நீண்ட ஆயுளுக்கு வித்திடுகின்ற சுகாதாரம்! இன்று உலக சுகாதார தினம்
இன்று சர்வதேச சுகாதார தின மாக உலக சுகாதார ஸ்தாபனம் (W.H.O) பிரகடனப்படுத்தியுள்ளது.
இவ்வுலகில் வாழுகின்ற மக்கள் சுகாதாரக் கோட்பாடுகளை எந்த அளவிற்குப்
பின் பற்றுகின்றனர். இதனால் நோய்களிலிருந்து எவ்வாறு மீட்சி பெறுகின்றனர்?
என்பதைக் கவனத்தில் கொள்வது இங்கு உசிதமாகும்.
தற்போது ஆட்கொல்லி நோய்களாக விளங்குகின்ற டெங்கு, எலிக்காய்ச்சல்
பன்றிக் காய்ச்சல் இன்புளுவென்சா (H1 N1) எயிட்ஸ் என்பவற்றின் தாக்கத்தை
முறியடிக்க சுகாதாரப் பகுதியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்ற
ஆண்டு சுகாதாரத் தொற்று நோய் தடுப்பு பிரிவு நாடாளாவிய ரீதியில்
பன்றிக்காய்ச்சல் பரவாமலிருப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்
திட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
ஆபத்துடன் கூடிய நோய் அறி குறிகளை கீழ்கண்டவாறு வகுக்கலாம்.
மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு அல்லது வயிற்றில் வலி, தொடர்ச் சியான
வாந்தி, மயக்கத்தன்மை நினைவுத் தடுமாறல், போன்ற நோய் சுகமாகி மீண்டும்
காய்ச் சலுடனும் கடும் இருமலுடன் திரும்பி வருதல் என்பவைகளாகும்.
எயிட்ஸ் நோய் எச்.ஐ.வி. வைரஸால் ஏற்படுகின்றது. ஓரினச் சேர்க்கையினால்,
பிர மாதர் தொடர்பால் இந்நோய் பரவுகின்றது. எயிட்ஸ் நோயுடைய வரிடமிருந்து
இரத்த தானம் பெற்றாலோ, அவர்களுக்கு போடப்படும் ஊசிகள் மற்றவர்களுக்கு
உபயோகப்படுத்தினாலோ எயிட்ஸ் பரவ வாய்ப்புக்கள் உண்டாகின்றது.
டெங்கு காய்ச்சலை இந்நோயைப் பரப்பும் நுளம்புகளை இல்லா தொழித்தால்
கட்டுப்படுத்த முடிகின்றது. சுற்றாடலில் குப்பை கூளங்கள், தண்ணீர் தேங்கி
நிற்கும் இடங்கள் என்பவற்றை இல்லாமல் செய்தால் நுளம்பு பரவுவது
தடைப்படுகின்றது. சுற்றாடலை அசுத்தமாக வைத் திருப்போர் மீது சுகாதாரப்
பிரிவினர் காவல் துறையினரின் அனுசர ணையுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள்
எடுப்பதனையும் காண முடிகின்றது.
மேலும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கண்நோய், பெரிய அம்மை, இருதய
நோய், யானைக்காய் நோய், புற்று நோய் என்பவை பரவாமல் இருக்க செளக்கிய
திணைக்களம் மக்களைத் தொடர்ந்தும் விழிப் புணர்வுக்குள்ளாக்கி வருகின் றனர்.
இனி உடற் சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக
விளங்குகின்ற உணவு வகைகளை எவ்வாறு தெரிவு செய்கின்றனர் என்பதை விரிவாக
ஆராய்வோம்.
மனித வாழ்வில் உடல் சுகாதாரத் தையும், ஆரோக்கியத்தையும் நல்ல நிலையில்
வைத்திருப்பதற்கு இயற்கை உணவும் உன்னத இடத்தை வகிக்கின்றது என்பதை
மறுப்பதற் கில்லை. நாம் உண்ணும் உணவில் புரதப் பொருட்கள் மாவுப் பொருட்கள்
சக்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் இந்த நான்கும் அடங்கியுள்ளன.
இவை உடல் வளர்ச்சிக்குத் தேவைதான், இருப்பினும் இவை நான்கும் இருந்து
விட்டால் மட்டும் மனிதன் ஒரு நோய் நொடி இல்லாமல் உயிர் வாழ்ந்து விட
முடியாது. பிணி வராமல் தடுத்து நிறுத்துவதற்குரிய உயிர் ஆற்றல் அல்லது நோய்
எதிர்ப்புச் சக்தி தேவைப்படுகின்றது. தாவரங்கள் கொடுக்கும் உணவுகளிலே
பழங்கள் தான் ஒரு முழுமைபெற்ற உணவு என்பது நிதர்சனமாகும். நல்ல உடல்
நலத்திற்கு விற்றமின் பி பன்னிரெண்டு தேவைப்படுகின்றது. இது இன்றியமையாத
உயிர்ச்சத்தாகும்.
இதனை மரக்கறி உண்பவர்கள் முக் கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில்
தாவர உணவுகளில் விற்றமின் பி பன்னிரெண்டு பயனுள்ள வடிவத்தில்
கிடைப்பதில்லை. நமது இரத்த செல்களையும் டி.என்.ஏ. (DNA) மரபுக்
கூறுகளையும் உற்பத்தி செய்வதற்கும், நரம்புச் செல்களின் மீது ஒரு
பாதுகாப்பு உறையைப் போர்த்துவதற்கும் விற்றமின் பி பன்னிரெண்டு
தேவைப்படுகின்றது.
போஷாக்கற்ற தரம் குறைந்த உணவுகளை உட்கொள்பவர்கள் முதலில் நோய்வாய்ப்பட்டு விடு கின்றனர்.
அத்தோடு அவர்கள் குணநலன் குன்றிப் போய் ஆத்திரம், அங்கலாய்ப்பு, கோபம்,
வன்மம் போன்ற வக்கிர புத்தியடையவர்களாகவும் தன்னிச்சையாகவே
மாறிவிடுகின்றனர்.
இவ்வுலகில் அவதரித்த மானிடர்கள் அனைவருமே நீண்ட ஆயுளுடன் வாழத்தான்
விரும்புவார்கள் என்பது கண்கூடு. 1871 சராசாரி ஆயுட்காலம் பெரும்பாலும்
நாற்பது முதல் ஐம்பது வருடங்களாகக் கணிக்கப்பட்டது.
அதேவேளை 1991 ம் ஆண்டின் மக்களின் சராசரி ஆயுட்காலம் அபரிமித
முன்னேற்றம் அடைந்ததற்கு காரணம் என்னவாகவிருக்கும்? இன்றையயுகத்தில்
சுகாதாரத் துறையானது வியத்தகு முன்னேற்றம் அடைந்தமையே என்பதை ஏற்றுக் கொள்ள
வேண்டும்.
நாம் அவதரித்த நாளிலிருந்து முதுமையை எட்டி மரணப்படுக்கை வரையிலும்
கண்டிப்பாக சில பருவங்களைக் கடக்க வேண்டியுள்ளது. குழந்தையாக தவழுகின்ற
போதும் மூப்படைந்த காலகட்டத்திலும் சிலர் குறிப்பாக சுகாதாரத்தை நல்ல
முறையில் பேணாதவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது. பொதுவாக
வாலிபப் பருவத்தில் பிணியின் தாக்கம் கணிசமான அளவு குறைவடைந்து காணப்படுவது
இயற்கை. இது யதார்த்தமும் கூட.
மகப் பேற்றினைத் தொடர்ந்து சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனையின் நிமித்தம்
சிசு பிறந்த குறிப்பிட்ட கால எல்லைக்குள் சொட்டு மருந்து, தடுப்பூசி
என்பவற்றை தவறாது பெற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அசட்டையாக இருப்போமானால்
இளம் பிள்ளைவாதம் மற்றும் இன்னோரன்ன நோய்கள் உண்டாகி குழந்தையின்
எதிர்காலமே சூனியமாகி விடவும் கூடும். எனவே மிகவும் விழிப்புடன் செயலாற்ற
வேண்டிய கடப்பாடு நம் கையிலேதான் உள்ளது எனலாம்.
விடலைப் பருவத்தின் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சிலருக்கு வக்கிரமான
சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றால் எச்.ஐ.வி/ வைரஸ்சினால்
ஏற்படுகின்ற ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய் காவிகளாகவும் ஆகிவிடுகின்ற னர்.
இவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாவதுடன் எஞ்சிய வாழ்க்கை இருள்
சூழ்ந்ததாகி விடுகின்றது.
எம்.பி.பி.எஸ். (MBBS) பட்டம் பெற்ற மருத்துவர்கள் அரிதாகவுள்ள அக்கால
கட்டத்தில் டாக்டர் எஸ். ஏ. விக்ரம சிங்கா “எம்.பி.பி.எஸ்”சின் தலைமையின்
கீழ் மலேரியாத்தடை இயக்கம் உருவாக்கப்பட்டது. பெரு ம்பாலான பொது சுகாதார
பரிசோ தகர்கள் மலேரியாத் தடை இயக்கத்திற்கு உள்வாங்கப்பட்டனர்.
இரத்த பரிசோதனை தொடக்கம் மருந்து மாத்திரைகள் அனைத்தும் மக்களின்
காலடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு அமெரிக்காவால் நன்கொடை யாக
வழங்கப்பட ஜீப் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. நுளம்புகள் பரவாமல்
தடுப்பதற்கு டி.டி.ரி (D.D.T) குடியிருப்புக்களுக்கு விசிறப்பட்டது.
இதற்கென்று விசிறும் மையம் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
காலப் போக்கில் மலத்தீன் விசுறும் பணி முன்னெடுக் கப்பட்டது. மலேரியாத்
தடை இயக் கத்தின் நோக்கமும் வெற்றியளித்தது.
வயோதிப வயதை எட்டியவர்களுக்கு இயற்கையாகவே தன்னிச்சையாக சில நோய்கள்
ஏற்பட்டுவிடுகின்றன. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பலபந்தம்
புரஸ்ரேற்சுருப்பி வீக்கம் (ஆண் முதியவர்களுக்கு மட் டும்) என்பன உண்டாகி
அவர்களை வாழ்க்கை பூராவும் அல்லலுறச் செய்கின்றன. இரத்த அழுத்தம், நீரிழிவு
என்பன ஒரு சிலருக்கு பரம் பரை வியாதியாகவும் வரலாம். ஆனால் மருத்துவ
நிபுணரின் ஆலோ சனையின் பிரகாரம் உணவுக் கட்டுப் பாட்டை மேற்கொண்டாலும் நோயை
ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
உலகிலேயே சிகரெட் (CIGARETTE) பிடிப்பதால் ஏற்படும் உயிரிழப்பு எமது
அண்டை நாடான பாரதத்தில் தான் அதிகம் காணப்படுகின்றது. இதனை உலக சுகாதார
ஸ்தாபனம் கண்ட றிந்துள்ளது.
பீடி, சிகரெட், சுருட்டு இன்னோர ன்ன புகையிலைப் பொருட்களைப்
பயன்படுத்துவதால் இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்பது இலட்சம் பேர் தமது
இன்றுயிரை இழக்கின்றார் கள். சிகரெட்போன்ற புகையிலைப் பொருட்களை
பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பாரதத்தில் அதிகரித்து வருவதால் இந்த
இறப்பு வீதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இர ண்டு மடங்கு உயரும் அபாயம்
உள்ளது.
மும்பையில் (MUMBAY) சிகரெட் பிடிப்பதால் நூற்று முப் பத்தொன்பது
ஆண்களும் புகையிலைப் பொருட்கள் பாவனையினால் நூற்று முப்பத்தைந்து பெண்களும்
ஆண்டு தோறும் பலியாகின்றனர். புகைபிடிக்க ஆரம்பிக்கும் எவருமே அதற்குக்
கிட்டத்தட்ட அடிமையாகிவிடுகிறார்கள். ஏனெனில் உடலில் நிக்கோடின் (NiCOTIWE)
அளவு குறைய ஆரம் பிக்கும் போது புகைத்தே ஆகவேண்டும் என்ற அகீத ஆசையை அது
தூண்டும்.
சுகதேகியாகவும் ஆரோக்கியம் மிக்கவராகவும் வாழ்வதற்கு ஆகாரம் முக்கிய
இடத்தை வகிக்கின்றது. உணவை இயற்கை மருத்துவர்கள் மூன்று வகைகளாக
வகுத்துள்ளனர். அவையாவன சாத்வீக உணவு, ரஜஸ் உணவு, தமஸ் உணவு என்பவையாகும்.
சாத்வீக உணவு என்றால் என்ன? இதனை முழுமையான உணவு என் றும் அழைக்கலாம்.
உணவைப் பொறுத்தவரை முதன்மை பெற்று விளங்குவது இந்த சாத்வீக உணவுதான்.
மக்களுக்கு உண்டாகின்ற நோய்கள் அனைத்திற்கும் உகந்த ஔடதங்களை
வழங்குவதும், விசேட வைத்திய நிபு ணர்களினால் சத்திர சிகிச்சை மேற் கொண்டு
நீண்ட ஆயுளுக்கு வித்திடுகி ன்ற தன்மை சுகாதாரத்துறையினரையே சாரும்.
ஆரோக்கிய வாழ்வை நமக்கு அளித்து வருகின்ற சுகாதாரத்தைப் பேணுவது அவசியம்
என்பது வெள்ளிடைமலை.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக