அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 26 டிசம்பர், 2015

தேசிய நுகர்வோர் தின சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் தேசிய நுகர்வோர் தின சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.  ஊட்டச்சத்து உணவு, மற்றும் உணவு விரையமாவதை தடுத்தல் அயோடின் உப்பு குறித்து நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு  நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சாரதாமணி தலைமை தாங்கினார்.  பள்ளி தமிழ் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசும்போது ஊட்டச்சத்து குறைபாடு இன்று அனைத்து தரப்பிலேயும் நிலவிவரும் பிரச்சனையாகும்.  நமது உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமே ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு முக்கிய காரணம்.  பாரம்பரிய உணவுகளை தவிர்த்து விட்டு எளிமையான உணவு என மேல்நாட்டு உணவு வகைகளுக்கு அடிமையாகிவிட்டோம்,  அதனால் அவற்றில் இருந்து எந்தவித சத்தும் கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பல்வேறு நோய்கள் தாக்குதலுக்கு அடிமையாகிவிட்டோம்.  முளைகட்டிய பயறுவகைகள், கீரை வகைகள், தானிய உணவுகள் நாம் அதிகமாக உண்ணுவதால் உடலுக்கு தேவையான புரதசத்துக்கள், விட்டமீன்கள் கிடைக்கும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மாணவர்களிடையே ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறை அவர்களின் படிப்பில் கவணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றது.  அயோடின் பற்றாக்குறையினால் மாணவர்களிடம் மந்த தன்மை அதிகரித்து வருகின்றது.  அயோடின் பற்றாக்குறை இருப்பதால் இந்தியாவில் சுமார். 1.7 கோடி பேருக்கு முன் கழுத்து கழலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.  தரமான அயோடின் கலந்த உப்பினை வாங்கி பயன்படுத்த வேண்டும்.  அயோடின் சரியான அளவு கிடைக்கும் பட்சத்தில் அறிவுதிறன் மேம்பட்டு அனைத்து வகையான செயல்களிலும் ஆர்வம் செலுத்தி சாதிக்க முடியும். நொருக்கு தீனிகளை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
அயோடின் உப்பு குறித்து பரிசோதித்து காண்பிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அர்ஜூனண், லோகநாதன், கட்டபொம்மன், தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சுபீதா, கனேசன், ராமச்சந்திரன் உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.  முடிவில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் முத்துராமன் நன்றி கூறினார்

.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக