உலக உணவு தினத்தை முன்னிட்டு உதகை ஒய்.எம்.சி.ஏ மற்றும் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஆகியன சார்பாக உணவு திருவிழா ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒய்.எம்.சி.ஏ செயலர் எல் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் உணவு தினத்தின் சிறப்பினை குறிக்கும் வகையில் ஆவின் தயாரிப்புகள் மற்றும் சிறு தானிய வகைகள், கீரை, காய்கறிகள் கண்காட்சி நடத்தப்பட்டது.
ஆவின் தயாரிப்புகளும் பாலின் உற்பத்தி பொருட்கள் பயன்பாடுகள் குறித்து ஆவின் தர கட்டுபாட்டு அலுவலர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசும்போது பால் மற்றும் அதன்
மூலம் தயாரிக்கும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்க வல்லது. பாலில் இருந்து நெய், வென்னை, பால்பேடா, பண்ணீர், குளிர்பானங்கள், பாலாடைகட்டி,
ஐஸ்கிரிம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. இவை ஆவின் மூலம் மாடுகளில் இருந்து பெறப்படும் பாலில்
மட்டுமே உரிய முறையில் பதப்படுத்தி தயாரிக்கப்படுகின்றது. ஆவின் பால்இரசாயன தன்மை கிடையாது. பாலிலும், அதன் உற்பத்தி பொருட்களிலும் இருந்து
பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்த படுகின்றது. ஆயுர்வேதம், சி்த்தா வகை மருந்துகள் பாலுடன் இணைத்து
சாப்பிட மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.
மருந்து தயாரிக்க உதகை ஆவின் மூலம் மாதந்தோறும் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்கு
பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் அனுப்பபடுகின்றது என்பது குறிப்பிட தக்கது என்றார்.
உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜி. ஜனார்தனன் பேசுகையில் 130 கோடி மக்களின் உயிர்பாதுகாப்பு உணவை சார்ந்தே உள்ளது. இந்நிலையில் உணவு தர கட்டுபாட்டு விசயத்தில் அரசு சமரசம் செய்து கொள்ளகூடாது. உணவு பாதுகாப்பு தர கட்டுபாட்டு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்றி பாதுகாப்பான உணவு அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது ஊட்டசத்து உணவுகளை மறந்து தரமற்ற உணவுகளை நாடியதால் தற்போது உடல் நல குறைவுடன் உள்ளனர் தரமான சத்தான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும் என்றார்.
அன்னை சாராதா மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர் அம்பிகா பேசுகையில் உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்றார். நீலகிரி மாவட்டத்தில் அழிந்து வரும் ஆரஞ்சு பழங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜுபெட்டன் வலியுறுத்தினார்.
தொடர்ந்து மூலிகைகளின் மகத்துவம் குறித்து இந்து நகர் எச்.பி.எப் பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர். புலவர் த. சோலூர் கனேசன், புலவர் கமலம், கேத்தி நஞ்சன், சுந்தர பாண்டியன் ஆகியோர் உணவு பாதுகாப்பு தரமான உணவு ஊட்டச்சத்து உணவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
இந்து நகர் எச்.பி.எப் பள்ளி ஆசிரியர் இரா நாகராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக