கூடலூர்
நுகர்வோர்
மனித
வள
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தமிழக முதல்வர்
மற்றும் உணவுப்பொருள்
வழங்கல்
மற்றும்
நுகர்வோர்
பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2005ம்
ஆண்டு முதல் பல்வேறு அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டு நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களிடையே நுகர்வோர் கல்வி அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர இன்னும் பல பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவக்கி சிறப்புடன் செயல்படுத்த விரும்புகின்றன. ஆனால், பல பள்ளிகளில் தங்களின் சொந்த முயற்சியினால் கடந்த 8 ஆண்டுகளாக குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்கியும் அவர்களுக்கு இதுவரை நிதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பள்ளிகளின் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடுகள் கேள்வி குறியாக உள்ளது.
நுகர்வோர் விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த, உணவு பொருள்
வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கடந்த 2006-ம் ஆண்டில் தமிழகத்தில்
உள்ள பள்ளி, கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மன்றங்களின்
செயல்பாட்டுக்கும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது,
விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் 2006-2008-ம் ஆண்டுகளில்
தேர்வு செய்யப்பட்ட மன்றங்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2009-ல் உதவித் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து
ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டிலிருந்து அத் தொகையும் வழங்கப்படவில்லை.
இதனால் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உலக உணவு தினம், தர நிர்ணய தினம், நுகர்வோர்
பாதுகாப்பு தினம் உள்ளிட்ட பல்வேறு தினங்களிலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள்
வழங்க முடியவில்லை. நுகர்வோர் விழிப்புணர்வு பயணங்களை மாணவர்கள் மேற்கொள்ள முடியவில்லை
நுகர்வோர் கல்வி மக்களிடையே அதிகரிக்க பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் பெருமளவு உதவியுள்ளது. இது தொடர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். தற்போது இம்மன்றங்களில் உள்ள மாணவர்களுக்கு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்கள் கூட
வழங்க முடியாத நிலையில் சில பள்ளிகள் உள்ளன. இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பெயரளவு மட்டுமே உள்ளது.
பள்ளிகளில் செயல்படும் இதர
சார்பு அமைப்புக்களான என்எஸ்எஸ்., என்சிசி., தேசிய பசுமைப்படை, இளம் செஞ்சுலுவை சங்கம் போன்ற அமைப்புக்களுக்கு உரிய காலத்திற்குள் நிதி வழங்கப்படுகிறது. இதனால் இவைகள் சிறந்த முறையில் செயல்படுகின்றன. ஆனால் நுகர்வோர் மன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி கடந்த 5 ஆண்டுகளாக வந்து சேரவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய அரசிடம் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்திடம் நுகர்வோர்
விழிப்புணர்வு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் நுகர்வோர்
பாதுகாப்பு நிதி உள்ளதாக தகவல்கள் உள்ளன. அதை மாநில அரசு சார்பில் கேட்டுப் பெற வேண்டும்.
அவ்வாறு பெற்றால் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிரமங்கள்
இருக்காது.
இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுமக்களிடையே போய் சேருவது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. தொடர்ந்து நிதி வழங்கப்படாதபட்சத்தில் அடிப்படை செயல்பாடுகள் கூட இல்லாமல் நுகர்வோர் மன்றங்கள் முடங்கிவிடும். எனவே இதுநாள் வரை
சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு அரசு உடனடியாக நிதி வழங்கி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஊக்குவிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக