கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்ஒரு நாளில் இவ்வளவு பொருளை கண்டறிந்து அழித்துள்ள உணவு பாதுகாப்பு துறையினருக்கு ந்னறியை செல்லலாம்
இவ்வளவு நாள் ஏமா்ந்து வாங்கி தின்ன நுகர்வோருக்கு என்ன செல்வது
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல்
பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
பந்தலூர் பஜாரில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினார்கள் இதில் பல கடைகளில் காலாவதி பிஸ்கட், வர்க்கி, குளிர்பாணங்கள் உள்ளிட்ட பலவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இதில் சில ஓட்டல்களில் ஆய்வு செய்யும்போது அவர்கள் சாயம் கலந்த தேயிலை தூளை பயன்படுத்தி அதன்மூலம் தேனீர் தயாரித்து விற்பதும் தெரியவந்தது. இந்த தோயிலை தூளை வினியோகிப்பவர்கள் எந்த தகவலும் அச்சிடாமல் உள்ள பாக்கெட்டுகளில் வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இவை எங்கு தயாரிக்கப்படுகின்றது என தெரியவில்லை. இதுபோன்று சாயம் கலந்து தூள்களை இனிவரும் காலங்களில் பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர். சில கடைகளில் சில உணவுப்பொருட்கள் பொட்டலமிடப்பட்டிருந்தில் உரிமம் பெறாமலே உரிமம் பெற்றதாக தவறான தகவல்களுடன் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதை அறிந்த சில வியாபாரிகள் தங்கள் கடைகளை பூட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதனால் அந்த கடைகளில் அதிக அளவு காலாவதி உணவுப்பொருட்கள் இருக்குமோ என பொதுமக்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மீண்டும் பந்தலூர் பஜார் பகுதியில் தீடிரென ஆய்வு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.https://www.youtube.com/watch?v=9-jzqygtNlA&feature=youtu.beஇதேபோல் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, எருமாடு, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, தேவாலா, உப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காலாவதி உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பாணங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த பகுதிகளிலும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் பழைய மீ்ன்கள் இரவு 10 மணி வரை மாநிலத்தின் எல்லை பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இவற்றையும் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக