பொருள்: பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் - மாதாந்திர
அறிக்கை தகவல் அளிக்க கேட்டல்; சார்பாக.
அய்யா அவா;களுக்கு,
வணக்கம், தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில்அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படுத்தி வரவேண்டும் எனஅறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் பெயரளவில்துவங்கப்பட்டு இம்மன்றம் செயல்பட்டு வருகின்றது.
பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மாதந்தோறும் மாணவர்களிடையே ஒவ்வொருதலைப்புகளில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படவேண்டும் எனவும் அரசு துறைகள் மற்றும் இதரநிறுவனங்களின் சேவைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்து களப்பயணம்மேற்க்கொள்ள வேண்டும். இதுபோன்று நுகர்வோர் மன்றம் தங்கள் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும்வகையில் ஆவணப்படுத்த வேண்டியதும் அவசியம் ஆகும். அதிக அளவு கூட்டம் மற்றும் களபயணம்விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்ட பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்திற்கான பரிசுகள் மாவட்டஆட்சியரால் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
இதுபோன்று குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படும் பள்ளிகள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்துவங்குவது, கூட்டம் நடத்துவது, மாதாந்திர செயல்பாடுகள், மாணவா;களின் பங்களிப்பு களப்பயணம். இதரவிழிப்புணர்வு பணிகள் மேற்க்கொண்டது உள்ளிட்டவை குறித்து புகைப்படம் மற்றும் தகவல்களைcchepnlg@gmail.com, ccc.nilgiris@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் ஓருங்கிணைத்து அவற்றை மற்றவர்களுக்கு தெரியபடுத்தும்விதமாகவும். ஆவணப்படுத்தும் விதமாகவும் http://cccnlg.blogspot.in/ என்ற இணையம் தொடங்கப்பட்டுள்ளதுபள்ளிகள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் http://cccnlg.blogspot.in/ என்ற இனையத்தில் வெளியிடப்படும்.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக