லண்டனைச் சேர்ந்த, "ஆக்ஷன் எய்டு'என்ற நிறுவனம், "பசியுடன் போரிடுவது யார்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கடந்த 1990 - 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் தனிநபர் வருமானம், கணிசமாக அதிகரித்தது. இருந்தாலும், வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. தாராளமயமாக்கல் கொள்கையை இந்திய அரசு முழு வீச்சில் செயல்படுத்திய அதே காலத்தில், வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையும் அதற்கு இணையாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மொத்தமுள்ள குழந்தைகளில் 43 சதவீதம் குழந்தைகள், போதிய ஊட்டச் சத்து இல்லாமல் பாதிக்கபட்டுள்ளனர். 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசின் பட்ஜெட்டில் விவசாய துறைக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதுமே இதற்கு முக்கிய காரணம். விவசாய துறையில்,பெருமளவில் முதலீடு செய்யப்படாததால், தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும், விவசாயத் துறைக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டாலும், அது தேவைக்கு ஏற்ப இல்லை.விவசாய துறையில் நீண்ட கால முதலீடும் போதிய அளவில் இல்லை.
இதன் காரணமாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. நிலச் சீர்திருத்தம் போன்ற விஷயங்களும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தியாவில் தற்போது நிலவும் வறுமையை பாதியாக குறைப்பதற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.பொது வினியோக திட்டத்தில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். விளை நிலங்கள், ரியஸ் எஸ்டேட் துறையினரால் கபளீகரம் ஆவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு, நிலச்சீர்திருத்த திட்டத்தை விரைவு படுத்துவதன் மூலமும் வறுமையை குறைக்க முடியும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக