிடிப்பதாய் இல்லாமல் சற்று தளர்வாய், குழந்தைகளின் உடல்வாகுக்கேற்ப தைப்பது நலம்.
பெண் பிள்ளைகள் சீக்கிரம் வளர்ந்துவிடும் என்பதைக் குறிக்க, "பெண் பிள்ளைகள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி' என்பார்கள் கிராமப்புறத்தில். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சிக்கனம் பார்க்காமல் ஆண்டுதோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப யூனிபார்ம்களை தைப்பது நலம். ஸ்கர்ட் அணிந்தாலும் சில பள்ளிகளில் முட்டிக்கால் வரையிலான ஸ்டாக்கிங்ஸ், லெகின்ஸ் போன்ற தரமான உள்ளாடைகள் அணிய வலியுறுத்துகின்றனர். இம்முறை இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு இதை அணியப் பழக்கலாம். பின்புறமாக இருதோள்களில் அணியும் பைகளுக்கு பதிலாக ஒருபுறமாக அணியும் பைகளை வாங்கிக் கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள் தாங்களாகவே ஒரு உதாரணமாகத் திகழ்வது குழந்தைகளையும் கலாசாரம் பிறழாமல் வாழச் செய்யும்...
புதன், 9 பிப்ரவரி, 2011
பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை
பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை
1) நீரின்றி அமையாது உலகு 2) தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே போன்ற அந்தக்காலத் தமிழ் முது மொழிகளிலிருந்தே வாழ்வாதாரமான தண்ணீரின் தேவையையும் முக்கியத்துவத்தையும் தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது தெளிவு.
தொன்று தொட்டே தமிழகத்தில் குறிப்பாக பல்லவர் ஆண்ட தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் பெரும்பாலான ஆறுகளும் ஏரிகளும் மழையை எதிர் பார்த்தவையே. வற்றாத ஜீவநதிகள் இப்பகுதியில் ஏன் பெருவாரியான தமிழர் வாழ்ந்த பகுதியிலேயே இல்லை என்றே சொல்லலாம். எனவே ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது.
காடுகளை அழித்து புதிய நாடுகள் உருவான போதும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவை நீர். எனவேதான் சங்கத் தமிழ் மன்னர்கள் "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெறுகும் என்பதை எந்தளவுக்கு அந்தக் கால ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தப் பட்டினப்பாடல் வரி ஒரு சான்று!
கிட்டத்தட்ட 1600 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூலில் ஒன்றான "சிறுபஞ்சமூலத்தில் " காரியாசான் சுவர்கத்துக்குப் போகும் வழி என எதைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்
குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) தினிது
(குளம் வெட்டுதல், அதனைச் சுற்றி மரக்கிளைகளை நடுதல், மக்கள் நடக்கும் வழியை செதுக்கிச் சீர்திருத்துதல்,தரிசு நிலத்தின் உள்ளிடத்தைச் செப்பம் செய்து உழுவயலாக்குதல் அவற்றுடன் வளமான நீர் வரும் படி தோண்டி சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணறு உண்டாக்குதல் என்று சொல்லக் கூடிய இந்த ஐந்து பகுதிகளையும் உண்டாக்கியவன் சொர்கத்துக்கு இனிதாகப் போவான்)
அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது கி பி 2ஆம் நூற்றாண்டிலேயே நல்லாதனார் "திரிகடுகம்" என்னும் மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலில் பின்வருமாறு கூருகிறார்.
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.
( உலகத்தில் மேலான புகழை நாட்டியவனும்,சிறந்த கற்புடைய பெண்ணை மனைவியாகப் பெற்றவனும், குடிக்க நீர் குறைவு படாத படி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் ஆகிய இம்மூவரும் எக்காலத்திலும் இறவாத புகழுடம்பைப் பெற்றவர்கள்)
எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் எழுந்தும் வீழ்ந்தும் போனாலும் ,எத்தனையோ மன்னர்கள் வந்து போனாலும் 1800 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டுவித்த கரிகால் சோழன் பெயர் இன்றளவும் நிலைத்திருப்பது நல்லாதனார் கணித்தது எவ்வளவு உண்மை என நமக்குணர்த்துகிறது.
இதே அடிப்படையில் பல்லவ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் தொடக்க காலத்தில் பல 'பிரமதேயம் " என்னும் குடியிருப்புகளை ஏற்படுத்தியதல்லாது அந்தக் குடியிருப்புகளுக்கு வேண்டிய நீர் ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். ( பிரமதேயமோ அல்லது அது எதற்காய் உருவாக்கப் பட்டது என்பதோ இக்கட்டுரையின் பேசு பொருளல்ல.ஒவ்வொரு குடியிருப்பு ஏற்படுத்தும் போதும் அதற்குத் தேவையான நீராதாரங்களையும் சேர்த்தே அக்கால மன்னர்கள் எழுப்புவித்தார்கள் என்பதே குறிப்பிடுகிறேன்) எடுத்துக் காட்டாக முதலாம் பரமேசுவர மன்னனின் ஆட்சிக் காலத்தில் ( கி பி 669-700) பரமேசுவர மங்கலம் என்ற பெயரில் பிரமதேயமாக நிலம் கொடுத்தான்.அத்துடன் அவ்வூரில் பரமேசுவர தடாகம் என்று ஒரு ஏரியை ஏற்ப்படுத்திப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டுவர பெரும்பிடுகு என்னும் கால்வாயையும், அக்கால்வாயிலிருந்து நலைவாய், தலைப் பேழை, ஊற்றுக்கால் என்னும் கிளைகளையும் வெட்டிக் கொள்ள அனுமதியளித்தான் என்பதனை கூரம் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது.
இதே போல இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் உதய சந்திர மண்டலம், ஏகதீர மங்கலம், நயதீர மங்கலம் போன்ற பல ஊர்களை உருவாக்க தானமாக நிலம் கொடுத்து அதற்குத் தேவையான நீராதாரங்களுக்கும் வழிவகை செய்து கொடுத்துள்ளான் என்பதை பல செப்பேடுகள் மூலம் அறிகிறோம்.
தொண்டை நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மிகச் சிறந்த குடியிருப்பு உத்திர மேரூர். சுமார் 5 சதுர கீ மி பரப்பளவில் இந்தப் பரந்த ஊர் அமைந்திருந்தது.10 சேரிகளும் 15 பிடாகை ஊர்களும் இதனுள் அடக்கம். (இந்த ஊரில்தான் குடஓலை முறையில் நிர்வாகக் குழுக்கள் வாரியங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவுக்கே தேர்தல் அறிமுகம் செய்யப்பட்ட நற்பணி நடந்தது) இந்த ஊரின் ஜீவ நாடியாக அமைந்தது "வைரமேகத் தடாகம்" என்னும் பேரேரியாகும். கி பி 739லேயே மகாசபை என்ற ஓர் அமைப்பு செயல் பட்டதும் இச்சபையின் கீழ் பல வாரியங்கள் பகுக்கப் பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கி பி 878ல் ஏரி வாரியம் என்றோரு வாரியம் செயல்பட்டிருப்பதே நீர்ப்பாசனத்துக்கும் நீர் மேலாண்மைக்கும் அளிக்கப் பட்டு வந்துள்ள முக்கியத்துவத்துக்கு சான்றாகும்.
அமைத்ததோடு மட்டுமின்றி வயிரமேகத் தடாகத்தை ஆண்டு தோரும் குழிகுத்திப் பராமரிப்பது ( தூர் வாருவது) முறையாகச் செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கென வணிகர்களும் செல்வந்தர்களும் நன்கொடையும் அளித்துள்ளனர்.கி பி 739லேயே குழி குத்தப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. சேட்டத்தரயன் தான வேந்தன் என்பவன் 20 கழஞ்சு பொன்னும் எரு விலையால் வந்த திரவியத்தை உத்திர மேரூர் சபையினரிடம் கொடுத்து குழி குத்த ஏற்பாடு செய்தான், தந்தி வர்மன் (கி பி 803-ல்) 5 பட்டி நிலத்தைக் கொடையாகப் பெற்ற பெருங்குறி சபையார் அதனைக் கொண்டு ஏரியைத் தோண்டி கரையை உயர்த்தினர். கி பி 883 ல் கழுக்குன்றன் எனும் வணிகன் 100 கழஞ்சு பொன்னும் 28 காடி நெல்லும் கொடையளித்தான் . கி பி 886ல் மன்னிப்பாக்கிழான் என்ற வணிகன் 100 கழஞ்சு பொன்னும் கி பி 886 ல் அவனே மற்றும் 100 கழஞ்சு பொன்னும் கொடுத்தான் என்று பலப் பல செய்திகள் மூலம் எப்படி அந்தக் காலத்தில் தமிழர் நீராதாரங்களான ஏரி,குளம் , கிணறு முதலானவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவைகளை வெட்டுவித்தும் பராமரித்தும் வந்துள்ளனர் என அறியமுடிகிறது.
பொதுவாகவே ஆண்டு தோரும் தூர் வாரப் பட்டுள்ளதை மாமல்லபுரம் பையனூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
முன்னரே சொன்னது போல் தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது. கி பி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயேமக்கள் ஏரிகளை உருவாக்கியுள்ளனர்.
கி பி 550ல் சமணத் துறவி வஜ்ர நந்திக்கு பருத்திக் குன்றம் என்ற ஊரை பள்ளிச் சாந்தமாக கொடுத்த போதே ஏந்தல் ஏரி,வேள்வடுகன் ஏரி மற்றும் நீலபாடிவதி, மூலை ஏற்றம், முருக்கங்கேணி போன்ற நீராதாரங்கள் அந்த ஊரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.
கோவில் கட்டும் போதும் ஏரி தோண்டுவதும் முக்கியமான பணியாக நற்பலனைத் தரும் பணியாக மக்கள் கருதினர். காட்டுத் தும்பூரில் 563 ஆம் ஆண்டு கனக வல்லி ஏரி உருவாக்கப்பட்டது. உத்திரமேரூருக்கருகில் மல்லியங்கரணை ஏரி, வெள்ளேரி, தும்பனேரி கார்வதி ஏரி என பல ஏரிகள் ஏற்பட்டுள்ளன.இப்படிப் பலப்பல உதாரணங்கள்.
பின்வந்த சோழர்கள் 11ஆம் நூற்றாண்டில் எடுப்புவித்த சோழகங்க ஏரி( இன்றைய பொன்னேரி) வீர நாராணம் ஏரி ( இன்றைய வீராணம் ஏரி) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஏரிகளிலிருந்து நீரை வெளியே எடுப்பதற்குப் பல வழிகளைப் பின்பற்றியுள்ளனர் நம் முன்னோர். கலிங்கு, மதகு , தூம்பு என சில கட்டுமானங்களின் மூலம் நீரை முறையாகப் பயன் படுத்தியுள்ளனர். இன்றைய நீர் நிர்வாகம் அல்லது நீர் மேலாண்மை என்று சொல்லக்கூடிய அறிவுத்துதை (water Management) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்களிடம் இருந்துள்ளது.
நாட்டுக்கால், ஆற்றுக்கால், ஊற்றுக்கால் எனும் பெயர்களில் அக்காலத்தில் கால்வாய்கள் அமைக்கப் பட்டுள்ளன.இவற்றைப் பராமரிக்கவும் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் தனிச்சையாகக் கால் வெட்டுவோர் தண்டிக்கப் பட்டுள்ளனர். நீர் நிலைகளை ஏற்படுத்துவதை தம் வாழ்வின் பெரும் தர்மமாக நினைத்துள்ளனர் மக்கள் . திருவெள்ளரை ஸ்வஸ்திகக் கிணறு ( இன்று நல்ல தமிழில் "நாலு மூலைக் கேணி" என்று அழைக்கப் படுகிறது) அருகில் உள்ள கல்வெட்டு
கண்டார்காணா உலகத்தே காதல் செய்து நில்லாதே
பண்டே பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நய்யதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகம் அறிய வைமினே
என்கிறது .அதாவது தம் ஆயுளுக்குப் பிறகும் தம் பெயர் சொல்வது நீருதவும் தர்மம் என்பதே இதன் அடிப்படைக் கருத்து.
நீர்நிலைகளை அழித்தல் பெரும் நாசம் என்பதனையும் நம் மக்கள் உணர்ந்து அப்படிச் செய்யப் புகுந்தவர்களை எச்சரித்துள்ளனர்
"கீழ்வேளூர் சபையார் தன்மம். இதற்கு அஹிதம்
செய்தவன் காவிரி குலை குத்தின பாவங்கொள்வான் "
என்று தாராசுரத்தில் கிடைத்த கல்வெட்டு "காவிரிக் கரையைச் சிதைத்த பாவம்" என்று பாவச் செயல்களுக்கே ஒரு reference point ஆக நீர் நிலைகளை அழிப்பதைக் கொள்கிறது
கட்டுரையின் பெறுவாரியான பகுதிகள் நான் வாசித்த முனைவர் சொ.சாந்தலிங்கத்தின் " தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் " என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது
ஆனால் இன்றைய தமிழகத்திலே நடப்பதென்ன ?

திங்கள், 7 பிப்ரவரி, 2011
சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி
சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி
ஊட்டி, பிப். 4 உலக நகைச்சுவை தினத்தை முன்னிட்டு ஊட்டி நகர விழிப்புணர்வு சங்கம் சார்பில் எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஹரி தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் லாட் வரவேற்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நகைச்சுவையும், குறும்பும் அதிகமாக இருக்கும். ஆனால் மாறி வரும் கால சூழலில் பொருளாதார தேடலில் மனிதன் இயந்திரம் போல சுற்றி திரிவதால் நகைச்சுவையை மறந்து விட்டான். எனவே மனசுமைகள் நீங்கி அமைதி பெற சிரிக்க மனிதன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றார்.
ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தனன் பேசுகையில், கவலை உடலையும், மனதையும் கொல்லும், மனதில் அமைதி ஏற்பட நகைச்சுவையில் ஈடுபாடு காட்டுதல் வேண்டும். மகிழ்ச்சி ஆயுளை வளர்க்கும் மருந்து. மனிதனின் இன்றியமையாத சொத்து நகைச்சுவை என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் நகைச்சுவையான நாடக, நடனங்கள் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தனர்.
நகைச்சுவைக்காகவே வாழ்ந்த சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி, சந்திரபாபு, என்.எஸ் கிருஷ்ணன் நாகேஷ் ஆகியோர் நினைவு கூறப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட 50 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி நிர்வாகி அனிதா ஹரி நன்றி கூறினார்.
உலக புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்
ஊட்டி:
உலக புற்றுநோய் தினத் தையொட்டி,
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மக்கள் மையம் சார் பில், ஊட்டி நகரில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், "
"இன்றைய இளைஞர்கள் பலர் புகையிலை, பான்மசாலா மற்றும் பிற போதை வஸ்துகளுக்கு அடிமை ஆகிவிட்டனர். இதனால், பல நிலைகளில் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் புற்றுநோய் ஆலோசனை, சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும்,'' என்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""புற்றுநோயை பரப்புவதில் புகையிலை பெரும் பங்கு வகிக்கிறது. பீடி, சிகரெட் போன்றவற்றின் புகையை மற்றவர்கள் சுவாசிக்கும் போதும் புற்றுநோய் பரவுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் போன்றவையும் புற்றுநோயை உருவாக்குகிறது,'' என்றார்.
நிகழ்ச்சியில் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைபள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சார்பில் நடத்தப்பட்ட ஒருநாள் சிறப்பு முகாமில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். தென்றல் நகர் ஊர் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செவனன் பேசினர்.
வியாழன், 3 பிப்ரவரி, 2011
"இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்'
இயற்கையைப் பாதுகாக்கும் பொருள்களை பயன்படுத்த வேண்டும்
Last Updated :
உதகை, பிப். 2: இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டுமென முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ் ஸ்ரீவத்சவா வலியுறுத்தினார்.உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் சார்பில் உலக சதுப்பு தினம் உதகையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜீவ் ஸ்ரீவத்சவா பேசியதாவது:தற்போதைய சூழலில் பல்வேறு சதுப்பு நிலங்களின் நிலை மாற்றப்பட்டுள்ளது. காற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. அத்துடன் சதுப்பு நிலங்களை நம்பி வாழும் நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்கள் பெரிதும் பாதிப்படைகின்றன. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் சில ஆடம்பர பொருட்கள் இயற்கையை பாதிப்படையச் செய்கின்றன. எனவே, நாம் பயன்படுத்தும் பொருட்கள் இயற்கையைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இயற்கையை நமது நண்பனாக நேசிப்பதோடு, ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் தங்கள் குடும்பத்தினரையும் இயற்கையை நேசிக்கும் குடும்பமாக மாற்ற வேண்டுமென குறிப்பிட்டார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேல், சதுப்பு நிலங்கள் பல வகைகளிலும் மனிதர்களுக்கு பயனளிப்பவை எனவும், சுனாமி போன்ற பேராபத்துகள் ஏற்படும்போது மாங்குரோவ் காடுகள்தான் அவற்றிலிருந்து பாதுகாக்க முடிந்தவை என்பதால் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும், ஒவ்வொரு வீட்டிலும் மூலிகைத் தாவரங்களை வளர்க்கும் மன நிலையை பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டார். நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ், சதுப்பு நிலங்கள் பல்வேறு உயிரினங்களின் வாழ்வுக்கும் ஆதாரமாக விளங்குவதாகவும், சதுப்பு நிலங்கள் அழியும்போது அவற்றிலுள்ள உயிரினங்களும், தாவர வகைகளும் அழிந்து போவதால் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்த்தனன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டிலுள்ள சதுப்பு நிலங்கள் அழியும் தருவாயில் உள்ளதாகவும் அவற்றை அரசும், மக்களும் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், நமது முன்னோர்கள் இயற்கையைப் பாதுகாத்ததாலேயே நாம் தற்போது சுத்தமான காற்று மற்றும் நீரைப் பெறுகின்றோம் என்பதால், நமது சந்ததியினருக்கும் அத்தகைய வாய்ப்பை விட்டுச் செல்ல வேண்டுமெனவும் குறிப்பிட்டார். உதகை சிஎஸ்ஐ ஜெல் மெமோரியல் பள்ளி மற்றும் சிஎஸ்ஐ மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஆசிரியை ஹெலினா வரவேற்றார். முடிவில் ஹெனாரின் உட் நன்றி கூறினார்.
| ‘Wetlands crucial in preventing pollution' Special Correspondent
‘Wetlands or marshy areas help prevent landslides' Call to avoid indiscriminate use of plastic items Promoting conservation: The Field Director, Mudumalai Tiger Reserve, Rajiv K.Srivastava, speaking at the World Wetlands Day celebrations in Udhagamandalam on Wednesday. This was underscored at a function organized by the Public Awareness Association of Udhagamandalam and the Gudalur Consumer, Human Resource and Environment Protection Society at the Arboretum (tree garden) here on Wednesday in connection with the observance of World Wetlands Day. Students Addressing the gathering which included many school students, the Field Director, Mudumalai Tiger Reserve, Rajiv K.Srivastava pointed out that wet lands or the marshy areas played a crucial role in preventing pollution. They also helped prevent landslides. Stating that they should be protected at all costs, he said that in the Mukurthi National Park alone they extended over about 200 hectares. Animals If they become dry not only the people but also many varieties of aquatic birds and animals would be affected. Stating that the indiscriminate use of plastic items should be avoided, he urged the people to live in harmony with Nature. The Field Officer, CPR Environmental Education Centre M.Kumaravelu said that wetlands reduced the impact of natural calamities. The Secretary, Public Awareness Association of Udhagamandalam, G.Janardhanan, said that many of the wetlands in and around Udhagamandalam are on the verge becoming dry. The Managing Trustee, Nilgiris Environment and Cultural Service Trust (NEST), V.Sivadass, and Sivasubramaniam of the Gudalur Consumer, Human Resource and Environment Protection Society also spoke. During the function, the children took a pledge to protect the wetlands. |
"இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்'
ஊட்டி : "இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்' என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ் ஸ்ரீ வஸ்தவா கூறினார்.
ஊட்டி மரவியல் பூங்காவில் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், உலக சதுப்பு நில பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊட்டி சி.எஸ்.ஐ., ஜெல் நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எஸ்.ஐ., மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்று இயற்கை காப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீ வஸ்தவா பேசுகையில், ""உலகம் முழுவதும் பிப்., 2ம் தேதி உலக சதுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் பல்வேறு சதுப்பு நிலங்கள் நிலை மாற்றப்பட்டுள்ளன. இவைகளினால் காற்று, நீர், ஒளி மாசு ஏற்பட்டு பல நிலைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றன. மனிதர்கள் மட்டுமின்றி இயற்கையும், இயற்கை வாழ் நீர் வாழ்வினங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களும் பெரிதும் பாதிக்கின்றன. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பல ஆடம்பர பொருட்கள் இயற்கையை பாதிப்படைய செய்வதுடன் சிறிய உயிரினங்களின் வாழ்வையும் சிதைக்கின்றன.
வனத்தீயினால் நீலகிரியில் மிக முக்கிய வன உயிரின மண்டலமான முதுமலை தேசிய பூங்காவான முக்கூர்த்தி போன்ற இயற்கை பாதுகாப்பு பகுதிகள் சேதமடைகின்றன. நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் இயற்கையை பாதிக்காத பொருட்களாக பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தும் சோப்பு முதல் எழுது பொருட்கள் மற்றும் இதர உபயோக பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் நம்பக பொருட்களாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கை நமக்கு நல்ல நீர், காற்று, நல்ல சூழலையும், பலவித நன்மைகளையும் தருகிறது. நாமும் இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் இயற்கை நேசிக்கும் குடும்பமாக மாற்ற வேண்டும்,'' என்றார்.
சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில், ""சதுப்பு நிலங்கள் சோலைக்காடுகள், மலைகளை ஒட்டிய நீர்வளங்கள் அடங்கிய பகுதியாகும். இவை பல வகையில் நமக்கு பயன் தருகின்றன. சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் போது ஏற்பட்ட உயிர் சேதங்கள், பொருட்சேதங்கள் அதிகரிக்க கடல் சார்ந்த பகுதிகளில் இருந்த மாங்ரோ காடுகள் அழிக்கப்பட்டதே ஆகும். சதுப்பு நிலங்களில் உள்ளூர் தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நீண்ட கால பாதுகாப்பினை சதுப்பு நிலங்கள் பெறும்,'' என்றார். நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""சதுப்பு நிலங்களில் பல்வேறு உயிரினங்கள் மூலிகை செடிகள் உள்ளன. இங்குள்ள நீராதாரத்தை நம்பியே இவை வாழ்கின்றன. சதுப்பு நிலங்கள் அழியும் போது, இதை சார்ந்துள்ள உயிரினங்கள், தாவரங்கள் அழிந்து போகிறது. வீடுகளில் பூச்செடிகள் வளர்ப்பது போல் மூலிகை செடிகளையும் வளர்க்க வேண்டும்,'' என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இவற்றை அரசும் மக்களும் காப்பாற்ற முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""இயற்கையை பாதுகாத்ததினால் சுத்தமான காற்று, நீர், உணவை முன்னோர்கள் பெற்றனர். அதேபோல வருங்கால சந்ததியினர் நல்ல சூழலில் வாழ நாம் தற்போதுள்ள இயற்கையை காப்பாற்ற முன்வரவேண்டும்,''என்றார். மாணவர்களுக்கு மரவியல் பூங்காவை சுற்றி காண்பித்து அங்குள்ள சதுப்பு நில பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை ஹெலினா வரவேற்றார். ஆசிரியர் ஹொனரின்வுட் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)