அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 4 ஏப்ரல், 2012

Hallmarking Of Gold and Silver





 




Hallmarking Of Gold and Silver

HALLMARKING OF GOLD IN INDIA
 
BIS SCHEME FOR HALLMARKING
BIS CERTIFICATION SCHEME FOR HALLMARKING OF GOLD JEWELLERY
FAQs ON HALLMARKING
LOOK FOR FOLLOWING MARKINGS ON GOLD JEWELLERY / ARTEFACT
FEEDBACK
SCHEME FOR GOLD / SILVER JEWELLERS 
 SCHEME FOR CERTIFICATION FOR GOLD
SCHEME FOR CERTIFICATION FOR SILVER
CERTIFICATION FEE SCHEDULE
HALLMARKING LICENCE FOR MULTICHAIN OUTLET
CORPORATE LICENCE FOR MULTICHAIN OUTLET
APPLICATION FORM
LIST OF LICENCEES FOR GOLD (Locate Hallmarked Jewellers in your City)
APPLICATION STATUS FOR GOLD
LIST OF LICENCEES FOR SILVER (Locate Hallmarked Jewellers in your City)
APPLICATION STATUS FOR SILVER
GOVT. SCHEME FOR SETTING UP OF GOLD ASSAYING & HALLMARKING CENTRES 
 
Expression of Interest for setting up of Gold Assaying & Hallmarking centres under the Central Assistance Scheme- Advertisement
Application form

Terms and Conditions 
SCHEME FOR ASSAYING & HALLMARKING CENTRES 
 CRITERIA FOR RECOGNITION OF ASSAYING AND HALLMARKING CENTRES  ( Assaying of Gold & Silver)
APPLICATION FORM ( FOR BIS RECOGNITION ) 
FEE SCHEDULE
LIST OF ASSAYING  & HALLMARKING CENTRES (WITH LINK FOR E MAIL)
APPLICATION STATUS
LIST OF MAJOR EQUIPMENTS
OTHER USEFUL LINKS
 MINISTRY OF CONSUMER AFFAIRS
HALLMARKING CONVENTION
WORLD GOLD COUNCIL
THE WORLD JEWELLARY CONFEDERATION
LONDON BULLION MARKET ASSOCIATION
THE GEM AND JEWELLERY EXPORT PROMOTION COUNCIL
INTERNATIONAL ORGANIZATION FOR STANDARDIZATION (ISO)
ALL INDIA GEMS & JEWELLERY TRADE FEDERATION
NATIONAL ACCREDIATION BOARD FOR TESTING ANDCALIBRATION LABORATORIES (NABL)


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

சமுதாய கலாசார நிகழ்ச்சி


பந்தலூர் பந்தலூரை அடுத்த ஐயங்கொல்லி கள்ளிக்காலில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சமுதாய கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கள்ளிக்கால் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சூர்யா மகளிர் சுயஉதவிக்குழு ஊக்குனர் ஓமனா தலைமை வகித்தார்.தாமரை சுயஉதவிக்குழு நிர்வாகி நாராயணி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.கூடலூர் நுகர் வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், சேரன் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் தங்கராஜா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
 சிறப்பு விருந்தினராக வேளாண்மை பொறியியல் துறை உதவி மண்வள பாதுகாப்பு அலுவலர் சுந்தரலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது: பெண்களிடம் நிறைய திறமைகள் ஒளிந்து கிடக்கிறது. அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வர இது போன்ற நிகழ்ச்சிகள் உதவுகிறது.
தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாகாமல் குடும்பத்தார், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதால் பல குடும்ப சண்டைகள் மற்றும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் எனக் கூறினார்.
DSC_0728.JPG
DSC_0734.JPG 
DSC_0742.JPG
DSC_0745.JPG
pdr news....2.JPG





நிகழ்ச்சியின் போது சென்னை சமுதாய கலாசார சேவை அமைப்பு சார்பில் சிறந்த சேவைக்காக விருது பெற்ற கிரேஸி மகளிர் சுயஉதவிக்கு ஊக்குனர் இந்திராணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  முடிவில் இந்திராணி நன்றி கூறினார்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 2 ஏப்ரல், 2012

வட்டார போக்குவரத்து துறையின் நுகர்வோர் ஆலோசனை கூட்டம்

நுகர்வோர் ஆலோசனை கூட்டம்

கருத்துகள்

ஊட்டி: வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் நுகர்வோர் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.  மாவட்டத்தில் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில், மலைமாவட்டத்தில் அனுமதிக்கப்படாத கனரக வாகனங்கள்அடிக்கடி இயக்கப்படுகின்றன. இவற்றை கண்காணிக்க வேண்டும். பல இரு சக்கர வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலும், இருசக்கர வாகன லைசென்ஸ் இல்லாமலும், ஆட்டோ ஒட்டுநர்கள் லைசென்ஸ் பெறாமலும் ஒட்டுகின்றனர்.
இதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாத கேரளா வாகனங்கள் சேரம்பாடி தாளூர் பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது.  
இவைகள் பெரும்பாலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதால் கண்காணிப்பு செய்ய வேண்டும். ஜீப், ஆட்டோ கட்டணங்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 30 மார்ச், 2012

உலக நுகர்வோர் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு

உலக நுகர்வோர் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு

கருத்துகள்

பந்தலூர்: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள்  மையம் ஆகியன இணைந்து உலகநுகர்வோர் விழிப்புணர்வு தினத்தையொட்டி சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. 
   நெல்லியாளம் நகராட்சி கணினி பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு மைய தலைவர்  சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:  

வியாழன், 22 மார்ச், 2012





   இயற்கை வளங்களை அழித்ததால் அனைத்தையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவு காரணமாக மாற்று வழிக்கு உற்பத்திக்கு முயலும் போது தரமற்ற பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துக்களை உட்கொள்ள கூடாது என்றார்.
தொடர்ந்து 
அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் காதர், 
பந்தலூர் நுகர் வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் விஜயசிங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நிர்வாகிகள் முருகன், இந்திராணி ஆகியோர் நுகர்வோர் உரிமைகள் குறித்து விளக்கி கூறினர். முன்னதாக கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி  தனிஷ்லாஸ் வரவேற்றார். முடிவில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய  நிர்வாகி  சிவக்குமார் நன்றி கூறினார்.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

செவ்வாய், 27 மார்ச், 2012




பந்தலூர் :  பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தமிழ்நாடு அறக்கட்டளை ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், உப்பட்டி பள்ளி வாசல் கமிட்டி ஆகியன , சார்பில், உப்பட்டி எம் எம் எஸ் மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது.
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
பள்ளி முதல்வர் கவிதா, நெல்லி யாளம்   நகர மன்ற உறுப்பினர் கள் மூர்த்தி, விஜயன், பள்ளி வாசல் கமிட்டி பொருளாளர் ஐமுட்டி, HADP பழனிசாமி  ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான  அமராவதி ராஜன் பேசும் போது ஏழை மக்கள் பயன் பெரும் விதமாக இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றது நாற்பது வயதிர்ற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக பாதிக்கும் கண் புரை நோய்க்கு கண் புரை அறுவை சிகிச்சை  மட்டுமே தீர்வாகும் எனவே இது போன்ற முகாம்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என்றார்

பின்னர் மருத்துவர் அமராவதி ராஜன்   தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர்

முகாமில் உப்பட்டி அத்திகுன்னா நெல்லி யாளம்   பொன்னானி பெருங்கரை சேலக்குன்ன உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த  120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  நிகழ்ச்சியில் , மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை களபணியளர்கள் முத்துராஜ் ஸ்ரீதர்   மாணவர்கள்  உட்பட பலர் பங்கேற்றனர்
கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் வரவேற்றார் முடிவில் மைய நிர்வாகி முருகன் நன்றி கூறினார்













கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 22 மார்ச், 2012



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

pandalur eye camp





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 18 மார்ச், 2012

குழந்தைகள் பிச்சையெடுப்பதை தடுக்க

பந்தலூர் :குழந்தைகள் பிச்சையெடுப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்ரமணியம், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

குழந்தை தொழிலாளர்கள் இருக்கக் கூடாது எனும் நோக்கில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், குழந்தைகள் கட்டாய கல்வி சட்டம் இயற்றப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர், பந்தலூர் உட்பட பகுதிகளில் பஸ் ஸ்டாண்ட்கள், மார்க்கெட், கோவில் வளாகங்களில் 6 -14 வயது வரையிலான குழந்தைகள் பிச்சையெடுத்து வருகின்றனர்.
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், இச்செயல் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத் தன்மைக்கும் காரணமாக உள்ளது.
எனவே, கல்வி பயிலும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர், சிறுமியரை மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து, அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 17 மார்ச், 2012

உலக நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரமணா பயிற்சி மையத்தில் நடந்தது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
உலக நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரமணா பயிற்சி மையத்தில் நடந்தது.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

ooty global warning programme

ooty global warning programme at OXFORD CONTINENTAL SCHOOL OOTY

on 24.02.2012
mr sasitharan talk about global warning  

mr szac zabawa  talk about global warning  

mr janardhanan  talk about global warning  

participant student with US volunteers  Myra and Shfiya 
school principal  Padmini suresh


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

63 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது

 பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மையம்
மக்கள் மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து 63  வது  இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு  தேசிய  கொடி ஏற்றப்பட்டது

நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மையம் தலைவர்   சிவசுப்ரமணியம்  தலைமை தங்கினார்
மகாத்மா காந்தி பொது சேவை    மைய  அமைப்பாளர் நௌசாத்  செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். 

வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கொடி ஏற்றி வைத்தார் 

 கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளர்  செல்வராஜ் வியாபாரிகள் சங்க நிர்வாகி செலவகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில்  நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை    மைய நிர்வாகிகள் செந்தாமரை   சுரேஷ்  ராம் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 






கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்