மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட
சுவைமிகு ஆரோக்கிய பானம் தேநீர்
நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்குப் பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது’ '83 சதவிகித இந்தியர் களின் வீடுகளில் தேநீர் நுகரப்படுகிறது. விரைவில் தேயிலை தேசிய பானம் என அறிவிக்க படும் என எதிர்பர்ர்க்கபடுகிறது.
இந்தியாவில் அசாம் மாநிலத்தில் முதன் முதலாகத் தேயிலையைப் பயிரிட்டவர் மணிராம் திவான். இவர், சுதந்திரப் போராட்ட வீரரும்கூட.
pls visit our webs
தேயிலை ஒரு பசுமைத் தாவரம். இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப்படுகிறது.
வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வகையான தேயிலைகள் பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் அவை வேறுபடுகின்றன.
தேயிலையின் இரு சொற் பெயர் Camellia Sinensis என்பதாகும்.
இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழைமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை பிரசித்தி பெற்றவையாகும்.
தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யப் படுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர்.
தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்...!
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் காபியை விடவும் குறைவாக 'காபினே' உள்ளது . எனவே கொழுப்பை பற்றி கவலைபட தேவையில்லை .
உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்தஅழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.
pls visit our webs
தேயிலை (டீ-யின் ) மருத்துவ குணங்கள்
மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள், கவலை காணாமல் போய்விடும். இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது. அதனால் தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது, இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைக்கும்
ஜீரண சக்தி : நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
கேன்சர்: கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.
நீரிழிவு: கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது. அத்துடன் இது 'இன்சுலீனின்' செயல்பாட்டையும்' அதிகரிக்கிறது.
இதயம்: இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL, டிரைகிளிசரைடுகளின் அளவைக் கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஆர்த்ரைட்டீஸ்: ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது.மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டு.
ஒபிஸிட்டி: உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி,கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப்படுத்தவும் செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனும் குறைய வாய்ப்பிருக்கிறது.
pls visit our webs
முதுமை: வயதாவதைத் தடுக்க முடியாது என்றாலும் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமை அடைவதை தடுக்கலாமே. உடல் திசுக்களில் உற்பத்தியாகும் 'ஃபிரீ ராடிகல்' எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப்படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி கூடுதலாகிறது.
பல்: கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. வாயில் உற்பத்தியாகக் கூடிய 'பாக்டீரியா'க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.
அழகு: கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது.
எடை குறைவு : க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல்எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது.
வாதத்திற்கும் நிவாரணி : பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர்பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.
நரம்பியல் நோய்களைத் தடுக்கும் பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கியபங்கு வகிக்கிறது
புரோஸ்டேட் புற்றுநோய் இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன்டீ பருகிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத்துநிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும்அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி தேநீர் பருகி வரும் அதிக வயது பெண்மணிகளுக்கு இடுப்பெலும்புஅதிக அடர்வுடன் இருப்பதை போல், தேநீர் பருகாத இளம் வயதுபெண்மணிகளுக்கு இருப்பதில்லை.
மொத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால்,
படிக்கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.
பயன்படுத்தும் முறை:
தரமான தேயிலைத் தூளை ஒரு கோப்பைக்கு இரண்டு டீஸ்பூன் வீதம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கோப்பை தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த தண்ணீரில் தேயிலைத் தூளைப் போட்டு மூடி வைத்து உடனே அடுப்பை அனைத்து விட வேண்டும். ஓரிரு நிமிடம் கழித்து அதை வடிகட்டி, தேவைக்கு சர்க்கரையும் பாலும் சேர்த்துக்கொள்ளவும்.
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு. இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
டீ-யை நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது. 80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள், எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம். ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.
தேயிலை கலப்படம் இன்று கலப்படமில்லாத டீயை நீங்கள் கடைகளில் குடிக்கிறீர்கள் என்பதற்கு உத்திரவாதம் உண்டா? நிச்சயமாக இல்லை. மரத்தூள், ஏதாவது ஒரு இலைதூள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூள் , இவற்றுடன் செயற்கை சாயம் ( இது உணவிற்காகப் பயன்படுத்தப்படுவதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உடைகளுக்காகப் பயன்படுத்தும் சாயமாககூட இருக்கலாம்) கலந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் சாய கலவையைதான் நீங்கள் சூடாக ஐந்து ரூபாய் கொடுத்து குடித்து மகிழ்கிறீர்கள்
தேயிலையில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
மேல இருக்குற ரெண்டு கிளாசுல, நமக்கு வலதுபுறம் இருப்பது நல்ல டீ. இடது புறம் இருப்பது கலப்படமான டீ. எப்படிக்கண்டுபிடிக்கலாம்?
pls visit our webs
ஒண்ணுமில்லை. டெஸ்ட் பண்ணனும்னு நினைக்குற தேயிலையை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கோங்க. ஒரு கண்ணாடி டம்ளரில், சாதாரண தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் அந்த தேயிலையைத் தூவுங்க. நல்ல தேயிலையாயிருந்தா, தேயிலையின் சாறு மட்டும் இறங்கி தண்ணீரின் நிறம் சிறிது மட்டுமே மாறும்.
கலர் சேர்த்த கலப்பட தேயிலையாயிருந்தா, தேயிலை தண்ணீரில் மூழ்கத் துவங்கும்போதே, கலர்கள் அந்த நீரில் வர்ண ஜாலமடிக்கும். கொஞ்ச நேரத்தில், அந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமே, இடது பக்க டம்ளரில் உள்ளதுபோல் கலராயிடும்.
தேயிலை துளை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.
வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.
தேயிலைத் தூளில் எப்படிக் என்ன கலப்படம் செய்கிறார்கள்?
இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் 'திக்’ காகவே இருக்குமாம்!
முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!
மஞ்சனத்தி இலை - குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!
புளியங்கொட்டை: புளியங்கொட்டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!
மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.
மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல், நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை போன்றவையும் கலக்க படுகிறது
ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
எது ஒரிஜினல்? தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று... இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.
உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேயிலையில் கலப்படம் செய்வதை தடுக்க தென்னிந்திய தேயிலை வாரியமும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவகமும் முயற்சிகள் எடுத்து வருகிறது. நாமும் எச்சரிக்கையாக இருந்தால் அலுவலர்களுக்கு உதவியாக இருந்தால் தேயிலை கலப்படத்தினை தடுக்க முடியும்.
தேயிலையில் டீயில் கலப்படம் இருப்பது தெரிந்தால்
தென் இந்திய தேயிலை வாரியம், பெட்போர்ட், குன்னூர்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலர்,
அருகில் செயல்படும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள்
ஆகியோருக்கு தகவல் கொடுக்கலாம்.
pls visit our webs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக