பெறுனர்
மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
சென்னை
மான்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வணக்கம்
பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை கிடைக்காததினால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். விரைவில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏழை எளிய குடும்பத்தில் இருந்து படிப்போருக்கு அரசுஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் சிறுபண்மையினர்நலத்துறை ஆகியவற்றின் சார்பில் பள்ளிகள் மூலம் விண்ணப்பம் பெற்று கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவந்தது.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்படி கல்வி உதவித்தொகை மாணவர்களுக்குவழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கல்வி உதவித்தொகை கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களின் மேற்படிப்பு மற்றும் இதர செலவுகளுக்குபயன்படும். எனவே அம்மா அவர்கள் தயவுகூர்ந்து விரைவில் கல்வி உதவித்தொகை வழங்கி உதவுமாறுபணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக