அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 28 ஜூலை, 2015

'மக்கள் ஜனாதிபதி' பாரதரத்னா அப்துல் கலாம் 2

  1. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால், 'மக்கள் ஜனாதிபதி' என, அன்புடன் அழைக்கப்பட்டவரும், இளைய தலைமுறையினரிடையே, 'கனவு காணுங்கள்' என்ற தன்னம்பிக்கையை விதைத்து, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டியவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று இரவு, மாரடைப்பால் காலமானார்.
  2. முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், 84, வடகிழக்கு மாநிலமான, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை பயிற்சி நிறுவனமான, ..எம்.,மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். நேற்று மாலை துவங்கிய கருத்தரங்கில், மாணவர்களிடையே, கலாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, மாலை, 6:30 மணிக்கு திடீரென, அவருக்கு வியர்த்து கொட்டியது; சோர்வடைந்த அவர், மேடையிலேயே மயங்கி விழுந்தார். பதறிய அதிகாரிகள், உடனடியாக அவரை, பெதானி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேகாலயா கவர்னர் சண்முகநாதன், தலைமைச் செயலர், வார்ஜிரி ஆகியோர், மருத்துவமனைக்கு விரைந்தனர்; ராணுவ டாக்டர்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி, அப்துல் கலாம் காலமானார்.
  3. தலைமைச் செயலர் வார்ஜிரி கூறுகையில்,''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மாரடைப்பால் காலமானார். அவரின் உடல், நாளை (இன்று) காலை, டில்லிக்கு எடுத்துச் செல்லப்படும்,'' என்றார்.
  4. கலாமின் மறைவை அடுத்து, 'ஏழு நாள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படும்' என, மத்திய 
  5. அரசு அறிவித்துள்ளது.
  6. இந்தியாவின் ஏவுகணை நாயகன்!
  7. நாட்டின், 11வது ஜனாதிபதியான அப்துல் கலாம், 2002 - 2007 வரை, அந்த பதவியை வகித்தார்
  8. தமிழகத்தின் ராமேஸ்வரத்தில், 1931ம் ஆண்டு, அக்டோபர், 15ல் பிறந்த அவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம், பாரத் ரத்னா, பத்ம பூஷன் போன்ற விருதுகளை பெற்று, அந்த விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர். அணு சக்தி துறையுடன் இணைந்து, 'பொக்ரான்' அணுகுண்டு சோதனை நடத்தியதில், அப்துல் கலாமுக்கு முக்கிய பங்கு உண்டு. 'அக்னி, பிரித்வி' போன்ற ஏவுகணைகளின் தயாரிப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்து, 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்றும் பெருமையுடன் அழைக்கப்பட்டார். நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவகவுடா போன்றோர் பிரதமர்களாக இருந்தபோது, அவர்களின் அறிவியல் ஆலோசகராகவும் செயல்பட்டார். இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக
  9. மாணவர்களிடையே, 'கனவு காணுங்கள்; அது, உங்கள் உயர்வுக்கு வழி காட்டும்' என்ற 
  10. தன்னம்பிக்கை விதையை ஆழமாக விதைத்த அப்துல் கலாம், செல்லும் இடமெல்லாம் மாணவர்களைசந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடத்தவறியது இல்லை. தான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அங்கு வரும், வி.வி..பி.,க்களை விட, மாணவர்கள், குழந்தைகளை நோக்கித் தான், அப்துல் கலாமின் பார்வை இருக்கும். அந்த அளவுக்கு, இளைய தலைமுறையினரை பெரிதும் நேசித்தார். ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோரை தொடர்ந்து, ஜனாதிபதியாக பதவி வகித்த மூன்றாவது தமிழர் என்ற பெருமையும் கலாமுக்கு உண்டு. இவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஜனாதிபதி மாளிகையை கலகலப்பாக மாற்றி, அதில் உள்ள, 'முகல்' தோட்டத்தை விசேஷமாகப் பராமரிக்க ஏற்பாடு செய்தார்.சாதாரண மக்கள், எளிதில் அணுக முடியாத இரும்பு கோட்டையாக இருந்த ஜனாதிபதி மாளிகையை, ஏழை, எளிய மக்களின் தரிசனத்துக்காக திறந்து விட்ட பெருமைக்குரிய இதயம் படைத்தவர்

  11. திருக்குறள் மீது பற்று:
  12. நாட்டின் எந்த மூலையில் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தாலும், கலாம் எழுதிய, 'அக்னி சிறகுகள்' என்ற புத்தகம் தான், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்றுமே பரிசாக அளிக்கப்படுகிறது. அணுசக்தி விஞ்ஞானியாக இருந்தாலும், தாய் மொழியான தமிழ் மீதும், திருக்குறள் மீதும் அதீத பற்று உடையவராக இருந்தார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம், திருக்குறளை மேற்கோள் காட்டி பேச, அவர் தவறியது இல்லை. தன், பொன்மொழிகளாலும், கவிதைகளாலும்
  13. அனைவரது மனதையும் வசியம் செய்தவர். பிரம்மாண்டமான ஜனாதிபதி மாளிகையில், தன் குடும்பத்தினரை சேர்க்காமல், எளிமையை பின்பற்றினார். எளிமையும், ஆடம்பரமின்மையுமே அப்துல் கலாமின் மற்றொரு அடையாளம்! 'இவர் போன்ற ஒரு தலைவர் நமக்கு கிடைக்க மாட்டாரா...'என, உலகம் முழுவதும் உள்ள மக்களை ஏங்க வைத்தவர். இதுவரை, 13 பேர், இந்திய ஜனாதிபதி நாற்காலியை அலங்கரித்திருந்தாலும், 'மக்கள் ஜனாதிபதி' என, அனைத்து தரப்பினராலும், ஏகோபித்த பாராட்டை பெற்றவர். ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், 84 வயதிலும், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 'இந்தியா, 2020க்குள் வல்லரசாக வேண்டும்' என, அடிக்கடி கூறி வந்த கலாம், கடைசிவரை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தார்

  14. கண்ணீர் கடல்:
  15. எப்போதும், மாணவர்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த கலாம், தன் கடைசி வினாடியையும் மாணவர்கள் மத்தியில், அவர்களுக்காகவே செலவிட்டு, தன் மூச்சுக்காற்றை, இளைய தலைமுறையினரின் இதயங்களில் ஊடுருவி, விண்ணில் கலந்து விட்டார்.ஜவகர்லால் நேருவுக்கு பின், காஷ்மீரில் இருந்து, கன்னியாகுமரி வரையுள்ள நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதய சிம்மாசனத்தில் அழுத்தமாக இடம்பிடித்து, அவர்களின் பேரன்பை பெற்ற, 'அணு நாயகன்' என்ற மகத்தான மாமனிதரின் மரணம், நாட்டு மக்களை, கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.
  16. சோகத்தில் சொந்த ஊர்:
  17. கலாம் மறைவால், ராமேஸ்வரம் சோகத்தில் மூழ்கியது. ராமேஸ்வரத்தில் உள்ள, அவரது அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், அவரது மகன் ஜெய்னுலாப்தீன், பேரன் சலீம் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த உள்ளூர் மக்கள், கூட்டம் கூட்டமாக, கலாம் வீட்டின் முன் குவிந்து, கண்ணீர் வடித்தனர். முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், தமிழ்த்தாய் அறக்கட்டளை நிர்வாகிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலாம் பேரன் சலீமிற்கு ஆறுதல் கூறி, இரங்கலை தெரிவித்தனர்.
  18. 'ராமேஸ்வரத்தில் அடக்கம்':
  19. அப்துல் கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் பேரன் சலீம் கூறுகையில், ''நேற்று மாலை, 4:00 மணிக்குதான், தாத்தாவுடன் பேசினேன். ஷில்லாங்கில் குளிராக இருந்ததால், சுவாச பிரச்னை ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது உடலை ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான், அனைத்து மதத்தினரின் விருப்பம். அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.
  20. சென்னை : .டில்லி அக்ஷர்தாம் கோவிலில் தனக்கும், குரு பிரமுக் சுவாமி மகாராஜ்க்கும் இடையே ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து, அப்துல் கலாம் எழுதிய 'ட்ரான்செடன்ஸ்' புத்தகம், தமிழில் 'கடந்த நிலை' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தின் அறிமுக விழா சென்னையில் ஜூலை 25ல் நடைபெற்ற நிலையில், அடுத்த இரு நாட்களில் கலாம் மாரடைப்பால் காலமானார். 'கடந்த நிலை' புத்தகம் கலாமின் கடைசி புத்தகமாகவும் அமைந்தது.
  21. சென்னை : பாம்பன் கடலில் மீது உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு சோலார் மின் விளக்கு பொருத்த வேண்டும் என்ற அப்துல்கலாம் ஆசையை, அவரது 'கலாம் ஆப் மிஷன்' குழுவினர் ஏற்பாடு செய்து வந்த நிலையில், அதை காண முடியாதபடி கலாமின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  22. புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இறப்பிற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
  23. பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாடு சிறந்த வழிகாட்டியை இழந்துவிட்டது. சிறந்த குடியரசு தலைவராகவும், மனிதராகவும் கலாம் இருந்தார். தாம் விரும்பிய மாணவர்களுடனே அவரது இறுதிக்காலம் அமைந்துவிட்டது விஞ்ஞானியாக நாட்டை மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்துச்சென்றவர் கலாம் எனக் கூறியுள்ளார்.
  24.  
  25. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வாழும் போது மக்கள் ஜனாதிபதியாக அப்துல் கலாம் வாழ்ந்தார். மரணத்திற்கு பிறகும் அப்துல் கலாம் அவ்வாறே வாழ்வார். இறுதிவரை குழந்தைகளையும் மாணவர்களையும் நேசித்தவர் கலாம் என கூறியுள்ளார்.
  26.  
  27. தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழை குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் உயரிய நிலைக்கு சென்றவர் அப்துல் கலாம். விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு பெருமைத்தேடித்தந்தவர் கலாம். குழந்தைகளுக்கும், மாணர்களுக்கும் உந்து சக்தியாக விளங்கியவர் அப்துல் கலாம் என கூறியுள்ளார்.
  28.  
  29. காங்கிரஸ் தலைவர் சோனியா, தனது அறிக்கையில், சிறந்த விஞ்ஞான மனப்போக்குடையவராகவும், படித்த ராஜியவாதியாகவும், உண்மையான தேசப்பற்றாளராகவும், இளைஞர்களின் மனம் கவர்ந்தவராகவும் விளங்கிய அப்துல் கலாமின் திடீர் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
  30.  
  31. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாதுகாப்புத்துறை தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற அப்துல் கலாம் காரணம் என கூறியுள்ளார்.
  32.  
  33. பல்துறை வித்தகராக விளங்கியவர் அப்துல் கலாம்: துணை ஜனாதிபதி ஹமீது அசாரி.
  34.  
  35. கலாம் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழிப்பு: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி.
  36.  
  37. அனைவருக்கும் முன்மாதிரி அப்துல் கலாம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.
  38.  
  39. கலாம் மறைவு, நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழிப்பு : தமிழக கவர்னர் ரோசையா
  40.  
  41. தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தவர் கலாம்: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
  42.  
  43. போற்றி புகழப்பட வேண்டிய மாமனிதர் கலாம். கறைபடாதவராக அப்துல் கலாம் வாழ்ந்தார்: பா.. மூத்த தலைவர் அத்வானி.
  44.  
  45. எடுத்துக்கொண்ட பணியை திறம்பட செய்பவர் கலாம்: தி.மு.. பொருளாளளர் ஸ்டாலின்.
  46.  
  47. எளிமை என்பதற்கு ஏராளமானோர் விளக்கம் தந்திருக்கின்றனர். 'எவ்வளவு எளிமையாக இருக்க வேண்டுமோ, அதற்கு மேல் ஒன்றுமில்லை என்ற அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டும்' என்றார் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

  48. 'உலகிலேயே மிக வசதியானது என்பது எளிமைதான்' என்றார்பிரமாண்டங்களைப் படைத்த
  49. இத் தாலியின் லியனார்டோ டாவின்சி. 'ஆழ்ந்த சிந்தனையின்விளைவாக இயற்கையிலேயே எழுகிற குணாதிசயம்தான் எளிமை' என்றார் வில்லியம் ஹாஸ்லிட் என்ற தத்துவ ஞானி.
  50. இதுபோன்று எளிமைக்குஎத்தனையோ பேர் எத்தனையோவிதங்களில் விளக்க முயன்றிருக்
  51. கிறார்கள். ஆனால், நாடு பேதமில்லாமல் தற்போது உலகில் வாழும் அனைத்து தலைவர்களுக்கும், சிறந்த முன்னுதாரணமான எளிமைவாதியை பார்க்க முடியும் என்றால் அவர்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
  52. அறிஞர்களும் நிபுணர்களும் ஆழ்ந்து சிந்தித்து விளக்கம் கூறிய எளிமையை வாழ்வில் கடைப்பிடித்த மகான் அவர். யாரும் எளிமையாக வாழ்ந்துவிடலாம். ஆனால், பதவியிலும் அதிகாரத்திலும் உள்ள ஒருவர் எளிமையை கடைப்பிடிப்பது அபூர்வம்.அந்த குணத்தைக்கொண்டவர்தான் கலாம்.தாய்நாடு முன்னேற வேண்டும் என்று எல்லா இந்தியர்களும் நினைப்பார்கள். ஆனால் கலாம் போல் ஒவ்வொரு உழைப்பிலும் தாய்நாட்டு சிந்தனை கொண்டு உழைப்பவர்கள் அரிது.
  53. அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையை வெளிநாடுகள்தான்தருகின்றன என்று கூறி, விமானம் ஏறுகிறவர்கள் உள்ள காலத்தில், தாய்நாட்டு சேவைக்காகவே உறுதியுடன் இருந்து இந்தியாவிலேயே திறமையை வளர்த்துக் கொண்டுஉலகத்தரத்துக்கு இந்தியாஉயர்வதற்கு வழிகாட்டியவர். அவர் ஜனாதிபதியாவதற்கு முன்பே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து கலாம் பணிபுரியும் விதத்தை பார்க்க நேர்ந்த பலர், 'ஏன் வெளிநாடு போனோம் என்று வெட்கித் தலைகுனிந்தோம்' என்று கூறக் கேட்டிருக்கிறோம்.


  54. வியப்பு :




  55. 1987--88ம் ஆண்டுகளில்கனடாவிலிருந்து இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி, எம். வித்யாசாகர், தான் பார்த்த விதத்தை இப்படி பதிவு செய்துள்ளார், 'அப்துல் கலாம் தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்களைப் பார்க்கும் போது, வழக்கமான அரசு ஊழியர்களுக்கான எந்த அம்சத்தையும் காணோம்.வேலை நேரம் முடிந்த பின்னரும், வார விடுமுறைகளிலும்பணிபுரிந்தார்கள். வேறு எங்கும் இதைக் காண முடியாது' என்று வியந்து கூறினார்.அப்போது அப்துல் கலாம்,இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி..,) இயக்குனராக இருந்தார். நீங்கள் வேலை செய்வது 'புதிய ஸ்டைலாக' இருக்கிறதோ என்று கேட்டபோது, 'நான் எனக்கு என்று எந்த ஸ்டைலையும் வைத்துக் கொள்ளவில்லை. வேலை பார்க்கும் இடத்தில் தவறு செய்கிறவர்கள், தவறை ஒப்புக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்' என்று கூறினார்


  56. அறிவியல் ஆசான்:




  57. இது விண்வெளி அறிவியலுக்கு எவ்வளவு பொருத்தமானது. முயற்சிகள் தோல்வி அடையும் போது, அதையே அடுத்த முறை வெற்றியாக மாற்றிக் காட்டும் வாய்ப்பு கலாம் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு கிடைத்தது. செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டான எஸ்.எல்.வி.யின் முதல் பரிசோதனை தோல்வியில் முடிந்தது. ஆனால், அதற்கடுத்த ராக்கெட் வெற்றியுடன் சீறிப் பறந்தது. விண்வெளியை ஆளும் சக்தி படைத்த உலக நாடுகளின் வரைபடத்தில் இந்தியாவும் இடம்பெற்றது.இந்தியாவின் விண்வெளி வளர்ச்சிக்கு விதைபோடும் விஞ்ஞானி வந்துவிட்டார் என்று அவரைக் கொல்ல வெளிநாட்டு சதிகள் வரலாம் என்பதற்காக, இந்திய அரசு பாதுகாப்பு அளித்தது. அவர் இரவு 10.30 மணிக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டபோது பாதுகாவலர்கள் பின் தொடர்ந்தார்கள். ஆனால்அவர்களிடம் கூட, நான் என்நண்பருடன்தானே நடக்கிறேன். நீங்கள் திரும்பிப் போங்கள் என்று கூறிவிடுவார்.டி.ஆர்.டி.., தலைமைப் பதவிக்கு போது, அதுவரை இருந்த நடைமுறைகள் எல்லாம் தலைகீழாக மாறின. எது தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்தஊழியர்கள் அதிகாரிகளுக்கு செயல்முறை வழி பயிற்சி எளிமையாக அளிக்கப்பட்டது. இதனால் பலர் பணிகளை விரும்பிச் செய்யும் சூழல் ஏற்பட்டது. அன்று எஸ்.எல்.வி.,யில் தொடங்கி இன்று ஜி.எஸ்.எல்.வி., வரைஇந்தியாவின் வெற்றிக்கதை தொடர்ந்ததற்கு அடிப்படைக்காரணம் இவரதுஒருங்கிணைப்புத் திறன்தான்.

  58. 'ஏவுகணைகளின் தந்தை' என்று இவர் அழைக்கப்படுவதற்கு காரணம் அன்றைய அவரது கடின உழைப்பும் அதைத் தொடர்ந்து கிடைத்த வெற்றிகளும் தான்.அவருடன் பணியாற்றியவர் எந்த பதவியில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராகஇருந்தாலும், எந்த குணத்தைக் கொண்டிருப்பவரானாலும் சமமாக பழகியவர், அவர்களுடைய விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்தவர்.
  59. கலாம் மிகக் கடுமையான சுயகட்டுப்பாடு மற்றும் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர். அசைவம் உண்ணாதவர், மது அருந்தாதவர் மற்றும் திருமணமாகாமல் பிரம்மச்சார்ய விரதம்
  60. கடைபிடித்தவர்.


  61. திருக்குறளில் ஈடுபாடு:




  62. திருக்குறளை அவர் தனது உரைகளில் மேற்கோளாக காட்டுவார். வேத, உபநிஷத்துக்களையும், மகாபாரதம், மனுஸ்மிருதி போன்றவற்றிலும் ஈடுபாடு காட்டியவர்.2002ம் ஆண்டில் பதவியிலிருந்த பா.., தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு, இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த போது, அரசியல் பேதமின்றி பெரும்பாலான கட்சிகளால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவை, இளைய சமுதாயத்தின் கனவாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தில்பதவியேற்ற பின் அவர் அதைவலியுறுத்தினார்.இந்தியா சூப்பர்பவர் நாடாக வேண்டும் என்றும் அதற்கான செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்பதிலும் நாட்டம் காட்டினார். வல்லரசு நாடாக வேண்டுமானால் ஒவ்வொரு துறையும் செய்ய வேண்டியது என்ன என்பதை சுட்டிக் காட்டினார். தினமும் காலை 5.30 க்கு எழும் அவர், இரவு 1 அல்லது 2 மணிக்குத்தான் துாங்கச்செல்லும வழக்கத்தை வைத்திருந்தார்.

  63. சேதமடைந்த திசுக்களுக்குப் பதிலாக உயிரிபதியன் முறை மூலம் மாற்ற அவர் யோசனை கூறி வருகிறார். இதன் மூலம் இதய வால்வு உள்ளிட்ட நோயால் இழந்த உடல்பாகங்களை பெற்றுக் கொள்ள முடியும். நேனோ டெக்னாலஜி துறையில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் கூறிவந்தார்.அதேபோல், காப்புரிமைகள் கோராத பொதுவான சாப்ட்வேர் வெளியிட்டு தகவல் தொழில்நுட்பம் எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். அறிவியல் மூலம் எல்லாவற்றுக்கு தீர்வு காண முடியும் என்பது அவரது நம்பிக்கை. மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும் என்றும் விரும்பினார்.


  64. ரப்பர் ஸ்டாம்ப் அல்ல:




  65. ஜனாதிபதி பதவிக்காலத்தில் அவர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்கவில்லை. 2005 அக்டோபர் 25ம் தேதி அவர் மாஸ்கோ சென்ற போது, பீகார் சட்டசபையை கலைக்க வேண்டும் என்று கவர்னர் பூட்டா சிங் பரிந்துரையை ஏற்க இருப்பதாக பிரதமர் மன்மோகன் கலாமிடம் தெரிவித்தார். அதற்கு அவர் இசைவு தெரிவிக்கவில்லை. என்றாலும் அமைச்சரவை அதை நியாயப்படுத்தியதால் கலைக்கப்பட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட் அதை ஜனநாயக படுகொலை என்று வர்ணித்தது.ஆதாயம் தரும் பதவி மசோதாவை திருப்பி அனுப்பினார். ஒருவர் இரு பதவிகள் வகிப்பது நியாயமாகாது என்ற கொள்கை உடையவர் அவர். அந்த மசோதா திருப்பி அனுப்பிய நேரம்தான் 'சோதனைக்குள்ளான பதவிக் காலம்' என்று கலாம் குறிப்பிட்டார்.வெளிப்படையான நிர்வாகம், ஊழல் இன்மை, நிர்வாகத் திறன், நேர்மை ஆகியவற்றுக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்.விஞ்ஞானிகளுக்க மட்டுமல்லாது அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக நடந்து காட்டினார்.

  66. நவீன காந்தியாக வாழ்ந்து ஜனாதிபதி மாளி கைக்கே பெருமை சேர்த்த தமிழர் தான் கலாம்.
  67. இந்தியாவின் மிக உயர்ந்தபதவியை இதைவிட மிகச்சிறப்பாக யாரும் வகித்திருப் பார்களா என்பதும்... இனி யாரும்வகிக்கப் போகிறார்களா என்பதும் கேள்விக்குறியே.


  68. கடைசி வரை அவர் 'பிஸிமேன்'தான்!




  69. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம்
  70. சஞ்சீவ ரெட்டி போன்றோர் கூட ஓய்வு பெற்றபின்னர் மீண்டும் அரசியல் பணிக்கோ கல்விப் பணிக்கோ திரும்பவில்லை.ஆனால், கலாமைப் பொறுத்தவரையில்ஜனாதிபதி பதவிக்குப் பிறகும் கல்விப் பணியை மீண்டும் தொடர்ந்தார்.இது அவரது அதிசய மனத்தின் குணாதி
  71. சயத்தை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.மத்திய அரசோ கலாம் டில்லியில் இருந்து அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்று விரும்பியது. இவரது குடும்பத்தினரோ ராமேஸ்வரம் வந்து தங்களுடன் தங்க வேண்டும் என்று விரும்பினர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் வருகை. பேராசிரியராக பணிபுரிய வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு வேண்டுகோள் விடுத்தன. அதில் இருந்து நாடு முழுவதும் கல்விப் பணி மற்றும்விழிப்புணர்வு பணியாற்றியதில் 'பிஸிமேன்' ஆனார். கலாம் பதவிக் காலத்தில் விவசாயிகள், தபால்காரர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் என்று 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ராஷ்டிரபதி பவனுக்கு வந்து சென்றார்கள். நமது பாரம்பரியம் இளைஞர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, ராஷ்டிரபதி பவனில் மூலிகைத் தோட்டம் அமைத்தார். தக்காளி ரசம் மற்றும் முருங்கைக் காய் சாம்பார் என்றால் கலாமுக்கு பிரியம்.


  72. அந்த இரண்டு சூட்கேஸ்:




  73. ஜனாதிபதிகள் ராஷ்டிரபதி பவனை விட்டு கிளம்பிச் செல்லும்போது, லாரி லாரியாக பொருட்களை ஏற்றிச் செல்வது உண்டு. கலாமுக்கு லாரிகள் தேவைப்படவில்லை. இரண்டு சூட்கேஸ்களுடன் அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி, மாளிகையை விட்டு கிளம்பிய போது, அவருடைய பொருட்கள்ஏற்றிய லாரியில், ஜனாதிபதி அமர்வதற்குரிய அசோக சின்னம் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த நாற்காலியும் ஏற்றப்பட்டது. பின்னர், அது பாதுகாவலர்களால் அடையாளம் காணப்பட்டு திரும்ப ராஷ்டிரபதி பவனில் வைக்கப்பட்டது.
  74. அதே போல் பரிசுப் பொருட்களை பலர் தங்களுடன் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்துல்கலாம் தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை அங்கேயேவிட்டு வந்துவிட்டார். கலாமின் குடும்பத்தினர் டில்லிசுற்றுப்பயணம் சென்ற போது, ராஷ்டிரபதி பவனை சேர்ந்த ஒரு வாகனம் கூட பயன்படுத்தப்படவில்லை, அவர்கள் ராஷ்டிரபதி பவனில் சாப்பிட்ட உணவுக்கு கூட அவரே பாக்கெட்டிலிருந்து பணம் கொடுத்தவர்.இனி ஒரு ஜனாதிபதி இவரைப் போல் அங்கு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்குஎளிமையாக இருக்க முயற்சியாவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை.கலாம் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தபோது, எடுத்து வந்ததை விட, அவர் திரும்பிச் செல்லும் போது கொண்டு சென்றது குறைவு. அவர் விலை கொடுத்து வாங்கியபுத்தகங்களைத்தான் அவர் உடன் எடுத்து சென்றார்.


  75. எதிலும் 'முதல்வன்!'




  76. * ஜனாதிபதி ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்.
  77. * ஜனாதிபதி ஆன முதல் விஞ்ஞானி மற்றும்திருமணமாகாதவர்.
  78. * ஜனாதிபதி ஆன அரசியல் கட்சிகளை சாராத தலைவர்.
  79. * இமயமலையில் சியாச்சின் பனிமலைஎல்லையில் உள்ள உலகின் உயரமான போர்க் களத்துக்கு சென்ற முதல் ஜனாதிபதி என்ற பெருமை பெற்றவர்.
  80. * நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த முதல் ஜனாதிபதி.
  81. * வேகமாகப் பறக்கும் சுகோய் ரக போர்விமானத்தில் பறந்த ஜனாதிபதி இவரே.
  82. * ஆயிரக்கணக்கான மாணவர்களைசந்தித்து அவர்களிடம் நாட்டு வளர்ச்சியைப் பற்றி
  83. விழிப்புணர்வு ஏற்படுத்தியவர், அவர்களுடைய கேள்விக்கு நேரடியா கவும் இமெயில் மூலமும் பதில் அளித்தவர்.
  84. * பதவிக்குரிய கட்டுப் பாடுகளை தளர்த்தியவர். சிக்கனத்தை கடைபிடித்தவர். எளிமையாக
  85. வாழ்ந்ததால் மக்கள் ஜனாதிபதி என்ற பெயரையும், ராஷ்டிரபதி பவனுக்கு மக்கள் மாளிகை என்றபெயரையும் பெற்றுத்தந்தார்.
  86. * பரிசுப் பொருட்களை யாரும் பெறக்கூடாது என்று அறிவுரை கூறி அதை கடை பிடித்து நடந்தார்.
  87.  
  88. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக