அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

List Of Tamil Nadu Government Website :

List Of Tamil Nadu Government Website  :

Government of Tamilnadu  :  www.tn.gov.in/

Government of Tamil Nadu Directorate of Government Examination  :  www.dge.tn.gov.in/

TTDC Official Website  :  www.tamilnadutourism.org/

Tamil Nadu Civil Supplies Corporation  :  www.tncsc.tn.gov.in/


The official website of the School Education Department, Government of Tamilnadu  :  www.pallikalvi.in/


Government Museum Chennai  :  www.chennaimuseum.org/


Tamil Nadu Public Service Commission (TNPSC)  :  www.tnpsc.gov.in/


Departments in Government of Tamilnadu  :  www.tn.gov.in/departments.html


Tamil Nadu Electric Board  :  http://www.tneb.in/

Department of employment and training  :  http://tnvelaivaaippu.gov.in/Empower/

Tamil Nadu Text Book Corporation  :   http://www.textbookcorp.tn.nic.in/

தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்  :  http://www.textbooksonline.tn.nic.in/

Tamil Nadu Industrial Development Corporation  :  http://www.tidco.com/ 

Tamil Nadu Medical Service Corporation  :  http://www.tnmsc.com/tnmsc/new/index.php 

Tamil Nadu Minerals Corporation :  http://www.tamingranites.com/

Tamil Nadu  Cement Corporation  :  http://www.tancem.com/

Regional Passport Office  :  http://passport.tn.nic.in/ 

Online Petition Filing and Monitoring System New  http://cmcell.tn.gov.in/ 


 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 24 ஏப்ரல், 2014

கண்டிப்பா ஓட்டு போடுங்க!

ஜனநாயக கடமைக்கு இன்று உன்னதமான நாள். கண்டிப்பாக ஓட்டு  போடும் பொறுப்பை நிறைவேற்றுங்கள். இதற்காக ஒரு சிறிய கைடு: 

* உங்கள் வாக்காளர் அட்டையை தயார்படுத்துங்கள். வீட்டுக்கு பூத்  ஸ்லிப் கொடுத்திருந்தால் அதில் எந்த பூத்  என்று தெரிந்திருக்கும். 

* இல்லாவிட்டால் கவலை வேண்டாம். ஆன்லைனில் எளிதில் பார்த்து  விடலாம். சரி, ஓட்டுச்சாவடிக்கு கிளம்பலாம் நீங்கள் இனி. 

* வாக்குசாவடிக்குள் நுழைந்தால், அங்கு உங்கள் எண் உள்ள பூத் முன்  வரிசையில் நிற்க வேண்டும். வரிசை நெருங்கும்போது, பெரிய  போர்டில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் எல்லாம்  பொறிக்கப்பட்டிருக்கும். அதை பார்த்து கொள்ளலாம். 

* பூத்துக்குள் நுழைந்ததும், முதல் இருக்கையில்  அமர்ந்திருக்கும்  தேர்தல் அதிகாரி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை, பூத் ஸ்லிப்  இரண்டையும் வாங்கி பார்ப்பார். 

* உங்கள் பெயர், வாக்காளர் எண், முகவரியை உரக்க படிப்பார்.  அருகே வரிசையாக உட்கார்ந்திருக்கும் கட்சிகள் சார்ந்த ஏஜென்ட்கள்  அதை தங்களிடம் இருக்கும் பதிவேட்டில் உறுதி செய்து கொள்வர். 

* பெயரில் குழப்பம், முகவரி தவறு என்று ஆட்சேபம்  தெரிவிக்காதபட்சத்தில் உங்களை அடுத்த இருக்கையில் உள்ள  அதிகாரியிடம் அனுப்புவார். 

* அடுத்த இருக்கையில் உள்ள அதிகாரியிடம் நீங்கள் போக வேண்டும்.   அவர் உங்கள் இடது கை விரலில் மை வைப்பார். 

* அடுத்த அதிகாரி தன் பதிவேட்டில் உள்ள பெயர்,  முகவரியுடன்  ஒப்பிட்டு பார்த்து கையெழுத்து வாங்குவார். பட்டனை ஆன் செய்வார்.  அவரிடம்தான் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் இருக்கும். 

* அடுத்து மறைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு  வாக்கு இயந்திரத்தின் முன் நீங்கள் சென்று, பெயர், சின்னங்களை  பார்த்து விருப்பமான வேட்பாளர் பெயர் எதிரே உள்ள பட்டனை அழுத்த  வேண்டும். 

* அவ்வளவுதான். நீங்கள் ஓட்டு போட்டு விட்டீர்கள். ஜனநாயக  கடமையாற்றிய திருப்தியுடன் வெளியே வரலாம். மை பூசிய விரலை  உறவினர்கள், நண்பர்களிடம் காட்டி, நான் ஓட்டு போட்டுவிட்டேன் என  மகிழலாம்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 21 ஏப்ரல், 2014

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்




ஊட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு  மையம் மக்கள் மையம், நீலகிரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு,  நேரு யுவ கேந்திரா மற்றும் மக்கள் குரல் நீலகிரி கிளை ஆகியன் இணைந்து ஊட்டி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின 

நிகழ்ச்சியில்  பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தலைமை வகித்து பேசும்போது
நாம் அனைவருக்கும் முக்கிய கடமை வாக்களிப்பது. எனவே  ஒவ்வருவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.  வாக்களிக்கும் முன் நல்லவரை தேர்வு செய்வதை உறுதி செய்து கொண்டு காலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும்.  ஊரில் உள்ள மற்றவர்களிடமும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்து கூறி வாக்களிக்க செய்ய வேண்டும். அனைவரும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாளில் அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. வாக்கு சதவீதம் அதிகரித்தால் தான் மக்களாட்சி வலிமை பெறும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பதுகாப்பு மைய தலைவர்  சிவசுப்பிரமணியம் பேசும்போது வக்களிப்பதாலே நம்முடைய உரிமையை சரியாக செய்கிறோம் என்பதற்கு முக்கிய சாட்சியாகும்.  வாக்களிக்கும் முன் நல்லவருக்கு வாக்களிக்க வேண்டும்.  தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்னதாக வாக்கு சாவடி அலுவலர்களிடம் பூத் சிலிப் எனப்படும் வக்குக்கான சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும்.  நீங்கள் வாக்களிக்காத பட்சத்தில் அதனை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி கள்ள ஓட்டாக பதிவு செய்ய வழிவகுக்கும் எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் யாரையும் பிடிக்காவிட்டால் பிரிவு 49 O ன் படி நோட்டா என்ற பட்டனில் வாக்கினை பதிவு செய்யலாம்.  ஓட்டுக்கு பணம் கொடுத்தல், மற்றும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடந்தால் மாவட்ட நிர்வாகதின் சார்பில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்திற்கு 18004257025 என்ற இலவச எண்ணில்  புகார்களை பதிவு செய்யலாம் என்றார்.  

நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணா சாமி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் விளக்கம் அளித்தனர் தொடர்ந்து பயிற்சி மைய மகளிர்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப பட்டது.

அதுபோல ஊட்டி A T C பேருந்து நிலையம் மார்க்கெட் ஆகிய பகுதிகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பயணிகள் வாகன ஓட்டிகள் மாணவர்கள் வியாபாரிகள் என பல தரப்பினரிடையே  வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு  ஏற்படுத்த பட்டது. இதில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணா சாமி செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பதுகாப்பு மைய தலைவர்  சிவசுப்பிரமணியம் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சோலூர் கணேஷன், கேத்தி நஞ்சன், ராஜுப்பெட்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு  மையம் மக்கள் மையம், நீலகிரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு  மற்றும் மக்கள் குரல் நீலகிரி கிளை ஆகியன இணைந்து
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டன.
குன்னூர் பகுதியில் நடத்திய நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணா சாமி தலைமை தாங்கினார்.  நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பதுகாப்பு மைய தலைவர்  சிவசுப்பிரமணியம் மற்றும் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் டேவிட், கிப்சன், ஜெயபிரகாஷ், விஜயகுமார், செல்வி, இந்திராணி உள்ளிட்ட பலர் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பயணிகள் வாகன ஓட்டிகள் மாணவர்கள் வியாபாரிகள் என பல தரப்பினரிடையே  வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு  ஏற்படுத்த பட்டது. கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளக்கி  பொது மக்களிடம் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்   என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதுபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நுகர்வோர் மையம்,  மாவட்ட கூட்டமைப்பு மற்றும் கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள பட்டு வருகிறது.

Sivapuranam by Sulamangalam Sisters



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

திங்கள், 7 ஏப்ரல், 2014

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

Dr-BR-Ambedkar
விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.
பிறப்பு: ஏப்ரல் 14, 1891
இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா
பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்
இறப்பு: டிசம்பர் 6,  1956
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.
1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.
உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்
பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.
சமூகப்பணிகள்
1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”
இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.
தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்
வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.
விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு
ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26,  1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.
பெளத்த சமயம் மீது பற்று
தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.
அம்பேத்கரின் பொன்மொழிகள்
  • “ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
  • “ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
  • “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”.
  • “சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”
  • “வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
இறப்பு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

நான் எதிர்த்ததால்தான் என் பெயர் சேர்க்கப்பட்டது -II

10092008
Ambedkarஎனது காலத்தில் ஓர் அமைச்சரிடமிருந்து மற்றொரு அமைச்சருக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டு வந்தன. நான் எப்போதுமே ஒதுக்கப்பட்டே வந்தேன். பல அமைச்சர்களிடம் இரண்டு அல்லது மூன்று துறைகள் கொடுக்கப்பட்டன. என்னைப் போன்றே மற்றவர்களும் கடும் பணிகளை செய்யக் காத்திருந்தனர். யாரேனும் ஓர் அமைச்சர் சில நாட்களுக்கு வெளிநாடு சென்றிருக்கும்போது, அவரது துறை தற்காலிகமாகக் கூட எனக்குத் தரப்படுவதில்லை, அரசாங்கப் பணிகளை அமைச்சர்களிடம் பகிர்ந்தளிப்பதில் என்ன அடிப்படைக் கோட்பாட்டை பிரதமர் பின்பற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதே எனக்கு கடினமாக இருந்தது. அது திறமையா? நம்பிக்கையா? நட்பு முறையா? செல்வாக்கா? வெளியுறவுத்துறைக் குழு அல்லது பாதுகாப்புத் துறைக் குழு போன்ற அமைச்சரவையின் முக்கியமான குழுக்களில் ஓர் உறுப்பினராகக்கூட நான் நியமிக்கப்படவில்லை.
பொருளாதார விவகாரக் குழு அமைக்கப்பட்ட போது பொருளாதாரம் மற்றும் நிதித் துறைகளில் நான் குறிப்பாகப் பெரிதும் தேர்ச்சிப் பெற்றவன் என்ற கண்ணோட்டத்தில், இக்குழுவில் எனக்குப் பணி தரப்பட்டு அமர்த்தப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் பின்னுக்குத் தள்ளப்பட்டேன். பிரதமர் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தபோதுதான் நான் அப்பணியில் அமைச்சரவையில் அமர்த்தப்பட்டேன். ஆனால் அவர் திரும்பி வந்தபோது, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் அவர் என்னைத் தவிர்த்துவிட்டார். இதற்குப் பின்னர் நடைபெற்ற புனரமைப்பில் எனது பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நான் எதிர்த்ததால்தான் கிடைத்தது.
இது தொடர்பாக நான் ஒருபோதும் பிரதமரிடம் புகார் எதையும் கொடுக்கவில்லை என்பதை அவரே ஒப்புக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அமைச்சரவைக்குள் நடைபெறும் அரசியல் அதிகாரப் போட்டிகளிலோ, காலி இடங்கள் ஏற்படும்போது அத்துறைகளை அபகரித்துக் கொள்ளும் விளையாட்டிலோ நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. எனினும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இந்த விஷயத்தில் எனக்கு தவறு இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உணராதிருப்பது, மனிதத் தன்மையற்றதாக இருந்திருக்கும்.
அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ளச் செய்த மற்றொரு விஷயத்தை இப்போது குறிப்பிட விரும்புகிறேன். அது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பானதாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசியல் சாசனம் முன்வைக்கவில்லை என்பது கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவுள்ள ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக அரசாங்க சாசனத்தை நாம் அங்கீகரித்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அரசாங்கமோ ஓர் ஆணையம் அமைப்பது குறித்து சிந்தித்துப் பார்க்கக்கூட இல்லை. நான் பதவியிலிருந்து வெளியேறிய 1946ஆம் ஆண்டு எனக்கும், பட்டியல் சாதியினரிலே தலைமையை ஏற்றிருந்த உறுப்பினர்களுக்கும் மிகப் பெரிய கவலையை அளித்த ஓர் ஆண்டாக அது இருந்தது.
பட்டியல் சாதியினருக்கான அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்புகள் குறித்த விஷயத்தில், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளிலிருந்து பிரிட்டிஷார் பின்வாங்கி விட்டனர். மேலும் தங்களுக்காக அரசியல் நிர்ணய சபை என்ன செய்யும் என்பது பற்றி பட்டியல் சாதியினர் எதையும் அறிந்திருக்கவில்லை. கவலையளித்த இக்காலகட்டத்தில் அய்க்கிய நாடுகள் அவைக்கு வழங்குவதற்காக, பட்டியல் சாதியினரின் நிலை குறித்து ஓர் அறிக்கையை நான் தயாரித்திருந்தேன். ஆனால் அதை நான் அய்.நா. அவையில் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் நிர்ணய சபையும் வருங்கால நாடாளுமன்றமும் இந்த விஷயம் குறித்து ஒரு முடிவுக்கு வரும் வரை காத்திருப்பது உகந்தது என்று நான் உணர்ந்தேன்.
பட்டியல் சாதியினரின் நிலையைப் பாதுகாப்பதற்காக அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருந்த வழிவகை ஏற்பாடுகள் எனக்கு நிறைவளிக்கவில்லை. இருப்பினும் அரசாங்கம் அவற்றை பயனுறுதியுடையதாக்க ஓரளவு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டேன். பட்டியல் சாதியின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கிறது? எனக்குத் தெரிந்தவரை அது பழைய நிலையிலேயே இருக்கிறது. அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய கொடுமை, பாரபட்சம் காட்டும் அதே பழைய நிலை ஆகியவை முன்பு இருந்தது போலவே, இன்றளவும் இருந்து வருகின்றன. டில்லி மற்றும் பக்கத்திலுள்ள இடங்களைச் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வந்து, சாதி இந்துக்கள் தங்களுக்கு இழைத்து வரும் கொடூரங்கள், இது தொடர்பான தங்களது புகார்களைப் பதிவு செய்ய மறுத்து வரும் காவல் துறையினரின் விபரீத போக்கு குறித்தும் உள்ளம் உருக்கும் சோகக் கதைகளைக் கூறினர். இத்தகைய நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை என்னால் கூற முடியும்.
- தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1318


 

வெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது – III

10092008
Ambedkarஇந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை? முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.
ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா? இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார்? இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.
அரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை’ என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.
எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
எனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.
நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். “அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்” என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். “நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது’ என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1320

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பந்தலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
 பந்தலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்
 பந்தலூர் பஜாரில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.


பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அனைத்து தரப்பினரும் வாக்களிக்க வலியுறுத்தியும் வாக்கு சதவீதத்தினை அதிகப்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர்கள் கடமை, வேட்பாளரை தேர்வு செய்யும் முறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.


இவற்றை பந்தலூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பேருந்துகளில் உள்ள பயணிகள் என பலதரப்பினரிடையே வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
.
 காலையிலேயே சென்று வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிக்க தவறும் பட்சத்தில் கள்ள ஓட்டாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் நல்லவரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் போட்டியிடும் வேட்பாளர் யாரையும் பிடிக்காவிட்டால் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம் எனவும் வலியுறுத்தினர். 

நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மகா த்மா காந்தி பொதுசேவை மைய அமைப்பாளர் நௌசாத், துணை தலைவர் சுரேஷ், கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

சுகாதார நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளும்போது தான் சுகாதார தினத்திற்கு மரியாதை கிடைக்கும்.

1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார மையம் (World Health Organaisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து  'உலக சுகாதார தினம்' 1950 முதல்  ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7-ம் தேதி  ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை,  உலக  சுகாதார தினமாக கொண்டாடுகிறோம். 

தற்போது ஆட்கொல்லி நோய்களாக விளங்குகின்ற டெங்கு, எலிக்காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் இன்புளுவென்சா (H1 N1) எயிட்ஸ் என்பவற்றின் தாக்கத்தை முறியடிக்க சுகாதாரப் பகுதியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்ற ஆண்டு சுகாதாரத் தொற்று நோய் தடுப்பு பிரிவு நாடாளாவிய ரீதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமலிருப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சிகள்  நடை பெற்றதையும் அனைவரும் அறிவோம்.

ஆனால் தற்போது சுற்றுப்புற சுகாதாரம் எப்படி இருக்கிறது என்பது மிக பெரிய கேள்வி குறியாக உள்ளது.   உள்ளாட்சி மன்றங்கள் சுகாதார பாதுகாப்பு மேம்பட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக செலவினத்தில் 1.2 சதவீதம் கண்டிப்பாக சுகாதார நடவடிக்கைக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகள் சுகாதார நடவடிக்கையாக கழிப்பிடம் கட்டி காசு பார்க்கும் நோக்கில் டெண்டர் விட்டு விடுகின்றனர் டெண்டர் எடுத்தவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால்  தெருவோர கழிப்பிடங்கள் அதிகரித்து சுகாதாரம் கேள்வி குறியாகி விட்டது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய் குப்பை தொட்டிகள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் இதில் மக்கள் பயன் படுத்தாத இடங்களில் அமைப்பதால் பயனற்று உள்ளது  சுகாதரத்தினை பாதுகாப்பதில் உள்ளாட்சிகள் நடவடிக்கை முறையாக மேற்கொள்ளத்தினால் தெருவெங்கும் குப்பைகள் கழிவு நீர்கள் தேங்கி மக்கள் நோயினால் பாதிக்கும் அபாயத்தினை  ஏற்படுத்தி வருகின்றது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு சுகாதார நடவடிக்கைகள் முறையாக  மேற்கொள்ளும்போது தான் சுகாதார தினத்திற்கு மரியாதை கிடைக்கும்.


S.SIVASUBRAMANIAM,
President 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.
Facebook:   http://facebook.com/cchepnilgirisகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஏப்ரல் 7-ம் தேதி 'உலக சுகாதார தினம்'

'உலக சுகாதார தினம்' 1950 முதல்  ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7-ம் தேதி  உலக சுகாதார மையம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை,  உலக  சுகாதார தினமாக கொண்டாடுகிறோம். 

'சுத்தம் சோறு போடும்', "கூழானாலும் குளித்துக் குடி', "கந்தையானாலும் கசக்கிக் கட்டு', "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று தமிழில் ஆரோக்கியம் குறித்து கூறப்பட்ட பழமொழிகளை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. தங்களுடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் தமிழர்கள், வீதியையும் பொது இடங்களையும் பொது வாகனங்களையும் அப்படி இருக்கவிடுகிறார்களா?பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்று சட்டமே இயற்றப்பட்டுவிட்டது. இன்னமும் பொது இடங்களில் புகைப்பது நிற்கவில்லையே!
"இவ்விடம் சிறுநீர் கழிக்காதீர்' என்ற எச்சரிக்கைப் பலகையைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர்போல அதன் எதிரிலேயே கழிப்போர் எத்தனை பேர்? படித்தவர்களும் இதில் விதிவிலக்கு அல்ல.
பஸ், ரயிலில் பயணம் செய்வோர் சாக்லேட் காகிதங்களையும் தின்பண்டங்கள் சுற்றப்பட்ட காகித உறைகளையும் பிளாஸ்டிக் பொட்டலங்களையும், பான் பராக் போன்றவற்றின் உறைகளையும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைகளுக்குக் கீழேயோ எதிரிலேயோ கூச்சமே இன்றி போடுகிறார்கள். சப்போட்டா, கமலா ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடுவோர் அவற்றின் கொட்டைகளை பக்கத்தில் இருப்பவரின் காலில் தெறிக்குமே என்ற கவலையே இல்லாமல் பலமாக தரையில் துப்புகிறார்கள்.
பான் பராக் போன்ற மெல்லும் புகையிலை வஸ்துகளைச் சுவைப்போர், வாயில் ஊறும் நீரை இனி வாய் கொள்ளாது என்றால் அப்படியே காலுக்குக் கீழே, பஸ், ரயில்களின் ஜன்னல் விளிம்புகள், கோலமிட்ட வீதிகள் என்று எங்கு வேண்டுமானாலும் துப்பிவிடுகிறார்கள். எச்சில் துப்புகிறவர்கள் அடுத்தவர் நலனை நினைத்துப் பார்ப்பதே கிடையாது. பஸ் ஓடும்போதே எச்சில் துப்புகிறவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
ஏதும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளும், ஏழை - எளியவர்களும், கோயில்களுக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு வெறுங்காலுடன் நடப்பவர்களும் பயன்படுத்தும் வீதிகளாயிற்றே என்று பாராமல் எச்சில் துப்பி சாலைகளை அசுத்தப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் கல்வியறிவு வளரவளரத்தான் இப்படி பொது இடங்களிலும் அசுத்தம் அதிகமாகி வருகிறது என்பது வருத்தம் தரும் விஷயமாகும்.
ஆட்டோ, பஸ், கார், லாரி, வேன் ஓட்டுனர்களிடம் பான்-பராக் போன்ற பொட்டலம் சாப்பிடும் பழக்கமும், அதை அப்படியே சாலையில் வாந்தி எடுத்தாற்போல் துப்பும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. புகையிலையும் போதைப் பொருளும் தடவப்பட்ட இந்த பாக்குகளால் வாய்ப்புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்கும் ஜீரண நீர்கள், ரத்தம் போலத்தான் உமிழ்நீரும். அது உணவை ஜீரணிப்பதற்காக உடலால் இயற்கையாக சுரக்க வைக்கப்படுகிறது. அதை பாழ்படுத்துவதும் இப்படி புளிச்புளிச்சென்று துப்பிக்கொண்டே இருப்பதும் உடல் நலத்தையும் சீரழித்துவிடும் என்று உணர்ந்து திருந்துவது நல்லது.
பொது இடங்களில் குப்பைபோட்டு அசுத்தம் செய்வோருக்கும், எச்சில் துப்புவோருக்கும் அபராதம் அல்லது சிறு தண்டனை விதிப்பது அவசியமாகும். தாங்கள் அசுத்தப்படுத்திய இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச தண்டனையையாவது அளித்தால்தான் தமிழ்நாடு தூய்மையான மாநிலமாக மாறும்.


S.SIVASUBRAMANIAM,
President 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.
Facebook:   http://facebook.com/cchepnilgiris

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 5 ஏப்ரல், 2014

இன்று உலக சுகாதார தினம்



 இன்று சர்வதேச சுகாதார தின மாக உலக சுகாதார ஸ்தாபனம் (W.H.O) பிரகடனப்படுத்தியுள்ளது. 

இவ்வுலகில் வாழுகின்ற மக்கள் சுகாதாரக் கோட்பாடுகளை எந்த அளவிற்குப் பின் பற்றுகின்றனர். இதனால் நோய்களிலிருந்து எவ்வாறு மீட்சி பெறுகின்றனர்? என்பதைக் கவனத்தில் கொள்வது இங்கு உசிதமாகும்.
தற்போது ஆட்கொல்லி நோய்களாக விளங்குகின்ற டெங்கு, எலிக்காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் இன்புளுவென்சா (H1 N1) எயிட்ஸ் என்பவற்றின் தாக்கத்தை முறியடிக்க சுகாதாரப் பகுதியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்ற ஆண்டு சுகாதாரத் தொற்று நோய் தடுப்பு பிரிவு நாடாளாவிய ரீதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமலிருப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
ஆபத்துடன் கூடிய நோய் அறி குறிகளை கீழ்கண்டவாறு வகுக்கலாம். மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு அல்லது வயிற்றில் வலி, தொடர்ச் சியான வாந்தி, மயக்கத்தன்மை நினைவுத் தடுமாறல், போன்ற நோய் சுகமாகி மீண்டும் காய்ச் சலுடனும் கடும் இருமலுடன் திரும்பி வருதல் என்பவைகளாகும்.
எயிட்ஸ் நோய் எச்.ஐ.வி. வைரஸால் ஏற்படுகின்றது. ஓரினச் சேர்க்கையினால், பிர மாதர் தொடர்பால் இந்நோய் பரவுகின்றது. எயிட்ஸ் நோயுடைய வரிடமிருந்து இரத்த தானம் பெற்றாலோ, அவர்களுக்கு போடப்படும் ஊசிகள் மற்றவர்களுக்கு உபயோகப்படுத்தினாலோ எயிட்ஸ் பரவ வாய்ப்புக்கள் உண்டாகின்றது.
டெங்கு காய்ச்சலை இந்நோயைப் பரப்பும் நுளம்புகளை இல்லா தொழித்தால் கட்டுப்படுத்த முடிகின்றது. சுற்றாடலில் குப்பை கூளங்கள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் என்பவற்றை இல்லாமல் செய்தால் நுளம்பு பரவுவது தடைப்படுகின்றது. சுற்றாடலை அசுத்தமாக வைத் திருப்போர் மீது சுகாதாரப் பிரிவினர் காவல் துறையினரின் அனுசர ணையுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதனையும் காண முடிகின்றது.
மேலும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கண்நோய், பெரிய அம்மை, இருதய நோய், யானைக்காய் நோய், புற்று நோய் என்பவை பரவாமல் இருக்க செளக்கிய திணைக்களம் மக்களைத் தொடர்ந்தும் விழிப் புணர்வுக்குள்ளாக்கி வருகின் றனர்.
இனி உடற் சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக விளங்குகின்ற உணவு வகைகளை எவ்வாறு தெரிவு செய்கின்றனர் என்பதை விரிவாக ஆராய்வோம்.
மனித வாழ்வில் உடல் சுகாதாரத் தையும், ஆரோக்கியத்தையும் நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு இயற்கை உணவும் உன்னத இடத்தை வகிக்கின்றது என்பதை மறுப்பதற் கில்லை. நாம் உண்ணும் உணவில் புரதப் பொருட்கள் மாவுப் பொருட்கள் சக்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் இந்த நான்கும் அடங்கியுள்ளன.
இவை உடல் வளர்ச்சிக்குத் தேவைதான், இருப்பினும் இவை நான்கும் இருந்து விட்டால் மட்டும் மனிதன் ஒரு நோய் நொடி இல்லாமல் உயிர் வாழ்ந்து விட முடியாது. பிணி வராமல் தடுத்து நிறுத்துவதற்குரிய உயிர் ஆற்றல் அல்லது நோய் எதிர்ப்புச் சக்தி தேவைப்படுகின்றது. தாவரங்கள் கொடுக்கும் உணவுகளிலே பழங்கள் தான் ஒரு முழுமைபெற்ற உணவு என்பது நிதர்சனமாகும். நல்ல உடல் நலத்திற்கு விற்றமின் பி பன்னிரெண்டு தேவைப்படுகின்றது. இது இன்றியமையாத உயிர்ச்சத்தாகும்.
இதனை மரக்கறி உண்பவர்கள் முக் கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் தாவர உணவுகளில் விற்றமின் பி பன்னிரெண்டு பயனுள்ள வடிவத்தில் கிடைப்பதில்லை. நமது இரத்த செல்களையும் டி.என்.ஏ. (DNA) மரபுக் கூறுகளையும் உற்பத்தி செய்வதற்கும், நரம்புச் செல்களின் மீது ஒரு பாதுகாப்பு உறையைப் போர்த்துவதற்கும் விற்றமின் பி பன்னிரெண்டு தேவைப்படுகின்றது.
போஷாக்கற்ற தரம் குறைந்த உணவுகளை உட்கொள்பவர்கள் முதலில் நோய்வாய்ப்பட்டு விடு கின்றனர்.
அத்தோடு அவர்கள் குணநலன் குன்றிப் போய் ஆத்திரம், அங்கலாய்ப்பு, கோபம், வன்மம் போன்ற வக்கிர புத்தியடையவர்களாகவும் தன்னிச்சையாகவே மாறிவிடுகின்றனர்.
இவ்வுலகில் அவதரித்த மானிடர்கள் அனைவருமே நீண்ட ஆயுளுடன் வாழத்தான் விரும்புவார்கள் என்பது கண்கூடு. 1871 சராசாரி ஆயுட்காலம் பெரும்பாலும் நாற்பது முதல் ஐம்பது வருடங்களாகக் கணிக்கப்பட்டது.
அதேவேளை 1991 ம் ஆண்டின் மக்களின் சராசரி ஆயுட்காலம் அபரிமித முன்னேற்றம் அடைந்ததற்கு காரணம் என்னவாகவிருக்கும்? இன்றையயுகத்தில் சுகாதாரத் துறையானது வியத்தகு முன்னேற்றம் அடைந்தமையே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் அவதரித்த நாளிலிருந்து முதுமையை எட்டி மரணப்படுக்கை வரையிலும் கண்டிப்பாக சில பருவங்களைக் கடக்க வேண்டியுள்ளது. குழந்தையாக தவழுகின்ற போதும் மூப்படைந்த காலகட்டத்திலும் சிலர் குறிப்பாக சுகாதாரத்தை நல்ல முறையில் பேணாதவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது. பொதுவாக வாலிபப் பருவத்தில் பிணியின் தாக்கம் கணிசமான அளவு குறைவடைந்து காணப்படுவது இயற்கை. இது யதார்த்தமும் கூட.
மகப் பேற்றினைத் தொடர்ந்து சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனையின் நிமித்தம் சிசு பிறந்த குறிப்பிட்ட கால எல்லைக்குள் சொட்டு மருந்து, தடுப்பூசி என்பவற்றை தவறாது பெற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அசட்டையாக இருப்போமானால் இளம் பிள்ளைவாதம் மற்றும் இன்னோரன்ன நோய்கள் உண்டாகி குழந்தையின் எதிர்காலமே சூனியமாகி விடவும் கூடும். எனவே மிகவும் விழிப்புடன் செயலாற்ற வேண்டிய கடப்பாடு நம் கையிலேதான் உள்ளது எனலாம்.
விடலைப் பருவத்தின் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சிலருக்கு வக்கிரமான சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றால் எச்.ஐ.வி/ வைரஸ்சினால் ஏற்படுகின்ற ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய் காவிகளாகவும் ஆகிவிடுகின்ற னர். இவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாவதுடன் எஞ்சிய வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகி விடுகின்றது.
எம்.பி.பி.எஸ். (MBBS) பட்டம் பெற்ற மருத்துவர்கள் அரிதாகவுள்ள அக்கால கட்டத்தில் டாக்டர் எஸ். ஏ. விக்ரம சிங்கா “எம்.பி.பி.எஸ்”சின் தலைமையின் கீழ் மலேரியாத்தடை இயக்கம் உருவாக்கப்பட்டது. பெரு ம்பாலான பொது சுகாதார பரிசோ தகர்கள் மலேரியாத் தடை இயக்கத்திற்கு உள்வாங்கப்பட்டனர்.
இரத்த பரிசோதனை தொடக்கம் மருந்து மாத்திரைகள் அனைத்தும் மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு அமெரிக்காவால் நன்கொடை யாக வழங்கப்பட ஜீப் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. நுளம்புகள் பரவாமல் தடுப்பதற்கு டி.டி.ரி (D.D.T) குடியிருப்புக்களுக்கு விசிறப்பட்டது. இதற்கென்று விசிறும் மையம் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. காலப் போக்கில் மலத்தீன் விசுறும் பணி முன்னெடுக் கப்பட்டது. மலேரியாத் தடை இயக் கத்தின் நோக்கமும் வெற்றியளித்தது.
வயோதிப வயதை எட்டியவர்களுக்கு இயற்கையாகவே தன்னிச்சையாக சில நோய்கள் ஏற்பட்டுவிடுகின்றன. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பலபந்தம் புரஸ்ரேற்சுருப்பி வீக்கம் (ஆண் முதியவர்களுக்கு மட் டும்) என்பன உண்டாகி அவர்களை வாழ்க்கை பூராவும் அல்லலுறச் செய்கின்றன. இரத்த அழுத்தம், நீரிழிவு என்பன ஒரு சிலருக்கு பரம் பரை வியாதியாகவும் வரலாம். ஆனால் மருத்துவ நிபுணரின் ஆலோ சனையின் பிரகாரம் உணவுக் கட்டுப் பாட்டை மேற்கொண்டாலும் நோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
உலகிலேயே சிகரெட் (CIGARETTE) பிடிப்பதால் ஏற்படும் உயிரிழப்பு எமது அண்டை நாடான பாரதத்தில் தான் அதிகம் காணப்படுகின்றது. இதனை உலக சுகாதார ஸ்தாபனம் கண்ட றிந்துள்ளது.
பீடி, சிகரெட், சுருட்டு இன்னோர ன்ன புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்பது இலட்சம் பேர் தமது இன்றுயிரை இழக்கின்றார் கள். சிகரெட்போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பாரதத்தில் அதிகரித்து வருவதால் இந்த இறப்பு வீதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இர ண்டு மடங்கு உயரும் அபாயம் உள்ளது.
மும்பையில் (MUMBAY) சிகரெட் பிடிப்பதால் நூற்று முப் பத்தொன்பது ஆண்களும் புகையிலைப் பொருட்கள் பாவனையினால் நூற்று முப்பத்தைந்து பெண்களும் ஆண்டு தோறும் பலியாகின்றனர். புகைபிடிக்க ஆரம்பிக்கும் எவருமே அதற்குக் கிட்டத்தட்ட அடிமையாகிவிடுகிறார்கள். ஏனெனில் உடலில் நிக்கோடின் (NiCOTIWE) அளவு குறைய ஆரம் பிக்கும் போது புகைத்தே ஆகவேண்டும் என்ற அகீத ஆசையை அது தூண்டும்.
சுகதேகியாகவும் ஆரோக்கியம் மிக்கவராகவும் வாழ்வதற்கு ஆகாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. உணவை இயற்கை மருத்துவர்கள் மூன்று வகைகளாக வகுத்துள்ளனர். அவையாவன சாத்வீக உணவு, ரஜஸ் உணவு, தமஸ் உணவு என்பவையாகும்.
சாத்வீக உணவு என்றால் என்ன? இதனை முழுமையான உணவு என் றும் அழைக்கலாம். உணவைப் பொறுத்தவரை முதன்மை பெற்று விளங்குவது இந்த சாத்வீக உணவுதான்.
மக்களுக்கு உண்டாகின்ற நோய்கள் அனைத்திற்கும் உகந்த ஔடதங்களை வழங்குவதும், விசேட வைத்திய நிபு ணர்களினால் சத்திர சிகிச்சை மேற் கொண்டு நீண்ட ஆயுளுக்கு வித்திடுகி ன்ற தன்மை சுகாதாரத்துறையினரையே சாரும். ஆரோக்கிய வாழ்வை நமக்கு அளித்து வருகின்ற சுகாதாரத்தைப் பேணுவது அவசியம் என்பது வெள்ளிடைமலை.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்