கைகாட்டி வரை
கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ஊட்டி, மார்ச் 19:
கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,
போக்குவரத்து கழக கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:
ஊட்டி & கைகாட்டி வழியாக மஞ்சூர், கீழ்குந்தா, மஞ்சக்கொம்பை ஆகிய பகுதிகளுக்கும், காத்தாடி மட்டம், மீக்கேரி வழியாக எடக்காடு, தங்காடு பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் காணப்படும் அதிகப்பட்ச வளைவுகளை கருத்தில் கொண்டு சிறிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பஸ்கள் உரிய காலத்தில் இயக்கப்படுவதில்லை. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் குறித்த நேரத்திற்கு பஸ்கள் செல்வதில்லை. சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல பஸ்கள் செல்வதும், சில சமயங்களில் ஒரு மணிநேரம் இடைவெளியில் பஸ்களே வருவதில்லை.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் ஒரே பஸ்சில் பலரும் முண்டியடித்து கொண்டும் ஏறி செல்லும் நிலை காணப்படுகிறது. கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் அவதியுறுகின்றனர். கைகாட்டியில் இருந்து காலை 9 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும், ஊட்டியில் இருந்து கைகாட்டிக்கு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு 7.30 மணிக்கு ஊட்டியில் இருந்து கைகாட்டிக்கும், தற்போது 7.30 மணிக்கு ஊட்டியில் இருந்து மேல்குந்தாவிற்கு இயக்கப்பட்டு வரும் அரசு பஸ் இரவு 8 மணிக்கு இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் சிறு நீர் கழிக்க ரூ.1க்கு டெண்டர் எடுத்துள்ளனர். ஆனால் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. எனவே பலரும் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தை சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு நோய்களும் பரவி வருகிறது.
எனவே கட்டண கழிப்பிட தொகையை குறைக்க வேண்டும்.
நன்றி தினகரன் 19-03-2010
நன்றி தினகரன் 19-03-2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக