அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழகத்தில், 1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள்

மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களை வெளியிட்டு, ஏழை மாணவர்களை குறிவைத்து, தமிழகத்தில், 1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் செயல்படுகின்றன. நான்கு வாரத்திற்குள் இவற்றை இழுத்து மூட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு, ஆறு மாதமாக மவுனமாக இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள், பள்ளிகள் அரசின் அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவும் செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லுாரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம்.
அங்கீகாரம்ஆனால், நர்சிங் கவுன்சில் அனுமதி பெறாமல், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றதாகவும், 'பாரத் சேவாக் சமாஜ்' அங்கீகாரம் பெற்றதாகவும், போலி விளம்பரங்களுடன், தமிழகத்தில், 1,800 நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருவது, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில், நர்சிங் உதவியாளர், கிராம செவிலியர், சுகாதார உதவியாளர் என, வெவ்வேறு பெயர்களில், 12 விதமான, மூன்று மாதம் முதல், இரண்டு ஆண்டுகள் வரையிலான படிப்புகள் நடத்தப்படுகின்றன. விவரம் தெரியாத ஏழை மாணவர்கள், 'குறைந்த கட்டணம்; பயிற்சியின் போதே சம்பளம்...' என்ற, போலி விளம்பரங்களை நம்பி ஏமாறுகின்றனர். படிப்பை முடிந்து, சான்றிதழை பதிவு செய்ய, நர்சிங் கவுன்சில் சென்றால், 'அனுமதி இல்லாத இடத்தில் படித்துள்ளீர்கள்; பதிவு செய்ய முடியாது' என, திருப்பி அனுப்பும்போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிகிறது.
இவர்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில் கூட வேலை கிடைக்காது.இத்தகைய, 'டுபாக்கூர்' மையங்களை தடுக்க, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி இன்றி, பாரத் சேவாக் சமாஜ் உள்ளிட்ட, பல பெயர்களில் இயங்கும் பயிற்சி மையங்கள் மீது, நான்கு வாரங்களுக்குள், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்து, ஆறு மாதமாகியும், இதுவரை, 'டுபாக்கூர்' மையங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏமாற்றம்:
இதுகுறித்து, நர்சிங் கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனுமதியில்லாத பள்ளிகள் குறித்து, அரசுக்கு அறிக்கை தந்து உள்ளோம். அரசின் அனுமதி கிடைத்ததும், விரைவில், 'டுபாக்கூர்' மையங்கள் மீதுநடவடிக்கைஎடுக்கப்படும்' என்றார்.நர்சிங் கல்லுாரிகள், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெருமளவு முடிந்துள்ள நிலையில், இடம் கிடைக்காத மாணவர்கள் விவரம் தெரியாமல், இதுபோன்ற, 'டுபாக்கூர்' பள்ளிகளில் சேர்ந்து, ஏமாற வாய்ப்புள்ளது.கர்நாடகாவில், இதுபோன்று செயல்பட்ட, 'டுபாக்கூர்' பயிற்சி பள்ளிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோர்ட் அனுமதி பெற்று, அதிரடியாக இழுத்து மூடப்பட்டன. தமிழக அரசு, இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, அப்பாவி ஏழை மாணவ, மாணவியர், இந்த கும்பலிடம் சிக்கி தவிக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.
ஏழை மாணவ, மாணவியரை ஏமாற்றும், 'டுபாக்கூர்' நர்சிங் நிறுவனங்களை மூட, அரசு தயக்கம் காட்டக்கூடாது. தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், மாவட்ட நிர்வாக உதவியுடன் இதை செய்யலாம்.
நன்றி தினமலர் நாளிதழ் 25,10,2015  http://www.dinamalar.com/news_detail.asp?id=1371352
http://epaper.dinamalar.com/index.aspx?EID=364&dt=20151025#

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் - மாதாந்திர அறிக்கை தகவல் அளிக்க கேட்டல்

பொருள்பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் -  மாதாந்திர
        அறிக்கை தகவல்  அளிக்க கேட்டல்சார்பாக.

அய்யா அவா;களுக்கு,
               வணக்கம்தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில்அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படுத்தி வரவேண்டும் எனஅறிவுறுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் பெயரளவில்துவங்கப்பட்டு இம்மன்றம் செயல்பட்டு வருகின்றது.

               பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மாதந்தோறும் மாணவர்களிடையே ஒவ்வொருதலைப்புகளில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படவேண்டும் எனவும் அரசு துறைகள் மற்றும் இதரநிறுவனங்களின் சேவைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்து  களப்பயணம்மேற்க்கொள்ள வேண்டும்.  இதுபோன்று நுகர்வோர் மன்றம் தங்கள் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும்வகையில் ஆவணப்படுத்த வேண்டியதும் அவசியம் ஆகும்.  அதிக அளவு கூட்டம் மற்றும் களபயணம்விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்ட பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்திற்கான பரிசுகள் மாவட்டஆட்சியரால் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

இதுபோன்று குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படும் பள்ளிகள்  குடிமக்கள் நுகர்வோர் மன்றம்துவங்குவதுகூட்டம் நடத்துவதுமாதாந்திர செயல்பாடுகள்மாணவா;களின் பங்களிப்பு களப்பயணம்இதரவிழிப்புணர்வு பணிகள் மேற்க்கொண்டது உள்ளிட்டவை குறித்து  புகைப்படம் மற்றும் தகவல்களைcchepnlg@gmail.com,  ccc.nilgiris@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் ஓருங்கிணைத்து அவற்றை மற்றவர்களுக்கு ​தெரியபடுத்தும்விதமாகவும்ஆவணப்படுத்தும் விதமாகவும் http://cccnlg.blogspot.in/ என்ற இணையம் தொடங்கப்பட்டுள்ளதுபள்ளிகள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் http://cccnlg.blogspot.in/ என்ற இனையத்தில் வெளியிடப்படும்.

இப்படிக்கு

சுசிவசுப்பிரமணியம் தலைவர்
உறுப்பினர் மின்வாரிய நுகர்வோர் குறை தீர் மன்றம்நீலகிரி.

cchep youtupe presentations

https://www.youtube.com/watch?v=Dc4zn6gmD58














https://www.youtube.com/watch?v=WJNyTu016YY

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 23 அக்டோபர், 2015

குடிமக்கள் நுகர்வோர் மன்றம் - மாதாந்திர அறிக்கை தகவல்

பொருள்பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் -  மாதாந்திர
        அறிக்கை தகவல்  அளிக்க கேட்டல்சார்பாக.

அய்யா அவா;களுக்கு,
               வணக்கம்தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில்அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படுத்தி வரவேண்டும் எனஅறிவுறுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் பெயரளவில்துவங்கப்பட்டு இம்மன்றம் செயல்பட்டு வருகின்றது.

               பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மாதந்தோறும் மாணவர்களிடையே ஒவ்வொருதலைப்புகளில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படவேண்டும் எனவும் அரசு துறைகள் மற்றும் இதரநிறுவனங்களின் சேவைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்து  களப்பயணம்மேற்க்கொள்ள வேண்டும்.  இதுபோன்று நுகர்வோர் மன்றம் தங்கள் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும்வகையில் ஆவணப்படுத்த வேண்டியதும் அவசியம் ஆகும்.  அதிக அளவு கூட்டம் மற்றும் களபயணம்விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்ட பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்திற்கான பரிசுகள் மாவட்டஆட்சியரால் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

இதுபோன்று குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படும் பள்ளிகள்  குடிமக்கள் நுகர்வோர் மன்றம்துவங்குவதுகூட்டம் நடத்துவதுமாதாந்திர செயல்பாடுகள்மாணவா;களின் பங்களிப்பு களப்பயணம்இதரவிழிப்புணர்வு பணிகள் மேற்க்கொண்டது உள்ளிட்டவை குறித்து  புகைப்படம் மற்றும் தகவல்களைcchepnlg@gmail.com,  ccc.nilgiris@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் ஓருங்கிணைத்து அவற்றை மற்றவர்களுக்கு ​தெரியபடுத்தும்விதமாகவும்ஆவணப்படுத்தும் விதமாகவும் http://cccnlg.blogspot.in/ என்ற இணையம் தொடங்கப்பட்டுள்ளதுபள்ளிகள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் http://cccnlg.blogspot.in/ என்ற இனையத்தில் வெளியிடப்படும்.

இப்படிக்கு

சுசிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
உறுப்பினர் மின்வாரிய நுகர்வோர் குறை தீர் மன்றம்நீலகிரி.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து சொந்த ஊர் வரும் பயணிகளின் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் மையம் வலியுறுத்தியுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவரும் நீலகிரி மாவட்ட மின் நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் உறுப்பினருமான சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களில் பலர் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு சமவெளி பகுதிகளில் தொழில்களுக்காகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பலர் படிப்புக்காகவும் சென்றுள்ளனர். இவர்கள் முக்கிய பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு வருகை புரிவார்கள். இதேபோல் சுற்றுலா பயணிகளும் விடுமுறையை கொண்டாட நீலகிரிக்கு வருவார்கள். மேலும் சிறுதொழில் புரிவோர், வியாபாரிகளும் பொருட்கள் விற்பனைக்காக அடிக்கடி நீலகிரிக்கு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக பண்டிகை சமயங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டியது அவசியமாகின்றது.
இந்நிலையில், விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் வெளியூர்களின் பணிபுரிபவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவு நீலகிரி மாவட்டத்திற்கு வரத் துவங்கி உள்ளனர். தற்போதே பேருந்துகளில் சாதாரண விடுமுறை நாளான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கின்றது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் சமவெளி பகுதிகளில் ஒடி தேய்ந்த பஸ்களாகும். இவைகள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன.  எனவே தற்போதே அனைத்து பேருந்துகளையும் அவற்றின் குறைகளை கண்டறிந்து விழா காலங்களில் அப்பேருந்துகள் சிறப்பான முறையில் இயக்கும் வகையில் தாயர் செய்து வைக்க வேண்டும்.  போக்குவரத்து கழகங்களில் மாற்று பேருந்துகள் கூடுதலாக இருப்பவற்றை தற்போதே தயார் செய்து வைத்தால் பயணிகள் கூட்டத்திற்கேற்பு சிறப்பு பேருந்தாக இயக்க முடியும்.
மேலும் தீபாவளி மற்றும் விழா காலங்களில் உள்ளூர் பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக இயக்குவதால் உள்ளூர் பயணிகள் மிகவும் பாதிக்கபடுகின்றனர்.  கிராமபுறங்களில் இயக்கப்பட்ட பல பேருந்துகள் தற்போது கோவை வரை வழித்தடம் நீட்டிக்கப்பட்டு இயக்கப்படுகின்றது,  இதனால் உள்ளூருக்குள் வந்துசெல்லும் பயணிகள் மிகவும் சிரம்மப் படுகின்றனர்.  விழா காலங்களிலும் இவை முறையான நேரத்தில் வந்து செல்வதில்லை. இவற்றை முறையானநேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
போதிய ஓட்டுனர் நடத்துனர் இல்லை என்ற நிலைக்கு விழா காலங்களில் மட்டும் தற்காலிக ஓட்டுனர் நடத்துனர்களை நியமிக்கலாம்.  அதுபோல மாற்று பேருந்துகளாக இயக்க கூடிய பேருந்துகளை சரிசெய்து கூடுதல் பேருந்தாக இயக்கலாம்.

எனவே வரும் தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் நலன் கருதி பழுது ஆகாத கூடுதல் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
Sify Home >> Movies >> Fullstory
போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி
16 JUNE , 2015, 11:51 சென்னை,
தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2003þ2004ம் ஆண்டிற்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜøலை, ஆகஸ்டு ஆகிய மாதத்தில் விண்ணப்பதாரரிடமிருந்து வரவேற்கப்பட்டு, கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்துடன் சேர்க்கை முடிவுற்று பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அரசு தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் அங்கீகாரம் பெறாத  பல ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரம் செய்து மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
அரசு அங்கீகாரம் பெறாத மேற்கண்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் எவரும் சேர வேண்டாம் எனவும், அவ்வாறு சேர்ந்து பயிலும் மாணவர்கள் அரசுத் தேர்வு எழுதவோ, சான்றிதழ் பெறவோ இயலாது எனவும் மாணவர்களும், பெற்றோர்களும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட எச்சரிக்கையை மீறி போலி விளம்பரங்களைக் கண்டு அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவ / மாணவிகள் சார்பாக அரசோ அல்லது துறையோ எந்தப் பொறுப்பும் ஏற்காது.
தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தவிர அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி நிறு வனங்களில் மாணவர்கள் சேர்ந்து ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

THANKS   தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்.

விலங்குகளிடம் அன்பாயிருத்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி

உதகை சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலங்குகளிடம் அன்பாயிருத்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.  சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம், நெஸ்ட் அறக்கட்டளை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பள்ளி தேசிய பசுமை படை ஆகியன சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லாதா தலைமை தாங்கினார்.  பள்ளியில் உள்ள மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஓவிய போட்டியில் பங்கேற்றனர்.  அதில் பலரும் சிறப்பாக ஓவியங்கள் வரைந்திருந்தனர்.  நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், பள்ளி தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முரளி, பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.  தொடர்ந்து தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் வழங்கப்பட்ட துணி பைகள் வழங்கப்பட்டது.  பள்ளி தலைமை ஆசிரியர் லதா துணி பைகளை வழங்கினார்.  இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டது.  பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.










மின் இணைப்பு

வீடு/வணிகம் மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள் 
வீடு அல்லது வணிக மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம்-1-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம் மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.
 விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.
தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தாக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5-இன் படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக் கடிதம் தர மறுத்துவிட்டால,சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர் தரவேண்டும்.மேலும் படிவம்-6-இன்படியான காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து,மேலும் இயல்பான காப்புவைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்க வேண்டும்.
மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான  சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்,
 பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 விண்ணப்பித்தனை பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மின் இணைப்புக்கான விண்ணப்பத்தினை பெறப்பட்டவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வு செய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை/மின்னளவி பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்து கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.
 எல்லா அடுக்கு மாடி கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைதளத்தில்தான் மின்னளவி, மின்கட்டை போன்றவைகள் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.
 மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவுப்பு/கடிதம் அனுப்பப்படும்,
 மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து கட்டணங்களும் பெறப்பட்ட பிறகே மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
 மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின்கம்பங்கள் நடுவதற்கு விட வேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
 தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து,அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்,
 மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின், உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
உயர் அழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
¨     உயர் அழுத்த மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம் - 4-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.
¨     விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.
¨     தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5 இன்படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக்கடிதம் தர மறுத்துவிட்டாலோ, சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர்தரவேண்டும். மேலும், படிவம்-6-இன் படி  காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக, உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து, மேலும் இயல்பான காப்பு வைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்கவேண்டும்.
¨      மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்.
¨      விண்ணப்பம் பதிவு செய்வதற்கு முன்பாக, மின் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை வாரியத்தின் உரிய அலுவலரால் ஒப்பளிப்பு பெற வேண்டும்.
¨      பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.
¨      விண்ணப்பத்தினை, பதிவு கட்டணம் மற்றும் காப்பு வைப்புக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
¨      மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவிப்பு/கடிதம் அனுப்பப்படும்.
¨      மின் இணைப்பு கொடுப்பதற்கான கட்டணங்களும் மற்றும் இசைவு பத்திரமும் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். உரிய காலக்கெடுவிற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் நுகர்வோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
¨      மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின் கம்பங்கள் நடுவதற்கு விடவேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான  வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
¨      தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் விலையின்றிக் கிடைக்கும் அச்சிட்ட சோதனைப் படிவத்தில்) தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து, அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, நுகர்வோர் பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்.
¨      மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின். உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
¨      மின் இணைப்புக்கோரும் மின் நுகர்வோர், தன்னுடைய இடத்தில் அமைக்கப்பட்ட உயர் அழுத்த கட்டமைப்புகளுக்கு அரசு தலைமை மின் ஆய்வாளரின் சான்றிதழ் பெற வேண்டும்.
¨      நோட்டீஸ் கொடுக்கப்பட்ட உரிய காலத்திற்குள் மின் இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

செய்யத்தக்கவை/செய்யத்தகாதவை

·      மின் இணைப்பு பெறுவதற்கு வழங்கப்படும் உரிய படிவங்களில் விண்ணப்பிக்கவும்.
·      விண்ணப்ப படிவங்களில் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும்.
·      மின்னினணப்பு கோரும் இடத்திற்கு சொந்தக்காரர் என்று நிருபிப்பதற்கு உரிய ஆவணங்கள்/பதிவேடுகள் கொடுக்கப்பட வேண்டும். வாடகைதாரராக இருக்கும் பட்சத்தில், அவ்விடத்திற்கு சட்டப்படி பொறுப்பேற்றுள்ளதற்கான சான்று கொடுக்கப்படவேண்டும்.
·      மின் கம்பி அமைப்பு பணியினை உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் கொண்டு மட்டுமே செய்யப்பட வேண்டும்.
·      இருப்பிடத்திற்கு மின் கம்பி அமைக்கும்போது சொந்தமான மின் கம்பிகள், மின்கம்பி இணைக்கருவிகள் தகுந்த திறன் மற்றும் நல்ல தரமுள்ளவையாக இருத்தல் வேண்டும்.
·      நல்ல நிலயிணைப்பு கொண்ட மும்முனை குழல் உறைகளில் மட்டுமே மின் உபகரணங்களை பொருத்த வேண்டும்.
·      மின்னிணைப்பு விண்ணப்பங்களை நேரடியாக இளநிலை/உதவி பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து தேதியிட்ட ஒப்புதல் பெற வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சல் மூலமும் அனுப்பலாம்.
·    காப்பீட்டுத் தொகை மற்றும் மின்னிணைப்பிற்குரிய கட்டணத் தொகைகளை விண்ணப்பங்கள் ரத்தாவதை தவிர்க்க நிர்ணயித்த தேதிக்குள் செலுத்த வேண்டும்.
·     எல்லா அடுக்கு மாடி கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைதளத்தில்தான் மின்னளவி, மின்கட்டை போன்றவைகள் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.
·    மின்னிணைப்பு கொடுக்கப்பட்ட உபயோகத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் (எ.க.) வீட்டு மின்னிணைப்பு வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
·     இருப்பிடத்தில் உள்ள வாரியத்தின் மின்னளவி மற்றும் உபகரணங்களைப் பாதுகாக்க வேண்டும்.
·     கட்டிடங்கள் கட்டும்போது இந்திய மின்சார விதிகள் 1956ன் படி உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பிகளிலிருந்து போதிய இடை வெளிவிட்டு கட்ட வேண்டும்.
·    மொத்த இணைப்புச்சுமை (Connected load )  4000 வாட் அளவிற்கு மிகும்போது ஒற்றை தறுவாயிலிருந்து (Single Phase) முத்தறுவாய் அமைப்பிற்கு (3 Phase) மாற்றப்பட வேண்டும்.
·     மின்விபத்துக்களை தவிர்க்க உரிய பாதுகாப்புகள் எடுக்க வேண்டும்.
·     பழுதுற்ற மின் பொருத்தங்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக மாற்ற வேண்டும்.
·     மின்னளவி சார்ந்த கட்டணங்கள் மற்றும் கூடுதல் காப்பீட்டுத் தொகை போன்றவைகளை உடனடியாக கட்டவும்.
·     நுகர்வோர் மின் அளவி வெள்ளை அட்டையை மின் அளவி பொருத்தியுள்ள இடத்தில் வைக்கவும். அது கணக்கீடு எடுக்க வரும் கணக்காளர் பதிவு செய்ய ஏதுவாக இருக்கும்.
·     கணக்காளர் பயனீட்டு அளவு கணக்கு எடுக்க வரும் போது நுகர்வோர் மின் அளவி வெள்ளை அட்டையில் செய்யும் பதிவே கேட்புக்கு நிகராகும். தனியாக பட்டியல் ஏதும் அனுப்பப்படமாட்டாது.
·     மின் கட்டணத்தை மாத முதல் தேதிகளில் கட்டவும். இவ்வாறு கட்டினால் இறுதி நேர நெரிசலை தவிர்க்கலாம்.
·     மின்னளவி அட்டையில் அச்சடிக்கப்பட்டுள்ள தகவல்களை படிக்கவும். 
·     நுகர்வோர் மின் அளவி வெள்ளை அட்டை மற்றும் பணம் செலுத்திய ரசீதை தங்களுடைய மின் இணைப்பிற்குரியதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
·     தங்களின் மின் இணைப்பு மின்கட்டணம் செலுத்த தவறியதற்காக மின் துண்டிப்பு செய்யப்பட்டால் மின் கட்டணத்துடன் துண்டித்து மீள இணைப்பதற்கான செலவினங்களையும் சேர்த்து செலுத்தி விட்டு பிரிவு அலுவலர்/கணக்கீட்டாய்வாளரிடம் தெரிவித்து மறு இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.
·     மின் அளவி பழுது அல்லது ஓடவில்லை என்பது கண்டறியப்பட்டால் புது மின் அளவி மாற்றித்தர பிரிவு அலுவலரிடம் எழுத்து மூலம் தகவல் தெரிவிக்கவும்.
·     மின் பாதை. மின் அளவி, மின் கட்டை அல்லது பிற மின் சாதனங்களை நிலைகுலைப்பு செய்யக்கூடாது.
·     உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளுக்கு அடியில் தகுந்த இடைவெளியில்லாமல் எந்த கட்டிடங்களும் கட்டக் கூடாது.
·    மின் அளவி அல்லது மின் அளவி பொருத்தும் பலகை உரிய வாரிய ஒப்பளிப்பின்றி இடமாற்றம் செய்யக்கூடாது.        மின் திருட்டை தவிர்க்கவும்.
·     மாடிப்படிக்கு அடியிலோ அல்லது கட்டிடத்திற்கு வெளியேயோ மின் அளவி பொருந்துவதற்கு இட ஓதுக்கீடு செய்வதை தவிர்க்கவும்.
·     உங்கள் வீட்டில் குடியிருப்போரிடம், வாரியம் அறிவித்த மின் கட்டணத்திற்கு அதிகமான தொகையினை வசூலிக்கக் கூடாது.
·     கணக்காளர் மின் பயனீட்டு அளவு கணக்கெடுக்க வரும் போது அவரிடம் மின் கட்டண தொகையினை கொடுக்க வேண்டாம்.
·     உயர் அழுத்த மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம் - 4-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும். 

நுகர்வோர் குறை தீர்வு


1. நுகர்வோர், தங்கள் குறைகளை தொலைபேசியின் மூலமாகவோ, நேராகவோ அல்லது கடிதம் மூலமாகவோ அந்தப் பகுதிக்குரிய உதவிப் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கொடுக்கலாம்.


2. மேலும் நுகர்வோர், அவர்கள் குறைகளை செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் அல்லது மண்டல தலைமைப் பொறியாளருக்கு கடிதம் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அல்லது தினமும் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரையில் நேரில் சந்திக்கலாம்.


3.மேற்பார்வை பொறியாளர்கள் மாதம் ஒரு முறை அந்தந்த பகுதிக்குரிய செயற் பொறியாளர் அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துகின்றனர். இந்த குறைதீர்ப்பு நாளின் தேதி முன் கூட்டியே பிரிவு/கோட் அலுவலக விளம்பரபலகையிலும் மற்றும் செய்தித் தாளிலும் அறிவிக்கப்படும். இவ்வசதியை நுகர்வோர் பயன்படுத்தி அவர்கள் குறைகளை நேரில்தீர்த்துக் கொள்ளலாம். மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம் - முறையீடு படிவம்

4. மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்புகள் செயல்பட்டு  வருகின்றன. நுகர்வோர்,   இந்த  அமைப்பினை தொடர்பு கொண்டு  தங்கள்  குறைகளை தீர்த்துக் கொள்ளலாம். நுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.

5. நுகர்வோர் தொண்டு நிறுவனங்களுக்குன்டான கூட்டம், அந்த பகுதிக்குரிய மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.