அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986


நாடாளுமன்றத்தில் பின்வரும் சட்டம் 24-12-1986 அன்று இந்திய குடியரசுத் தலைவரின் இசைவைப் பெற்று பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

1986ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.



சட்டம் எண் : 68/1986. (1986ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 24ஆம் நாள்).

நுகர்வோர் நலனை சிறந்த முறையில் பாதுகாக்கவும், அவ்வாறு செய்வதற்கு நுகர்வோர் தகராறுகள், அவை தொடர்பான ஏனைய அதிகார மன்றங்களையும் அமைக்க வகை செய்யும் திட்டம்.

இந்தியக் குடியரசின் 37ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் பின்வருமாறு சட்டம் இயற்றப் படுவதாகுக:-

அத்தியாயம் - 1

தோற்றுவாய்

(குறுந்தலைப் பரப்பு செயலுக்கு வரத் தொடங்குதல் பொருந்துதல்)

  1. (1) இச்சட்டம், 1986ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எனப் பெயர் பெறும்.
  2. இது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியா முழுவதும் பரந்திருக்கும்.
  3. இச்சட்டம், மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு அதன்மூலம் குறிப்பிடும் நாளன்றும் வெவ்வேறு மாநிலங்களுக்கும் இச்சட்டத்தின் வெவ்வேறு விதித்துறைகளுக்கும் குறிப்பிடக்கூடிய வெவ்வேறு நாட்களன்றும் செயலுக்கு வரும்.
  4. மத்திய அரசு, அறிவிக்கை மூலம் வெளிப்படையாக வகை செய்திருந்தாலன்றி மற்றப்படி இச் சட்டம் அனைத்துப் பொருட்களுக்கும் பணிகளுக்கும் பொருந்தும்.

2. பொருள் விளக்கம் :- (1) இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறு பொருள் குறித்தாலன்றி மற்றபடி,

(a) பொருத்தமான ஆய்வுக்கூடம் என்பது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக்கூடம் அல்லது அமைப்பு என்று பொருள்படும். இதில் பொருட்கள் குறைபாடுடையனவா, இல்லையா என்பதை நிர்ணயிக்கும் பொருட்டு பகுப்பாய்வு அல்லது சோதனை செய்வதற்காக மத்திய அரசால் அல்லது மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு, நிதியுதவி செய்யப்பட்டு அல்லது உதவியளிக்கப்பட்டு வருவதும், தற்போது செயலில் உள்ள சட்டத்தின் மூலம் அல்லது சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதுமான ஆய்வுக்கூடம் அல்லது அமைப்பு என்பதும் அடங்கும்.

(b) புகார் கொடுப்பவர் என்பது.

1. நுகர்வோர் அல்லது

2. 1986ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் கீழ் அல்லது (1/1956) தற்போது செயலில் உள்ள ஏனைய ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் தொண்டு சங்கம்; அல்லது

3. புகார் கொடுக்கும் மத்திய அரசு அல்லது எந்தவொரு மாநில அரசு.

(c) புகார் என்பது, புகார் கொடுப்பவர்.

1. வணிகர்கள் எவரேனும் பின்பற்றும் நியாயமற்ற வணிக நடைமுறையின் காரணமாக புகார் கொடுப்பவருக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டிருந்தால்,

2. புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகளை உடையனவாக இருந்தால்,

3. புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் எவ்விதத்திலும் குறைவுடையவையாக இருந்தால்,

4. தற்போது செயலில் உள்ள சட்டத்தின் மூலம் அல்லது அதன்படி நிர்ணயிக்கப்பட்ட விலை யைக் காட்டிலும் கூடுதலான விலையை புகாரில் குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கு வணிகர் ஒருவர் விதித்துள்ளார் அல்லது அப்பொருட்களின் மீது அல்லது அப்பொருட்கள் அடங்கிய சிப்பங்களின் மீது எழுதி வைத்துள்ளார் என்றால் இச்சட்டத்தின் மூலம் அல்லது அதன்படி வகை செய்துள்ள நிவாரணம் எதையேனும் பெறும் நோக்குடன் அது பற்றி எழுத்து மூலமாக செய்யும் குற்றச்சாட்டு என்று பொருள்படும்.

(d) நுகர்வோர் என்பது

1. தொகை செலுத்தி அல்லது தொகை செலுத்த உறுதியளித்து அல்லது ஒரு பகுதி தொகை செலுத்தி ஒரு பகுதி தொகை செலுத்துவதாக உறுதியளித்து அல்லது பின்னர் தொகை செலுத்தும் ஏதேனும் முறையின் கீழ் பொருட்கள் எவற்றையேனும் வாங்குகிற எவரேனும் ஒருவர் எனப் பொருள்படும். அத்தகைய நபரின் ஒப்புதலுடன் பயன்படுத்துகிற போது தொகை செலுத்தி அல்லது தொகை செலுத்து வதாக உறுதியளித்து அல்லது ஒரு பகுதி தொகை செலுத்தி அல்லது ஒரு பகுதி தொகை செலுத்துவதாக உறுதியளித்து அல்லது பின்னர் தொகை செலுத்தும் ஏதேனும் முறையின் கீழ் பொருட்களை வாங்குகிறவர் தவிர, அத்தகைய பொருட்களைப் பயன்படுத்தும் எவரேனும் ஒருவர் என்பதும் நுகர்வோர் என்பதில் அடங்கும். ஆனால் அத்தகைய பொருட்களை மறு விற்பனைக்காக அல்லது வணிகக் காரியம் ஏதே னும் ஒன்றிற்காக பெறுகிறவர் நுகர்வோர் என்பதில் சேரமாட்டார் அல்லது

2. தொகை செலுத்தி அல்லது தொகை செலுத்துவதாக உறுதியளித்து அல்லது ஒரு பகுதி தொகை செலுத்தி ஒரு பகுதி தொகை செலுத்துவதாக உறுதியளித்து அல்லது பின்னர் தொகை செலுதித் தும் முறையில கீழ் பணிகள் எவற்றையேனும் வாடகைக்கு அமர்த்திக் கொள்பவர் எனப் பொருள்படும். மேலும் முதலில் குறிப்பிட்டுள்ளவரின் ஒப்புதலுடன் அப்பணிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் போது தொகை செலுத்தி அல்லது தொகை செலுத்துவதாக உறுதியளித்து அல்லது ஒரு பகுதி தொகை செலுத்தி ஒரு பகுதி தொகை செலுத்துவதாக உறுதியளித்து அல்லது பின்னர் தொகை செலுத்தும் முறை ஏதேனும் ஒன்றின்கீழ் பணிகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறவரை தவிர அவற்றால் பயனடையும் எவரும் நுகர்வோர் என்பதில் அடங்கும்.

(e) நுகர்வோர் தகராறு என்பது, எவருக்கெதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவர் அப்புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதால், அல்லது எதிர்ப்பதால் எழும் தகராறு ஒன்று எனப்பொருள்படும்.

(f) குறை என்பது, தற்போது செயலில் உள்ள ஒரு சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறதோ அவ்வாறான தன்மையில்,அளவில், வீரியத்தில், பகுதியில் அல்லது நிலையில் காணப்படும் ஏதேனும் தவறு, குறை அல்லது குறைபாடு ஏதேனும் பொருட்கள் தொடர்பாக வணிகர் எம்முறையிலேனும் கோரியுள்ளவாறு எனப்பொருள்படும்.

(g) குறைபாடு என்பது தற்போது செயலில் உள்ள சட்டத்தின்படி அல்லதுஅதன்கீழ் நிர்வகித்து வரவேண்டிய அல்லது ஏதேனும் பணி தொடர்பாக ஒப்பந்தம் அல்லது ஏனையவகையில் ஒருவர் செய்வதாக உறுதியளித்துள்ள ஒரு செயலின் தரத்தில், தன்மையில், முறையில் காணப்படும் குற்றம், குறை, வறைபாடு அல்லது போதாமை எனப் பொருள்படும்.

(h) நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு என்பது நுகர்வோர் தகராறுகளை தீர்த்து வைப் பதற்காக 9ஆம் பிரிவின் (a) பகுதியின் கீழ் அமைக்கப்பட்ட அமைப்பு எனப்பொருள்படும்.

(i) பொருட்கள் என்பது, 1980ஆம் ஆண்டு பொருட்கள் விற்பனை சட்டத்தின் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளவாறான பொருட்கள் எனப்பொருள்படும்.

(j) தயாரிப்பாளர் என்பது,

1. எவையேனும் பொருட்களை அல்லது அவற்றின் பாகங்களை செய்கிறவர் அல்லது தயாரிக்கிறவர் அல்லது,

2. பொருட்கள் எவற்றையும் செய்யாமல் அல்லது தயாரிக்காமல் ஆனால், பிறர் செதிய்த அல்லது தயாரித்த பொருட்களின் பாகங்களை ஒன்று சேர்த்து தாமே தயாரித்த வேலை நிறைவு பெற்ற பொருளாக உரிமை கோருபவர் அல்லது

3. ஏனைய ஒரு தயாரி;ப்பாளர் செதிய்த அல்லது தயாரித்த எவையேனும் பொருட்கள் மீது தன்னுடைய வணிகக் குறியை இட்டு அல்லது இடச்செய்து, அப்பொருட்களை தாமே செதிய்த அல்லது தயாரித்த பொருட்களாக உரிமை கோருபவர் எனப் பொருள்படும்.

விளக்கம் : தயாரி;ப்பாளர் ஒருவர், அவர் நிர்வகித்து வரும் ஏதேனும் கிளை அலுவலகம் ஒன் றுக்கு பொருள்கள் எவற்றையேனும் அல்லது அவற்றின் பாகங்களை அனுப்பினால், அவ்வாறு அனுப்பப் பட்ட பொருட்களின் பாகங்கள் அக்கிளை அலுவலகத்தில் ஒன்று சேர்க்கப்பட்டாலும், அந்த அலுவல கத்திலிருந்து விற்பனை அல்லது விநியோகம் செய்யப்பட்டாலும் கூட அக்கிளை அலுவலகம் தயாரிப்பாளராகக் கருதப்படமாட்டாது.

(k) நுகர்வோர் குறைதீர் தேசியக் குழு என்பது 9ஆம் பிரிவின் (b) பகுதியின் படி அமைக்கப்பட்ட நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் தேசியக்குழு எனப்பொருள்படும்.

(l) அறிக்கை என்பது, அரசிதழில் வெளியிடப்படும் அறிவிக்கை என்று பொருள்படும்.

(m) நபர் என்பதில்,

1. நிறுவனம் ஒன்று (பதிவு செய்யப்பட்டிருந்தாலும் செய்யப்படாவிட்டாலும்),

2. பிரிவினை ஆகாத இந்து குடும்பம்

3. கூட்டுறவு சங்கம்

21/1860

4. பலர் இணைந்து ஏனைய ஒவ்வொரு அமைப்பு (1860ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பதிவு செய்யப்படாமலிருந்தாலும்) ஆகியவை அடங்கும்.

(n) வரையறுக்கப்பட்டது என்பது இச்சட்டத்தின் கீழ் மாநில அரசால் அல்லது மத்திய அரசால் இயற்றப்பட்ட விதிகளின்படி வரையறுக்கப்பட்டது எனப் பொருள்படும்.

(o) பணி என்பது பயன்படுத்த வாய்ப்புடையவர்களுக்கு கிடைக்கச் செய்யப்பெறும் எந்தவகையான பணியும் என்று பொருள்படும். இதில் வங்கியியல், நிதியுதவி, ஈட்டுறுதி, போக்கவரத்து செய்முறைப் படுத்துதல், மின்சக்தியை அல்லது ஏனைய சக்திகளை வழங்குதல், உணவகம் அல்லது தங்கும் வசதி அல்லது பொழுதுபோக்கு, கேளிக்கை அல்லது செய்திகள் அல்து ஏனைய தகவல் கிடைக்க ஏற்பாடு செய்தல் ஆகியவை தொடர்பான வசதிகளுக்கு வகை செய்வதும் அடங்கும். ஆனால், இலவசமாக அல்லது தான் பணிபுரிவதற்கு செய்யப்படும் ஒப்பந்தத்தின் கீழ் ஆற்றும் பணி இதில் அடங்காது.

(p) நுகர்வோர்; குறைதீர் குழு என்பது 9ஆம் பிரிவின் (b) பகுதியின் படி மாநிலத்தில் அமைக்கப்பட்ட நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் குழு என்று பொருள்படும்.

(q) பொருட்கள் எவையேனும் தொடர்பாக வணிகர் என்பது பொருட்களை விற்பவர் அல்லது விற்பனைக்காக பொருட்களை விநியோகிப்பவர் எனப்பொருள்படும். இதில் அப்பொருட்களைத் தயாரிப் பவரும் அடங்கும். அத்தகைய பொருட்கள் சிப்பம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் அல்லது விநியோகிக்கப்பட்டால் அவற்றை சிப்பம் செய்பவரும் வணிகர் என்பதில் அடங்கும்.

54/1959

(r) நியாயமற்ற வணிக நடவடிக்கை என்ற சொற்றொடர், 1969ஆம் ஆண்டு ஏகபோக வணிக உரிமை-கட்டுப்பாட்டு வணிக நடவடிக்கைகள் சட்டத்தின் 36v பிரிவில் குறிப்பிட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும். ஆனால், அச்சட்டத்தின் (iii) ஆம் அத்தியாயம், பாகம் v பொருந்துகிற நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் அல்லது அவர் சார்பில் செயல்படும் ஏனைய ஒருவர் அல்லது அநத் உரிமையாளரின் பயனுக்காக பின்பற்றப்படும் நியாயமற்ற வணிக நடவடிக்கை எதுவும் இதில் அடங்காது.

2. இச்சட்டம் பொருந்துகிற ஏதேனும் பகுதியில் செயலில் இல்லாத ஏனைய ஒரு சட்டம் அல்லது அதன் விதித்துறை தொடர்பாக இச்சட்டத்தில் கூறப்படும் குறிப்பு, அப்பகுதியில் செயலில் உள்ள நிகரான சட்டத்திற்கு அல்லது அதன் விதித்துறைக்கு உரிய குறிப்பாக பொருள் கொள்ளப்பட வேண்டும்.

(ஏனைய ஒரு சட்டத்திற்கு ஊறுவிளைவிக்காத சட்டம்)

(3) இச்சட்டத்தின் விதித்துறைகள், தற்போது செயலில் உள்ள ஏனைய ஒரு சட்டத்தின் நிதித ;துறைகளுக்குக் கூடுதலாகவும் அவற்றிற்கு ஊறுவிளைவிக்காதவையாகவும் இருக்கவேண்டும்.

அத்தியாயம் - 2

நுகர்வோர் நலன் பாதுகாப்புக் குழுக்கள்

(நுகர்வோர் நலன் பாதுகாப்பு மத்தியக் குழு)

4.(1) மத்திய அரசு நுகர்வோர் நலன் பாதுகாப்பு மத்தியக்குழு என்ற குழு ஒன்றை (இதன் பின்னர் இது மத்தியக் குழு என்று அழைக்கப்படும்) அறிவிக்கை வெளியிட்டு, அதில் குறிப்பிடக்கூடிய நாளிலிருந்து செயலுக்கு வரும் வண்ணம் ஏற்படுத்தலாம்.

(2) இந்த மத்தியக் குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்

(a) மத்திய அரசின் உணவு-நுகர்பொருள் வழங்கல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் இதன் தலைவராவார்.

(b) நுகர்வோர் நலனுக்குப் பிரதிநிதித்துவம் வகிக்கும் அரசு சார்புள்ள அல்லது அரசு சார்பற்ற நிர்ணயிக்கக்கூடிய எண்ணிக்கை உள்ள உறுப்பினர்கள்.

(மத்தியக் குழுவின் கூட்டங்கள் கூடுவதற்கான நடைமுறைகள்)

5. (1) மத்தியக் குழு அவசியம் ஏற்படும்போதெல்லாம் கூட்டங்களுக்குக் குறையாமல் நடத்தப் பட வேண்:டும்.

(2) மத்தியக்குழு, தலைவர் தகுதியெனக் கருதக்கூடிய நேரத்திலும், இடத்திலும் கூட்டம் நடத்தப்பட வேண்டும், அதன் அலுவலைப் பொறுத்தமட்டில் வரையறுக்கக்கூடிய நடைமுறையை அது பின்பற்ற வேண்டும்.

(மத்தியக் குழுவின் நோக்கங்கள்)

6.நுகர்வோரின் உரிமைகளை மேம்படுத்தி, பாதுகாப்பு மத்தியக் குழுவின் நோக்கங்களாகும். அந்த உரிமைகளாவன:-

(a) உயிருக்கும், உடமைக்கும் ஊறுவிளைவிக்கிற பொருட்களின் விற்பனைக்கு எதிராகப் பாதுகாக்க வேண்டிய உரிமை

(b) நியாயமற்ற வணிக நடவடிக்கையினின்றும் நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் பொருட்களின் தரம், அளவு, வீரியம், தூய்மை நிலை, விலை ஆகியவை குறித்துத் தெரிவிக்கும் உரிமை.

(c) இயன்ற இடங்களில் போட்டி அமைப்புகளில் உரியவாறு கவனிக்கப்படும் என்று கேட்டறிந்து உறுதிப்படுத்தும் உரிமை.

(d) நுகர்வோர் நலன்கள் பொருத்தமான அமைப்புகளில் உரியவாறு கவனிக்கப்படும் என்று கேட்டறிந்து உறுதிப்படும் உரிமை.

(e) நுகர்வோரை நியாயமற்ற வணிக நடவடிக்கையினின்று அல்லது தகாதவகையில் சுரண்டுவதிலிருந்து காப்பதற்குரிய நுகர்வோருக்கு அவர்களுக்குள்ள உரிமைகள் குறித்த வி\யங்களை எடுத்துரைத்தல்.

(நுகர்வோர் நலன் பாதுகாப்புகுழு)

7. (1)மாநில அரசு...............க்காக நுகர்வோர் நலன் பாதுகாப்பு மத்தியக்குழு என்ற ஒன்றை (இதன் பின்னர் இது மாநிலக்குழு என்று அழைக்கப்படும்) அறிக்கை வெளியிட்டு, அதில் குறிப்பிடக ;கூடிய நாளிலிருந்து செயலுக்கு வரும் வண்ணம் ஏற்படுத்தலாம்.

2. மாநில அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவிக்கையில் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் மாநிலக்குழுவில் இருப்பர்.

(மாநிலக்குழுவின் நோக்கங்கள்)

8.மாநிலத்திற்குள் 6ஆம் பிரிவின் (a) முதல் (f) வரையிலான பகுதிகளில் விதித்துள்ள நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்தி, பாதுகாப்பதே ஒவ்வொரு மாநிலக்குழுவின் நோக்கங்களாகும்.

அத்தியாயம் - 3

நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் அமைப்புகள்

(நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் அமைப்புகள் அமைத்தல்)

9.இச்சட்டத்தின் செயல் நோக்கத்திற்காக, பின்வரும் அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். அவையாவன:-

(a) மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் முன் ஒப்புதலுடன் அறிவிக்கை வெளியிட்டு அதன்மூலம் மாநில அரசால் அமைக்கப்படும் மாவட்ட அமைப்பு என்றழைக்கப்படும் நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் அமைப்பு.

(b) மாநிலத்தில் மத்திய அரசின் முன் ஒப்புதலுடன் அறிவிக்கை வெளியிட்டு, அதன் மூலம் அமைக்கப்படும் மாவட்ட அமைப்பு என்றழைக்கப்படும் நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் அமைப்பு.

(c) மத்திய அரசு, அறிவிக்கை வெளியிட்டு அதன் மூலம் அமைக்கும் நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் தேசியக்குழு.

(மாவட்ட அமைப்பில் உள்ளவர்கள்)

10. (1) ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலும் பின்வருவோர் இருப்பர்.

(a) மாநில அரசால் நியமனம் செய்யப்படும் மாவட்ட நீதிபதியாக இருக்கிற அல்லது இருந்து வருகிற அல்லது இருக்கத் தகுதியுடைய ஒருவர் அதன் தலைவராவார்;.

(b) கல்வி, வர்த்தகம் அல்லது வணிகத்துறையில் சிறந்து விளங்கும் ஒருவர்.

(c) r_f சேவகி ஒருவர்.

(2)மாவட்டஅமைப்பின் ஒவ்வோர் உறுப்பினரும் ஐந்து ஆண்டுக்காலம் 65 வயது வரையில் இவற்றில் எது முன;னதாக உள்ளதோ அதுவரையில் பதவி வகிப்பர். அவர் மறுநியமனத்திற்கு தகுதி யுடையவர் அல்லர்.

ஆனால் உறுப்பினர் ஒருவர் மாநில அரசுக்குத் தன் கைப்பட எழுத்து மூலமாக எழுதி அனுப்புவதன் மூலம் தன் பதவியை இரானாமா செய்யலாம். அவருடைய இரானாமா ஏற்றுக் கொள்ளப்படும் போது அவருடைய பதவியிடம் காலியாக இருக்கும். அப்பதவியை இரானாமா செய்துள்ள உறுப்பினரின் பதவித் தரம் தொடர்பாக (1) உட்பிரிவில் குறிப்பிட்டுள்ள தகுதிகளில் எவற்றையேனும் பெற்றுள்ள ஓருவரை நியமிப்பதன் மூலம் அப்பதவியிடம் நிரப்பப்படலாம்.

(3) மாவட்ட அமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்கத்தக்க சம்பளம் அல்லது மதிப்பூதியம், ஏனைய படிகள், அவற்றின் பணி குறித்த ஏனைய வரம்பு நிபந்தனைகள் ஆகியவை மாநில அரசு வரையறுக்கப்படக் கூடியவாறு இருக்க வேண்டும்.

(மாவட்ட அமைப்பில் அதிகார வரம்பு)

11. (1) இச்சட்டத்தின் ஏனைய விதித்துறைகளுக்கு உட்பட்டு பொருட்கள் அல்லது பணிகளின் மதிப்பு. இழப்பீடு ஏதேனும் கோரப்பட்டிருப்பின் அதன் மதிப்பு ௫ூபாய் ஒரு இலட்சத்திற்குக் குறைவாக உள்ள தேர்வில் செதிய்து கொள்ளப்படும் புகார்களை மாவட்ட அமைப்பு விசாரணை செய்வதற்கு அதிகார வரம்பு உடையதாகும்.

(2)(ய) புகார் செதிய்து கொள்ளும் சமயத்தில் எதிர்தரப்பினர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எதிர் தரப்பினர் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் உண்மையில், தாமாக வசித்து வருகிற அல்லது வணிகத்தை மேற்கொள்ளுகிற அல்லது ஆதாயத்திற்காகப் பணிபுரிகிற இடத்தின் மீது அல்லது,

(b) புகார் செதிய்து கொள்ளும் சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட எதிர் தரப்பினர் இருந்தால் அவர்களில் ஏதேனும் ஒரு தரப்பினர் உண்மையில் தாமாக வசித்து வருகிற அல்லது வணிகத்தை மேற்கொள்கிற இடத்தின் மீது அதிகார வரம்புடைய மாவட்ட அமைப்பிற்கு புகார் செதிய்து கொள்ள வேண்டும். ஆனால் அத்தகைய இனத்தில் மாவட்ட அமைப்பின் அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது எதிர்தரப்பினர் நேர்விற்கேற்ப மாவட்ட அமைப்பு அமைந்திருக்கும் இடத்தில் வசித்திராவிடில் அல்லது வணிகத்தை மேற்கொள்ளாதிருந்தால் அல்லது ஆதாயத்திற்காக பணிபுரியாதிருந்தால் அவர்கள் புகார் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இணங்க வேண்டும்.

(c) குற்றம் முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி நடைபெற்ற இடம் மாவட்ட அமைப்பின் அதிகார வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

(புகார் செதிய்து கொள்ளப்படும் முறை.)

12. விற்பனை செய்யப்பட்ட அல்லது ஒப்படை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது அளிக்கப்பட்ட பணி ஏதேனும் தொடர்பான புகார் ஒன்று.

(a) பொருட்கள் எந்த நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டதோ அல்லது ஒப்படை செய்யப் பட்டதோ அல்லது பணி அளிக்கப்பட்டதோ அந்த நுகர்வோரால்,

(b) பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட அல்லது ஒப்படை செய்யப்பட்ட அல்லது பணி அளிக்கப் பட்ட நுகர்வோர் ஏற்பவிக்கப்பட்ட நுகர்வோர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தாலும், இல்லாவிடினும் அத்தகைய ஏற்பளிக்கப்பட்ட நுகர்வோர் சங்கத்தால் அல்லது

(c) மத்திய அரசால் அல்லது மாநில அரசால் மாவட்ட அமைப்பிடம் தாக்கல் செய்யப்படலாம்.

விளக்கம் : இப்பிரிவின செயல் நோக்கத்திற்காக, அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் சங்கம் என்பது, 1956ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின்படி அல்லது தற்போது செயலில் உள்ள ஏனைய சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் தொண்டு சங்கம் எனப்பொருள்படும்.

(புகார் வருவதின் பேரில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்)

13. (1) புகார் வரப்பெறுவதன் பேரில் மாவட்ட அமைப்பு, அப்புகார பொருட்கள் எவையேனும் தொடர்புடையதாக இருந்தால்,

(a) அப்புகாரின் நகலை புகாரில் குறிப்பிட்டுள்ள எதிர் தரப்பினருக்கு 30 நாட்களுக்குள் அல்லது மாவட்ட அமைப்பு அனுமதிக்கக்கூடிய 15 நாட்களுக்கு மேற்படாத நீட்டிப்பு காலத்திற்குள் இப்புகார் குறித்து அவருடைய கருத்தைத் தெரிவிக்குமாறு உத்திரவிட்டு அனுப்ப வேண்டும்.

(b) எதிர் தரப்பினர் (b) பகுதியின்படி அனுப்பப்பட்ட புகார் வரப்பெற்றதன் பேரில் அப்புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தால் அல்லது அது குறித்த தகராறு எழுப்பினால் அல்லது அது மாவட்ட அமைப்பு கொடுத்துள்ள கால அளவிற்குள் தன் தரப்பு குறித்து முறையிட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை ஏதேனும் எடுக்காமல் விட்டுவிட்டால் அல்லது தவறினால், மாவட்ட அமைப்பு (c) முதல் (g) வரையிலான பகுதிகளில் குறிப்பிட்டுள்ள முறையில் நுகர்வோர் தகராரைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(c) புகாரில், பொருட்களில் குறை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்து முறையான பகுப்பாய்வு அல்லது சோதனை செய்யாமல் நிர்ணயிக்க முடியாவிட்டால், மாவட்ட அமைப்பு புகார் கொடுத்தவரி டமிருந்து பொருட்களின் மாதிரியைப் பெற்று, முத்திரையிட்டு வரையறுக்கப்பட்ட முறையில் அதனைப் பெற்றதற்கான அத்தாட்சியை அளித்துவிட்டு அவ்வாறு முத்திரையிடப்பட்ட மாதிரியை அப்பொருள் குறைபாடுடையதா என்பதைக் கண்டறியஸம் பொருட்டு எந்த பகுப்பாய்வை அல்லது சோதனையை மேற் கொள்ளவேண்டுமோ அதனை மேற்கொண்டு அந்த பகுப்பாய்வில் அல்லது சோதனையில் கண்டறிந்த முடிவுகளை அம்மாதிரி அனுப்பப்பட்ட நாளிலிருந்து 45 நாட்கள் கால அளவிற்குள் அல்லது மாவட்ட அமைப்பிற்குத் தெரிவிக்குமாறு உத்திரவிட்டு அதனை பொருத்தமான ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.

(d) (c) பகுதியின்படி மாவட்ட அமைப்பின் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்ட தொகையை (c) பகுதியில் குறிப்பிட்டுள்ள பகுப்பாய்வை அல்லது சோதனையைப் பொருத்தமான ஆய்வுக்கூடம் மேற் கொள்ள இயலும் வண்ணம் பொருத்தமான ஆய்வுக்கூடத்திற்கு மாவட்ட அமைப்பு செலுத்த வேண்டும். பொருத்தமான ஆய்வுக்கூடத்திடமிருந்து அறிக்கை வரப்பெற்றவுடன் மாவட்ட அமைப்பு தான் பொருத்த மானதெனக் கருதக்கூடிய குறிப்புகளுடன் அந்த அறிக்கையின் நகல் ஒன்றினை எதிர்தரப்பினருக்கு அனுப்ப வேண்டும்.

(f) பொருத்தமான ஆய்வுக்கூடத்தின் கண்டுபிடிப்புகள் சரியானவைதானா என்பது குறித்து அல்லது பொருத்தமான ஆய்வுக்கூடம் பின்பற்றிய பகுப்பாய்வு முறைகள் அல்லது சோதனைகள் சரியானவை தானா என்பது குறித்து ஏதாவது ஒரு தரப்பினர் தகராறு எழுப்பினால், பொருத்தமான ஆய்வுக்கூடத்தில் அறிக்கை குறித்த மறுப்புகளை எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யுமாறு நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு எதிர் தரப்பினரை அல்லது புகார் கொடுத்தவரைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

(g) பொருத்தமான ஆய்வுக்கூடம் கொடுத்துள்ள அறிக்கை சரியானது தானா அல்லது இல்லையா என்பது குறித்துத் தமது தரப்பை எடுத்துச் சொல்லவும் இது தொடர்பாக (f) பகுதியின் கீழ் கொடுத்துள்ள மறுப்புரைகள் குறித்துத் தமது தரப்பை எடுத்துச் சொல்லவும் புகார் கொடுத்தவருக்கும் எதிர்தரப்பினருக்கும் நியாயமான வாய்ப்புக் கொடுத்த பின்னர் நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு 14-ஆம் பிரிவின் கீழ் பொருத்தமான ஆணை பிறப்பிக்க வேண்டும்.

(2) நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு அதனிடம் 12ஆம் பிரிவின் கீழ் வந்துள்ள புகார் (1) உட்பிரிவின் கீழ் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க முடியதா பொருட்கள் தொடர்பானதாக இருப்பில் அல்லது புகார் ஏதாவதொரு பணி தொடர்பானதாக இருப்பின்.....

(a) அத்தகைய புகாரின் நகல் ஒன்றினை எதிர்தரப்பினருக்கு அனுப்பி, முப்பது நாட்களுக்குள் அல்லது நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு நீட்டித்துள்ள 15 நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்குள் அவரது தரப்பினைத் தெரிவிக்குமாறு கட்டளையிட வேண்டும்.

(b) எதிர்தரப்பினர் (a) பகுதியின் கீழ் அனுப்பப்பட்டள்ள புகாரின் நகல் அவருக்கு கிடைத்தவுடன் அப்புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தால் அல்லது அது குறித்து தகராறு எழுப்பினால் அல்லது நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு கொடுத்துள்ள கால அளவிற்குள் அவரது தரப்பினைத் தெரிவிக்காமல் விட்டு விட்டால் அல்லது நடவடிக்கை எடுக்கத் தவறினால், நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு நுகர்வோர் தகராறினுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் இறங்கலாம்.

1. புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்த்தரப்பினர் மறுக்கும் போது அல்லது அது குறித்து தகராறு எழுப்பும் போது புகார் கொடுத்தவரும், எதிர்த்தரப்பினரும் (அமைப்பின்) அதன் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள சான்றுகளின் அடிப்படையில் தீர்வு காணலாம். அல்லது,

2. நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு கொடுத்துள்ள கால அளவிற்குள் எதிர்மனுதாரர் அவரது தரப்பினை எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டால் அல்லது தவறினால் அதன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள சான்றுகளின் அடிப்படையில் தீர்வு காணலாம்.

3. இயற்கை நியதிக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற காரணங்காட்டி, (1), (2) ஆகிய உட்பிரிவுகளின் விதிமுறைகளும் இணங்க மேற்கொண்ட நடவடிக்கை எதனையும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் எதிர்;த்து வழக்கு தொடுக்க இயலாது.

(4) இப்பிரிவின் நோக்கத்திற்காக பின்வரும் விவகாரங்கள் குறித்த வழக்குகளை விசாரணை செய்யும் போது 1908ஆம் ஆண்டு உரிமையியல் வழக்கு நடைமுறை சட்டக் கோவையின் கீழ் உரிமையியல் நீதி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே அதிகாரங்கள் நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பிற்கும் உண்டு. அதாவது:-

1. எதிர்வாதியை அல்லது சாட்சியை ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்தல், ஆஜராகுமாறு செய்தல், உறுதிமொழியின் பேரில் சாட்சியை விசாரணை செய்தல்.

2. எந்த ஒரு ஆவணத்தையும் அல்லது சாட்சியமாகத் தாக்கல் செய்யத் தகுந்த எந்த ஒரு பொருளையும் கண்டுபிடித்தல், தாக்கல் செய்தல்.

3. உறுதிமொழி அளிப்பதின் பேரில் கொடுக்கப்படும் சாட்;சியத்தை ஏற்றுக் கொள்ளுதல்.

4. பொருத்தமான ஆய்வுக்கூடத்திலிருந்து அல்லது ஏனைய தொடர்புடைய ஆதார வாயிலிருந்து சம்பந்தப்பட்ட பகுப்பாய்வு அல்லது சோதனை குறித்த அறிக்கையினைத் தருமாறு கோருதல்.

5. எந்த ஒரு சாட்சியையும் விசாரிக்க ஆணை பிறப்பித்தல்.

(5)நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் இ.பி.கோவில் 193, 228-ஆம் பிரிவுகளின் விளக்கங்களுக்குட்பட்ட நீதிமன்ற நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும். 1973 ஆம் ஆண்டு இ.பி.கோ ஓஓஏஐ-ஆம் அத்தியாயம் 195-ஆம் பிரிவின் நோக்கத்திற்காக நுகர் வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு உரிமையியல் நீதிமன்றமாகக் கருதப்படவேண்டும்.

(நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பின் முடிவுகள்)

14.-1 13-ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்த பின்னர் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குறை பாடுகள், புகார் செய்யப்பட்டுள்ள பொருட்களில் உள்ளன என்று நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு ஐயமறத் தெளிந்தால் அல்லது ஆற்றிய பணிகள் குறித்து புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையென்று நி௫ூபிக்கப்பட்டால், இந்த அமைப்பு பின்வரும் ஒன்று அதற்கு மேற்பட்ட நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டு எதிர்தரப்பினருக்கு ஆணை பிறப்பிக்கலாம். அதாவது:-

(a) இங்கு சம்பந்தப்பட்டுள்ள பொருளில் காணப்படுவதாகப் பொருத்தமான ஆய்வுக்கூடம் சுட்டிக் காட்டியுள்ள குறைகளை அகற்றுமாறு:

(b) குறையுடைய பொருட்களுக்குப் பதிலாக குறை எதுவுமில்லாத அதே போன்ற தன்மையுடைய புதிய பொருட்களை வழங்குமாறு:

(c) புகார் கொடுத்தவருக்கு அதற்கான விலையை அல்லது புகார் கொடுத்தவர் செலுத்திய கட்ட ணத்தை திருப்பிக் கொடுக்குமாறு.

(d) எதிர் தரப்பினரின் கவனக்குறைவின் காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்பு அல்லது பாதிப்பை ஈடுசெய்ய வழங்குமாறு இந்த அமைப்பு கூறும் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு ஆணை பிறப்பிக்கலாம்.

(2) நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு (1) உட்பிரிவின் கீழ் பிறப்பிக்கும் ஒவ்வொரு ஆணையிலும் இந்த அமைப்பிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும். கருத்து வேறுபாடு ஏதேனுமிருப்பின் அந்த அமைப்பில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின், கருத்தே நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பின் ஆணையாகக் கருதப்பட வேண்டும்.

(3) மேற்குறிப்பிட்ட விதித்துறைகளுக்கு உட்பட்டு, நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பின் கூட்டங்களை நடத்துவது அதன் கூட்டத்தொடர், ஏனைய விவகாரங்கள் தொடர்பான நடைமுறை களை மாநில அரசு வரையறுக்கக்கூடியவாறு இருக்க வேண்டும்.

(மேல் முறையீடு)

15. நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பில் ஆணையால் பாதிக்கப்படும் எவரொருவரும் அதற் கென வகுக்கப்பட்ட படிவத்திலும், முறையிலும் அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அந்த ஆணைக்கு எதிராக மாநில ஆணைக்குழுவிடம் மேல்முறையீடு செதிய்து கொள்ளலாம்.

ஆனால் மேற்குறிப்பிட்டவாறான 30 நாட்களுக்குள் மேல் முறையீட்டினைத் தாக்கல் செய்யாததற்கு போதுமான காரணங்கள் உள்ளதென்று மாநில ஆணைக்குழு ஐயமறத்தெளிந்தால், மேற்குறிப்பிட்ட 30 நாட்கள் கால அளவு முடிவடைந்த பின்னரும் மேல்முறையீட்டினை மாநில ஆணைக்குழு ஏற்றுக் கொள்ளலாம்.

16(1) ஒவ்வொரு மாநில ஆணைக்குழுவில இடம்பெறுவோர் வருமாறு:

(மாநில ஆணைக்குழுவில் இடம் பெறுவோர்)

(a) உயர்;நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அல்லது நீதிபதியாக இருந்து வந்துள்ள ஒருவரை மாநில அரசு நியமிக்கும். அவர் இதன் தலைவராக இருப்பார்.

(b) வேறு இரு உறுப்பினர்கள் திறமை, நேர்மை, நன்நிலை உடையவராகவும், பொருளாதாரம், சட்டம். வணிகவியல், கணக்கியல், தொழில், பொது விவகாரங்கள் அல்லது நிர்வாகம் ஆகியவற்றில் ;போதுமான அறிவு அல்லது அனுபவம் உடையவராக அல்லது இது தொடர்பாகத் திறமையைக் காட் டியவராக இருக்க வேண்டும். இவர்களில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.

ஆனால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிப்பதற்கு முன்னர் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர் எவரையும் இந்த உட்பிரிவின் கீழ் உறுப்பினராக நியமிக்கக் கூடாது.

(2) மாநில ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம், மதிப்பூதியம், ஏனைய படிகள், பணிக்குறித்த வரம்பு நிபந்தனைகள் (பதவிக்காலம் உட்பட) மாநில அரசால் நிர்ணயிக்கப்படுகின்றவாறு இருக்க வேண்டும்.

(மாநில ஆணைக்குழுவின் அதிகார வரம்பு)

(a) பின்வருவனவற்றை இந்த ஆணைக்குழு பெற்றுக் கொள்ளலாம்.

1. எந்தப் பொருள்களின் அல்லது பணிகளின் மதிப்பும் இழப்பீடு ஏதேனும் கோரப்பட்டிருப்பின் அந்த இழப்பீடும் ஒரு இலட்சம் ௫ூபாய்க்கு அதிகமாக ஆனால் பத்து இலட்சம் ௫ூபாய்க்கும் குறை வாக உள்ளதோ அந்தப் பொருள்கள் அல்லது பணிகள்; தொடர்பான புகார்கள்.

2. இம்மாநிலத்திற்குள் அமைந்துள்ள நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்புகளின் ஆணைகளுக்கு எதிராகச் செதிய்து கொள்ளப்படும் மேல் முறையீடுகள்.

(b) நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு சட்டப்படி அதற்கு வழங்கப்படாத அதிகார வரம்பை பயன்படுத்தியது அல்லது இவ்வாறு வழங்கப்பட்ட அதிகார வரம்பைப் பயன்படுத்தத் தவறியது அல்லது அதன் அதிகார வரம்பைத் தவறாக பயன்படுத்தியுள்ளது அல்லது அதன் முக்கிய கடமையில் சட்டத்திற்கு புறம்பாக தன் அதிகாரத்தை செலுத்தியுள்ளது என்று மாநில ஆணைக்குழுவிற்குத் தோன்றினால், இம் மாநிலத்திற்குள் அமைந்துள்ள அந்நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பிடம் முடிவுறாமலுள்ள அல்லது தீர்ப்பு வழங்கிய நுகர்வோர் தகராறு தொடர்பான பதிவுருக்களைப் பெற்று அதன்மேல் ஆணை பிறப்பிக்கலாம்.

(மாநில ஆணைக்குழுவிற்குப் பொருந்தும் நடைமுறை)

18.புகார்கள் மீது நுகர்வேர் குறைதீர் மாவட்ட அமைப்பு தீர்வு காண்பதற்காக 12, 13, 14ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதித்துறைகள், அதன் கீழ் இயற்றப்பட்டுள்ள விதிகள் தேவையான அத்தகைய மாற்றங்களுடன் தகராறுகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்திற்காக மாநில ஆணைக்குழுவிற்கும் பொருந்தும்.

(மேல் முறையீடு)

19. மாநில ஆணைக்குழு 17ஆம் பிரிவின்(ய) பகுதியைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்ட பிறப்பித்த ஆணையால் பாதிக்கப்படும் எவரொருவரும் அதற்கென வகுக்கப் பட்டுள்ள படிவத்திலும் முறையிலும் அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 40 நாட்களுக்குள் தேசிய ஆணை குழுவிடம் மேல் முறையீடு செய்யலாம்.

ஆனால் மேற்குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் மேல் முறையீட்டினைத் தாக்கல் செய்யாததற்கு போதுமான காரணங்கள் உள்ளதென்று தேசிய ஆணைக்குழு ஐயமறத் தெரிந்தால் மேற்குறிப்பிட்ட 30 நாட்கள் கால அளவு முடிவடைந்த பின்னரும் மேல் முறையீட்டினை தேசிய ஆணைக்குழு ஏற்றுக் கொள்ளலாம்.

(தேசிய ஆணைக்குழுவில் இடம் பெறுவோர்)

20. 1. தேசிய ஆணைக்குழுவிடம் இடம் பெறுவோர் வருமாறு :-

(a) உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அல்லது நீதிபதியாக இருந்து வந்துள்ள ஒருவரை மத்திய அரசு நியமிக்கும். அவர் இதன் தலைவராக இருப்பார்.

(b) வேறு நான்கு உறுப்பினர்கள் திறமை, நேர்மை, நன்நிலை உடையவராகவும், பொருளாதாரம், சட்டம், வணிகவியல், கணக்கியல், தொழில், பொது விவகாரங்கள் அல்லது நிர்வாகம் ஆகியவற்றில் போதுமான அறிவு அல்லது அனுபவம் உடையவராக அல்லது இது தொடர்பாகத் திறமையைக் காட் டியவராக இருக்க வேண்டும். இவர்களில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.

ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிப்பதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர் எவரையும் உறுப்பினராக நியமிக்கக் கூடாது.

(2) தேசிய ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம், மதிப்பூதியம், ஏனையப்படிகள், பணிவரம்பு நிபந்தனைகள் (பதவிக்காலம் உட்பட) மத்திய அரசால் நிர்ணயிக்கப் படுகின்றவாறு இருக்க வேண்டும்.

(தேசிய ஆணைக்குழுவின் அதிகார வரம்பு)

21. இச்சட்டத்தின் ஏனைய விதித்துறைகளுக்கு உட்பட்டு தேசிய ஆணைக்குழுவின் அதிகார வரம்பு பின்வருமாறு அமைந்திருக்கும்.

(a) பின்வருவனவற்றை இந்த ஆணைக்குழு பெற்றுக் கொள்ளலாம்.

1. 10 இலட்சம் ௫பாய்க்கு அதிகமாக இழப்பீட்டுத் தொகை கோரும் பொருட்கள் அல்லது ஆற்றிய பணிகள் குறித்த புகார்கள்.

2. எந்த ஒரு மாநில ஆணைக்குழுவின் ஆணைகளுக்கு எதிராகச் செய்து கொள்ளப்படும் மேல் முறையீடுகள்.

(b) மாநில ஆணைக்குழு சட்டப்படி அதற்கு வழங்கப்படாத அதிகார வரம்பைப் பயன்படுத்தியது அல்லது இவ்வாறு வழங்கப்பட்ட அதிகார வரம்பைப் பயன்படுத்தத் தவறியது அல்லது அதன் அதிகார வரம்பெல்லையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது அல்லது அதன் முக்கிய கடமையில் சட்டத்திற்கு புறம்பாகத் தன் அதிகாரத்தை செலுத்தியுள்ளது என்று தேசிய ஆணைக்குழுவிற்குத் தோன்றியதால், மாநில ஆணைக்குழுவிடம் முடிவுறாமலுள்ள அல்லது தீர்வு வழங்கிய நுகர்வோர் தகராறு தொடர்பான பதிவுருக்களைப் பெற்று அதன்மேல் ஆணை பிறப்பிக்கலாம்.

(தேசிய ஆணைக்குழுவிற்குப் பொருந்தும் நடைமுறை)

22. தேசிய ஆணைக்குழு புகார்கள் அல்லது எந்த ஒரு நடவடிக்கையின் மீது தீர்வு காண்பதற்காக, 13ஆம் பிரிவின் (4), (5) உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்கள், தேசிய ஆணைக்குழுவிற்குப் பொருந்தும். இந்த ஆணைக்குழு மத்திய அரசு வரையறுக் கும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

(மேல் முறையீடு)

23. தேசிய ஆணைக்குழு, 21ம் பிரிவின் (a) பகுதியைச் சார்ந்த (1) துணைப் பகுதியின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு பிறப்பித்த ஆணையால் பாதிக்கப்டும் எவரொருவரும் அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அந்த ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செதிய்து கொள்ளலாம்.

ஆனால் மேற்குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் மேல் முறையீட்டினைத் தாக்கல் செய்யாததற்கு போதுமான காரணங்கள் உள்ளதென்று உச்சநீதிமன்றம் ஐயமறத் தெரிந்தால், மேற்குறிப்பிட்ட 30 நாட்கள் என்ற கால அளவு முடிவடைந்த பின்னரும் மேல்முறையீட்டினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளலாம்.

24. நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு, மாநில ஆணைக்குழு அல்லது தேசிய ஆணைக் குழு பிறப்பிக்கும் ஆணைகள் ஒவ்வொன்றும் அவற்றுக்கெதிராக மேல் முறையீடு இச்சட்டத்தின் விதித் துறைகளின் கீழ் செய்யப்படாவிட்டால் அவையே இறுதியானவையாகும்.

(நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு. மாநில ஆணைக்குழு அல்லது தேசிய ஆணைக்குழு ஆணைகளைச் செயல்படுத்துதல்)

25.நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு, மாநில ஆணைக்குழு அல்லது தேசிய ஆணைக் குழு பிறப்பிக்கும் ஒவ்வொரு ஆணையும், நீதிமன்றத்தில் முன்வந்துள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் தீர்ப் பாணை அல்லது ஆணையைப் போன்று கருதப்பட்டு அந்தந்த இனத்திற்கேற்ப நுகர்வோர் குறைதீர் மாவட்டஅமைப்பு, மாநில ஆணைக்குழு, தேசிய ஆணைக்குழு ஆகியவற்றால் அவை செயல்படுத்தப் படவேண்டும். இந்த ஆணையை செயல்படுத்த இயலவில்லையெனில். அந்த ஆணையை அதன் உள்ளூர் அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றத்திற்கு நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு மாநில ஆணைக்குழு, தேசிய ஆணைக்குழு எடுத்துச் செல்வது சட்டப்பூர்வமானதாகும். இவ்வாறு கொண்டு செல்லத்தக்க இனங்களாவன:

ஒரு நிறுவனத்துக்கு எதிரான ஆணையின் நேர்வில் அந்நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலு வலகம் எந்நீதிமன்றத்தினை அதிகார வரம்பெல்லைக்குள் அமைந்துள்ளதோ அந்நீதிமன்றத்தில் அல்லது ஒரு நபருக்கு எதிரான ஆணையின் நேர்வில் அந்நபர் தானாகவே முன்வந்து வசிக்கும் அல்லது வணி கத்தை நடத்தும் அல்லது ஆதாயத்திற்காக தனிப்பட்;ட முறையில் பணியாற்றும் இடம் எந்நீதிமன்றத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் அமைந்துள்ளதோ அந்நீதிமன்றத்தில், அதன் பேரில் இவ்வாறு ஆணை அனுப்பப்பட்ட நீதிமன்றம் அதனை நிறைவேற்றுவதற்காக அதற்கு அனுப்பப்பட்ட தீர்ப்பினை அல்லது ஆணையாகக் கருதி அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டும்.

(முக்கியமற்ற அல்லது தொந்தரவு தரும் புகார்களைத் தள்ளுபடி செய்தல்)

26. கொடுக்கப்பட்ட புகார் முக்கியமற்றது அல்லது தொந்தரவு தரக்கூடியதென்று தெரிய வந்தால் அந்தந்த இனத்திற்கேற்ப நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு, மாநில ஆணைக்குழு, தேசிய ஆணைக்குழு அப்புகார்களைத் தள்ளுபடி செய்யலாம்.

(அபராதங்கள்)

27. புகாருக்கு உள்ளான வணிகர் அல்லது தனியொருவர் நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு. மாநில ஆணைக்குழு, தேசிய ஆணைக்குழு பிறப்பித்துள்ள ஆணைக்கு இணங்க நடக்கத் தவறினால் அல்லது நிறைவேறாமல் விட்டுவிட்டால் அந்தந்த இனத்திற்கு ஏற்ப அந்த வணிகர் அல்லது தனி யொருவர் ஒரு திங்கள் கால அளவிற்கு குறையாத ஆனால் மூன்றாண்டுகள் வரையில் சிறைத் தண்டனை அல்லது இரண்டாயிரம் ௫ூபாய்க்குக் குறையாமல் ஆனால் பத்தாயிரம் ௫ூபாய் வரை அபராதம் அல்லது இந்த இருவகை தண்டனையும் சேர்த்து அனுபவிக்குமாறு தண்டிக்கப்படத் தக்கவராவார்.

ஆனால் மேற்குறிப்பிட்டவாறன்றி மற்றபடி, அந்தந்த இனத்திற்கேற்ப நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு, மாநில ஆணைக்குழு அல்லது தேசிய ஆணைக்குழு எந்தவோர் இனத்திலும் இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்த கால அளவு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விருவகைத் தண்டனையையும் விதிக்கும் அளவிற்குச் சூழ்நிலைகள் உள்ளன என்று ஐயமறத் தெரிந்தால் அவ்வாறு விதிக்கலாம்.

அத்தியாயம் - 4

பல்வகை

(நல்லெண்ணத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் செயலுக்கும் பாதுகாப்பு)

28. நுகர்வோர் குறைதீர் மாவட்ட அமைப்பு, மாநில ஆணைக்குழு அல்லது தேசிய ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் அல்லது நுகர்வோர் குறைதீர் மாவட்ட ஆணைக்குழு அல்லது மாநில ஆணைக் குழு அல்லது தேசிய ஆணைக் குழுவின் கட்டளையின் பேரில் அது பிறப்பித்த ஆணைகளைச் செயல் படுத்தும் அதிகாரிகள் அல்லது நபர்கள் அல்லது நல்ணெண்ணத்தின் பேரில் இதன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி மேற்கொண்ட அல்லது மேற்கொள்ளக் கருதியுள்ள நடவடிக்கைகளை எதிர்த்து எந்த ஒரு வியா{யம் வழக்கு அல்லது ஏனைய சட்ட நடவடிக்கைகள் எதனையும் தொடரக்கூடாது.

(இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்)

29. (1) இச்சட்டத்தின் விதித்துறைகளைச் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு எதுவும் எழுமாயின் அந்த இடர்ப்பாட்டினை நீக்குவதற்காக தேவையென்று அல்லது ஏற்றதென்று மத்திய அரசுக்கு தோன்றக் கூடியவையும் இச்சட்டத்தின் விதித்துறைகளுக்கு முரணாக இல்லாதவையுமான விதித்துறைகளை அரசிதழில் ஆணை வெளியிடுவதன் மூலம் இயற்றலாம்.

ஆனால், இந்த சட்டம் செயலுக்கு வந்த நாளிலிருந்து இரண்டாண்டு காலம் கழித்து இத்தகைய ஆணைகள் எவையும் பிறப்பிக்கக் கூடாது.

(2) இப்பிரிவின் கீழ் வெளியிடப்படும் ஆணைகள் அவை வெளியிடப்பட்ட பின்னர் இயன்ற வரையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட வேண்டும்.

சட்டமன்றப் பேரவையில் வைக்கப்பட்டது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. (ஆகஸ்டு 10,1988 தேதியிட்ட தமிழ்நாடு அரசுப் பதிவிதழ் பாகம் III பகுதி I (ய)யில் வெளி யானது. அரசாணை எண் 879, உணவு - நுகர்வோர் பாதுகாப்புத் துறை நாள் : 30-6-1988)

மாவட்ட மன்றம் அமையும் இடமும் அம்மன்றம் தொடர்பான ஏனைய விவரங்களும்:-

புகார் கொடுப்பவரின் குற்றச்சாட்டை எதிர் தரப்பினர் ஒப்புக் கொள்வார்களேயானால், மாவட்ட மன்றம் அந்தப் புகாரைத் தகுதி அடிப்படையிலும் அம்மன்றத்தின் முன்னர் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களைக் கொண்டும் முடிவு செய்யலாம்.

13ஆம் பிரிவின் கீழ் விசாரணை நடைபெறும் போது, மாவட்ட மன்றம் இருதரப்பினரையும் விசாரிப்பதற்கான நாளை நிர்ணயிக்கிறது. அந்நாளன்று அல்லது விசாரணை தள்ளி வைக்கப்படும் வேறோர் நாளில் மாவட்ட மன்றத்தின் முன் ஆஜராவது, புகார் கொடுத்தவர், எதிர் தரப்பினர் அல்லது அவர்களின் அங்கீகாரம் பெற்ற முகவர் ஆகியோரின் கட்டுப்பாடாகும். புகார் கொடுத்தவர் அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் அத்தகைய நாளில் மாவட்ட மன்றத்தின் முன் ஆஜராக தவறினால், மாவட்ட மன்றம், அதன் விருப்புரிமையை முடிவு செய்யலாம். எதிர்தரப்பினர் அல்லது அவர்களின் அங்கீகாரம் பெற்ற முகவர் விசாரணை நாளன்று ஆஜராகத் தவறினால், மாவட்ட மன்றம் புகார்தாரர் சார்பாகத் தீர்ப்பளிக்கலாம்.

(8) துணை விதியின் கீழ் விசாரணை நடைபெறுகையில், மாவட்ட மன்றம் பொருத்தமானதெனக் கருதக்கூடிய சில வரையறைகளின் பேரில் புகார் பற்றிய விசாரணையை எந்த நிலையிலும் தள்ளி வைக் கலாம். ஆனால் அவ்வாறு விசாரணையைத் தள்ளி வைப்பது சாதாரணமாக ஒரு தடவைக்கு மேல் இருக்கக்கூடாது. பொருட்களைச் சோதனை செய்ய வேண்டுமென்று அல்லது பகுப்பாய்வு செய்ய வேண்டுமென்று கோரியிராத புகார்களைப் பொறுத்தமட்டில் எதிர்தரப்பினர்களுக்கு அப்புகார் பற்றி அறிவிப்புக் கிடைக்கப் பெற்ற நாளிலிருந்து 90 நாட்களுக்குள்ளும் அப்புகார்களில் பொருட்கள் சோதனை செய்யவேண்டுமென்றோ பகுப்பாய்வு செய்ய வேண்டுமென்றோ கோரியிருக்குமானால், 150 நாட்களுக்குள்ளும் அப்புகாரை முடிவு செய்ய வேண்டும்.

மாவட்ட மன்றத்;தின் (ஆயம்) ஆணைகள், அம்மன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு தேதியிடப்பட்டு இரு தரப்பினருக்கு கட்டணமின்றி அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

சட்டதிருத்தம் பார்க்க. மாவட்ட மன்றம்/மாநிலக்குழுவின் முன் புகார் கொடுப்பதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறை, புகார் கொடுப்பவர் பின்வரும் விவரங்கள் அடங்கிய புகார் ஒன்றை நேரடியாகவோ அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாகவோ மாவட்ட மன்றத்திடம்/மாநிலக்குழுவிடம் கொடுக்கவேண்டும். அல்லது மாவட்ட மன்றத்தின் மாநிலக் குழுவின் முகவரியிட்டு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

(a) புகார் கொடுப்பவரின் பெயர், விவரம், முகவரி.

(b) எதிர் தரப்பினர் அல்லது தரப்பினர்களைப் பற்றிக் கேட்டறியக் கூடிய அளவிற்கு அவர்கள் பெயர், விவரம், முகவரி முதலியன.

(c) புகார் தொடர்பான தகவல்கள், அவை எப்போது எங்கு நிகழ்ந்தன என்பது குறித்த தகவல்கள்.

(d) புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவான ஆவணம்.

(e) புகார் கொடுத்தவர் கோரும் நிவாரணம்.

பொருட்களைச் சோதனை செய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் மாவட்ட மன்றம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை -13ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (c) பகுதியின் படி , மாவட்ட மன்றம் அவசியம் எனக் கருதினால், புகார் கொடுப்பவர், பொருட்களின் இரு மாதிரிகளைத் தனித்தனியாக சுத்தமான உலர்ந்த பாட்டில்களில் அல்லது ஜாடிகளில் அல்லது பொருத்தமான ஏனைய கொள்கலன்களில் வைத்து பொருட்கள் ஆவியாகாமலும் கசிவு ஏற்படாமலும் இருக்கும் வகையில் சிப்பம் செய்யப்பட்டிருக்க வேண்டும். உலர் பொருளாக இருந்தால், ஈரம் புகாமல் இறுக்க மூடப்பட்டு யாரிடமிருந்து அப்பொருள் வாங்கப்படுகின்றதோ அந்த நபர் (or) வணிகர் (or) தயாரி;ப்பாளரின் கையொப்பமிடப்பட்ட (or) பெரு விரல் கைரேகை வைக்கப்பட்ட காகிதத்தை கொள்கலனைச் சுற்றி ஒட்டி வைக்க வேண்டுமென புகார் தாரருக்கு மாவட்ட மன்றம் கட்டளையிடலாம்.

ஆனால், பொருட்கள் யாரிடமிருந்து வாங்கப்படுகின்றனவோ அந்த நபர் அல்லது வணிகர் அல்லது தயாரிப்பாளர் கையொப்பமிடவோ அல்லது அவரின் பெருவிரல் ரேகை வைக்கவோ மறுப்பாரேயானால் சாட்சியின் கையொப்பத்தை அல்லது பெருவிரல் ரேகையை அதே முறையில் பெற வேண்டும்.

அப்பொருட்களின் மாதிரிகள் வரப்பெற்றவுடன், மாவட்ட மன்றம் பின்வரும் தகவல்களைக் கொண்ட முகப்புச் சீட்டுகளை கொள்கலன்களின் மேல் ஒட்ட வேண்டும். அதாவது:-

(a) சோதனைக்காகவும், பகுப்பாய்வுக்காகவும் மாதிரிகள் பொருத்தமான எந்த ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட வேண்டுமோ அந்த ஆய்வுக் கூடத்தின் பெயரும் முகவரியும்:-

(b) மாவட்ட மன்றத்தின் பெயரும், முகவரியும்.

(c) இனத்தின் எண்,

(d) சோதனைக்காகவும், பகுப்பாய்க்காகவும் அனுப்பப்படும் பொருளின் தன்மை.

(e) மாவட்ட மன்றத்தின் முத்திரை.

(3) மாதிரி வைக்கப்பட்டுள்ள கொள்கலன் முழுவதும் சுத்தமானதும் உறுதியானதுமான தடித்த தாளினால் சுற்றப்பட்டு, தாளின் இறுதிப்பகுதி உட்பக்கம் சுத்தமாக மடித்து பசை அல்லது ஒட்டக் கூடிய பிற பொருளினால் ஒட்டப்படவேண்டும;. இவ்வாறு ஒட்டப்பட்ட தாள் உறைக்குப் பாதுகாப்பாக கொள்கலத்தின் மேலேயும், குறுக்காகவும் உறுதியான ஞூலினால் அல்லது முறுக்கு ஞூலினால் சுற்றி, பின்னர் அந்த ஞூலை அல்லது முறுக்கு ஞூலைப் பிணைக்க வேண்டும். அந்தத் தாள் உறையின் மேல் தெளிவாகத் தெரியும் வகையில் நான்கு அரக்கு முத்திரைகளாகது இட வேண்டும். அவை சிப்பத்தின் மேல் பகுதியில் ஒன்றும், சிப்பத்தின் கீழ் பகுதியில் ஒன்றும், ஏனைய இரு அரக்கு முத்தி;ரைகளும் சிப்பத்தின் பக்கங்களில் இட வேண்டும். ஞூல் அல்லது முறுக்கு ஞூலின் முடிச்சுகளின் மேல் மாவட்ட மன்றத்தின் அரக்கு முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும். ஞூல் அல்லது முறுக்கு ஞூலின் முடிச்சுக்களின் மேல் மாவட்ட மன்றத்தின் அரக்கு முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும்.

(4) மாவட்ட மன்றம், முத்திரையிடப்பட்ட கொள்கலன்களில் ஒன்றை மேற்கோளுக்கா வைத்துக் கொண்டு, மற்றொரு கொள்கலனைப் பொருத்தமான ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பும். அறிக்கை அனுப்பும் நாளையும் சொல்லப்பட்ட குறைபாட்டின் தன்மையையும் குறிப்பிட்ட பின்னர் 45 நாட்களுக் குள் அல்லது மாவட்ட மன்றத்தால் கால நீட்டிப்புக் கொடுத்து அனுமதிக்கப்பட்ட நாளுக்குள் அறிக்கை கிடைக்கும்படி அந்த ஆய்வுக்கூடத்தைக் கேட்க வேண்டும்.

(5) உணவுப் பொருட்களின் மாதிரி பொறுத்தமட்டில் பகுப்பாய்விற்கான மாதிரியின் அளவு 1955ஆம் ஆண்டு உணவுப் பொருள் கலப்படத் தடுப்பு விதிகளின் 22ஆம் விதியின் கீழ் குறிப ;பிட்டுள்ளவாறு இருக்க வேண்டும்.

(6) மாதிரிச் சிப்பம் உள்ள கொள்கலனுக்கு முத்திரையிடப்பயன்படுத்தப்படும் முத்திரையின் மாதிரி ஒன்று. மாவட்ட மன்றத்தால் ஆய்வுக் கூடத்திற்குத் தனியாக அனுப்பப்படும்.

(7) மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கான கட்டணத் தொகை குறித்து சம்பந்தப்பட்ட பொருத்தமான ஆய்வுக் கூடத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.

(மாநிலக்குழுத் தலைவர் - உறுப்பினர்களின் சம்பளங்கள், பிற படிகள் வரைமுறைகள், நிபந ;தனைகள்)

ஊதியம், மதிப்பூதியம், ஏனையபடிகள் ஆகியவை தமிழ்நாடு அரசின் தொகுதி நிதியிலிருந்து செலவிடப்படும்.

மாநிலக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் ஐந்தாண்டுகளுக்கு அல்லது 70 வயது வரை இவற்றில் எது முந்தியதோ அக்காலம் வரையில் பதவி வகிப்பர். அவர்கள் மீண்டும் நியமனம் செய்யப் படுவதற்குத் தகுதியுடையவராக மாட்டார்கள். ஆனால் தலைவரும் உறுப்பினரும்,

(a) எந்த சமயத்திலும் தன் கைப்பட எழுதி மாநில அரசுக்கு முகவரியிட்டு அனுப்புவதன் மூலம் தன்னுடைய பதவியை ரானாமா செய்யலாம்.

(b) 5ஆம் துணைவிதியின் விதித்துறைகளுக்கிணங்க பதவியிலிருந்து நீக்கப்படலாம்.

தமிழ்நாடு அரசு, மாநிலக்குழுத் தலைவரை அல்லது உறுப்பினரை அவர்,

(a) கடன் தீர்க்கும் சக்தியற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவராக இருந்தால் அல்லது,

(b) தமிழ்நாடு அரசின் கருத்துப்படி, ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவராக இருந்தால், அல்லது

(c) தலைவராக அல்லது உறுப்பினராகப் பணியாற்ற உடலால் தகுதியற்றவராக அல்லது உள்ளத்தால் தகுதியில்லாதவராக இருந்தால், அல்லது

(d) தலைவராக அல்லது உறுப்பினராகப் பணியாற்றுகையில் அவரவர் பணிகளைப் பாதிக்கக் கூடிய வகையில் பணம் வாங்கியிருந்தால் அல்லது பிற வகையில் பற்று வைத்துள்ளவராக இருந்தால், அல்லது,

(e) இவர் தொடர்ந்து பதவி வகிப்பது பொது நலனைப் பாதிக்கும் எனக்கருதுகின்ற அளவிற்கு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளவராக இருந்தால் அப்பதவியிலிருந்து நீக்கலாம்.

ஆனால் இது குறித்து தமிழ்நாடு அரசுதான் குறிப்பிடக்கூடிய நடைமுறைக்கிணங்க விசாரணை நடத்தி (5) துணை விதியின் (d) (c) பகுதிகளில் குறிப்பிடப்பட்ட காரணத்தின் அடிப்படையில் தலைவர் அல்லது உறுப்பினர் ஒருவர் குற்றவாளி என அறிந்து கொண்டால் தவிர மேலே குறிப்பிடப் பட்ட, பகுதிகளில் கண்டுள்ள காரணத்தின் அடிப்படையில் தலைவர் அல்லது உறுப்பினர் அவருடைய பதவியிலிருந்து நீக்கப்படமாட்டார்.

மாநிலக்குழு கூட்டம் நடைபெறுமிடங்களும் இந்தக் குழு தொடர்பான ஏனைய காரியங்களும்.

(1) மாநிலக்குழுவின் அலுவலகம் சென்னையில் அமைய வேண்டும்.

(2) மாநிலக்குழுவின் பணிநாட்களும் பணி நேரங்களும் தமிழ்நாடு அரசின் பணி நாட்கள், பணி நேரங்கள் ஆகியவற்றைப் போன்றே இருக்க வேண்டும்.

(3) மாநிலக்குழுவின் சின்னமும், அலுவலக முத்திரையும் பின்வருமாறு இருக்க வேண்டும்.

சின்னம் : மாநிலக்குழு துறைத்தலைவர் அலுவலகம் என்ற முறையில் பெயர் அச்சிட்ட கடிதத் தாளில் அரசின் சின்னத்தை பயன்படுத்தலாம். அதாவது, முழுவதும் ஒரே கறுப்பு நிறத்திலான சின்னம், (வட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதியில் அமைந்த இரு வில் வளைவிற்குள் சொற்களுடன்.)

முத்திரை-முத்திரை வட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதியில் அமைந்த இருவில் வளைவிற்குள் மாநில நுகர்வோர் தகராறுகள் தீர்வு ஆணைதிக்குழு என்ற வரிகளுடன் மத்தியில் மாநிலச் சின்னமும் கொண்டதாக முத்திரை அமைந்திருக்கும்.

(4) தேவையேற்படும் போது மாநிலக்குழுவின் கூட்டத்தினை தலைவர் கூட்ட வேண்டும்.

(5) மாநிலக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர்கள் பதவி இடம் காலியாக இருப்பது அல்லது அதன் அமைப்பில் குறைபாடுள்ளது என்ற காரணத்திற்காக மாநில குழுவின் செயல் அல்லது நடவடிக்கை எனவும், செயல் திறனற்றதாகாது.

(6) மாநிலக்குழு அதன் பணிகளைப் புரிவதற்கும் சட்டத்தின் கீழ், இவ்விதிகளின் கீழ் வகை செய்யப்பட்டுள்ளவாறான அல்லது தலைவர் அளித்துள்ளவாறான ஏனைய பணிகளைப் புரிவதற்கும் உதவி செய்வதற்குத் தேவையான அத்தகைய பணியாளர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும். அத்தகைய பணியாளர்களுக்கு வழங்கத்தக்க சம்பளமானது தமிழ்நாடு அரசின் தொகுதி நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டும்.

(7) புகார் கொடுத்தவர் சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளை (குற்றம் சாட்டப்பட்டள்ளவர்) ஒப்புக் கொண்டால், மாநிலக்குழு அந்தப் புகார்களை அதன் தகுதி அடிப்படையில் இதன் முன் வைக்கப் பட்டுள்ள ஆவணங்களைக் கொண்டு தீர்மானிக்கவேண்டும்.

(8) 13ஆம் பிரிவின் கீழ் விசாரணை நடைபெறும் போது, இரு தரப்பினரையும் விசாரிப்பதற்கான நாளை மாநிலக்குழு நிர்ணயித்தால், புகார் கொடுத்தவரும், குற்ற:ஞ்சாட்டப்பட்டுள்ளவரும் அல்லது மாநிலக்குழுவின் முன் ஆஜராக அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் அந்த விசாரணை நாளில் அல்லது விசாரணை ஒத்தி போடப்படும் மற்றொரு நாளில் மாநிலக்குழுவின் முன் ஆஜராக வேண்டியது அவருடைய கடப்பாடாகும். அந்நாளில் புகார் கொடுத்தவரோ அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்ட முகவரோ மாநிலக்குழுவின் முன் ஆஜராகத் தவறினால் மாநிலக்குழு, ஆஜராகத் தவறியதற்காக, அப் புகாரைத் தள்ளுபடி செய்யவோ அல்லது புகாரை அதன் தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கவோ தனது விருப்புரிமையைப் பயன்படுத்தலாம். விசாரணை நாளின் போது குற்றஞ்சாட்டப்பட்டவரோ அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவரோ ஆஜராகத் தவறினால் மாநிலக்குழு அப்புகாரை ஒரு தரப்பான தீர்ப்பு வழங்கலாம்.

(9) (8) துணை விதியின் கீழ் விசாரணை நடைபெறும் போது, மாநிலக்குழு பொருத்தமெனக் கருதுகின்ற அத்தகைய வரன்முறைகளுக்குப்பட்டு விசாரணையின் எந்தவொரு நிலையிலும், புகாரின் மீதான விசாரணையை ஒத்திப் போடலாம். ஆனால் சாதாரணமாக ஒரு முறைக்கு மேல் ஒத்தி போடக் கூடாதென்பதுடன் பொருட்களைப் பகுப்பாய்வு அல்லது சோதனை செய்ய வேண்டிய அவசியமிராத இனங்களில் குற்ற:ஞ்சாட்டப்பட்டவர் புகார் குறித்த அறிவிப்பைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள்ளும் பொருட்களைப் பகுப்பாய்வு அல்லது சோதனை செய்ய வேண்டிய அவசியமுள்ள இனங்களில் 150 நாட்களுக்குள்ளும் புகார் மீது முடிவு எடுக்கப்பட வேண்டும்.

(10) நடுவர் ஆயமாக அமைந்துள்ள உறுப்பினர்கள் மாநிலக்;குழுவின் ஆணைகளில் நாள் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். அந்த ஆணைகளை தரப்பினருக்கு கட்டணமின்றி அனுப்பி வைக்கப வேண்டும்.

(1) மேல் முறையீட்டை விசாரிப்பதற்கான நடைமுறைகள் - (1) மேல் முறையீடு செய்பவர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவர் மேல் முறையீட்டை மாநிலக்குழுவிடம் நேரில் அளிக்க வேண்டும் அல்லது அக்குழுவின் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும்.

(2) (1) துணைவிதியின் கீழ் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு மேல் முறையீடும் தெளிவான கையெழுத்திலோ தட்டச்சு செய்தோ அளிக்கப்பட வேண்டும் என்பதோட மேல் முறையீடு செய்வதற்குரிய காரணங்களை விவாதிக்காமலும் சுற்றி வளைத்துக் கூறாமலும் தெளிவான தனித்தனித் தலைப்புகளின் கீழ் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்க வேண்டும். அக்காரணங்கள் தொடர்ச்சியாக இலக்கமிடப்பட வேண்டும்.

(3) எந்த மாவட்ட அமைப்பின் ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படுகிறதோ அந்த ஆணையின் சான்றளிக்கப்பட்ட நகலுடன் சேர்த்து மேல் முறையீடு அனுப்பப்பட வேண்டும். அதனுடன் மேல் முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மறுப்புக்குரிய காரணங்களுக்கு ஆதரவாகத் தேவைப்படும் அத்தகைய ஆவணங்களையும் அனுப்ப வேண்டும்.

(4) சட்டத்தில் குறிப்பிட்டுள்ள காலவரையறை முடிவடைந்தவுடன் மேல் முறையீட்டை தாக்கல் செய்யும் போது அந்த மேல் முறையீட்டுடன் அந்த மேல் முறையீட்டை வரையறைக் காலத்திற்குள் தாக்கல் செய்யாததற்குப் போதுமான காரணங்கள் உள்ளதென மாநிலக்குழுவினை ஐயமறத் தெளிவடையச் செய்யுமென மனுதாரர் நம்புகின்ற காரணங்களை எடுத்துக்கூறி அத்துடன் உறுதிமொழி ஒன்றையும் அளித்து விண்ணப்பம் ஒன்றையும் அனுப்ப வேண்டும்.

(5) மேல் முறையீட்டாளர், மேல் முறையீட்டின் 4 நகல்களை அலுவலகப் பயனுக்காக மாநிலக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.

(6) விசாரணை நாளின் போது அல்லது விசாரணை ஒத்திப் போடப்பட்ட நாளன்று இருதரப் பினரும் அல்லது அவர்களது அதிகாரம் பெற்ற முகவர்கள் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டியது கடப்பாடாகும். அந்நாளில் மேல்முறையீட்டாளர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகரவ் விசாரணையில் கலந்து கொள்ளத் தவறினால் மாநிலக்குழு அதன் வகுப்புரிமையின்படி மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்யலாம் அல்லது தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்ளத் தவறினால் மாநிலக்குழு ஒரு தரப்பாக விசாரணை மேற்கொண்டு வழக்கின் தகுதி அடிப்படையில் மேல் முறையீட்டின் மீது ஒரு தரப்பாக முடிவு எடுக்கலாம்.

(7)மேல் முறையீடுசெய்பவர், மாநிலக்குழு அனுமதி பெற்றாலன்றி மற்றபடி மேல் முறையீட்டில் குறிப்பிடப்படாத மறுப்புகளுக்கான காரணங்களுக்கு ஆதரவாக வலியுறுத்தவோ விசாரிக்குமாறு கூறவோ கூடாது. ஆனால் மாநிலக்குழு, மேல் முறையீடு பற்றி தீர்மானிக்கும் போது மேல் முறையீட்டில் குறிப ;பிடப்பட்டுள்ள மறுப்புக்கான காரணங்களை மட்டும் அல்லது இவ்விதியின் கீழ் மாநிலக்குழுவில் அனுமதி பெற்ற காரணங்களை மட்டும் பரிசீலிப்பதாக அமையக்கூடாது.

(8)ஆனால் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களன்றி ஏனைய காரணங்களின் அடிப்படையில் மாநிலக்குழு முடிவு செய்யக்கூடாது. அவ்வாறு முடிவு செய்ய வேண்டுமாயின் அந்த முடிவினால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு மாநிலக்குழுவினால் குறைந்தது ஒரு முறையாவது விசாரணை செய்யப்படுவதற்குரிய வாய்ப்பினை அளிக்கவேண்டும்.

(9) மாநிலக்குழு, பொருத்தமென்று கருதுகின்ற அத்தகைய வரன்முறைகளின்படியும், விசாரணையின் எந்த ஒருநிலைகளிலும், மேல் முறையீட்டின் மீதான விசாரணையை ஒத்திப் போடலாம். ஆனால் சாதாரணமாக ஒரு முறைக்கு மேல் ஒத்திப்போடக்கூடாது. விசாரணை தொடங்கிய முதல் நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மேல் முறையீட்டின் மீது முடிவு எடுக்கப்படவேண்டும்.

(10) மேல் முறையீட்டின் மீதான மாநிலக்குழுவின் ஆணைகளில் நடுவர்கள் ஆயமாக அமைந்துள்ள இந்தக் குழுவின் உறுப்பினர்கள் நாள் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். அந்த ஆணைகளை தரப்பினருக்கு கட்டணமின்றி அனுப்பி வைக்க வேண்டும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக