அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 26 டிசம்பர், 2015

காளான் கபாப்

என்னென்ன தேவை?

காளான் - 1 கப்,
கடலைப் பருப்பு - 1 கப், 
உதிர்த்த ஸ்வீட் கார்ன் - 1/4 கப், 
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, 
கசகசா - 1 டேபிள் ஸ்பூன், 
சீரகம் - 1 டீஸ்பூன், 
ஏலக்காய் - 2, 
ரொட்டித்தூள் - 2 டேபிள்ஸ்பூன், 
கிராம்பு - 2, 
காய்ந்த மிளகாய் - 2, 
வெங்காயம் - 1/4 கப் (நீளமாக நறுக்கியது), 
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், 
எலுமிச்சைச்சாறு - 1/2 மூடி (இவற்றை தனியாக கலந்து வைக்கவும்). 

எப்படிச் செய்வது?
  
காளானை நன்றாகக் கழுவி நறுக்கவும். சோளத்தையும் ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை நீர்விட்டு 1 விசில் வரும் வரை வேகவிடவும். கசகசா, சீரகத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஏலக்காய், கிராம்பு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நீர் சிறிது தெளித்து அரைக்கலாம்.  கடலைப் பருப்பு, வெந்த காளான், சோளமுத்தை உப்பு சேர்த்து மிக்ஸியில் 1 சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மசாலா தூளைப் போட்டு பிரட்டி சோளமாவு, வேண்டுமெனில் மல்லித்தழை கலந்து வதக்கவும். உருண்டைகளாக இதை உருட்டி ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பரிமாறும்போது ஊறவைத்திருந்த வெங்காயம், எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் கலவையை இதன் மீது தூவி பரிமாறவும். 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

தேசிய நுகர்வோர் தின சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் தேசிய நுகர்வோர் தின சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.  ஊட்டச்சத்து உணவு, மற்றும் உணவு விரையமாவதை தடுத்தல் அயோடின் உப்பு குறித்து நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு  நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சாரதாமணி தலைமை தாங்கினார்.  பள்ளி தமிழ் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசும்போது ஊட்டச்சத்து குறைபாடு இன்று அனைத்து தரப்பிலேயும் நிலவிவரும் பிரச்சனையாகும்.  நமது உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமே ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு முக்கிய காரணம்.  பாரம்பரிய உணவுகளை தவிர்த்து விட்டு எளிமையான உணவு என மேல்நாட்டு உணவு வகைகளுக்கு அடிமையாகிவிட்டோம்,  அதனால் அவற்றில் இருந்து எந்தவித சத்தும் கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பல்வேறு நோய்கள் தாக்குதலுக்கு அடிமையாகிவிட்டோம்.  முளைகட்டிய பயறுவகைகள், கீரை வகைகள், தானிய உணவுகள் நாம் அதிகமாக உண்ணுவதால் உடலுக்கு தேவையான புரதசத்துக்கள், விட்டமீன்கள் கிடைக்கும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மாணவர்களிடையே ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறை அவர்களின் படிப்பில் கவணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றது.  அயோடின் பற்றாக்குறையினால் மாணவர்களிடம் மந்த தன்மை அதிகரித்து வருகின்றது.  அயோடின் பற்றாக்குறை இருப்பதால் இந்தியாவில் சுமார். 1.7 கோடி பேருக்கு முன் கழுத்து கழலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.  தரமான அயோடின் கலந்த உப்பினை வாங்கி பயன்படுத்த வேண்டும்.  அயோடின் சரியான அளவு கிடைக்கும் பட்சத்தில் அறிவுதிறன் மேம்பட்டு அனைத்து வகையான செயல்களிலும் ஆர்வம் செலுத்தி சாதிக்க முடியும். நொருக்கு தீனிகளை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
அயோடின் உப்பு குறித்து பரிசோதித்து காண்பிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அர்ஜூனண், லோகநாதன், கட்டபொம்மன், தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சுபீதா, கனேசன், ராமச்சந்திரன் உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.  முடிவில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் முத்துராமன் நன்றி கூறினார்

.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


அயோடின் உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
உதகை அருகே சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே வீட்டில் பயன்படுத்தும் உப்பு மாதிரி சேகரிக்கப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர்   மன்றம் ஆகியன இணைந்து நடத்திய அயோடின் உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.  பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார்.  குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  அரசு கடந்த 2005ம் ஆண்டு அனைத்து கடைகளிலும் அயோடின் கலந்த உப்பினை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நடைமுறைப்படுத்தி உள்ளது.  இதனை கண்காணிக்கும் விதமாக  தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் உப்பு மாதிரி எடுத்து அயோடின் அளவு பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. அயோடின் உப்பு குறித்து மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.  மாணவர்களுக்கு அயோடின் சத்து மிகவும் அவசியமாகின்றது.  அயோடின் பற்றாக்குறையால் மந்ததன்மை கண் பார்வை குறைபாடு ஊனத்தன்மை  சிந்தனை வளம் குறைவு சுறுசுறுப்பு குறைவு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது.  மாணவர்களுக்கு ஒருநாளைக்கு சுமார் 120 முதல் 150 மைக்ரோ கிராம் அயோடின் சத்து அவசியமாகின்றது,  இதனால் அறிவுதிறன் மேம்பட்டு நினைவாற்றல் அதிகரிக்கும். அயோடின் உப்பினை சிரிக்கும் சூரியன் படம் மற்றும் அயோடைஸ்ட் சால்ட் என்ற வாசகம் மூலம் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.  கடைகளுக்கு வெளியே வைத்திருக்கும் உப்பு, உடைந்த பாக்கெட் உப்புகள் வாங்ககூடாது.  தரமான அயோடின் உப்பினை வாங்கி பயன்படுத்த வேண்டும்.  தரமற்ற உப்புகள் மற்றும் காலாவதி உப்புகள் விற்பனை செய்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் கொண்டு வந்த உப்பினை பரிசோதித்து காண்பிக்கப்பட்டது.  50க்கும் மேற்பட்டோர் கொண்டு வந்த உப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை தமிழ்நாடு உபபோகிப்பாளர்கள் பாதுகாப்பு மையத்தின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கண் தாணம் செய்வது எப்படி

கண் தாணம் செய்வது எப்படி
1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூடவேண்டும்.

2. மின்விசிறியை இயக்கக்கூடாது.

3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.

4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும்,

5. எளிதாகவும் வந்து சேரும்வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

6. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?

நாய் கடியால் இறந்தவர்கள்,
டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை,
 புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால்
இறந்தவர்களிடம் இருந்து
கண்களை தானமாக பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:

1. ஒருவர் இறந்த 4 / 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.

2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.

3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.

4. கண்தானம் செய்ய 20 / 30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.

5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும்.
இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.

6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள்,
குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.

7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.


இந்தியாவில் 500 கண் வங்கிகள் உள்ளன.
15 லட்சம் பேர் கார்னியா எனப்படும் விழி வெண்படலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறால்,
பார்வைத் திறன் இல்லாமல் இருக்கிறார்கள்.

மாற்றுக் கண் பொருத்துவதன் மூலம் இவர்களுக்கு பார்வை தர முடியும்.

குறைந்தது ஆண்டிற்கு ஒரு லட்சம் கண்கள் தேவை.
நம்மிடம் மாற்றுக் கண் அறுவைச் சிகிச்சை செய்ய அந்தளவிற்கே டாக்டர்கள் இருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு மட்டும் 75 லட்சம் பேர் கண் தானம் செய்திருக்க முடியும்.
அவர்களிடமிருந்து 150 லட்சம் கண்கள் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், நடந்தது என்ன? 500 வங்கிகளும் சேர்த்து
40 ஆயிரம் கண்கள் மட்டுமே பெற முடிந்திருக்கிறது.

அதிலும் மற்றவர்களுக்கு பொருத்தக் கூடிய நிலையில் இருந்தது
வெறும் 15 ஆயிரம் கண்கள் மட்டுமே.

கண் வங்கியை தொடர்பு கொண்டு எத்தனை பேர் உறுதி மொழி எடுத்துக்கொள்கிறார்கள்
என்று கேட்டபோதும் அதிகபட்சம் 4 ஆயிரம் பேர் என்ற தகவலும் அதிர்ச்சியாகவே இருந்தது.

இலங்கை எத்தனை குட்டியான நாடு.
அங்கிருந்து ஆண்டிற்கு 50 ஆயிரம் கண்கள் ஏற்றுமதி செய்கிறார்கள்.

ஆனால், நம்மால் ஏன் முடியவில்லை
பழைய முறையையே பின்பற்றுவதைவிட இன்னும் எளிமையாக,
புதுமையாகச் செய்தால் நிறையப் பேர் கண் தானம் செய்யவும்
கண்களை பெற்றுத் தரவும் முன் வருவார்கள்

108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணை இதில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்துள்ளார்கள்.
இதன்படி, கண் தானம் செய்ய விரும்புபவர் 108-ஐ தொடர்புகொண்டால்,

அவர்கள் அருகிலுள்ள தனியார் அல்லது அரசு கண் வங்கிக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவார்கள்.
மருத்துவக் குழுவினர் வந்து கண்களை பெற்றுக்கொள்வார்கள்.

தவிர, கண் தானம் செய்ய விரும்புபவர்கள் EYE என்று டைப் செய்து

தங்கள் பெயர், ஊர் விவரங்களைச் சேர்த்து 99443 13131 என்ற எண்ணுக்கு
எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்,

மற்றவற்றை பார்த்துக் கொள்வார்கள்.
உடனடியாக கண் தானம் செய்யுங்கள்

உங்களை போல் உலகை
பார்வை இழந்த ஒருவரும்
கண்டு ரசிக்கட்டும்.

அன்புடன்
சு. சிவசுப்பிரமணியம்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்.
‘நீலகிரி


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

அரச்ச கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி / இட்லி அரிசி - 3 கப், 
தேங்காய்த்துருவல் - 2 கப், 
உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், 
கடுகு - 1 டீஸ்பூன், 
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், 
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் கிள்ளியது - 5, 
பெருங்காயம் - ஒரு சிட்டிகை, 
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?

அரிசியை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்து, இட்லிக்கு அரைப்பது போல் நைசாக அரைக்கவும். அதோடு தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மாவை ஊற்றும் பதத்தில் வைத்துக் கொள்ளவும். பெரிய நான்-ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து பொன்னிறமாக வறுத்து, அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து அத்துடன் மாவுக் கலவையையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். மாவுக் கலவை பந்து மாதிரி வரும் வரை மிதமான தீயில் கிளறவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து 20 நிமிடம் ஆவியில் வேக விடவும். சட்னி, சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சிறுதானிய உப்பு உருண்டை


சிறுதானிய உப்பு உருண்டை

Soak for 2 hours and burst all the grains in a white stone with semolina in the mixer dryer tuniyile 1/2 hours.



சிறுதானிய உப்பு உருண்டை

என்னென்ன தேவை?

கம்பு, சோளம், ராகி,
குதிரைவாலி அரிசி, சாமை, வரகு,
தினை இவையனைத்தும் வறுத்து ரவையாக உடைத்தது - 2 கப்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு தலா - 3 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 10 (அ)மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.

தாளிக்க…


கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
கறி
Soak for 2 hours and burst all the grains in a white stone with semolina in the mixer dryer tuniyile 1/2 hours.


Soak
வேப்பிலை, மல்லி, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, என்னென்ன தேவை?

கம்பு, சோளம், ராகி,
குதிரைவாலி அரிசி, சாமை, வரகு,
தினை இவையனைத்தும் வறுத்து ரவையாக உடைத்தது - 2 கப்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு தலா - 3 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 10 (அ)மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.

தாளிக்க…


கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
கறிவேப்பிலை, மல்லி, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/2 மூடி.
எப்படிச் செய்வது?

தானியங்கள் எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து வடித்து ஒரு வெள்ளைத் துணியிலே 1/2 மணி நேரம் உலர்த்தி மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இத்துடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து தானியங்கள் மாதிரி கரகரப்பாக ஊற வைத்து உலர்த்தி ரவையாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் தாளிக்க கொடுத்ததையும், மிளகாய் வற்றல் அல்லது பொடித்த மிளகு, சீரகத்துடன் தேங்காய்த் துருவலும் சேர்த்து வதக்கி 5 - 6 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, பொடித்த தானியங்கள், பருப்புகளோடு உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி உருண்டைப் பிடித்து ஆவியில் வேக விட்டு எடுத்து சட்னியுடன் மல்லி தூவி பரிமாறவும்.
தேங்காய்த்துருவல் - 1/2 மூடி.
எப்படிச் செய்வது?

தானியங்கள் எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து வடித்து ஒரு வெள்ளைத் துணியிலே 1/2 மணி நேரம் உலர்த்தி மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இத்துடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து தானியங்கள் மாதிரி கரகரப்பாக ஊற வைத்து உலர்த்தி ரவையாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் தாளிக்க கொடுத்ததையும், மிளகாய் வற்றல் அல்லது பொடித்த மிளகு, சீரகத்துடன் தேங்காய்த் துருவலும் சேர்த்து வதக்கி 5 - 6 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, பொடித்த தானியங்கள், பருப்புகளோடு உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி உருண்டைப் பிடித்து ஆவியில் வேக விட்டு எடுத்து சட்னியுடன் மல்லி தூவி பரிமாறவும்.
Soak
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்

ஏறும் விலைவாசியில் சிக்கனம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. 

பெண்கள் வீட்டில் சிக்கனமாக இருக்க வேண்டும் என்றால் 

ஆண்கள் வெளியில் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
 எப்படி சமாளிக்கலாம், சில டிப்ஸ் :

மொத்த விற்பனைக் கடை

பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், 
கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் 
மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால் 
10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். 

மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு 
எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். 

ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.

சமையல் கேஸ்ஸில் மிச்சமாக்கலாம் காசு!

அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். 

தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். 
மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்ற வரை சிம்மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால் எரிபொருள் அதிகம் செலவாகும்.

பெட்ரோல் சிக்கனம்


சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால் பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.

செல்போன் பேக்கேஜ்

குடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு? மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

மின்சாரம்


ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது ஆன் ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல் பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.

நேரத்தை பணமாக்குங்கள்


வெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

தண்ணீர் தண்ணீர்


வேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும் தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு?


அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது. வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வியில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

குண்டு பல்பு வேண்டாம்


குண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட் காலமும் அதிகம்.

தவறான பழக்கத்துக்கு தடா


உங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக் கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.     cகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

cherangodu eye camp 6.12.15

cchep TWES school programme 3.12.2015



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

cchep TWES school programme 3.12.2015



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

புதன், 2 டிசம்பர், 2015

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்


தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்

செயற்பாடுகள்

மாநில மனித உரிமை ஆணையத்தின் (எஸ் எச் ஆர் சி) பிரிவு 12 ன்படி அதன் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நீட்சியுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன.  தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போன்றே இதன் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பின்வரும் செயற் பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் புரிதல் வேண்டும்
(அ) தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-
மனித உரிமைகளின் மீறுகைக்கான அல்லது அதில் தலையீட்டு குறைத்தலுக்கான; அல்லது
அரசு பணியாளர் ஒருவரால் அத்தகைய மீறுகையைத் தடுப்பதில் காணப்பட்ட கவனமற்ற தன்மைக்கான முறையீட்டினை விசாரித்தல் வேண்டும்.
(ஆ) நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் மாநில மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.
(இ) அணுகுமுறை, சீர்திருத்தம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் காவலில் வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் மாநில அரசாங்கத்திற்கு தகவல் அளித்துவிட்டு மாநில மனித உரிமை ஆணையம் அதனைப் பார்வையிடலாம்.
(ஈ) மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்படச் செயற்படுத்துதற்கான நடைமுறைகளைப் பரிந்துரை செய்யலாம்.
(உ) வன்முறைச் செயல்கள் (தீவிரவாதம்) உள்ளடங்களாக மனித உரிமைகள் நுகரப்படுவதை தடுத்து நிறுத்துகின்ற விடயங்கள் மறு ஆய்வு செய்தல் மற்றும் தீர்வழிக்கான உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யலாம்.
(ஊ) மனித உரிமைகள் மீதான உடன்படிக்கைகள், பிற பன்னாட்டு முறையாவணங்களைக் கவனமாக ஆராயவும் அவை திறம்பட செயற்படுதலுக்குப் பரிந்துரை செய்யலாம்.
(எ) மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியினை ஆணையமே மேற்கொள்ளலாம்.
(ஏ) மனித உரிமைகள் பாதுகாப்புக் குறித்த கல்வியை, விழிப்புணர்வை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் பரப்பவும், மக்கள் தொடர்பு சாதனங்கள், கருத்தரங்கங்கள், ஊடகங்கள், பிரசுரங்கள் வாயிலாக மக்கள் அறிய ஆணையம் வழிகள் ஏற்படுத்தலாம்.
(ஐ)மனித உரிமை போன்ற துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகளின் மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கின்றது.
(ஒ) மனித உரிமை மேம்பாட்டிற்குத் தேவையானதென்று கருதுகின்ற இன்னபிற பணிகளையும் மாநில மனித உரிமை ஆணையம் ஆற்றலாம்.

புகார்கள் அனுப்புவது

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  • புகார் மனுவுக்கு கட்டணம் கிடையாது.
  • புகாரில் முழுமையான விவரத்தை தெரிவித்தல் வேண்டும்.
  • ஆணையம் புகார் சம்பந்தமான கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறலாம். புகார்களை பிரமாணப் பத்திரம் (அபிடாவிட்) மூலம் அளிக்குமறு சொல்லலாம்.
  • தந்தி மற்றும் தொலை நகல் மூலம் அனுப்பும் புகார்களை சற்று எச்சரிக்கையுடன் ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.

புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை

புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்
  1. பெயர்
  2. இருப்பிட முகவரி
  3. புகார் எழுந்த நிகழ்விடம் மற்றும் முகவரி
  4. நாள் மற்றும் நிகழ்வின் காலம்
  5. மனித உரிமை மீறல்களின் விரிவான/சுறுக்கமான விவரங்கள்
  6. எந்த பொது ஊழியர் குறித்து புகார் அல்லது துறையினர் குறித்து புகார்.
  7. நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளனவா/தீர்ப்பாயம்/வேறு பிற ஆணையங்களில் நிலுவையில் உள்ளனவா?
  8. இடர்/ துயர்/பதிலீடு குறித்து வேண்டுவன
குறிப்பு
ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.

ஏற்கப்படாத புகார்கள்

கீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திடலாம்.
  • தெளிவற்ற புகார்.
  • தெளிவற்ற பெயர் இல்லாத புனைப் பெயரில் கொடுக்கப்பட்ட புகார்.
  • மிகச் சிறிய அளவிலான புகார்.
  • பொது ஊழியருக்கு எதிரானல்லாத குற்றச்சாட்டு.
  • சொத்துரிமைகள், ஒப்பந்த கடப்பாடுகள், உரிமையியல் சார்ந்த பிரச்சினைகள்.
  • பணி விடயங்கள் (சர்விஸ் மேட்டர்) சம்பந்தமானப் புகார்.
  • மனித உரிமைகள் மீறுதல் எதனையும் கொண்டிராத குற்றச்சாட்டுகள்.
  • தொழில் அல்லது தொழில் தகராறு சம்பந்தமானப் புகார்.
  • ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட புகார்.
  • புகார்களைப் பெறுதல்
  • புகார்களை ஆணையம் பெற்றபின் அவைகளை துறை வாரியாக பிரிக்க்ப்பட்டு அவைகளை நாட்குறிப்பில் பதிவு செய்தபின் அந்தந்த சட்டப்பிரிவுக்கு அனுப்ப படுகின்றது.
  • அவசரப் புகார்களை அந்த துறை சட்டப் பதிவாளரின் உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டபின், பதிவாளர் அதற்குத் தேவயான கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.
  • புகார்கள் மற்றும் தகவல்கள் ஆங்கிலத்தில் இல்லாதபொழுது அவற்றை உடனடியாக மொழிபெயர்த்து ஆணையத்தின் முன் வைக்கப்படும். (தேசிய ஆணையத்தில் இம்முறை கையாளப்படுகின்றது) அவசரத்தன்மைக்கேற்ப புகார்கள் சுருக்கமான உரைகளாக ஆங்கிலத்தில் தயார் செய்யப்படுகின்றன (இதுவே போதுமானதாக கருதப்படுகின்ற நேரத்தில்)

ஆய்வு

ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு[2] செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.
  • காலவரை
  • புகாரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல்
  • ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்
  • தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

அழைப்பாணை

  1. புகார் மனுவில் கூற்ப்பட்டுள்ள நபருக்கு ஆணையம், அவர் குறித்து விசாரணை தேவையென்க் கருதினால் அவருக்கு அழைப்பாணைகள் (சம்மன்ஸ்) அனுப்பி ஆணையத்துக்கு வர ஆணையம் பணிக்கின்றது.
  2. புகார்தாரர் அல்லது புகார் தாரரின் அதிகாரம் பெற்ற வேறொரு நபர் (வழக்குரைஞர் தான் என்பதில்லை யார் வேண்டுமானாலும் அதிகாரம் பெற்றவராக)ஆணையத்தில் முன்னிலையாதல் (ஆஜர்) வேண்டும்.
  3. வழக்கிற்கு தேவையெனக் கருதினால், சாட்சியங்கள் அல்லது மற்றெவரேனும் தேவைப்படீன் ஆணையம் அவர்களுக்கும் அழைப்பாணைகள் (சம்மன்ஸ்)அனுப்பினால் முன்னிலையாதல் (ஆஜர்) வேண்டும்

புலன் விசாரணை

ஆணையமானது தனது 14 வது பிரிவின் சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளவறு அதனுடைய புலன் விசாரணையை மேற்கொள்ளுமாறு மாநில அரசின் புலனாய்வுக்கு உத்தரவிடும். இதன்படி அமைக்கப்பட் குழுவினர் ஆணையத்திற்காக புலனாய்வை மேற்கொண்டு அதன் அறிக்கையை ஆணையத்தின் முன் சமர்ப்பிப்பர். குறிப்பிட்ட காலவரைக்குள் புலனாய்வை முடிக்கவில்லையெனில் மேற்கொண்டு முடிவுகளுக்காக காரணங்களை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கவேண்டும்.

மனித உரிமை நீதிமன்றங்கள்

மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருத்து எழும் குற்றச் செயல்களை விரைந்து விசாரணை செய்ய ஏதுவாக மாநில அரசால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒருங்கிணைவுட்ன சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க சட்டம் வழிவகை செய்துள்ளதின்படி அமைக்கபெற்ற சிறப்பு நீதிமன்றங்கள் இவ்வழக்குகளை விசாரணை செய்யும். சிறப்பு மனித உரிமையியல் நீதிமன்றங்கள் என இந்நீதிமன்றங்கள் அழைக்கப்படும். சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் அரசின் சார்பில் இவ்வழக்குகளை மேற்க்கொள்வார்.

மாநில மனித உரிமை ஆணைய நியமனங்கள்

பிரிவு 21 இல் கூறப்பட்டுள்ளதின்படி அரசு ஆணை 1465 1466 பொதுமக்கள் (ச&ஒ) துறை, நாள் 20.12.1996 இல் கட்டமைக்கப்பெற்ற மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்-; மாநில மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

பெண்கள் உரிமை

இந்திய அரசியலமைப்பு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளுக்கும் உத்திரவாதம் அளித்துள்ளது. (இந்திய அரசியலமைப்பின் விதிகள் 14, 15, 16) இது தவிர அரசாங்கமும் பெண்கள் நலனுக்கான பல சமூகநலச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.
ஒவ்வொரு வருடம் மார்ச் 8 அன்று பன்னாட்டு மகளிர் தினமாக கொண்டாடப் படுகின்றது.

பெண்களுக்கான சமூக நலச் சட்டங்கள்

  1. 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற இந்து திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப் படுகின்றது.
  2. 1956- ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம். பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
  3. 1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.
  4. 1956 ஆம் அண்டு இந்து விதவைகள் மறுமணச் சட்டம், இந்து விதவைகள் (கைம்பெண்கள்) மறுமணத்தை அங்கீகரிக்கின்றது.
  5. இந்து திருமணச் சட்டம் (1964 இல் தமிழக அரசின் திருத்தச்சட்டப்படி) சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம்.
  6. 1989 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச்சட்டம் (தமிழக அரசின் திருத்தச்சட்டம்) பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.
  7. தமிழக அரசின் 1999 ஆம் ஆண்டு பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம், இதனால் வாரப்பத்திரிகைகள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், ஊடகங்கள் போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது.

பெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்

பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு பெண்களுக்கான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தியுள்ளது.
  • 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டம்
  • 1951 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர் சட்டம்
  • 1952 ஆம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர் சட்டம்
போன்ற சட்டங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அவர்களின் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1961 மகப்பேறு நலச்சட்டம் மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமை

குழந்தைகளை நலனே நாட்டின், சமுதாயத்தின் நலனாகும். இந்தியக் குழந்தைகள் கீழ்க்கண்ட உரிமைகளைப் பெற தகுதியுடையவர்களாவர்-;
  1. மனித கண்ணியத்துடன் வாழும் உரிமை.
  2. பெற்றோரின் பராமரிப்பில் வாழும் உரிமை.
  3. இனம், நிறம், பால், தேசியம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடில்லாமல் வாழும் இயல்பான உரிமை.
  4. ஆரோக்கியமான முறையில் வளர வசதிகளையும், வாய்ப்புகளையும் பெறும் உரிமை.
  5. ஆளுமையை வளர்க்கக் கல்வி பயிலும் உரிமை.
  6. சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்லும் உரிமை.
  7. தேசியத்தைப் பெறும் உரிமை.
  8. சுரண்டலிலிருந்தும், உடல், மனரீதியான கொடுமைகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக உள்ள உரிமை.

குழந்தைகள் சட்டம்

1960 இல் இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது, 1974 இல் இந்திய அரசு குழந்தைகளிக்கான தேசியக் கொள்கையை வெளியிட்டது. குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதை தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 இல் மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றியது.
  • குழந்தைப் பிறந்தவுடன் பெற்றோர்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யவேண்டும்.
  • பெயரிட்டபிறகு குழந்தையானது நல்ல குடிமகனாக வளர முறையான பாரமரிப்பு கட்டாயமாகின்றது.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் முறையானக் கல்வியும் எத்ர்காலத்தில் வேலைவாய்ப்புகளும் அளிக்கப்படவேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள் நிலை

  • குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை என்பது உலகாளாவியப் பிரச்சினையாகும். 14 வயதுக்குட்பட்டவர்களை யாவரும் குழந்தைகள். 14 வயத்க்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் தொழிற்சாலைகளில் பணியில் நியமிக்கக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும் இந்திய அளவிலும் உலகளவிலும் இன்றளவும் குழந்தைகள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் நிதர்சனமான உண்மை.
  • உலகளவில் பல இலட்சம் குழந்தைகளின் கரங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மோட்டார் பணிமனைகள், சுரங்கத் தொழில்கள், விசைத்தறிப் பட்டறைகள், உணவு விடுதிகள், செங்கற் சூலைகள், பட்டாசுத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஏழ்மை, கல்லாமை, சூழ்நிலைகள், மனக்குழப்பங்கள் ஆகியவை குழந்தைகளைத் தொழிலாளர் என்ற நிலைக்கு தள்ளுவதற்கு வழி செய்கின்றன.

குழந்தை தொழிலாளர்கள்

பெற்றோர்களின் சமூகப் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் கைவிடப்படுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் 75 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 103 கோடி இந்திய மக்களில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 18.55 கோடி பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு

ஐ.நா வின் துணை அமைப்பான உலகத் தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்[5] ஆகிய அமைப்புகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
  • மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்
  • காவல்துறைக்கெதிரான குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

  1. சித்ரவதை
  2. சட்டத்திற்கு புறம்பாக சிறை வைத்தல்.
  3. பொய் வழக்கு புனைதல்
  4. பாலியியல் கொடுமை
  5. வழக்குகளைப் பதிய மறுத்தல்
  6. எதிர் தாக்கு இறப்புக்கள் (என்கவுன்டர்ட் டெத்)
சிறைத்துறையினர் மீதும் குற்றசாட்டுகளாக சரியாக உண்வு கொடுக்காதது, பிணைக் கைதிகள் மரணம் (லாக் அப் டெத்), சரியான மருத்துவ சிகிச்சை தராதது போன்ற மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
காவல்துறையினர் மீது கூறப்படும் பெரும்பான்மையான புகார்கள் அவர்கள் கொடுமையாக நடந்து கொள்வதைப் பற்றியும் கடுஞ்சொற்கள், வசை மொழிகள் உபயோகிப்பது பற்றியுமே மக்களால் எழுப்பப்படுகின்றன.
அரசு துறைகளில் ஒப்பிடும் பொழுது காவல் துறையோடு பொதுமக்களுக்கு 10 சதமீதம் மட்டுமே தொடர்பு ஏற்படுகின்றது. ஆனால் அவற்றுக்கெதிராக (காவல்துறைக்கு) எழும் புகார்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது

பிரதான பாதுகாவலர்

முன்னாள் தமிழ்நாடு மாநில மனிதவுரிமை ஆணைய உறுப்பினர் உண்மையில் மனிதவுரிமைகளின் பிரதான பாதுகாவலர் காவல்துறை எனலாம். சில களப் பணியாளர்களின் தவறான நடவடிக்கையால் காவல்துறை மனிதவுரிமை மீறல் புகாருக்கு உள்ளாகின்றது. பெரும்பாலன காவல்துறையினர் அதிகாரத் தோரணையோடு பணிபுரிந்தால்தான் மக்கள் மதிப்பர் என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர். இதனால் காவல்துறையினர் என்றாலே கடுப்புத் துறையினர்; சீறுடையணிந்த சண்டைக்காரர்; கெட்ட வார்த்தைகள் சரளமாக பேசுபவர்; அநாகரிகமான சடை உடை பாவணை உடையவர்; வழக்கு என்ற பேரில் கொடுமை படுத்துபவர்; ஊழலில் உழலுபவர் என்ற எண்ணம் மேலோங்குகின்றது.

இந்திய அரசியலமைப்பில் மனிதவுரிமைகள்

  1. சமத்துவ உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. பேச்சுரிமை
  4. எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை
  5. ஒன்று படும் உரிமை.
  6. சங்கங்கள் அமைக்கும் உரிமை.
  7. நடமாடும் உரிமை.
  8. குடியேறி வசிக்கும் உரிமை
  9. பணி செய்யும் உரிமை.
  10. சுரண்டலுக்கெதிரான உரிமை
  11. சமய சுதந்திர உரிமைகள்
  12. கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள்.
  13. சொத்துரிமை.
  14. அரசியலமைப்பிற்குட்பட்டு பரிகாரம் பெறும் உரிமை.

ஐ.நா வின் மனித உரிமை விதிகள்

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இம்மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் இதை ஏற்படுத்தும் பொறுப்பு ஐ.நா அவைக்கு ஏற்பட்டது. 1945 இல் டிசம்பர் 24 இல் ஐ.நா அவை ஏற்பட்டவுடன் அமைக்கப்பட்ட குழுவின் முன் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அக்குழுவினரால் உருவாக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட விதிகள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், பன்னாடுகளுக்கும் பொருந்துவனவாகவும் அமைந்திருந்தது.
ஆண்டுதோறும் டிசம்பர் 24 அன்று ஐ.நா தினமாக ஐ.நா உருவான நாளை அனைத்து நாடுகளாலும் கொண்டாடப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு ஐ.நா வினால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மனித உரிமைகள் டிசம்பர் 10 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த தினத்தையே ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று மனித உரிமைகள் தினமாக அனைத்து நாடுகளாலும் கொண்டாடப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று 30 விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டது அதில் சில முக்கிய விதிகள்
அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும் சம அந்தஸ்துடனும், சமவுரிமை பெற்றுள்ளனர்.
  1. ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு பெற உரிமை உண்டு.
  2. எவரையும் அடிமைப் படுத்துதல் கூடாது.
  3. சட்டத்தின் முன் அனைவரும் சமம், வேறுபாடின்றி அனைவருக்கும் சட்டப்பாதுகாப்பு அளிக்கப்படும்.
  4. எவரையும் காரணமின்றி கைது செய்யவோ, சிறையில் வைக்கவோ, நாடு கடத்தவோ கூடாது.
  5. அவரவர் நாட்டு எல்லைக்குள் நடமாடவும் வசிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
  6. ஒவ்வொரு நாட்டு குடிமகனுக்கும் குடியுரிமை உண்டு.
  7. திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் ஈடுபடும் உரிமை.
  8. சொத்துரிமை
  9. சிந்திக்கும் உரிமை, செயல்படும் உரிமை மற்றும் வழிபாட்டுரிமை.
  10. கருத்து தெரிவிக்கவும், எண்ணங்களை வெளியிடவும் உரிமை.
  11. அமைதியான முறையில் கூட்டம் கூட்டவும், சங்கம் அமைக்கவும் உரிமை.
  12. அவரவர் நாட்டு அரசாங்கத்தில் பங்கெடுக்கும் உரிமை.
  13. வேலை செய்வதற்கான உரிமை.
  14. வேலைக்கேற்ற ஊதியம் பெறும் உரிமை.
  15. எல்லாக் குழந்தைகளுக்கும் சமூகப் பாதுகாப்பு பெறும் உரிமை.
  16. தாய், சேய் உரிமை.

CCHEP Jothi Birthday photos



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

செவ்வாய், 17 நவம்பர், 2015

கண்புரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணமாக்குவது மிக இலகு

கண்புரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணமாக்குவது மிக இலகு

கண்புரை  (Cataract) என்பது கண் வில்லையில் (Lens) ஒளி ஊடுருவுத்தன்மையைக் குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்புரைகள் தன் இயல்பு நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை. இவை விழித்திரையில் விழும் ஒளியின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலைமை ஆகும்.
அச்சமயத்தில் அவர்களின் குறும்பார்வை கூடுதலாகி கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும். அவர்களுக்கு நீல நிறத்தை காண்கின்ற திறனும் குறையும். பல ஆண்டுகள் ஆன பின்பும் கண்புரை பெரியளவு தீங்கும் விளைவிப்பதில்லை.
என்றாலும் புரை முற்றிய பின்பு விழித்திரையை அடையும் ஒளியின் அளவு வெகுவாகக் குறைந்து பார்வையில் குறைவோ பார்வை பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம். இதை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமா யினும், ஒரு கண்ணிற்கும் மற்றொன் றிற்கும் இடையே கால இடைவெளி இருக்கும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் கண்புரை முதலில் சற்று ஒளிபு காத்தன்மையுடன் தொடங்கி, வில்லை பொருந்திய பின்னர் முழுமையும் ஒளி புகாவண்ணம் சுருங்கும் தன்மையானது. தவிர மார்க்காக்னிய கண்புரை (Morgagnian cataract) கண்வில்லையின் புறப்பகுதி பால் போன்ற திரவமான வகையில் மாறி தடிப்பை உண்டாக்கும்.
இதனால் கண்வில்லையின் உறை உடைபட்டு வழியலாம். சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் குளுகோமா என்ற கண்நோய் உருவாகிட காரணமாக அமையும். சில முதிர்ந்த கண்புரையில் வில்லையை இணைத்திருக்கும் தசைநார்கள் உள்ளேயோ வெளியேயோ இடம் பெயரலாம். அவ்வாறு தானாகவே வெளியே நகர்ந்தால் ஒரளவு ஓளி உட்புகுமாதலால் அதனை இறைவனின் வரமாக பழங்காலத்தினர் கருதினர்.
ஆங்கிலத்தில் இதன் பெயரான 'காட்ராக்ட்' என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் (Cataracta) என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாக காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது.
கண்புரை முதிர்ந்த நிலையில் பார்வை முற்றிலும் குறைபடுகிறது. தொடக்க காலங்களில் கண்பார்வையில் சற்றே திறன் குறைந்து வெளிச்சமான பொருட்களைக் காண்கையில் கண் கூசும். இரவு நேரங்களில் வண்டி ஓட்டுபவர்கள் எதிர்வரும் வாகனங்களின் ஒளியால் அவதியுறுவர். ஒளிமாறு பாடுகளைக் கண்டறியும் திறன் பாதிக்கப்படும். இதனால் நிழல்கள், வண்ண மாற்றங்கள், வரிவடிவங்கள் காண்பது கடினமாகும். இந்த அறிகுறிகளைக் காணின் கண்மருத்துவர் ஒருவரை நாடுதல் வேண்டும்.
நகரப்பகுதிகளில், சர்க்கரைநோய் போன்ற காரணிகளால் புரை தோன்ற வாய்ப்புகள் உள்ளவர்கள் தெரு விளக்கினைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் கண்டால், அதிலும் ஒரு கண்ணில் மட்டும், கண்மருத்துவரை நாடுதல் மிகவும் தேவையாகும். கண்புரை நோய் பலவித காரணங்களால் வருகின்றது.
புற ஊதாக்கதிர்களுக்கு நெடுங்காலமாக கண்ணை வெளிப்படுத்துவது சர்க்கரை நோயின் தாக்கம், இரத்த அழுத்த நோயின் தாக்கம், பயங்கரமான அடி போன்றவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்ப டுத்துகின்றன.
பிறக்கும் போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவது மரபு வழியினால் குடும்பத்தின் வரலாறு காரணமாக அமையும். தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும் ஏற்படலாம். ஐஸ்லாந்து விமான ஓட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வணிக விமானங்களை ஓட்டுபவர்களிடம் கண்புரை ஏற்படுவதற்கு மற்றவர்களை விட மூன்று மடங்கு வாய்ப்பு உள்ள தாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது வான்வெளியில் அவர்கள் கூடுதல் கதிர்வீச்சிற்கு எதிர்ப்படுவதால் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது.
இதேபோல அகச்சிவப்புக் கதிர்க ளுக்கு எதிர்பட்ட கண்ணாடி ஊது பவர்கள் போன்றோரும் இதேபோன்ற வாய்ப்பினைக் கொண்டுள்ளனர். நுண்ணலை கதிர்களும் கண்புரை வரக் காரணமாகும். ஒவ்வாமை நிலைகளும் சிறுவர்களிடையே புரை நோய் வரக் காரணமாக அமைந் துள்ளது.
கண் புரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, வளர்ந்து கொண்டோ அல்லது நிலையாகவோ, மென்மையாகவோ அல்லது வலிதா கவோ இருக்கலாம். ல மருந்துகளும் கண்புரை தோன்றக் காரணிகளாக அமைகின்றன. கண்புரை மையப்புரை, புறத்துபுரை, முதிர்ந்த புரை, மிகமுதிர்ந்த புரை என வகைப்படுத்தப்படுகின்றது. மேலும் அவற்றின் இடத்தைப் பொறுத்து வெளிப்புறப் புரை (பெரும்பாலும் மருந்துகளால்) மற்றும் உட்புறப் புரை (பெரும்பாலும் வயதானவர் களிடையே) எனவும் பிரிக்கப்படுகின்றன.
கண்ணில் ஏற்படும் புரை பல வகைப்படும். பெரும்பாலான புரைகள் வில்லையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் ஏற்படுகின்றன. பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு இப்புரை ஏற்பட வாய்ப்புண்டு. புரைகளில் 80 சதவிகிதம் முதுமைப் புரையாகும். குழந்தைகளுக்கு அபூர்வமாக இந்தப் புரை நோய் ஏற்படுகிறது. இது கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு உண்டாகும் நோயாலோ அல்லது பரம்பரை காரணமாகவோ வரலாம். இந்தப்புரை எந்த வயதி னருக்கும் வரலாம். பலமான அடி, ஊசி முனைக்காயம், வெட்டுக்காயம், அதிகமான உஷ்ணம் (வெப்பம்), இரசாயனப் பொருட்கள் போன்ற காரணங்களால் வில்லை பாதிக்கப்பட்டு புரை உண்டாகலாம்.
விஞ்ஞான முறையிலான தடுப்பு வழிகள் எதுவும் அறியப்படவில்லை. எனினும் சூரிய ஒளியிலிருந்து காக்கும் குளிர்க்கண்ணாடிகள் புற ஊதாக்கதிர்களை வடிகட்டி புரை தோன்றும் வயதைத் தள்ளிப் போடலாம் எனக் கூறப்படுகிறது. உயிர்சத்துக்கள் ஏ, சி மற்றும் ஈ இய ற்கையாக விளங்கும் உணவுப் பொருட் களை உண்பதனால் நோய் வரும் நிலை யைத் தள்ளிப்போடலாம்.
ஆனால் இவற்றை வில்லைகளாக உண்பதால் பயனெதுவும் இல்லை என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. மிகவும் வெற்றி கண்ட பொதுவான சிகிச்சை முறை, கண்புரை அறுவைச் சிகிச்சை, இச்சிகிச்சை செய்யத்தகுந்த நிலைக்கு முதிர்ந்த பிறகு, கண்வில்லை வைக்கப்பட்டுள்ள உறையில் ஓர் கிழிசலை ஏற்படுத்தி மேகமூட்டமான வில்லையை நீக்குவதே ஆகும். இவ்வாறு கண்வில்லையை நீக்குவதில் இருவகை அறுவை முறைகள் உள்ளன.
உறையிலிருந்து வில்லையை நீக்குதல் உறையுடன் வில்லையை நீக்குதல். முதல்முறையில் கண்வில்லை மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும். பெரும்பாலான வில் லையுறை அப்படியே இருக்கும். மிகக் கூடுதலான அதிர்வெண் உடைய ஒலி அலைகளால் கண்வில்லை சிறு துகள்களாக உடைக்கப்பட்டு வெற்றிட உறிஞ்சி வழியாக உறிஞ்சப்படும்.
இரண்டாம் முறையில் கண்வில்லை அதன் உறையுடன் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும். இது தற்போது பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. இரண்டு முறைகளிலும் புரைவிழுந்த கண்வில்லை நீக்கப்பட்டு அதனிடத்தில் நெகிழ்வினால் ஆன வில்லையொன்று நிலையாகப் பொருத்தப்படுகிறது. நவீன வில்லை தொழில்நுட்பத்தில் முன்னதாக கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறை இருந்தவர்களுக்கு இந்த வில்லையில் அதற்கான திருத்த வடிவமைப்பும் மேற்கொள்ளப்படுவதால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தனியாக கண்ணாடி எதுவும் அணிய வேண்டியதில்லை.
கண்புரை அறுவைகள் உடலின் அப்பகுதியில் மட்டும் தாக்கமேற்படுத்தும் மயக்க மருந்துகளுடன் செய்யப்படுவதால் நோயாளி அன்றே வீடு திரும்பலாம். கண்வில்லையுறை நீக்கப்படும் இரண்டாம் முறையில் செயற்கை வில்லையை கண்ணினுள்ளே பொருத்த வியலாது. அவர்களுக்கு தடித்த கண் ணாடிகள் அணிய வேண்டியிரு க்கும்.
உலக சுகாதார அமைப்பு அறிக்கை யின்படி உலகளவில் பார்வையற்றோரில் 48 சதவீதத்தினர் (18 மில்லியன் மக்கள்) முதிய வயதினால் ஏற்படும் கண்புரையால் பாதிக்கப்பட்டவர்கள். பல நாடுகளில் அறுவை சிகிச்சைச் சேவைகள் போதுமானதாக இல்லை யாதலால் பார்வை இழப்பவர் எண் ணிக்கை கூடி வருகிறது.
மக்கள் தொகை யின் வயது ஏற ஏற புரைநோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பார்வைக் குறைகள் உள்ளவர்கள் எண்ணிக்கைக்கு முதன்மைக் காரணமாக கண்புரை உள் ளது. அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு அறுவை சிகிச்சை விலை, போதிய தகவலின்மை, போக்குவரத்து போன்ற காரணங்களால் அறுவை சிகிச்சை மேம்பட்ட வளரும் நாடுகளிலும் கண்புரையால் பார்வைத்திறன் குறைந்தவர்கள் இருக்கக்கூடும்.
அமெரிக்காவில் 52 முதல் 64 வயதுடையோரில் 42 வீதம் பேருக்கு கண்புரை நோயுள்ளதாகவும், 65 முதல் 74 வரை உள்ளோருக்கு 60 வீதம் வரை உள்ளதாகவும். 75 முதல் 85 வயதுடையோருக்கு 91 வீதம் வரை உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. வளர்கின்ற தொழில்மயமாக்கம் ஓசோன் இருப்பைக் குறைப்பதால் கதிரவனின் ஒளியில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் கூடி கண்புரை நோயின் பரவலை கூடுதலாக்கும் என்று நம்பப்படுகிறது.
கண்புரை பற்றிய தொன்மையான செய்திகளை ஆவணங்களிலிருந்து பெறுகிறோம். முதன் முதலில் இதற்கான அறுவை சிகிச்சையை இந்திய மருத்துவர் சுசுருதா கி.மு. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கியதாகத் தெரிகிறது. இந்திய அறுவை முறையில் 'ஜபமுகி சாலகா' என்ற சிறப்புக்கருவி, ஓர் வளைந்த ஊசி மூலம் கண் வில்லையை பெயர்த்தெடுத்தனர். பின்னர் சூடான வெண்ணெயில் ஊற வைத்துக் கட்டுப்போட்டனர். இந்த முறை வெற்றிகரமாக அமைந்தாலும் சுசுருதா இதனை தேவையேற்பட்டால் மட்டுமே பயன்படுத்த அறிவுரைத்தார். கிரேக்க மருத்துவர்களும் மெய்யிய லாளர்களும் இந்த அறுவை சிகிச்சையைக் காண இந்தியாவிற்கு வந்தனர். இந்த முறை சீனாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொன்மையான உரோமாவில் கண்புரை மற்றும் சிகிச்சை குறித்த குறிப்புகள் கி.பி. 29 ஆம் ஆண்டு இலத்தீன் கலைக்களஞ்சிய ஆசிரியர் ஔலஸ் கார்னியலஸ் செல்சஸ் எழுதிய 'டிமெடிசன்' புத்தகத்தில் உள்ளன. கண் மருத்துவத்துறையில் உரோ மானியர்கள் சிறந்து விளங்கினர். ஈராக்கிய கண்மருத்துவர் அம்மர் இபின் அலி உறுஞ்சுதல் முறையில் முதன்முதலில் புரையெடுத்தார். ஓர் வெறுமையான உலோக உறுஞ்சுகுழலை கண்ணின் மேல் வைத்து தோலினடி ஊசி மூலம் புரையை உறிஞ்சினார்.
கி.பி. 1000 ம் ஆண்டில் அவர் எழுதிய 'Choice of Eye Diseases' என்ற புத்தகத்தில் தாம் எவ்வாறு தோலினடி ஊசியைக் கண்டுபிடிக்கும் போது ஓர் விபத்தாக கண்புரை வெளி யேற்றத்தைக் கண்டறிந்ததாக விளக்கியுள்ளார். வயதானவர்களுக்கு வரும் புரைகளில் முதன்மையான மையப்புரை நோய்க்கு ஒட்சிசனேற்றமே முக்கிய காரணியாக விளங்குவதாகக் கருதப்படுகிறது.