அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 30 செப்டம்பர், 2010

"எதிர்கால சமுதாயம் ஜொலிக்க இயற்கையை காக்க வேண்டும்'


""எதிர்கால சமுதாயம் சிறப்பாக இருக்க, இயற்கையை பாதுகாக்க வேண்டும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், நுந்தளா கிராமத்தில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். 

பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""தரமான வாழ்வுக்கு தரமான பொருட்களே உதவும். தர முத்திரைகளைப் பார்த்து, பொருட்ளை வாங்க வேண்டும். சேமிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்வது அவசியம். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, தபால் நிலையங்களில் முதலீடு செய்தால், பாதுகாப்பு, நம்பகத் தன்மை, உரிய வட்டித் தொகை கிடைக்கும்; முதலீடு செய்யும் முன் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும்,'' என்றார். 

மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், ""வாங்கும் பொருட்களுக்கு "பில்' பெற வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, தேவையான தகவல்களை கேட்டுப் பெற முடியும். நமது உரிமையை, எப்போதும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. மனித உரிமைகள் மீறப்பட்டால், மனித உரிமை ஆணையத்தை அணுக வேண்டும்,'' என்றார். 

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""புவி வெப்பத்தால், விவசாயம் உட்பட பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  ரசாயன உரங்களின் பயன்பாடால், உணவுப் பொருட்களில் விஷத் தன்மை அதிகரிக்கிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது, திடக்கழிவு மேலாண்மையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம், இயற்கையை பாதுகாக்க முடியும்,'' என்றார். 

"நுகர்வோர் கருத்துக்கள்' என்ற தலைப்பில், மாணவன் வினித் பேசினார்.

என்.எஸ்.எஸ்., மாணவர்கள், நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.  மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி பிரபு உட்பட பலர் பங்கேற்றனர். ஓவிய ஆசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்.

புதன், 29 செப்டம்பர், 2010

ஸ்ரீமதுரை இலவச கண் சிகிச்சை முகாம்





  தேசிய நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஸ்ரீமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.  வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார்.  நுகர்வோர் மைய ஓருங்கிணைப்பாளர் சிவ சுப்பிரமணி, மங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  146 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.  12 பேர் கண் புறை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கண்தான விழிப்புணர்வு முகாம்

 தேவாலாவிலுள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேசிய கண்தான வார விழாவை முன்னிட்டு கூடலூர் கோட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சார்பில் நடைபெற்ற கண்தான விழிப்புணர்வு முகாமிற்கு தலைவர் சிவசுப்பிரமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கண்ணன் முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலைத் துறையின் உதவி கோட்டப் பொறியாளர் டி.செல்வன் கண்தான விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஆசிரியைகள் நிரஞ்சலாதேவி, தவமணி, ரேவதி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முருகன் நன்றி கூறினார்.

புலயன் சாதியினருக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை


புலயன் சாதியினருக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை 

உதகை, பிப். 28: நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் பகுதியில் வசித்துவரும் புலயன் சாதியினருக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
 நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வட்டத்தை உள்ளடக்கிய பல பகுதிகளில் இந்து புலயன் பிரிவை சார்ந்தோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் பரம்பரை பரம்பரையாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சொந்தமாக நிலம் வைத்திருப்பதுடன், அரசின் சார்பில் குடும்ப அட்டை பெற்று நிலவரி மற்றும் வீட்டு வரி என அனைத்து வரிகளையும் செலுத்தி வருகின்றனர். அரசு பள்ளிகளில் கல்வி கற்றும், இதர அரசு சலுகைகளையும் பெற்று வந்துள்ளனர்.
 இவர்கள் இந்து புலயன் என்ற இனத்தை சேர்ந்த மலையாளத்தை தாய்மொழியாக கொண்டாலும், தமிழகத்தையே தாய் மண்ணாகக் கொண்டவர்கள். இவர்களது சாதியினம் தமிழக அரசின் மாநில சாதிகள் பட்டியலில் எஸ்சி பட்டியலிலேயே இடம் பெற்றுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்ட அளவிலான சாதிகள் பட்டியலிலும் எஸ்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கேரள மாநிலத்திலும் இதே பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
 ஆனால், இவர்களுக்கு பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது தாழ்த்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதே பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு கடந்த 1989ம் ஆண்டு வரை கூடலூரில் எஸ்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை கேட்டால் முறையான பதில் அளிப்பதில்லை. அண்மையில் சேரம்பாடி பகுதியை சேர்ந்த சதானந்தன் என்பவர் தனது மகளின் மேல் கல்விக்காக சாதி சான்றிதழ் கேட்டபோது உரிய சான்றிதழ் அளிக்கப்படவில்லை.
 இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விளக்கம் கேட்டபோது இடம் பெயர்ந்தவர்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வை வருவாய்த்துறையினர்தான் மேற்கொள்ள வேண்டும். சதானந்தனுக்கு எஸ்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளபோது, அவரது மகளுக்கு அந்த சான்றிதழ் வழங்கப்படாதது வியப்புக்குரியதாக உள்ளது.
 பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமாலேயே தாங்களாகவே முடிவெடுத்து அரசு ஆணை என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, இப்பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேனிலும் கலப்படமாம் ஜாக்கிரதை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி : சந்தையில், பிரபல பிராண்டுகளின் பெயர்களில் விற்பனை செய்யப்படும் தேனில் கலப்படம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களில், நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியது தேன். இது, மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தேனுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனை பல்வேறு நிறுவனங்களும், பாட்டிலில் அடைத்து, தங்கள் பிராண்டுகள் பெயரில் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அந்த தேனில், ரசாயனப் பொருட்கள், தேவைக்கு அதிகமாக கலக்கப்படுவதாக, ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் 10 பிரபல பிராண்டுகளின் தேன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பிராண்டையும், சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பிராண்டையும் வரவழைத்து ஆய்வு செய்தனர். அதில், அளவுக்கு அதிகமாக, "ஆக்சிடெட்டாசைக்ளின் ' உள்ளிட்ட "ஆன்ட்டிபயாடிக்' மருந்துகள் தேவைக்கு அதிகமாக கலக்கப்பட்டுள்ளது தெரிந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ கிராம் தேனில், 3.7 மைக்ரோ கிராம் முதல் 250 மைக்ரோகிராம் வரை ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக, ஒரு ஸ்பூன் தேன் அதாவது 20 கிராம் தேனில், 5 மைக்ரோ கிராம் ஆன்ட்டிபாடிக் மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக, நோய் ஏற்பட்டால், மனிதர்கள் சாதாரணமாக 500 மைக்ரோ கிராம் ஆன்ட்டிபயாடிக் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், தேனில் கலக்கப்படும் ஆன்ட்டிபயாடிக், இதனை விட ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. இந்த கலப்பட தேனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இரத்த சம்பந்தமான நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், தேனீ வளர்ப்பவர்களும், ராணி தேனீ அதிக முட்டைகள் இடுவதற்காக கூடுகளில், ஆன்ட்டிபயாடிக்கை பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து பெறப்படும் தேனும், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தராவிட்டால் வறுமையை ஒழிக்க 50 ஆண்டாகும்


லண்டனைச் சேர்ந்த, "ஆக்ஷன் எய்டு'என்ற நிறுவனம், "பசியுடன் போரிடுவது யார்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கடந்த 1990 - 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் தனிநபர் வருமானம், கணிசமாக அதிகரித்தது. இருந்தாலும், வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. தாராளமயமாக்கல் கொள்கையை இந்திய அரசு முழு வீச்சில் செயல்படுத்திய அதே காலத்தில், வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையும் அதற்கு இணையாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள குழந்தைகளில் 43 சதவீதம் குழந்தைகள், போதிய ஊட்டச் சத்து இல்லாமல் பாதிக்கபட்டுள்ளனர். 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசின் பட்ஜெட்டில் விவசாய துறைக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதுமே இதற்கு முக்கிய காரணம். விவசாய துறையில்,பெருமளவில் முதலீடு செய்யப்படாததால்,  தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும், விவசாயத் துறைக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டாலும், அது தேவைக்கு ஏற்ப இல்லை.விவசாய துறையில் நீண்ட கால முதலீடும் போதிய அளவில் இல்லை.

இதன் காரணமாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. நிலச் சீர்திருத்தம் போன்ற விஷயங்களும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தியாவில் தற்போது நிலவும் வறுமையை பாதியாக குறைப்பதற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.பொது வினியோக திட்டத்தில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். விளை நிலங்கள், ரியஸ் எஸ்டேட் துறையினரால் கபளீகரம் ஆவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு,  நிலச்சீர்திருத்த திட்டத்தை விரைவு படுத்துவதன் மூலமும் வறுமையை குறைக்க முடியும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த, "ஆக்ஷன் எய்டு'என்ற நிறுவனம், "பசியுடன் போரிடுவது யார்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கடந்த 1990 - 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் தனிநபர் வருமானம், கணிசமாக அதிகரித்தது. இருந்தாலும், வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. தாராளமயமாக்கல் கொள்கையை இந்திய அரசு முழு வீச்சில் செயல்படுத்திய அதே காலத்தில், வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையும் அதற்கு இணையாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள குழந்தைகளில் 43 சதவீதம் குழந்தைகள், போதிய ஊட்டச் சத்து இல்லாமல் பாதிக்கபட்டுள்ளனர். 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசின் பட்ஜெட்டில் விவசாய துறைக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதுமே இதற்கு முக்கிய காரணம். விவசாய துறையில்,பெருமளவில் முதலீடு செய்யப்படாததால்,  தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும், விவசாயத் துறைக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டாலும், அது தேவைக்கு ஏற்ப இல்லை.விவசாய துறையில் நீண்ட கால முதலீடும் போதிய அளவில் இல்லை.

இதன் காரணமாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. நிலச் சீர்திருத்தம் போன்ற விஷயங்களும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தியாவில் தற்போது நிலவும் வறுமையை பாதியாக குறைப்பதற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.பொது வினியோக திட்டத்தில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். விளை நிலங்கள், ரியஸ் எஸ்டேட் துறையினரால் கபளீகரம் ஆவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு,  நிலச்சீர்திருத்த திட்டத்தை விரைவு படுத்துவதன் மூலமும் வறுமையை குறைக்க முடியும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் ஏழு நாட்கள் சிறப்பு முகாம், நேற்று நுந்தளா கிராமத்தில் துவக்கப்பட்டது.

திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா மேற்பார்வையில், ஹெத்தையம்மன் கோவில் செல்லும் பாதை, பள்ளி செல்லும் பாதை, மயானத்துக்கு செல்லும் பாதை, அண்ணா நகரில் நடைபாதை மற்றும் கழிவு நீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அட்டுபாயில் முலுக்கா மேஸ்திரி நஞ்சன் பொதுநல அறக்கட்டளை மற்றும் ஊட்டி லயன்ஸ் சங்கத்துடன், இலவச எலும்பு மற்றும் மூட்டு, பொதுநல மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. கோவையை சேர்ந்த டாக்டர்கள் சதீஷ் குமார், ராமலிங்கம், ராமசந்திரன், விவேகானந்தன் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

மாவட்ட நுகர்வோர் சங்கப் பொறுப்பாளர்கள் சிவசுப்ரமணியுடன் இணைந்து, நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம்,
ஊட்டி தலைமை நிலைய டாக்டர்கள் சாந்தகுமார், திலீப் தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட உள்ளன. முகாம் ஏற்பாடுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மையப்பன் ஆலோசனையின் படி, தலைமை ஆசிரியர் செவணன், மாவட்ட தொடர்பு அலுவலர் இளமுருகன், லயன்ஸ் சங்க தலைவர் டெரன்ச் ராஜேஷ், ஓவிய ஆசிரியர் பழனியப்பன் உட்பட பலர் மேற்கொண்டுள்ளனர்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

குறையும் பஸ்களால் அதிகக்கும் பிரச்னை! கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் அவதி

கூடலூர் அரசுப் போக்குவரத்து கிளையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் வாகனங்களை நாட வேண்டிய நிலைக்கு, பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் டான்டீ அரசு தேயிலைத் தோட்டம், தனியார் தோட்ட நிறுவனங்களோடு, ஏராளமான சிறு விவசாயிகள் உள்ளனர். கூடலூர் தொகுதியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், எம்.எல்.ஏ.,வாக இருந்த மில்லருக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், எம்.எல்.ஏ.,வாக உள்ள ராமசந்திரனுக்கு, கதர்வாரியத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தை கூடலூர் தொகுதி பெற்றிருந்தும், மக்களின் போக்குவரத்து தேவை, போதியளவு நிறைவேற்றப்படாமல் உள்ளது. 34 வழித்தடங்களுடன் துவக்கப்பட்ட கூடலூர் போக்குவரத்து கிளையில், 2000ம் ஆண்டில் 54 ஆக உயர்த்தப்பட்டது; தற்போது 48 வழித்தடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இயக்கப்படும் பஸ்களும், பழைய பஸ்களாக உள்ளதால், அவ்வப்போது பாதி வழியில் பழுதாகி, பொதுமக்கள் அவதிப்பட வேண்டியுள்ளது.
போக்குவரத்து தேவையை நிறைவு செய்யும் தனியார் வாகன உரிமையாளர்களும், எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி, பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு பஸ்சில் 3.50 கொடுத்து பயணிக்கும் இடத்துக்கு, தனியார் வாகனங்களில் 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பல நேரங்களில் தொங்கிக் கொண்டு பயணிப்பதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டும், குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ் இயக்கப்படாததால், காலை நேரத்தில் பள்ளிக்கும், மாலையில் வீட்டுக்கும் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
மாறியது வழித்தடம்: பந்தலூரிலிருந்து சேலத்துக்கு, காலை 10.00 மணிக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில வாரங்கள் வரை, வாரத்துக்கு சில நாட்கள் மட்டுமே பந்தலூர் வந்துச் சென்ற இந்த பஸ், தற்போது நாடுகாணியிலிருந்து சேலத்துக்கு இயக்கப்படுகிறது.

பந்தலூரில் காத்திருப்போர், கூடலூர், ஊட்டி சென்று, சேலம், ஈரோடு பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் முறையாக பஸ் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியும், அமைச்சர்கள், போக்குவரத்து கழகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மக்களின் போக்குவரத்து தேவை குறித்து செவிமடுத்து நடவடிக்கை எடுத்தால், தேர்தல் சமயத்தில் இப்பிரச்னை எதிரொலிக்காது என எதிர்பார்க்கலாம்.

இன்று சர்வதேச ஓசோன் தினம் sep 16

சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது ஓசோன் படலம். இத்தகைய ஓசோன் படலத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்., 16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கடை பிடிக்கப்படுகிறது.

ஓசோன்: ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 93 சதவீதத்தை தடுக்கிறது. 1913ம் ஆண்டு சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இருவரும் இணைந்து ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.

விளைவுகள்: கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 0.74 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓசோன் படலம் பாதிக் கப்படுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் கடல்நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்படும். இமய மலையில் உள்ள பனிக் கட்டிகள் உருகும். புற ஊதா கதிர்களால் தோல் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஓசோனின் எதிரி எச்.சி.எப்.சி.,: ஓசோனில் துளை ஏற்படுத்தக் கூடிய, குளோரோபுளூரோ கார்பன்களுக்கு (சி.எப்.சி.,) நாம் விடை கொடுத்துவிட்டோம். ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் படி, உலக நாடுகள் சி.எப்.சி.,யின் உற்பத்தி, வினியோகம் மற்றும் பயன் படுத்துதல் ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தி விட்டன. ஏர்கண்டிஷனர்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர் சாதனப்பெட்டிகள், தீ அணைப்பான்கள், ஸ்பிரேக்கள் உள்ளிட்ட அழுத்தப்பட்ட திரவம், வாயுக்களை வெளி யேற்றும் கருவிகளில் சி.எப்.சி., பயன்படுத்தப் பட்டது. இந்த சி.எப்.சி.,க்கு மாற்றுப் பொருளாக ஹைட்ரோ குளோரோபுளூரோ  கார்பன்கள் (எச்.சி.எப்.சி.,) பயன்படுத்தப்படுகின்றன. சி.எப்.சி.,யின் மாற்றுப் பொருளான எச்.சி.எப்.சி.,யில் 40 வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஓசோனை பாதிக்கக் கூடியவைதான். ஆகவே, இவற்றையும் பல்வேறு கட்டங்களில் பயன் பாட்டிலிருந்து நீக்கவிட, ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் ஓசோனாக்ஷன் அலுவலகம் கருதுகிறது. இதற்கான கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கான சட்டமியற்றும் வழிமுறைகளை இந்நிறுவனம் நாடுகளுக்கு அளிக்கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, ஓசோன்செல், 2008ம் ஆண்டிலிருந்தே சி.எப்.சி., வெளியேற்றத்தை கட்டுப்படுத்திவிட்டது. தற்போது எச்.சி.எப்.சி.,யையும் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஓசோன் படலம் காக்கப் படும் பட்சத்தில், மோசமான வானிலை விளைவுகள் தடுக்கப்படும்.

பாதுகாப்பது எப்படி? * அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன்- டை- ஆக்சøடு அளவை குறைக் கலாம்.

* சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தொழில் நுட்பங்களை மட்டும் பயன் படுத்தவேண்டும்.

* ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

* பருவநிலை மாறுபாடு குறித்த உறுதியான திட்டங்களை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து செயல் படுத்த வேண்டும்.

* ஓசோனின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாக்க இந்நாளில் முயற்சி எடுக்க வேண்டும்

வியாழன், 16 செப்டம்பர், 2010

ஊட்டி : "தேவைகளை குறைந்து எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்' என, நுகர்வோர் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. எமரால்டு ஹைட்ஸ் மகளிர்  கல்லூரியில், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன் பேசுகையில், "

"பொருட்களை வாங்க விளம்பரம் தூண்டுகிறது. விலையை பற்றி யோசிக்காமல், தேவைக்கும் அதிகமான பொருட்களை வாங்கி குவிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடம்பர பொருட்களை வாங்க கடன், லஞ்சம், வரதட்சணை தலைதூக்குகிறது. பிளாஸ்டிக் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
பொருட்களை வாங்கும் போது, தரம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். உணவு கலாச்சாரம் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. தேவைகளை குறைத்து எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்; நாம் எச்சரிக்கையாக இருந்து, மற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்க தூண்ட வேண்டும்,'' என்றார்.

மனித உரிமைகள்

மனித உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"[1] கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.

பொருளடக்கம்

அடிப்படை மனித உரிமைகள்

எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.

வரலாறு

மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.
1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்".
பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான அசோகன் வெளியிட்ட அசோகனின் ஆணை எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய ஈராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.
1789 ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரான்சின் தேசிய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை.
18 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776), பிரான்சிலும் (1789) இரண்டு முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள் வெளியிடபட்டன. ஒன்று ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை, மற்றது மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின் உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கையும் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது.
எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களைப் படைத்தவன் உயிர்வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்ற அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகள் சிலவற்றை அவர்களுக்கு அளித்துள்ளான் என்னும் உண்மைகள் தாமாகவே விளக்கம் பெறுகின்றன எனக் கொள்கிறோம்.
−ஐக்கிய அமெரிக்க விடுதலைக்கான அறிக்கை, 1776
இவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில், தாமசு பைன், ஜான் இசுட்டுவார்ட் மில், ஜி டபிள்யூ. எஃப். கேகெல் போன்றோரால் மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெறலாயிற்று.
20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமானது.
அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் "லீபர் நெறிகள்" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன மனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.
உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம் உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது.
இச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர், இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன.
1945 ஆம் ஆண்டின் யால்ட்டா மாநாட்டில், நாடுகளின் சங்கத்தின் பணிகளை முன்னெடுப்பதற்குப் புதிய அமைப்பொன்றை உருவாக்க கூட்டு வல்லரசுகள் இணங்கின. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் இவ்வமைப்பு பெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும், உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனைத உரிமைகள் சட்டம் என்பவற்றில் உள்ளடங்கியுள்ளன.

 மனித உரிமைகளின் மூலங்கள்

மனித உரிமைகளின் மூலங்கள், ஆதாரங்கள் அல்லது நியாப்படுத்தல் மனித உரிமைகளின் இருத்தல் பற்றியும், அவற்றைப் பேணுவதன் அவசியம் பற்றி, அல்லது மனித உரிமை கோட்பாட்டின் போதாமைகள் பற்றி சுட்டிக் காட்டுகின்றன.

இயற்கை உரிமைகள்

மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்தால் அவர்களுக்கு இயல்பாக, இயற்கையாக இருக்கும் உரிமைகள் என்பது மனித உரிமைகளின் மூலம் பற்றிய ஒரு தத்துவ நோக்கு ஆகும்.


1864 ஆம் ஆண்டின் செனீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.
அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
செனீவா சாசனம், இன்று மனிதாபிமானச் சட்டம் எனக் குறிக்கப்படும் சட்டத்தை வரையறுக்கிறது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவே செனீவாச் சாசனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும்.

[தொகு] உலக மனித உரிமைகள் சாற்றுரை

"இது ஒரு ஒப்பந்தம் அல்ல...[எதிர்காலத்தில், இது] உலகத்தின் சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம் ஆக உருவாகக் கூடும்."[2]1949 ஆம் ஆண்டில், உலக மனித உரிமைகள் சாற்றுரையின் எசுப்பானிய மொழிப் பிரதியுடன் எலினோர் ரூஸ்வெல்ட்.
உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.

நுகர்வோர் அமைப்பு பெயரில் "வசூல் வேட்டை': உடனடியாக புகார் செய்தால் கடும் நடவடிக்கை

"நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் அமைப்புகளின் பெயரை கூறி "வசூல்' வேட்டை நடத்தி வருபவர்கள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்புகள் தன்னார்வத்துடன் செயல்பட்டு, பல பணிகளில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், இவற்றின் பெயரை கூறிக் கொண்டு தவறான வழியில் பணம் சம்பாதித்து கொண்டிருக்கின்றன.மாவட்டத்தின் பல பகுதிகளில் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதி என கூறி ரேஷன் கடையில் வசூல் செய்வதாகவும், குந்தா, ஊட்டி, குன்னூர் தாலுகாக்களில் அதிகபட்சமாக இது நடைபெறுவதாகவும், சிலர் மினி பஸ்களில் இலவச பயண அனுமதி சீட்டு பெற்று செல்வதாகவும், மரக்கடைகள், பிற வணிக நிறுவனங்களிலும் பல காரணங்களை கூறி வசூலில் ஈடுபடுவதாகவும் மையத்திற்கு புகார்கள் வருகின்றன.


தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் நல்ல நோக்கத்துடன் செயல்படுவதை களங்கப்படுத்துவதை தொடர்ந்து அனுமதிக்க இயலாது. தொடர்ந்து இதுபோன்று நுகர்வோர் அமைப்புகள் பெயரினை பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபடும் போலி நபர்கள் வரும் பட்சத்தில் அவர்கள் குறித்து காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம்.

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் எங்களது அமைப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்று நடப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் விபரங்களுக்கு மாநில நுகர்வோர் ஆலோசனை மையத்தில் 044-28592828 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்!


 சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரங்களை நட்டு வளர்க்க வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது; அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை, வீடு, வாகனங்களின் எண்ணிக்கையால், சுற்றுப்புறச் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் மரங்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில் கூட, சமீபகாலமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க பொதுநல அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையில், வனத்துறையும் தனது பங்களிப்பாக, செண்பக மரங்களை நட்டு வளர்க்க யோசனை தெரிவித்துள்ளது.

"மக்னோலயேசி' என்ற தாவர இயல் குடும்பத்தில் "மைக்கேலியா சம்பகா' என்ற அறிவியல் பெயரைக் கொண்ட சண்பகமரம், செண்பக மரம் என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்புகளை தென்னிந்திய தாவரவியல் வல்லுனர்கள் மேத்யூ, ஜான் பிரிட்டோ விரிவாக விளக்கியுள்ளனர்.
செண்பக மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது.

பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. விதை, வேர், பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.
மரங்கள் எடை குறைவாகவும், உறுதித் தன்மை அதிகமாகவும் உள்ளதால், கடந்த காலங்களில் விமானக் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது; வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 1,000 அடி வரையுள்ள சோலைக் காடுகளில் இயற்கையாகவே இம்மரங்கள் வளரும்; எளிதாக இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.

சாலையின் இருபுறம், வீட்டு முகப்பு, கோவில், குளக்கரை மற்றும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன; மலை மாவட்டமான நீலகிரியில், கூடுதலாக நடவு செய்தால், சுற்றுப்புறச் சூழல் ரம்மியமாக இருக்கும்.
இதன் மற்றொரு வகையான "மைக்கோலியா நீலகிரிக்கா' என்ற பெயரைக் கொண்ட வெள்ளை வண்ண மலர்களை கொண்ட காட்டு சண்பகம் மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ளதால் நடவு செய்ய வேண்டும்