அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 29 செப்டம்பர், 2011

காற்றை காப்போம்...

காற்று மாசுபடுதல் என்பது, வளி மண்டலத்தில் ஏற்படும் சீர்குலைவின் ஆரம்பம். இன்றைய யுகத்தில் வாகனங்கள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆண்டு தோறும் காற்று மாசுபடுதல் தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகிறது. ஆனால், அதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. காற்று மாசுபடுதலை தவிர்க்க முடியாவிட்டாலும், அதை கட்டுப்படுத்தலாம். காற்றில் கலந்திருக்கும் வாயுக்கள்; அவற்றால் ஏற்படும் பாதிப்புகள்:

* தூசி (எஸ்.பி.எம்., - சஸ்பெண்டட் பர்டிகுலேட் மேட்டர்)

இது காற்றில் அதிகமாக பரவும். காற்றை மாசுபடுத்துவதில் முதலிடம் வகிக்கிறது. அளவில் 10 மைக்ரானை விட சிறியவை. பாதிப்புகள்: சிறிதாக இருப்பதால் நேரடியாக நுரையீரலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும். தும்மல், ஆஸ்துமா, தலைவலி ஏற்படும். புற்றுநோய், மாரடைப்பு உள்பட நீண்ட கால விளைவையும் ஏற்படுத்தும்.

* சல்பர் டை ஆக்சைடு: மின் உற்பத்தி நிலையங்களில் அதிகம் வெளிப்படுகிறது. தொழிற்சாலைகளில் தாதுக்களிலிருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் போதும், சல்பர் காற்றில் கலக்கிறது. பாதிப்புகள்: இந்த வாயுவை சுவாசிக்கும் போது, ஆஸ்துமா, சுவாசப்பை நோய், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

* அம்மோனியா: நிறமற்ற வாயுவான அம்மோனியா, உரம் தயாரிப்பு, பதப்படுத்தும் நிறுவனங்களிலிருந்து அதிம் வெளிப்படுகிறது. சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படுத்தும். பாதிப்புகள்: நீரில் எளிதாக கரையும் தன்மை கொண்டது. இவை உடலில் எரிச்சலை உண்டாக்குவதோடு புண்களை ஏற்படுத்தும். குறைந்த செறிவுடைய வாயுவையை வெளிப்படுத்தும் போது இருமல், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும். இந்நிலை நீடித்தால் கண்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணத்தில் முடியும்.

* நிக்கல்: பொதுவாக சுற்றுச்சூழலில், குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. எண்ணெய் பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றை எரிக்கும் போதும், நிக்கல் மெட்டல்களை மெருகேற்றுதல், கழிவுப்பொருட்களை எரிக்கும் போதும் நிக்கல் காற்றில் அதிகம் கலக்கிறது. பாதிப்புகள்: நிக்கலை தொடர்ச்சியாக உள்ளிழுக்கும் போது, சுவாசம் தொடர்பான நோய்கள், ஆஸ்துமா ஆகியவை ஏற்படுகின்றன.

* ஹைட்ரோ கார்பன்: எண்ணெய், மரம், ரப்பர் ஆகிய பொருட்கள் தயாரிப்பின் போது, முழுமையாக எரிபடாமல் இருந்தால் இந்த வாயு வெளிப்படும். பாதிப்புகள்: ஓசோன் மற்றும் பனிப்புகை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, தலைவலி, ஆஸ்துமா ஆகிய நோய்களை ஏற்படுத்தும். சுவாச மண்டலத்தை முழுமையாக பாதித்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து பாதிப்பை உண்டாக்கும்.

* நைட்ரஜன் ஆக்சைடு: டீசல், பெட்ரோல், பயோ-டீசல், புரோபேன், எத்தனால் மற்றும் நிலக்கரி தயாரிப்பின் போது ஏற்படும் அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக வெளிப்படுகிறது. பாதிப்புகள்: நுரையீரல், திசுக்களை முற்றிலுமாக அழிப்பதுடன் மோசமான இதய நோய்களை உண்டாக்கும். தவிர, ஆஸ்துமா, மூச்சுக்குழல் கோளாறு ஆகியவை ஏற்படும்.

* ஈயம்: இயற்கையாகவே உலோகங்கள் மற்றும் சில பொருட்களில் காணப்படுகிறது. வாகனங்களிலிருந்தும், கழிவுப் பொருட்களை எரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்தும் வெளிப்பட்டு காற்றில் கலக்கின்றன. பாதிப்புகள்: உள்ளுறுப்புகள், மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் பாதிப்படைகின்றன. தொடர்ச்சியாக இதை சுவாசிக்கும் போது, குழந்தை பிறப்புக் குறைபாடு, இனப்பெருக்க மண்டலத்தில் கோளாறு, எலும்புருக்கி நோய்கள் ஏற்படுகின்றன.

* குரோமியம்: இயற்கையாக உருவாகும் தனிமங்களான, இவை வாயுக்களில் அதிக அளவில் காணப்படுகிறது. பாதிப்புகள்: மூக்கில் எரிச்சல், மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கில் ரத்தம் வடிதல், அல்சர் ஆகிய நோய்களை உண்டாக்கும். அதிக அளவிலான குரோமியத்தை சுவாசிக்கும் போது, வயிற்று வலி, வலிப்பு நோய், கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக