உப்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கண் தான இருவார விழாவினை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட், எஸ். எஸ். எப் - எஸ்.வேய்.எஸ் உப்பட்டி கிளை ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் உப்பட்டி மதரசாவில் நடைபெற்றது.
முகாமிற்கு தலைமை எஸ்.எஸ்.எப் - எஸ்.வை.எஸ் உப்பட்டி கிளை செயலாளர் ஐமுட்டி தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், செயலாளர் பொன் கணேசன், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் உதகை அரசு மருத்துவமனை கண் மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 120.கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 5 பேர் கண் புரை அறுவை கிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் கண் தொழில் நுட்புனர் முத்துராஜ் பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, ஸ்ரீதர், உப்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் பலகிருஷ்ணன், எஸ்.எஸ்.எப் - எஸ்.வை .எஸ் உப்பட்டி கிளை நிர்வாகி ஷபிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உப்பட்டியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக