உதகை, உதகை அருகே சாம்ராஜ் சிவசைலம் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் உலக உணவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு உணவும் ஊட்டச்சத்தும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாஙகினார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது உணவு பற்றாக்குறையால் இன்று உலகில் வாழும் பலர் நோய்வாய் பட்டு பாதிக்கப்படுகின்றனர். போதிய உணவு கிடைக்காமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான விட்டமின்கள், மினரல்கள், ஊட்டச்சத்துக்கள், தாது சத்துக்கள் போன்றவை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சாதாரண நோய்கள் தாக்கினாலும் அவற்றினால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே ஊட்டசத்து மிக்க உணவுகளை அதிகம் அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பேக்கரி மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகள் பல இடங்களில் தரமற்ற பாதுகாப்பற்ற முறையில் தாயரிக்கப்படுவது உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வின் மூலம் தெரியவருகின்றது. இவற்றை சாப்பிடுவதால் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. அக்மார்க், மற்றும் எப்பீஓ சான்று உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய உரிமம் ஆகியன பெற்றுள்ள பொருட்களை வாங்கி பயன்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.
நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலரும், குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளருமான சிவதாஸ் பேசும்போது, அசைவ உணவுகள் உருவாக்க பல்வேறு வனப்பகுதிகள் அழிக்கப் படுகின்றன. அவற்றில் குறுகிய கால வளர்ச்சி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இயற்கையாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானிய உணவுகள் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் நமக்கு அளித்தது. இயற்கையை நாம் அழித்து வருவதால் போதிய மழை இல்லாமல் உணவு உற்பத்தி பாதிக்கபடுகின்றது. சைவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் இதனால் அரிய பல மூலாதாரங்களை பாதுகாக்க முடியும். மாணவர்கள் மத்தியில் உள்ள நொறுக்கு தீனி வகைகள் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு மற்றும் இரசாயன சத்துக்கள் சேர்ந்து உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே இவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவி பிரியதர்சினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்,
முன்னதாக மாணவி ஆர்த்தி வரவேற்றார் முடிவில் மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.
https://youtu.be/ulHxMg5OMXA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக