கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
உதகை அருகே சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே வீட்டில் பயன்படுத்தும் உப்பு மாதிரி சேகரிக்கப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய அயோடின் உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அரசு கடந்த 2005ம் ஆண்டு அனைத்து கடைகளிலும் அயோடின் கலந்த உப்பினை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனை கண்காணிக்கும் விதமாக தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் உப்பு மாதிரி எடுத்து அயோடின் அளவு பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. அயோடின் உப்பு குறித்து மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு அயோடின் சத்து மிகவும் அவசியமாகின்றது. அயோடின் பற்றாக்குறையால் மந்ததன்மை கண் பார்வை குறைபாடு ஊனத்தன்மை சிந்தனை வளம் குறைவு சுறுசுறுப்பு குறைவு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. மாணவர்களுக்கு ஒருநாளைக்கு சுமார் 120 முதல் 150 மைக்ரோ கிராம் அயோடின் சத்து அவசியமாகின்றது, இதனால் அறிவுதிறன் மேம்பட்டு நினைவாற்றல் அதிகரிக்கும். அயோடின் உப்பினை சிரிக்கும் சூரியன் படம் மற்றும் அயோடைஸ்ட் சால்ட் என்ற வாசகம் மூலம் உறுதிபடுத்திக்கொள்ளலாம். கடைகளுக்கு வெளியே வைத்திருக்கும் உப்பு, உடைந்த பாக்கெட் உப்புகள் வாங்ககூடாது. தரமான அயோடின் உப்பினை வாங்கி பயன்படுத்த வேண்டும். தரமற்ற உப்புகள் மற்றும் காலாவதி உப்புகள் விற்பனை செய்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் கொண்டு வந்த உப்பினை பரிசோதித்து காண்பிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் கொண்டு வந்த உப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை தமிழ்நாடு உபபோகிப்பாளர்கள் பாதுகாப்பு மையத்தின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக