குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா
குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பள்ளி நிர்வாகம் இணைந்து குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை செயல்படுத்தி வருகிறது.
இந்த மன்றத்தின் முன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளி தலைமை ஆசிரியர் பஜீத் குமார் பேசும்போது மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் வருங்காலத்தில் சமூக மாற்றத்தினை உருவாக்க முடியும் குறிப்பாக ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை தற்போது பெரிதாகாமல் தடுக்க பட்டுள்ளதாக ஆய்வில் கண்டு பிடிக்க பட்டுள்ளது இதுபோன்று நுகர்வோர் விழிப்புணர்வினை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு.சிவசுப்பிரமணியம் பேசும்போது நமது தேவையை விட அதிகமான பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம். பல பொருட்கள் ஆடம்பரத்திற்க்காகவும், அடுத்தவர் பயன் படுத்துகிறார் என்பதற்காகவும், விளம்பரத்தில் சொல்லபட்டதற்க்கவும் பயன் படுத்து கிறோம் இதனால் தேவையற்ற செலவினங்களை உருவாக்கு கிறது. மாணவர்களிடையே உணவு முறைகள் மாறி வருகிறது. இதனால் உடலில் ஊட்ட சத்து குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். ஊட்ட சத்து பானங்கள் வெறும் விளம்பரமே, அவற்றை தவிர்த்து வழக்கமான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன். கணேஷன் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியை அன்சி வரவேற்றார். முடிவில் அலுவலக உதவியாளர் கங்காதரன் நன்றி கூறினார்.
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக