அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 22 ஜூலை, 2015

2020ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 16 லட்சம் பேர் புகையிலை நோய்களால் உயிர் இழப்பார்கள்

பந்தலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நாட்டு நலப்பணி திட்டம் ஆகியன சார்பில் புகையிலை பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
நிகழ்சிக்கு பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட மேங்கோரென்ஞ் மருத்துவமனை மருத்துவ அலுவலர் ரெமா பிரதாப் பேசும்போது சிகரெட் பிடிப்பவர்கள் உள்ளிழுக்கும் நிகோட்டின் நச்சானது, அருகில் இருப்பவர்களுக்கு பரவுவதால், புகையிலையை உபயோகிக்காதவர்கள் கூட பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்காக வருபவர்களில் 45 விழுக்காட்டினர் புகையிலை பயன்படுத்தியதாலேயே நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன 2030 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் காசநோய், மலேரியா, எய்ட்ஸ் நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், புகையிலை பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. புகையிலையில் சுமார் 4 ஆயிரம் நச்சுப்பொருட்கள் இருப்பதால், அவற்றை பயன்படுத்துவோரை அது நாளடைவில் தாக்கி, நுரையீரல் பாதிப்பு, தொண்டைக்குழல் பாதிப்பு, குரல்வளை புற்றுநோய் என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி, `சைலன்ட் கில்லர்' ஆக மாறுகிறது
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 16 லட்சம் பேர் புகையிலை நோய்களால் உயிர் இழப்பார்கள் என்று எச்சரித்துள்ளது. புகையிலையால் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல், கண்பார்வை போன்றவைதான்புகைப்பழக்கம் காரணமாக நரம்புத்தளர்ச்சியின் பிடியில் சிக்கி ஆண்மையை இழந்து தவிப்போர் அதிகரித்து விட்டனர். தற்போது, இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் உயிரை பறி கொடுக்கின்றனர். உலகில் மனித இறப்புகளை தோற்று விக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. புகையிலை, புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளைய தலைமுறையினர் விழிப்புடன்இருக்க​ வேண்டுமென்றார். நிகழ்ச்சியில் பள்ளி இளம் ​செஞ்சிலு​வை சங்க ஒருங்கி​ணைப்பாளர் ஸ்டீபன்சன் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜ்குமார்
ஆகி​யோர் ​பேசினார்கள்  நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி ​பொது ​சே​வை​மைய த​லைவர் ​நெளசாத் ​மேங்​கோ​ரென்ஞ் மருத்துவம​னை பரி​சோதகர்​சைனீ மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து​கொண்டனர் முடிவில் மாணவன் ஸ்ரீராம் நன்றி கூறினார்,





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக