அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 24 ஏப்ரல், 2014

கண்டிப்பா ஓட்டு போடுங்க!

ஜனநாயக கடமைக்கு இன்று உன்னதமான நாள். கண்டிப்பாக ஓட்டு  போடும் பொறுப்பை நிறைவேற்றுங்கள். இதற்காக ஒரு சிறிய கைடு: 

* உங்கள் வாக்காளர் அட்டையை தயார்படுத்துங்கள். வீட்டுக்கு பூத்  ஸ்லிப் கொடுத்திருந்தால் அதில் எந்த பூத்  என்று தெரிந்திருக்கும். 

* இல்லாவிட்டால் கவலை வேண்டாம். ஆன்லைனில் எளிதில் பார்த்து  விடலாம். சரி, ஓட்டுச்சாவடிக்கு கிளம்பலாம் நீங்கள் இனி. 

* வாக்குசாவடிக்குள் நுழைந்தால், அங்கு உங்கள் எண் உள்ள பூத் முன்  வரிசையில் நிற்க வேண்டும். வரிசை நெருங்கும்போது, பெரிய  போர்டில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் எல்லாம்  பொறிக்கப்பட்டிருக்கும். அதை பார்த்து கொள்ளலாம். 

* பூத்துக்குள் நுழைந்ததும், முதல் இருக்கையில்  அமர்ந்திருக்கும்  தேர்தல் அதிகாரி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை, பூத் ஸ்லிப்  இரண்டையும் வாங்கி பார்ப்பார். 

* உங்கள் பெயர், வாக்காளர் எண், முகவரியை உரக்க படிப்பார்.  அருகே வரிசையாக உட்கார்ந்திருக்கும் கட்சிகள் சார்ந்த ஏஜென்ட்கள்  அதை தங்களிடம் இருக்கும் பதிவேட்டில் உறுதி செய்து கொள்வர். 

* பெயரில் குழப்பம், முகவரி தவறு என்று ஆட்சேபம்  தெரிவிக்காதபட்சத்தில் உங்களை அடுத்த இருக்கையில் உள்ள  அதிகாரியிடம் அனுப்புவார். 

* அடுத்த இருக்கையில் உள்ள அதிகாரியிடம் நீங்கள் போக வேண்டும்.   அவர் உங்கள் இடது கை விரலில் மை வைப்பார். 

* அடுத்த அதிகாரி தன் பதிவேட்டில் உள்ள பெயர்,  முகவரியுடன்  ஒப்பிட்டு பார்த்து கையெழுத்து வாங்குவார். பட்டனை ஆன் செய்வார்.  அவரிடம்தான் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் இருக்கும். 

* அடுத்து மறைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு  வாக்கு இயந்திரத்தின் முன் நீங்கள் சென்று, பெயர், சின்னங்களை  பார்த்து விருப்பமான வேட்பாளர் பெயர் எதிரே உள்ள பட்டனை அழுத்த  வேண்டும். 

* அவ்வளவுதான். நீங்கள் ஓட்டு போட்டு விட்டீர்கள். ஜனநாயக  கடமையாற்றிய திருப்தியுடன் வெளியே வரலாம். மை பூசிய விரலை  உறவினர்கள், நண்பர்களிடம் காட்டி, நான் ஓட்டு போட்டுவிட்டேன் என  மகிழலாம்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக