1.தேயிலை விற்பனையில் லாபம்; குடிப்பவருக்கோ சோகம் 'சாயம்' செய்யும் மாயம் அதிரடி நடவடிக்கையால் மட்டுமே தொடர் பிரச்னை தீரும்
உணவு கலப்பட தடை சட்டம் பாயுமா?:
கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை; நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளிலும், பல தேயிலை கடைகளிலும் கலப்பட தேயிலை தூள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை நேரடியாக தேயிலை தொழிற்சாலைகளில் கலப்படம் செய்யப்படுவதில்லை. மாறாக, பல சிறு, சிறு வணிகர்கள் மொத்தமாக தேயிலை தூளை வாங்கி அவற்றை மறைவான ஓரிடத்தில் கொண்டு வைத்து, சாயம், மரதூள் உட்பட பிறவற்றையும் கலந்து விற்பனை செய்கின்றனர். இது குடிசை தொழில் போல மாவட்டத்தில் பல இடங்களில் நடக்கிறது. பொதுமக்களும், டீக்கடைகளும் இவற்றிலுள்ள பாதிப்பை அறியாமல், அதிக நிறம் மற்றும் சுவை உள்ளதாக நம்பி வாங்கி ஏமாறுகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகள், டீக்கடைகள் திடீர் ஆய்வு செய்து, கலப்பட தேயிலைதூள் விற்பவர்கள் சப்ளை செய்பவர்கள் மீது உணவு கலப்பட தடைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
ஊட்டி: ஊட்டியில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக பெரும்பாலான டீ கடைகளில் சாயம் கலந்த தேயிலை தூள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் பல்வேறு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாங்கும் பொருட்களில் தேயிலைக்கு முதலிடம் உண்டு. இதனை தவிர, கற்பூர தைலம், வாசனை திரவியங்கள், பணப்பயிர்களான மிளகு, ஏலக்காய் உட்பட பிற பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். நீலகிரியில் விளைவிக்கப்படும் தேயிலை தூள் மூலம் 'ஸ்டிராங்' டீ கிடைக்கும் என்ற நம்பிக்கை சுற்றுலா பயணிகளிடையே மேலோங்கி உள்ளதால், ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் மூலமாக மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை விற்பனை செய்யப்படுகிறது. இவர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க பல தேயிலை தொழிற்சாலைகள் நல்ல தரமான தேயிலையை விற்பனை செய்து வந்தாலும், சில தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களும், இவர்களுடன் வியாபாரம் சம்பந்தம் வைத்துள்ள வியாபாரிகளும் நீலகிரி தேயிலையின் தரத்தை கெடுக்கும் வகையில், 'ஸ்டிராங்' டீயை உருவாக்க போலியான வழிகளை கையாண்டு வருகின்றனர். இதனால், தரம் குறைந்த தேயிலையை வாங்கி, சாயம் கலந்து அதிகவிலைக்கு விற்பதால் முறைகேடான வழிகளால் கோடீஸ்வர்களாக வலம் வருகின்றனர். கடந்த காலங்களில் பெரிய தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட தேயிலை லப்படம் மற்றும் சாயம் கலக்கும் முறை தேயிலை வாரியத்தின் கெடுபிடிகளால் சற்று கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த சமூக விரோத செயல் இன்றும் தொடர்கிறது. சிறு வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு இத்தகைய தேயிலை தூள் விற்பனை செய்வதால், இதனை வாங்கும் டீக்கடை உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அதேபோல, இத்தகைய டீக்கடைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்கள் சாயம் கலந்த தேயிலை குறித்த கேள்விகள் ஏதும் எழுப்பாத நிலையில், ஊட்டி, குன்னூரில் சாய டீ என்பது பழகிவிட்ட பானமாக மாறி விட்டது. இத்தகைய போலி சுவைக்கு வாடிக்கையாளர்களும் மாறி விட்டனர். ஈரோடு, பொள்ளாச்சி என பிற மாவட்டங்களில் உள்ள போலி தேயிலை தொழிற்சாலைகள், சாய கலப்பட குடோன்களை பிடித்து 'சீல்' வைக்கும் தேயிலை வாரிய அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் சாயதேயிலை முறைகேடுகளை தடுப்பதற்கு போதிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே மக்களின் கவலையாக உள்ளது. இத்தகைய மோசடி தொழிலில் சில ஆளும் கட்சியினரின் தலையீடு இருப்பதாலும், அவர்களுக்கு 'கவனிப்பு' செல்வதாலும் இந்த பிரச்னை தொடர்கதையாக வருகிறது.எனவே, நீலகிரி மாவட்டத்தின் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் நோயாளிகளாக மாற்றும் சாயம் கலந்த தேயிலை தூளை உருவாக்குபவர்களை கண்டறியவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகமும், தேயிலை வாரியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில், உள்ளூர் மக்களும், வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் நோயாளிகளாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது.உணவு கலப்பட தடை சட்டம் பாயுமா?:
கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை; நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளிலும், பல தேயிலை கடைகளிலும் கலப்பட தேயிலை தூள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை நேரடியாக தேயிலை தொழிற்சாலைகளில் கலப்படம் செய்யப்படுவதில்லை. மாறாக, பல சிறு, சிறு வணிகர்கள் மொத்தமாக தேயிலை தூளை வாங்கி அவற்றை மறைவான ஓரிடத்தில் கொண்டு வைத்து, சாயம், மரதூள் உட்பட பிறவற்றையும் கலந்து விற்பனை செய்கின்றனர். இது குடிசை தொழில் போல மாவட்டத்தில் பல இடங்களில் நடக்கிறது. பொதுமக்களும், டீக்கடைகளும் இவற்றிலுள்ள பாதிப்பை அறியாமல், அதிக நிறம் மற்றும் சுவை உள்ளதாக நம்பி வாங்கி ஏமாறுகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகள், டீக்கடைகள் திடீர் ஆய்வு செய்து, கலப்பட தேயிலைதூள் விற்பவர்கள் சப்ளை செய்பவர்கள் மீது உணவு கலப்பட தடைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கலப்பட தேயிலை தடுக்க கோரிக்கை
ஊட்டி, மார்ச் 24:
கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் தலைவர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்டத்தில் தேயிலை பிரதான தொழிலாகும். சிலர் தேயிலை தூளில் கலப்படம் செய்து விற்பது குறித்து அறிந்து அவ்வப்போது தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இன்றும் பல நிலைகளில் தேயிலை தூளில் கலப்படம் செய்வதை தடுக்க முடிவதில்லை.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூரிலுள்ள மளிகை கடைகளில் கலப்பட தேயிலை தூள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாக தொழிற்சாலைகளில் கலப்படம் செய்யாமல் இவற்றை மொத்தமாக வாங்கி சென்று பின்னர் சாயம், மரத்தூளை கலப்படம் செய்து விற்கின்றனர். கலப்பட தேயிலை தூள் தயாரிப்பை சிலர் குடிசை தொழிலாகவே செய்கின்றனர்.
கலப்பட தேயிலை தூள் கேரளா, கர்நாடகாவிற்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. தேயிலை வாரியம் தேயிலை தொழிற்சாலைகளில் மட்டும் கலப்பட தேயிலை தூள் குறித்து ஆய்வு செய்வதால் கலப்படம் தொடர்கிறது.
எனவே இதனை தவிர்த்து மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம் மற்றும் ஊரக நல சுகாதார துறை இணைந்து மாவட்டத்திலுள்ள அனை த்து மளிகை கடைகளில் சோதனை மேற்கொள்ள வேண்டும். இதனால் கலப்பட தேயிலை தூள் பெருமளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. கலப்படம் செய்பவர்கள் மீது உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
thanks to dinakaran 24-03-2010
நுகர்வோர்
- முகப்பு
- நுகர்வோர் சட்டம்
- environment
- awarness programme photos
- NEWS
- மக்கள் ஆலோசனை மையம்
- கண் தானம்
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- consumer links
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
- cchep nilgiris
- NEAC
- ► 2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
- ▼ 2011 (184) ▼ January ► December
அன்புடன் வரவேற்கின்றோம்
you are welcome to our web page
எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்
Please give your GOOD IDEAS FOR DEVELOPING THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPSகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
புதன், 24 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக