பந்தலூர் :நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புதொகை கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய அலுவலகத்தின் வாயிலாக அரசு மூலம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் மாதந்தோறும் தலா 500ரூபாயும்,
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்.
ஆனால், கடந்த 6 மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவேண்டிய பராமரிப்பு வழங்கவில்லை. மாதந்தோறும் தங்களுக்குரிய தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் போஸ்ட்மேனை எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் மனதளவில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகையை வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.என கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக