அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

இன்று சர்வதேச ஓசோன் தினம் sep 16

சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது ஓசோன் படலம். இத்தகைய ஓசோன் படலத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்., 16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கடை பிடிக்கப்படுகிறது.

ஓசோன்: ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 93 சதவீதத்தை தடுக்கிறது. 1913ம் ஆண்டு சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இருவரும் இணைந்து ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.

விளைவுகள்: கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 0.74 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓசோன் படலம் பாதிக் கப்படுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் கடல்நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்படும். இமய மலையில் உள்ள பனிக் கட்டிகள் உருகும். புற ஊதா கதிர்களால் தோல் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஓசோனின் எதிரி எச்.சி.எப்.சி.,: ஓசோனில் துளை ஏற்படுத்தக் கூடிய, குளோரோபுளூரோ கார்பன்களுக்கு (சி.எப்.சி.,) நாம் விடை கொடுத்துவிட்டோம். ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் படி, உலக நாடுகள் சி.எப்.சி.,யின் உற்பத்தி, வினியோகம் மற்றும் பயன் படுத்துதல் ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தி விட்டன. ஏர்கண்டிஷனர்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர் சாதனப்பெட்டிகள், தீ அணைப்பான்கள், ஸ்பிரேக்கள் உள்ளிட்ட அழுத்தப்பட்ட திரவம், வாயுக்களை வெளி யேற்றும் கருவிகளில் சி.எப்.சி., பயன்படுத்தப் பட்டது. இந்த சி.எப்.சி.,க்கு மாற்றுப் பொருளாக ஹைட்ரோ குளோரோபுளூரோ  கார்பன்கள் (எச்.சி.எப்.சி.,) பயன்படுத்தப்படுகின்றன. சி.எப்.சி.,யின் மாற்றுப் பொருளான எச்.சி.எப்.சி.,யில் 40 வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஓசோனை பாதிக்கக் கூடியவைதான். ஆகவே, இவற்றையும் பல்வேறு கட்டங்களில் பயன் பாட்டிலிருந்து நீக்கவிட, ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் ஓசோனாக்ஷன் அலுவலகம் கருதுகிறது. இதற்கான கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கான சட்டமியற்றும் வழிமுறைகளை இந்நிறுவனம் நாடுகளுக்கு அளிக்கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, ஓசோன்செல், 2008ம் ஆண்டிலிருந்தே சி.எப்.சி., வெளியேற்றத்தை கட்டுப்படுத்திவிட்டது. தற்போது எச்.சி.எப்.சி.,யையும் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஓசோன் படலம் காக்கப் படும் பட்சத்தில், மோசமான வானிலை விளைவுகள் தடுக்கப்படும்.

பாதுகாப்பது எப்படி? * அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன்- டை- ஆக்சøடு அளவை குறைக் கலாம்.

* சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தொழில் நுட்பங்களை மட்டும் பயன் படுத்தவேண்டும்.

* ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

* பருவநிலை மாறுபாடு குறித்த உறுதியான திட்டங்களை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து செயல் படுத்த வேண்டும்.

* ஓசோனின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாக்க இந்நாளில் முயற்சி எடுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக