அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 26 டிசம்பர், 2015

கண் தாணம் செய்வது எப்படி

கண் தாணம் செய்வது எப்படி
1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூடவேண்டும்.

2. மின்விசிறியை இயக்கக்கூடாது.

3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.

4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும்,

5. எளிதாகவும் வந்து சேரும்வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

6. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?

நாய் கடியால் இறந்தவர்கள்,
டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை,
 புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால்
இறந்தவர்களிடம் இருந்து
கண்களை தானமாக பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:

1. ஒருவர் இறந்த 4 / 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.

2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.

3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.

4. கண்தானம் செய்ய 20 / 30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.

5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும்.
இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.

6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள்,
குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.

7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.


இந்தியாவில் 500 கண் வங்கிகள் உள்ளன.
15 லட்சம் பேர் கார்னியா எனப்படும் விழி வெண்படலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறால்,
பார்வைத் திறன் இல்லாமல் இருக்கிறார்கள்.

மாற்றுக் கண் பொருத்துவதன் மூலம் இவர்களுக்கு பார்வை தர முடியும்.

குறைந்தது ஆண்டிற்கு ஒரு லட்சம் கண்கள் தேவை.
நம்மிடம் மாற்றுக் கண் அறுவைச் சிகிச்சை செய்ய அந்தளவிற்கே டாக்டர்கள் இருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு மட்டும் 75 லட்சம் பேர் கண் தானம் செய்திருக்க முடியும்.
அவர்களிடமிருந்து 150 லட்சம் கண்கள் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், நடந்தது என்ன? 500 வங்கிகளும் சேர்த்து
40 ஆயிரம் கண்கள் மட்டுமே பெற முடிந்திருக்கிறது.

அதிலும் மற்றவர்களுக்கு பொருத்தக் கூடிய நிலையில் இருந்தது
வெறும் 15 ஆயிரம் கண்கள் மட்டுமே.

கண் வங்கியை தொடர்பு கொண்டு எத்தனை பேர் உறுதி மொழி எடுத்துக்கொள்கிறார்கள்
என்று கேட்டபோதும் அதிகபட்சம் 4 ஆயிரம் பேர் என்ற தகவலும் அதிர்ச்சியாகவே இருந்தது.

இலங்கை எத்தனை குட்டியான நாடு.
அங்கிருந்து ஆண்டிற்கு 50 ஆயிரம் கண்கள் ஏற்றுமதி செய்கிறார்கள்.

ஆனால், நம்மால் ஏன் முடியவில்லை
பழைய முறையையே பின்பற்றுவதைவிட இன்னும் எளிமையாக,
புதுமையாகச் செய்தால் நிறையப் பேர் கண் தானம் செய்யவும்
கண்களை பெற்றுத் தரவும் முன் வருவார்கள்

108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணை இதில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்துள்ளார்கள்.
இதன்படி, கண் தானம் செய்ய விரும்புபவர் 108-ஐ தொடர்புகொண்டால்,

அவர்கள் அருகிலுள்ள தனியார் அல்லது அரசு கண் வங்கிக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவார்கள்.
மருத்துவக் குழுவினர் வந்து கண்களை பெற்றுக்கொள்வார்கள்.

தவிர, கண் தானம் செய்ய விரும்புபவர்கள் EYE என்று டைப் செய்து

தங்கள் பெயர், ஊர் விவரங்களைச் சேர்த்து 99443 13131 என்ற எண்ணுக்கு
எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்,

மற்றவற்றை பார்த்துக் கொள்வார்கள்.
உடனடியாக கண் தானம் செய்யுங்கள்

உங்களை போல் உலகை
பார்வை இழந்த ஒருவரும்
கண்டு ரசிக்கட்டும்.

அன்புடன்
சு. சிவசுப்பிரமணியம்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்.
‘நீலகிரி


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக