என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி / இட்லி அரிசி - 3 கப்,
தேங்காய்த்துருவல் - 2 கப்,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க...
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் கிள்ளியது - 5,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
அரிசியை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்து, இட்லிக்கு அரைப்பது போல் நைசாக அரைக்கவும். அதோடு தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மாவை ஊற்றும் பதத்தில் வைத்துக் கொள்ளவும். பெரிய நான்-ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து பொன்னிறமாக வறுத்து, அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து அத்துடன் மாவுக் கலவையையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். மாவுக் கலவை பந்து மாதிரி வரும் வரை மிதமான தீயில் கிளறவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து 20 நிமிடம் ஆவியில் வேக விடவும். சட்னி, சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக