பந்தலூர் :
பந்தலூர் நெலாக்கோட்டையில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 185 பேர் பயனடைந்தனர்.
உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு,
கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,
மக்கள் மையம்,
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில்,
பந்தலூர் நெலாக்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணராஜா தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம்,
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, நெலாக்கோட்டை கண் பரிசோதகர் நாகூர் முன்னிலை வகித்தனர்
நெலாக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் எல்சி மைக்கேல் சிறப்பு அழைப்பாளராக, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்;
முகாமில் 185 பேர் பயனடைந்தனர். கண்புரை அறுவை சிகிச்சைக்கு, 18 பேர் அழைத்து செல்லப்பட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, நுகர்வோர் பாதுகாப்பு மையத் இணை செயலர் கணேசன், நிர்வாகி தனிஸ்லாஸ், மாணவர் சங்க முன்னாள் தலைவர் சிவக்குமார் செய்திருந்தனர்.
| ||||
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக