அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 3 ஜூலை, 2015

ஹெல்மெட்' விலை, 3,000 ரூபாய்



தமிழகத்தில், 'ஹெல்மெட்' விலை, 3,000 ரூபாய் என, விண்ணைத் தொடும் அளவுக்கு எகிறியதால், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி தவிக்கின்றனர்.
குறைந்த விலையில் தரமான ஹெல்மெட் கிடைக்க அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1287668.jpg



'
இரு சக்கர வாகன ஓட்டிகளும் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்' என்ற நடைமுறை, கடந்த, 1ம் தேதி முதல், தமிழகம் முழுவதும்அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, முதல் நாளில், மாநிலம் முழுவதும், 90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்து சென்றனர். இரண்டாவது நாளான நேற்று, போலீசாரிடம் சிக்கிய வாகன ஓட்டிகள், 'மாத சம்பளம், குடும்பம் நடத்தவே போதவில்லை; திடீர் அறிவிப்பால் ஹெல்மெட் வாங்க முடியவில்லை' என, தெரிவித்தனர்.

தற்போது, மாநிலம் முழுவதும் ஹெல்மெட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 'பத்து நாட்களுக்கு பின்னரே, ஹெல்மெட் கிடைக்கும்' என, பெரிய நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளன.இருப்பு வைத்திருக்கும் கடைக்காரர்களும், ஓட்டை, உடைசலான ஹெல்மெட்டுகளை கூட, 2,500 - 3,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
போலீசாரிடம் சிக்கியோர் கூறியதாவது:ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அறிவிப்பு வெளியான, 15 நாட்களுக்குள், அதுவும் மாத இறுதியில், அனைவராலும் ஹெல்மெட் வாங்க இயலுமா?

இந்த உத்தரவு வந்த அடுத்த நாளில் இருந்தே, ஹெல்மெட் கடைக்காரர்கள், விலையை இரு மடங்கு உயர்த்தினர். தற்போது ஹெல்மெட் விலை, நான்கு மடங்கு அளவிற்கு எகிறிவிட்டது.
இதுதவிர, பழைய ஹெல்மெட்டுக்கு வர்ணம் அடித்து, புதியது என, விற்பனை செய்கின்றனர். போலீசாருக்கு பயந்து தரமற்ற ஹெல்மெட் வாங்குவதால் என்ன பயன். அனைவரும் தரமான ஹெல்மெட் வாங்க, அரசு, கால அவகாசம் தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள்தெரிவித்தனர்.

மாத்தி யோசிங்க...:ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் அசல் ஆவணங்களை பறிமுதல் செய்து, பின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தேவையற்ற அலைச்சலில் ஈடுபடுவதை விட, அதற்கு பதில் போக்குவரத்து போலீசார் .எஸ்.., தரம் கொண்ட, விலை குறைந்த ஹெல்மெட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, காவல் நிலையங்களில் இருப்பு வைக்கலாம்.

ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் அதற்கான தொகையை பெற்று, ஹெல்மெட் வழங்கலாம். பணம் இல்லாமல் இருப்பவர்களிடம் மட்டும் ஓட்டுனர் உரிமம், வாகனம் பறிமுதல் செய்யலாம். இதனால், கூடுதல் விலை ஹெல்மெட் விற்பனை தடுக்கப்படும்.இவ்வாறு, சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சுளுக்கு விழுந்த கழுத்தில்... :சென்னையை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற சமூக ஆர்வலர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:தலையில் கட்டி உள்ளவர்கள், தலையில், தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தோர், கழுத்து சுளுக்கு உடையவர்கள், தைராய்டு பிரச்னை உள்ளோர், நீண்ட நேரம் ஹெல்மெட் அணிந்து செல்ல இயலாது. அவர்களுக்கு, ஹெல்மெட் கட்டாயம் என்ற நடைமுறையில் இருந்து விதிவிலக்கு அளிக்கவேண்டும்.
அவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.இவ்வாறு, ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கழுத்து சுளுக்கு உடையவர்களை, பார்த்தாலே தெரிந்து விடும்; அறுவை சிகிச்சை செய்தோர், தலையில் கட்டி இருப்போர், தைராய்டு பிரச்னை உள்ளோர், அதற்குரிய மருத்துவ சான்றிதழ்களின் நகல்களை, இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொள்வது நல்லது' என்றனர்.

'
ஹெல்மட்' காமெடி:'வாட்ஸ் ஆப்'பில், நேற்று பரவிய 'ஹெல்மெட்' காமெடி:
போலீசார்: உன் செயினை யாருமா பறிச்சது?
பெண்: கறுப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார்.
போலீசார்: வண்டியை அவன் தான் ஓட்டினானா?
பெண்: இல்ல சார்... ஓட்டுனவன், பச்சை ஹெல்மெட் போட்டு இருந்தான்.
போலீசார்: சாட்சி யாராவது இருக்காங்களா?
பெண்: சிவப்பு ஹெல்மெட் போட்டு இருந்தவரு, இதை கண்ணால பார்த்தாரு சார்.
போலீசார்: இப்படி சொன்னா எப்படிம்மா... ஏதாவது அடையாளம் சொல்லு!
பெண்: பின்னாடி உட்கார்ந்து இருந்த பொண்ணு, வெள்ளை நிற ஹெல்மெட் போட்டு இருந்தாங்க சார்.
போலீசார்: அட போம்மா, ஹெல்மெட் போடாத ஆளு யாருமே பார்க்கலையா?
பெண்: நான் மட்டும் தான் சார் ஹெல்மெட் போடல...
போலீசார்: அப்ப உன்னோட லைசென்சையும், ஆர்.சி., 'புக்'கையும் எடு!

தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை:தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது, ஹெல்மெட் உள்ளிட்ட பொட்டல பொருட்கள், அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கப்படுவதாக புகார் வருகிறது. இதுபோல விற்பனை செய்வோர் மீது, நடவடிக்கை எடுக்க, தொழிலாளர் துறை ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். என கூறியுள்ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக