பந்தலூர் : "ரத்த தானம் செய்வதன் மூலம் உயிரை காப்பாற்றிய மனநிறைவு ஏற்படும்,' என தெரிவிக்கப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையத்தின் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடந்தது. சித்தா டாக்டர். கணேசன் பேசுகையில்,""ரத்த தானம் வழங்குவது சிறப்பான சேவையாகும். அந்த சேவையில் பெண்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள முன்வரவேண்டும்,'' என்றார். சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசுகையில், ""ரத்த தானம் வழங்குவதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மாறாக ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. ரத்த வங்கிகள் உள்ளதால் ஒரு நபருக்கு தேவையான ரத்தவகை குறிப்பிட்ட நபர்களிடம் கிடைக்காவிட்டாலும் அவர்களிடமுள்ள ரத்தவகையை பெற்று ரத்த வங்கியில் கொடுத்து அதற்கு மாற்றாக ரத்தம் பெற்றுக்கொள்ளலாம். எனவே அவசர தேவைகளின்போது ரத்த தானம் செய்வதற்கு அனைவரும் முன்வரவேண்டும்,'' என்றார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கதிரவன் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், ""ரத்த தானம் செய்வது என்பது அரிதாக காணப்பட்ட நிலையில், நுகர்வோர் அமைப்பு மூலம் ரத்த தான குழுமம் துவக்கப்பட்டு ரத்த கொடையாளர்களாக நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை வெளியுலகிற்கு காட்டியுள்ளது பாராட்டுக்குரியது. ரத்த தானம் அளிப்பதன் மூலம் தன் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்ற மன நிறைவு ஏற்படும்,'' என்றார். நிகழ்ச்சியில், டாக்டர். ரம்யா பெண்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். பந்தலூர் அரசு மருத்துவமனை டாக்டர். விவேகானந்த், மகளிர் குழு நிர்வாகி இந்திராணி, மைய நிர்வாகி தனிஸ்லாஸ், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் தேசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மைய தலைவர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். மைய செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக