தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து சொந்த ஊர் வரும் பயணிகளின் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் மையம் வலியுறுத்தியுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவரும் நீலகிரி மாவட்ட மின் நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் உறுப்பினருமான சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களில் பலர் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு சமவெளி பகுதிகளில் தொழில்களுக்காகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பலர் படிப்புக்காகவும் சென்றுள்ளனர். இவர்கள் முக்கிய பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு வருகை புரிவார்கள். இதேபோல் சுற்றுலா பயணிகளும் விடுமுறையை கொண்டாட நீலகிரிக்கு வருவார்கள். மேலும் சிறுதொழில் புரிவோர், வியாபாரிகளும் பொருட்கள் விற்பனைக்காக அடிக்கடி நீலகிரிக்கு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக பண்டிகை சமயங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டியது அவசியமாகின்றது.
இந்நிலையில், விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் வெளியூர்களின் பணிபுரிபவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவு நீலகிரி மாவட்டத்திற்கு வரத் துவங்கி உள்ளனர். தற்போதே பேருந்துகளில் சாதாரண விடுமுறை நாளான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கின்றது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் சமவெளி பகுதிகளில் ஒடி தேய்ந்த பஸ்களாகும். இவைகள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. எனவே தற்போதே அனைத்து பேருந்துகளையும் அவற்றின் குறைகளை கண்டறிந்து விழா காலங்களில் அப்பேருந்துகள் சிறப்பான முறையில் இயக்கும் வகையில் தாயர் செய்து வைக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் மாற்று பேருந்துகள் கூடுதலாக இருப்பவற்றை தற்போதே தயார் செய்து வைத்தால் பயணிகள் கூட்டத்திற்கேற்பு சிறப்பு பேருந்தாக இயக்க முடியும்.
மேலும் தீபாவளி மற்றும் விழா காலங்களில் உள்ளூர் பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக இயக்குவதால் உள்ளூர் பயணிகள் மிகவும் பாதிக்கபடுகின்றனர். கிராமபுறங்களில் இயக்கப்பட்ட பல பேருந்துகள் தற்போது கோவை வரை வழித்தடம் நீட்டிக்கப்பட்டு இயக்கப்படுகின்றது, இதனால் உள்ளூருக்குள் வந்துசெல்லும் பயணிகள் மிகவும் சிரம்மப் படுகின்றனர். விழா காலங்களிலும் இவை முறையான நேரத்தில் வந்து செல்வதில்லை. இவற்றை முறையானநேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதிய ஓட்டுனர் நடத்துனர் இல்லை என்ற நிலைக்கு விழா காலங்களில் மட்டும் தற்காலிக ஓட்டுனர் நடத்துனர்களை நியமிக்கலாம். அதுபோல மாற்று பேருந்துகளாக இயக்க கூடிய பேருந்துகளை சரிசெய்து கூடுதல் பேருந்தாக இயக்கலாம்.
எனவே வரும் தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் நலன் கருதி பழுது ஆகாத கூடுதல் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக