ஊட்டி, மார்ச் 17 2010:
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் & மக்கள் மையம் சார்பில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு ஊட்டி கலைமகள் கல்வி நிலையத்தில் சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமில், மாணவி மஞ்சுளா வரவேற்றார்.
முதல்வர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ்,
கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க துணைத் தலைவர் சந்திரசேகரன், ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தனன்
முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில்,
விழிப்புணர்வு இன்மையால் பல நிலைகளில் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகின்றனர். விளம்பரங்கள், போலி பொருட்கள் உற்பத்தி, தரமற்ற உற்பத்தி வகைகள் என பல நிலைகளில் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
இந்நிலை மாறி அனைத்து தரப்பினரும் விழிப்புடன் இருக்க வேண்டும். விளம்பரங்களை நம்பி பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவது, பண முதலீடுகள் செய்வது, சேவைகள் பெறுவதை தவிர்த்து அவை உண்மையான நிறுவனங்களா, பயன் தரக்கூடியவையா என ஆய்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்றார்.
இந்த முகாமில், மாணவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் அப்துல் நன்றி கூறினார்.
udhagai
Welcome sivasubramaniam ! |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக